• +91 97102 30097
  • reach@yogakudil.org

பிறந்து வளர்ந்து இறை உணர்ந்து
பிறரும் வாழ அதை உணர்ந்தும்
நற்பெயர் பெற்றேன் நானானேன்
நன்மை அடைந்தோர் குரு என்றார்.

எளிமை எனது இருப்பிடம்
யாவரும் அனுகலாம் என்னிடம்
கட்டுப் படுத்த முற்பட்டால் அவரை
கட்டாயம் விலக்கி நான் வைப்பேன்.

என்னை கடந்த போவதற்கு 
என்றும் நான் தடையில்லை
தவறை அறிந்து திரும்பினால்
தாராளமாய் வா என்பேன்.

கேள்வி கேட்க உரிமை உண்டு
கேட்காத வர்க்கும் பதில் உண்டு
கட்டுப் படுத்த பழகாதே
காதலை கொச்சப் படுத்தாதே.

இலக்கணம் எனக்கு தேவையில்லை 
இங்கீதம் எனக்குப் பிடிப்பதில்லை
இக்கணம் உண்மை வேண்டும் என்றால்
இப்பொழுதே தொடர்புகொள் காத்திருக்கிறேன்.

                                                                              - சிவயோகி

உணர்வு பெற்ற மனிதராகிய, திரு. சிவயோகி சிவகுமார் அவர்கள், சென்னையை சேர்ந்தவர், மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர், தமிழில் உள்ள நூல்களின் மூலம் முக்தி அடைந்தவர் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதனை செயல் வடிவமாக பிறரும் இறைவனை அடைய வழியும் சொல்லி கொடுத்து வாழ்ந்து வருகிறார்.

தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார்,

தமிழில் சிறந்து விளங்கிய நூல்கள் அனைத்தும் மதம் சார்ந்தது இல்லை, அது மனிதம் சார்ந்தது, இயற்கையை சார்ந்தது, உணர்வை சார்ந்தது, தெளிந்த அறிவைச் சார்ந்தது, உண்மையைச் சார்ந்தது என்பதை நாம் நன்றாக அறிவோம்,

 à®¤à®®à®¿à®´à®¿à®²à¯ உள்ள தொன்மையான நூல்கள் அனைத்தும் கடவுளைக் கண்டவர்கள் தமது அனுபவமாக எழுதியுள்ளார்கள், அதனை பிறரும் அறியும் நோக்கில் பயிற்சியாகவும், அனுபவமாகவும் எழுதி வைத்துள்ளனர், ஆயினும் அந்த நூல்களையெல்லாம் நாம் புரிந்து கொள்ளாதது ஏன்? வரும் நம் சந்ததியினருக்கு அதன் உண்மை பொருளறிந்து வழங்காதது ஏன்?

அதனின் உண்மை பொருளை,- கடவுளை கண்ட ஒருவரே உண்மையறிய முடியும் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது,

உதாரணமாக,

“நீரில்லா நெற்றி பாழ்” என்று ஔவையார் கூறுகிறார்கள், இது ஒரு மதம் சார்ந்த ஒரு வாசகமா? அல்லது மனிதம் சார்ந்த வாசகமா? நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டால் தான் நலமுடன் வாழ்வார்கள் என்று விளக்கம் கொள்வது சரியா? ஔவையார் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் எழுதிருப்பார்களா? அல்லது உலக மாந்தர்கள் அனைவருக்கும் எழுதியிருப்பார்களா? என்று நாம் சிந்தித்து பார்ப்பது அவசியம் ஆகும்.,

 à®‰à®¤à®¾à®°à®£à®®à®¾à®•,

துறவு என்பது, தம்மிடம் இருக்கும் சொத்து, குடும்ப வாழ்க்கை, என அனைத்தையும் விட்டு விட்டு ஊர் ஊராய் செல்வது துறவா? அல்லது இது எல்லாம் என்னுடையது என்ற நினைப்பைத் துறப்பது துறவா? எல்லாம் என்னுடையது என்ற நினைப்பை துறந்துவிட்டால் இருக்கும் இடத்திலேயே, இயற்கையோடு வாழலாம் அல்லவா., எல்லாம் துறந்துவிட வேண்டும் என்றால் இயற்கை ஏன் இருமையாக உள்ளது? இத்தனையையும் ஏன் படைத்தது என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும்.,

 

ஒரு நூல் இயற்றும் நோக்கம் என்பது இரண்டு வகையாக பிரிக்கலாம், அதில் ஒன்று தனக்கு எல்லாம் தெரியும் என்று எழுதும் நோக்கில் ஒன்று,  மற்றொன்று தாம் உணர்ந்ததை பிறரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்று உதவும் நோக்கில் எழுதப்பட்டது., நம் தமிழ் நூல்கள் உதவும் நோக்கில்தான் எழுதப்பட்டது என நாம் நன்றாக அறிவோம்.

 

உதாரணமாக,

திருக்குறளின் கடவுள் வாழ்த்து.,

முதற்குறளில் கடவுள் யார் என்று தெளிவாக சுருக்கமாக கூறிவிட்டார்,

அடுத்த எட்டு குறள் வரையிலும் கடவுளை உணர்ந்தவர் எப்படி இருப்பார்

என்று நமக்கு அடையாளம் காட்டி அவரைச் சரண்டைந்து பிறவிக்கடலை கடக்க வேண்டும் என்கிறார், பத்தாவது குறளில் கடவுள் உணர்ந்தவரைக் கண்டு, அவரிடம் உபதேசம் பெறுவதும், பெறாததும் இறைவனிடத்திலேதான் உள்ளது என்று நமக்கு சமாதானம் கூறுகிறார்.,

 

கடவுள் உணர்ந்தவரின் குறிப்புகளைக் கூறுகிறார், முதற்குறளில் கடவுளை தெளிவாக கூறிவிட்டார், இரண்டாவது குறளில் கூறுகிறார் கடவுளை நீங்கள் தெரிந்து கொண்டதால் ஒரு பயனுமில்லை

எனவே, கடவுளை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கடவுள் உணர்ந்தவர் அவசியம் என்பதற்காக, தனது எட்டு குறள் வரையிலும் குருவின் தன்மைகளைக் கூறுகிறேன் என்று இரண்டாவது குறள்முதல் தொடங்கி ஒன்பதாவது குறள்வரையிலும் குருவின் தன்மையையே கூறிக்கொண்டு வருகிறார் என்றால் நாம் சற்று ஆழ்ந்து சிந்திப்பது அவசியமாகும்.,

 

கடவுளை உணர்ந்த குருவின் தன்மை

·         அதாவது, என்றும் குன்றாத அறிவுடையவராக இருப்பார்,

·         மலர்மிசை ஏகியிருப்பார் ( உபதேச இரகசியம் )

·         வேண்டுதல் வேண்டாமை பண்புடன் இருப்பார்,

·         இருள் சேர்ந்த இருவினையும் சேராமல் இருப்பார்,

·         தன் பொறிக்கு உண்மையாக இருப்பார், நம்மிடம் உள்ள நம் பொறிகள் உண்மையை நமக்கு காண்பித்து கொடுக்கும் ஆகவே அதனை  கவனிங்கள் என்கிறார்,

·         தனக்கென்று யாரையும் ஒப்புமை இன்றி தான் தானாகவே இருப்பார்

·         அறத்தின் ஆழமான முடிவை அறிந்து கொண்டவராக இருப்பார்,

·         எண் குணங்களையும் தன்னுள்ளே கொண்டிருப்பார்.

·         பிறவியை கடப்பதும் கடக்க முடியாததும் இறைவனிடமே உள்ளது என்று கூறுகிறார்.

 

மேலும் காமத்துப்பால் முழுவதும் கடவுள் உணர்ந்தவரின் அனுபவம் ஆகும், இதனை கடவுளை உணர துடிக்கும் மனிதருக்கு உதவியாக இந்த நூலை தந்துள்ளார் அவர்.

ஒன்றாக காண்பதே காட்சி புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம், என்றானும் சாவாமல் கற்பதே கல்வி, தனை பிறர் ஏவாமல் உண்பதே ஊன். ( ஔவையார் )

இது உபதேச இரகசிய பாடலாகும், ஆகவே உண்மையறிந்தோரின் மூலம் தமிழின் உண்மையான விளக்கத்தை உலகத்திற்கு உணர்ந்த முன் வாருங்கள்.

திருகுறளோ, திருமந்திரமோ, திருவாசகமோ, ஔவை நூல்களோ,  சிவ வாக்கியமோ, ஞானவெட்டியானோ, மற்றும் உள்ள இதுபோன்ற நூல்களைப் பற்றி நாம் புரிந்து கொள்ளவது மிகவும் கடினமாக இருக்கிறதல்லவா, ஒவ்வொருவரும் அவரவர் புரிந்துகொண்டவரையில் விளக்கம் அளித்து செல்கின்றனர், உண்மை என்பது ஒன்றுதான் பிறகு ஏன் இத்தனை விளக்கங்கள்?

 à®•à®Ÿà®µà¯à®³à¯ˆà®•à¯ கண்ட, இறையுணர்வு பெற்ற ஒரு மனிதரால்தான் இதற்கு உண்மையான விளக்கம் கூறமுடியும், ஏன்னென்றால், தமிழில் உள்ள நூல்கள் அனைத்தும் இறையை, உண்மையை உணர்ந்தவர்களின் அனுபவங்கள் ஆகும், கடவுளை பிறருக்கு உணர்த்தும் வகையிலிலான பயிர்ச்சிகள் ஆகும்,

இந்த நூல்களுக்கெல்லாம் விளக்கம் கடவுளைக் கண்டகொண்ட ஒருவர், தாம் கடவுளைக் கண்டதுபோல் பிறருக்கும் காண்பிக்க முடியும் என்ற ஒருவர் விளக்கம் அளிப்பது முறையா? அல்லது இறையுணர்வு அடையாதா ஒருவர் விளக்கம் அளிப்பது முறையா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.,

இதுபோன்ற ஒரு மாமனிதரைக் கண்டால் அவரை பயன்படுத்தாமல் இருப்பது சரியா?

 

அவர்தான் நம் சிவயோகி சிவக்குமார் ஐயா அவர்கள்,

சிவம் = உயிர்,

யோகி = இணைந்தவர்,

சிவயோகி என்பது பெயரல்ல, தான் தன் மனதை கடந்து உயிருடன் இணைந்துள்ளேன் என்கிறார், இதனை பிறர்க்கு உணர்த்தியும் வாழ்ந்து வருகிறார்கள்.,

அவரை வாழும் தமிழ் நூல்கள் என்று நாங்கள் அனைவரும் அன்போடு அழைக்கிறோம்., ஆகவே அவரின் மூலம் தமிழ் நூல்களுக்கு உண்மையான விளக்கத்தை பெற்று உலகத்திற்கு உண்மையை உணர்த்த முன்வாருங்கள்,