• +91 97102 30097
  • reach@yogakudil.org


திருக்கோவை | பகைதணிவினைப்பிரிவு | பாடல் எண் : 2

 நெருப்புறு வெண்ணெயும் நீருறும்

உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.
 
நெருப்பில் உருகும் வெண்ணையும் நீரில் கரையும் உப்பும் என இங்கே மலையாய் விரியும் தோகை என்பதை புறத்தே இருந்து பொய் என்பார்கள் கடந்து போகும் என்பதை விருப்பமுடன் உணர்வோரை விண்ணோரைவிட சிறந்தவர் என நாடமாட்டார் அழித்திட திருப்புறு சூலத்தினோன் தில்லை போன்ற திருநுதலே. (வெளிப்படாமல் இருக்கும் உண்மை உணர உணர்ந்த மனிதர் துணை தேவை)#திருவாசகம்

திருக்கோவை | பகைதணிவினைப்பிரிவு | பாடல் எண் : 1

 மிகைதணித் தற்கரி தாமிரு

வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே.
 
மிகைப்படுவதை தணிப்பதற்கு அரிதாம் இரு வேந்தர் வேல் போர் இடைப்பட்டு பகையை தணிப்பதற்கு உட்பட்ட மனிதர் பலபிறவியில் செய்த அனைத்தையும் தணிப்பதற்கு என என்னை ஆட்கொண்டவன் தில்லை சூழ் பொழில்வாய் அரும்பை தணிப்பதற்கு அரிதாம் தாழ்தரு மொய்குழலே. (ஆணவம் அழித்து வாழ்வு தரும் திருவடியின் பெருமை)#திருவாசகம்

திருக்கோவையார் | காவற்பிரிவு | பாடல் எண் : 2

 சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்

குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே. 
 
சிறிய கண் பெரிய கை திடமான கோடு கொண்ட காது சிவந்த முகம் என தெளிவு பெற்ற முன்னோர் செய்த கருப்பு சிலை உறு காட்ட உடன்உறை அம்பலம் எண்ணமிடுபவரின் உறு காட்டு புரியச் செய்யும் குழலாம் இது என்று சூழ்கின்றதே. (வணங்காமுடி வழி காட்டி நிற்கின்றது)#திருவாசகம்

திருக்கோவையார் | காவற்பிரிவு | பாடல் எண் : 1

 மூப்பான் இளையவன் முன்னவன்

பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
தாழ்குழற் பூங்கொடியே. 
 
முடிவானவன் இளமையானவன் முதல்வானானவன் பின்பும் அவனே மூன்று பக்கங்களையும் காத்திருப்பவன் வியப்புக்குரிய தில்லையன் அருளால் வளரும் நீர் நிறை உலகத்தை காப்பவன் விலக நினைப்பவர் தமக்கு கார்கயல் காட்டி பூவால் நலமான ஒளி தந்து புரியச்செய்யும் தாழ்குழற் பூங்கொடியே. (இறைமை விட்டு விலகாத பண்பை திருவடி அருளும்)#திருவாசகம்

திருக்கோவையார் | ஓதற்பிரிவு | பாடல் எண் : 4

 பிரியா மையுமுயி ரொன்றா

வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
யென்னாம் புகல்வதுவே.
 
பிரியாமல் இருப்பதும் உயிர் என்று ஆவதும் பிரிந்தால் ஒட்டு மொத்தமாய் பெரிய மாற்றம் தரும் என அறிந்து நின்று போற்றினர் பெண் என்ற உடலின் பிரியாமை செய்து நின்றோன் தில்லை என்ற புகழ்பெற்ற ஊர் என அறியாமல் இருப்பது குற்றம் என்று புகல்வதுவே. (உடல் இருக்கும் பொழுதே உண்மை அறிய வேண்டும்)#திருவாசகம்

திருக்கோவையார் | ஓதற்பிரிவு | பாடல் எண் : 3

 கற்பா மதிற்றில்லைச் சிற்றம்

பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.
 
திடமான மதில் கொண்ட தில்லை சிற்றம்பலத்தை காதல் செய்த விலைமதிப்பற்ற வணக்கத்திற்குரிய மன்னனை விரும்பாதவர் போல் அன்பரின் சொற்களை விரும்பினால் என்ன மென்மையாய் ஓதி காதுகளுக்கு எட்டாத வெளியே இருக்க இலக்கு அறியாமல் வேல் குத்திய இலையாய் குறுகியதே. (மென்மையான சொற்களுடன் போலிகள் நம்மை ஆட்கொள்கிறது)#திருவாசகம்

திருக்கோவையார் | ஓதற்பிரிவு | பாடல் எண் : 2

 வீதலுற் றார்தலை மாலையன்

தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
யுற்ற புரவலரே.
 
வீழ்தல் அடைந்தவரின் தலையை மாலையாக அடைந்தவன் தில்லையில் மிகவும் சிறந்த அரசன் அவன் கழல்கே காதல் உற்றவர் நன்மையுடைய கல்வி தரும் என்றே ஓதல் செய்பவரும் உற்று உணர்ந்தார் விலகல் இல்லா கழல் இடத்தில் போதல் அடைந்தார் நின் புணர்முலை உற்ற பொருள் தந்து காக்கும் புரவலரே. (திருவடி அடைந்தவர் அடுத்தவருக்கு பொருள் தந்து உதவும் புரவலர்)#திருவாசகம்

திருக்கோவையார் | ஓதற்பிரிவு | பாடல் எண் : 1

 சீரள வில்லாத் திகழ்தரு

கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
ராகுவ ரேந்திழையே.
 
அளவற்ற சீர் திளைக்கத் தரும் கல்வி உடைய செம்பொன் அரையின் யாரும் அளக்க முடியாத அளவு சென்றவர் அம்பலத்துள் நின்ற ஓர் அளவில்ல ஒருவன் இரு கழல் எண்ணியவர் போல் ஏற்றம் பெறுவர் ஏந்திழையே. (திருவடியே சிறப்புகளை அருளும்) #திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 9

 ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்

ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
றாதிவ் வணிநலமே. 
 
இன்பக் கடலில் மூழ்கும் ஆருயிர் இரு உருவம் கொண்டு இன்பத்தில் திளைக்கும் போல் அம்பலம் சேர் ஆனந்த வெள்ளத்து அறை கழலான் அருள் பெற்றவரின் இன்பக் கடல் வற்றாது முடியாது அணிநலமே. (இறை அடைந்தவர் இன்பத்தை அணியாக கொண்டு இன்பத்தில் திளைப்பார்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 8

 மன்னவன் தெம்முனை மேற்செல்லு

மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
றோர்தெய்வ முன்னலளே.
 
மன்னவன் அறியும் இடத்தை அடைய முற்பட்டாலும் மால் அரி போல் புறத்தே சென்றால் முடியாது. வரகுணன் தென்னவன் போற்றும் சிற்றம்பலத்தான் மற்ற தேவர்களுக்கு எல்லாம் முன்னவன் முழுவதையும் ஆளும் மற்றோர் தெய்வம் முன் இருப்பவளே. (அவளும் அவனுமாய் திருவடியே இருக்கிறது)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 7

 சிற்பந் திகழ்தரு திண்மதில்

தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங்
கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
லாதவ னீர்ங்களிறே.
 
சிலையின் அழகு தரும் திடமான தில்லை சிற்றம்பலத்து பொன் பதித்தது போன்ற சடையன் பூ நிறைந்த வணம் போன்ற பொன்னின் கல் பதித்த வாய் இளம் மீன் கடக்கும்படி கடந்தும் இங்கே பதித்து வாசல் என்று விடியல் இது என செல்லாதவர் மதம் கொண்ட ஆண் யானையே. (வாசல் அறிந்து செல்லாதவர் வீணானவர்களே)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 6

 தெய்வம் பணிகழ லோன்தில்லைச்

சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன்
வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
பரிசின்ன பான்மைகளே.
 
தெய்வீகமானவர்கள் பணியும் கழலோன் தில்லை சிற்றம்பலம் இணைப்பவள் தெய்வீகமானவர்களை பணிவதை அறியாதவள் என நின்று கடமை செய்யாமல் கடந்து சென்றாலும் வரும் இடத்தை சேர்ந்திட அறியான் என்றாலும் முழுமை பணி மணி என்றால் பரிசுகள் பலபலவே. (சமூக ஒழக்கம் அற்றவரும் இறை உணர்வு பெறலாம்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 5

 பொட்டணி யான்நுதல் போயிறும்

பொய்போ லிடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல
ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான்
மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடையோன்தில்லை
போலிதன் காதலனே.
 
திலகம் அணியும் நெற்றி போய் சேரும் பொய் போல் இடை என புகுந்திடும் அதை இட்டு அணியாதவன் தவத்தின் மலர் இன்றி பிறவற்றிற்கு மதிப்பு கொடுக்காதவன் சூடும் ஒன்றையும் குழலுக்கு வைக்காதவன் வண்டுகள் மொய்க்க மலர் கட்டி அணிபவர் சடையோன் தில்லை போல் இதன் காதலனே. (மூன்றாம் கண் விழிப்பும் சூண்ணிய தரிசனமும்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 4

 தொண்டின மேவுஞ் சுடர்க்கழ

லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா
ளயல்மன்னும் இவ்வயலே.
 
உதவி செய்வோர் கூடும் சுடர் கழலோன் தில்லையின் பழமையான நகரின் காண அரிதானவளான நீ உன் கொழுநன் செழிக்க ஏவள் வேலை செய்யும் திடமான தோள் உடையவன் என அவனுக்கு பணிவோள் வண்டுகள் மொய்க்கும் குழல் உடையவள் இருக்கும் இவ்வயலே. (ஒன்றுடன் ஒன்று கூடி இயலும் திருவடி பெருமை)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 3

 சீரியல் ஆவியும் யாக்கையும்

என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
வணங்குமெங் காவலரே.
 
சீரான இயல்பு கொண்ட உயிரும் உடலும் எல்லாவகையிலும் சிறந்தமையால் கரிய மேகமான வலிமையான கண்ணியை எண்ணப்பட்டு கமலம் கலந்த வேரியும் சாந்தும் தந்து என்னை முழுமையான காமம் அனுபவிக்க என்றே காரியல் கண்டவர் தில்லை வணங்கும் என் காவலரே. (சரியான மனிதர் இறை அடைந்து முழுமையை அனுபவிப்பார்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 2

 இருந்துதி யென்வயிற் கொண்டவன்

யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
சிலம்பன் அருந்தழையே
 
இருந்து துதிக்க என்னை எப்பொழுதும் வாசலில் முன்னே பொருத்தியவன் உன்னும் மருந்தானவன் பிரம்மன் மால் இருவர்க்கு அரியவன் தில்லை வாழ்த்திடும் சிறப்பானவர் போல் இருந்து திரண்ட வானத்து நட்சத்திரங்களாய் முன்னே வலம் செய்து அருந்ததி காணும் அளவு சிலம்பன் அருந்தழையே. (மனம் தெளிவடையச் செய்து என்னை மணம்புரியச் செய்தான்)#திருவாசகம்

திருக்கோவை | மணஞ்சிறப்புரைத்தல் | பாடல் எண் : 1

 பிரசந் திகழும் வரைபுரை

யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும்
பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
தீரப் புகுந்துநின்றே. 
 
அமையான அழகுபடுத்திய மனம் என்ற யானையின் பீடு அழித்தவர் நாதம் அடைந்து உருகினர் நீக்கமற பாகுபாடு இல்லாமல் யாவர்க்கும் முன்னே அரசனாய் அம்பலத்தில் நின்று ஆடும் தலைவன் அருள் பெற்றவரின் அழகு செய்த அணியாய் துயர் தீரப் புகுந்து நின்றே. (பலம் கொண்ட யானை போன்ற மனதை அழகு செய்தவர் இறைவனுடன் இணைகிறார்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 33

 என்கடைக் கண்ணினும் யான்பிற

வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
தோன்றும் முழுநிதியே.
 
என் ஓரவிழிப் பார்வையிலும் பிறவற்றில் ஒத்தபடி இல்லாமல் இருப்பினும் இரக்கம் கொண்டு தன் ஒரப்பார்வையால் குளிர் தில்லை சங்கரன் தாழ்கயிலை கொண்டு பார்த்தும் கடிந்தாரும் கண்ணை பெற்றிருந்தார் முன் கடை கண் இது என காணுப்படி வந்து தோன்றும் முழுநிதியே. (இறை அருளால் முழுமை உணர்த்தும் கண்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 32

 அடற்களி யாவர்க்கு மன்பர்க்

களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற்
றில்லைப் பரமன்வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க்
கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக
ரார்க்கும் வியன்முரசே.
 
தன்னை மறத்து களிப்பவர்க்கும் அன்பர்க்கும் அளிப்பவன் துன்ப இன்பம் ஒட்டாத வண்ண அறை என்ற தில்லை பரமன் வெறுப்புடன் கடக்க முடியாத களிப்புடையவனை கடிந்தவர்க்கோ அல்லாமல் பற்றி நின்றவர்க்கோ விட முடியா களிப்பை நம் விருப்பமுடன் ஏற்கும் நகரத்தார்க்கும் என கொட்டு முரசே. (யார்க்கும் இன்ப களிப்பை அளிப்பது இறைமையே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 31

 பூரண பொற்குடம் வைக்க

மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
றேங்கும் மணமுரசே.
 
முழுமையான பொற்குடம் அமைந்திட மணி முத்து பொன் பதித்த தோரணம் நிறைய அளவற்று ஆர்பரிக்க பழமையானவர்க்கும் காரணமானவன் சிறந்த அணியான கண்ணுதலோன் கடல்தில்லை என வாரணமாய் முலைவடிவில் எங்கும் உறுதியானாய் என மணமுரசே. (கண்ணுதலால் அடைந்தாய் என கொட்டு முரசே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 30

 கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை

யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
தேரின்று மெல்லியலே. 
 
போதை விரும்புபவர் தேடி அடையும் திடமான கொன்றை நின்றவன் தில்லை கார்கடலின் இடத்தே பறவையாய் ஆர்பரிக்க அலைகள் ஆர்பரிக்க புலவர்கள் கூடி திடமாய் ஆர்பரிக்க மதுகரம் ஆர்பரிக்க வலதில் புரியும் வெள்ளினம் ஆர்பரிக்க வருகிறாள் தேரில் மெல்லியலாலே. (திருவடிப் பெருமை)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 29

 இளையா ளிவளையென் சொல்லிப்

பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
சிற்றம் பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி
லைப்பயில் செல்வியையே.
 
இளமை குறைய இவளை என்ன என்று சொல்லி உணர்த்துவேன் எத்தனை முறை ஆயினும் அளவில் முதிரா அவளின் தாள்முடி சார்ந்து இமையாமல் இருப்பவர் வளையாமல் இருக்கச் செய்யும் சிற்றம்பலத்து மன்னன் திளைப்பதில் மாற்றம் இல்லாமல் பயில் செல்வியே. (நேற்றும் இன்றும் என்றும் இளமை குன்றாது இருப்பது இறைமையே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 28

 மனக்களி யாய்இன் றியான்மகிழ்

தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
சாரற் பொருப்பிடத்தே.
 
மனம் களிப்புடன் இல்லாத நான் மகிழ்ந்து தூங்க வார்கழல்கள் அளித்து நிற்கும் அம்பலத்தே இருப்பவன் குளிர் கயிலை வெறிக்கொண்ட யானையை அடக்கிய ஒருவர் செவ்வாய் என சிவந்து நீர் வடியும் வரை வெறுப்பை பற்றாது இருப்பார் பொருப்பிடத்தே. ( புலால் மறுத்தவர் மகிழ்ச்சியை அடைவார்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 27

 விதியுடை யாருண்க வேரி

விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
கொல்இனி வையகத்தே. 
 
விதி உடையவர் பெறுவார்கள் தேன் கொண்ட பெரிய கலத்தை அம்பலத்தின் தலைமை பெற்றவன் பரங்குன்றின் வரும் நீர் ஒழுக கதி உடையான் வெளிப்பட்டு நிற்க மாறி எண்ணாதபடி இருக்கும் அறிவுடையார் தெய்வமே இவருக்கு இணை இல்லை வையகத்தே. (மாற்றமில்லாத இறை சிந்தை உடையவருக்கு இணை இல்லை)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 26

 குடிக்கலர் கூறினுங் கூறா

வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை
வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
மறைக்கும் பரிசுகளே.
 
குடி இருக்க இயலாதவர் கூறினும் கூறா வியப்பு உடைய தில்லை கூத்தன் தாள் அடைய இயலாதவரானாலும் மொய் பூந்துறை முன் நிறுத்த உரிமையான புருவ வடிக்கலர் அடைவோர் கண்ணி வந்தன சென்று நாம் எது என அறியாதபடி படிக்க இயலாதவராக நாம் இருப்பினும் மறைக்கும் பரிசுகளே. (அறியாமலேயே திருவடி கவனம் பரிசுகளை வழங்கும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 25

 வண்டலுற் றேமெங்கண் வந்தொரு

தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
றானொர் கழலவனே.
 
தெளிவற்று எங்கள் கண்ணில் ஒரு தோற்றம் வந்தது என்று அனுபவம் என்றே நின்ற ஓர் சமயத்தை உடையவன் புலியூர் என்றே அடைந்தவர் கடல் பெற்று எமது உயிர் மீட்டு தந்து கண்டதை அறிந்து சேர்ந்து சென்றவர் கழலவனே. (தெளிந்தவர் தெளிவை எளிமையாக தருவார்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 24

 யாயுந் தெறுக அயலவ

ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
தருவன் சுடர்க்குழையே. 
 
நான் தெளிய அயலானவர் சுகப்பட ஊர் மகிழ நீயும் முயல நிகழ்ந்தது கூற என்னுடைய வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துவது போல் தூயவன் உனக்கு திடமான கூள் தருவான் சுடர்க்குழையே. (இறை யாருக்கும் அருள தில்லையில் நின்று ஆடுகின்றான்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 23

 சென்றார் திருத்திய செல்லல்நின்

றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
உரைப்பனிக் கூர்மறையே.
 
அடைந்தவர்கள் திருத்தியதை மறுத்து நின்றவர்கள் சிதைந்துவிட நன்றே வழங்கிய இறை தில்லை தொழாதவர்கள் வளம் இழந்தும் அவர்களுக்கு சொல்ல ஒன்றும் இல்லை என சொல்லாமல் இருக்கமாட்டேன் குன்றாமல் நடப்பவர்க்கு உற்ற துணையாவேன் உரைப்பனிக் கூர்மறையே. (இறை உணர்ந்தவர் வேதம் கடந்து உதவ முற்படுவார்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 22

 அயர்ந்தும் வெறிமறி ஆவி

செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென்
ஆதுந் துறைவனுக்கே.
 
சோர்வும் வெறி கொண்டு மறுத்தும் தன் ஆவிபோக போராடி அறிய முடியாதவர் பெயர் உரைத்தும் ஆணவம் ஒழியாவிடின் என்ன சொல்வதோ இணைந்து இருவர் உயர்ந்தும் பணிந்தும் உணர்வான தன் பலம் அறிந்தார் எனின் உயர்ந்தே எதிலும் எழிலாக ஆகும் துறைவனுக்கே. (அறிந்தவருடன் உறவாட நாமும் அறியலாம்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 21

 வேலன் புகுந்து வெறியா

டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல்
வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா
னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
நிற்பித்த பண்பினுக்கே.
 
வேல் கொண்டவன் வந்து புகுந்து வெறிகொண்டு அறியாமை அழிக்க காலன் புகுந்து அழிக்காதபடி கழல் வைத்த எழில் தில்லை நின்ற மேலானவன் என் கண் நின்று வெறுமையான காடு போல் பாலன் புகுத்தி பரிசாக அளித்து நிறுபித்த பண்பினுக்கே. (திருவடி நாட்டம் இறை தரிசனம் பெறும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 20

 குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி

கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
றோன்று மவன்வடிவே.
 
குயில் இது இல்லை என சொல்லமுடியாதபடி சொல்லும் சிற்றம்பலத்தான் இயல் இது என்ன என அறியவியலாது இறை என்ற சேய் கடந்தபடி மயில் என்றே கொடி வாரணங் காட்டி கூர்மையால் இன்றே நெல் என ஆனதும் அவன் வடிவே. (எல்லா வடிவும் இறை வடிவே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 19

 மாட்டியன் றேயெம் வயிற்பெரு

நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
யாதன வாய்திறந்தே.
 
சிக்கிய அன்றே என் வாசலில் நாணத்துடன் இருக்க இனிமையாக்க மா சூட்டி நிற்க துவண்ட என் உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்டவன் தில்லையன் தொல்லோனைக் கல்லாதவர் போல் வாடமல் குழலாரே மொழி எதுவானலும் வாய் திறந்திடுங்கள். (இறையை எந்த மொழியிலும் போற்றலாம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 18

 சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்

றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு
றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம்
பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை
யாடுமின் அன்னையரே. 
 
அடங்க மறுக்கும் மார்பகம் சூழ்ச்சி இல்லாத சொல் தெளிவு பெறவேண்டியது இல்லாத குணம் குற்றம் சேரும் பருத்தை அடைந்தாள் குறுகிய மனம் கொண்ட அசுரர் அழித்த சிவன் சிற்றம்பலத்தானை நினைய நெஞ்சம் உடையவர் போல் துன்பம் அடைந்து நோய் உற்றவரை சாடுங்கள் அன்னையரே. (வேதனை அடைந்தால் அதற்கு காரணமான தவறாக வழிகாட்டிய அசுரரை ஏசவும் அன்னையரே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 17

 வேயின மென்தோள் மெலிந்தொளி

வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்
கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
ளாம்இத் திருந்திழையே.
 
மூங்கில் இன மென்மையான தோள் மெலிந்து ஒளி குறைந்து வாடி பார்வை மாறாக தெரிந்து மேகலை நழுவிட துன்பத்தால் பவளம் போல் ஆயின ஈசன் தேவர்களின் தேவன் சிற்றம்பலத்தான் சேய் என ஆயினளாம் இந்த திருத்திழையே. (தவத்தால் இளைத்து ஏகனின் அருள் பெறலாம்) #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 16

 வருவன செல்வன தூதுகள்

ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
வானின் றிருக்கின்றதே.
 
வருவதும் போவதும் தூதர்கள் என்று எதுவும் இல்லாத வான் புலியூர் ஒன்றிய அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளம் உருக தருவன செய்யவேண்டயதை கொண்டே ஏகியவன் நெஞ்சம் நம்மை இரவகை காதலுடன் விரிந்து இருக்கின்றதே. (தூதர்கள் தேவையின்றி இருக்கும் ஏகன் காதலாய் விரிந்துள்ளான்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 15

 வென்றவர் முப்புரஞ் சிற்றம்

பலத்துள்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
தேமையுஞ் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
தோன்றும் நிரைவளையே.
 
மூன்று பக்கத்தையும் வென்றவர் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளிக் குன்றாக இருப்பவர் குறையா அருள்தரக் கூடினர் நம்மை விலகி சென்றவருக்கு தூதாக இருந்து திறமையாய் உரைத்திடாது நின்றவருக்கு தூதாக வந்து தோன்றும் நிரைவான வளையே. (தூது சொல்ல முடியாதவருக்கும் தூதாக இருப்பது திருவடியே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 14

 கருந்தினை யோம்பக் கடவுட்

பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே.
 
கருத்து உருவாக்கும் விதத்தில் கடவுள் இருப்பதாக மனிதர் இன்புற மிகுந்த வழிந்திடும் அளவற்று சுரந்ததன் பேரருளால் வணங்கிடவே பரிந்தது என்ன ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் நின்று விரியும் ஈர்ப்புடையாள் விரைந்து வருவது வெள்வளையே. (உள்ளத்து ஏக்கமே ஏகனை உணர்த்தும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 13

 மன்செய்த முன்னாள் மொழிவழியே 

அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொல் மொய்குழலே.
 
இருப்பின் ஒழுக்கம் உருவாக்கும் முன்னாள் தோன்றிய மொழியால் வாய்மை கண்டறிந்து என்ன செயல் செய்த உள்ளமும் நிறையும் நிலைக்காது மாறும் உயிரும் பொன் செய்த மேனியால் தில்லை ஊரில் பொறை உரிதாக கொண்டு முன் செய்த தீவினை கொல் காலத்தில் நீர்த்திட செய்யும் மோய்குழலே. #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 12

 மொய்யென் பதேஇழை கொண்டவ

னென்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
லாமிவ் வியலிடத்தே. 
 
கூட்டத்தையே இழையாக கொண்டவன் என்னை தன் கூட்டத்து கழல் காட்டி செய்யவேண்டியதை செய்தவன் தில்லை சூழ்ந்த கடல் சேர்ந்தவர் சொல்லும் பொய் என்று கருதினால் நீள்கூந்தல் உள்ள பொற்கொடியே மெய் என்பது ஏது மற்று இல்லை இந்த எழில் இடத்திற்கு. (என்றும் மாறாதது இறை இதை உணர்ந்தோர் வாக்கே வழி)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 11

 வந்தாய் பவரையில் லாமயில்

முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
நையுந் திருவினர்க்கே.
 
வந்து ஆராய்பவர் இல்லா மயில் முட்டை குட்டிக்குரங்கு பந்தாய் ஆடும் வனம் பலவற்றை நாடன் இசை இனிமையானதை அடைந்தவர் நறுங்கொன்றை அணிந்த தென்தில்லை கூத்தன் தொழாதவர்களின் கூட்டம் போல் சிதறாமல் குலம் முழுவதும் பற்று இல்லாமல் இருக்கச் செய்யும் உயர்வுடையவர்க்கே. (திருவடி தவத்தால் பற்று இல்லாமல் போகலாம்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 10

 மதுமலர்ச் சோலையும் வாய்மையும்

அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை 
யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே.
 
போதை தரும் மலர் நிறை சோலையும் வாய்மையும் அன்பும் மாற்றம் ஒன்று இல்லாத போக்கும் செல்வத்தின் செருக்கும் முன் நின்று இளகும் மலர் நோக்க மூன்று உடையவன் தில்லை நோக்காமல் இருந்தவர் போல் இது மலர் பாவை என்று வந்தபடி வந்த ஏந்திழையே. (திருவடி பெருமை) #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 9

 கானமர் குன்றர் செவியுற

வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
மான்நல் தொடைமடக்கும்
வானமர் வெற்பர்வண் தில்லையின்
மன்னை வணங்கலர்போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல்
செல்லல் திருநுதலே.
 
கானம் தங்கும் குன்றை அடைந்தவர் செவியில் உணர்ந்து வாங்க துணையாக இருப்பவர் நோக்கினால் நோக்கம் உணர்த்தும் உயிர்கள் இணங்கும் வானவர் வெற்றி பெற்றவர் வண்தில்லை ஆற்றலை வணங்காதவர் போல் தேன் போன்று சொல்லி சொல்லாமல் சொல்லவல்லார் சொல்வது உயர் நெற்றியினாலே. (குரு முன் நெற்றிக்கண் விழிப்படையும்) #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 8

 ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்

ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
கொலாமின்று செய்கின்றதே. 
 
ஏற்கத் தகுந்த தோள் முன்னமே அறிந்து மணந்தவன் உயர் அழகு கொண்ட சீர்ப்பொன்னை வென்ற செழுமையான தில்லை சூழ் பொழில் வாய்க்காலில் வளர் புன்னை தரும் பொன் அவிழ்தது போல் மணலிற் கலந்து அகன்றார் தேர்ப்பின்னை சென்ற வெள்ளை மனம் இன்று தடம் மாற செய்கின்றதே. (நீக்கமற இருப்பதை அறியாமல் தடுமாறும் மனம்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 7

 அருந்தும் விடமணி யாம்மணி

கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
யாமினி வாழ்வகையே. 
 
அருந்திய விடம் மணியாக நின்ற மணிகண்டன் மற்ற அண்டர்க்கு எல்லாம் மருந்தும் அமுதமாகவும் இருக்கும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல் செய்ய வேண்டியதை திருத்தமாக செய்ய வகைதந்தும் அதை சிதைக்கும் என்றால் வருந்தும் மடமை கொண்ட நெஞ்சமே இனு அறி வாழும் வகையே. (பொருளை மதித்து வாழ பழகு)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 6

 நல்லாய் நமக்குற்ற தென்னென்

றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
றார்நம் சிறந்தவரே.
 
நன்றாய் நமக்கென கொடுத்ததை என்ன என்று உரைப்பேன் எதிரி செய்த எல்லாவற்றையும் விலக்கியவன் இமைக்காதவர் இறைஞ்சும் வல்லவர் திருவடி நிழல் வண்ணமுடையவர் வண்தில்லை தொழாதவர்களுக்கு விலகாத துன்பம் இருக்க அதை கடந்த நாம் சிறந்தவரே. (திருவடி தொழுபவர் சிறப்புடன் இருப்பார்கள்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 5

 வருட்டின் திகைக்கும் வசிக்கின்

துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே. 
 
வருத்தினால் திகைப்படையும் விருப்பினால் வெளிப்படும் மனம் மகிழ்வுடன் நெருங்கினால் தெளியலாம் இதை சொல்லும் வகை முழுமையாக இல்லை சீர் பெற்ற குரு புகழ் கொண்ட புலியூர் கண்டு உறுகாத மனம் உள்ள வளைந்த கூந்தல் உள்ளவளுக்கு எங்ஙணம் சொல்லி ஏகுவேன். (மந்த மதியார்க்கு திருவடி பெருமை புரியாது) #திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 4

 கேழே வரையுமில் லோன்புலி

யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக்
கண்ணியை நீ வருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி
யேகு தனிவள்ளலே. 
 
நிகர் வைத்து வரையறுக்க இயலாதவன் புலியூர் பயிலும் கிளி மொழி போன்ற யாழ் கொண்டோர் மொழியால் அரவினும் பகலில் அறியமுடியாது என இருக்கும் வரி கண்ணியை நீ வருட்டி தாழ்மையடையாதே என எனக்கு விடை சொல் தனி வள்ளலே. (உன்னை அறியும் திறத்தை தா தனித்தன்மை கொண்ட வள்ளலே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 3

 குன்றங் கிடையுங் கடந்துமர்

கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும்வந்து
மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே. 
 
மேடு பள்ளம் கடந்து உயர்ந்தோர் கூறும் நீதி உணர்ந்து இன்றும் இருக்கும் உம்மையும் வந்து மேவுவன் அம்பலத்தை சேரும் மன்றம் இருக்கும் ஏக தலைவனை வாஞ்சையாய் பொன் போன்ற இடத்தை தடை இன்றி அடைய வாடா வகை சொல் தேன் மொழியே. (தமிழே திருவடி அடைய வழி சொல்வயாக)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 2

 வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்

ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்சிற்
றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
திரவின்நின் னாரருளே. 
 
நீண்டு வடிந்து வடிவம் தரும் கண் வெண் நிலத்தில் நகைப்பாலும் தொடுக்கப்படும் நீர் வந்திட துணை நீ எனக்கு என தொழுதிட செய்த ஈசர் சிற்றம்பலத்தான் பணிக்கே அடிமைப் படுத்த பொல்லா இரவின் துணை நின் அருளே. (திருவடியின் துணையே போதும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைபொருட்பிரிதல் | பாடல் எண் : 1

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை யோதுநர்க்கே.
 
குறையாக இருப்பதின் பொருட்டும் கல்வியின் பொருட்டும் செல்வத்தின் பொருட்டும் நின் குலத்தில் வந்தோர் நிறைவிற்கும் மேன்மையான நீதிக்கும் ஏற்பான இல்லாததை நினைக்காமல் இறைவன் எண்ணத்தில் ஏந்தி வண்ண தில்லை ஏழ் பொழிலும் உறையும் நுதலாள் விலை உண்டோ மெய்மை ஓதும் ஒருவர்க்கு. (திருவடி ஏழிலை ஓதுவது காட்டிலும் விலை உயர்ந்த ஒன்று இல்லை)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 16

 வாரிக் களிற்றின் மருப்புகு

முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.
 
ஏற்கும் யானை என ஆன குன்றில் புகுந்திட முத்தம் தரும் வரைமகளிர் நிறைந்து களிக்கும் வீழம் மலை நாடாமல் விரி திரையை நாடி களிக்க அமரும் சடைமுடி நமது தில்லை ஏரி களிக்கும் மஞ்சம் நீர்மை என ஏய்துவதே. (திருவடி பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 15

 வல்சியி னெண்கு வளர்புற்

றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
பவர்ப்பெறிற் கார்மயிலே. 
 
உணவால் நன்றாக வளர்ந்த புற்றில் அகலாமல் அடர்ந்த இருள் என நின்ற சிற்றம்பலத்தை சேராதவர் போல் ஆய்ந்து அறிய வகை அறியாம குறுகிய கல்லாதவர் வந்து வழி தேட பெறி என நின்ற கார்மயிலே. (திருவடி விடியலை தரும்)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 14

 தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்

பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
னாஞ்சொல்லுந் தன்மைகளே.
 
மாம்பழம் எழிலாக இருக்கும் தில்லை சிற்றம்பலத்தே மேலோர் வணங்க பெயர் தரித்து நடம்பயில்பவனை நாடாதவரின் அழகற்ற கலை காண சென்றார் துன்பம் அடைந்து நிற்க கண்டால் தானாகவே அறிகிலேன் என சொல்லும்படி தன்மையே ஏற்படும். (திருவடி அறியாதவர் துன்பம் ஏற்புடையதே)#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 13

 மையார் கதலி வனத்து

வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத் 
தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
மாலையின் முன்னினவே.
 
மை இட ஆர்வப்படும் வனத்து வரும் பலன் என்ற பழத்திற்கு அடிமையானேன் அதை அறியாமல் நின்றன பெண் குரங்குகள். சோர்வும் இருமாப்பும் இல்லா மெய் அரிது என அம்பலத்தான் மதியூர் அடைந்து உணராதவரே வெறுப்பார். கொடுக்க வளர்ந்த வேங்கை பொன் மலையின் முன் நின்றதுவே. (திருவடி கவனம் சோர்வும் இருமாப்பும் இல்லா நிலை அருளும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 12

 சுழியா வருபெரு நீர்சென்னி

வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர
வேதும் பயனில்லையே.
 
சுழலாமல் வரும் தடையற்ற நீர் சென்னியில் வைத்து என்னை தன் விருப்பத்தில் விலகா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் கொண்ட மான் விழியாய் வந்து ஆடும் மென்குழலாள் திறமே மெய். பழியாம் பகல் என்ற வாய்ப்புகள் வந்தால் நீர் வழியவில்லை என்றால் பயனில்லையே. (நன்றியில் நனையட்டும் சென்னி)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 11

 இறவரை உம்பர்க் கடவுட்

பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல
ராம்பக லுன்னருளே. 
 
இறப்பு என்ற வரையை இழந்த உம்பர் கடவுள் காட்ட எழிலுடன் நின்று மலைமேல் வாழும் குறவரை ஈர்த்து குளிர் வரை நாடிட கொழும் பவள நிறம் கொண்ட மேனியன் சிற்றம்பலம்  நினையாதவர் போல் உறவுக்கு வரையற்ற மேகலை அகன்றது உன் அருளே. (திருவடி கவனக் கொண்ட குறவரை தேவையற்றதிலிருந்து விலக்கி காக்கும் இறை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 10

 கலரா யினர்நினை யாத்தில்லை

அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள்
தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா
மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை
யோநும் வரையிடத்தே. 
 
கல்லாதவராக இருப்பவர் நினைக்காத தில்லை அம்பலத்தான் கழல்கண் கூடாதவர் செயல் இருள் போல் மூழ்கி மறையும் மின்னி விடியா இரவும் பொழியாத மழையும் புண்ணில் நுழைந்த வேல் மலாராமல் மருந்தும்  இல்லாமல் போகும் உமது வரைபட்ட காலம் வரை. (திருவடி நினையாதவர் வாழ்வு நிறைவடையாது) 
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 9

 நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று

நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
படாது கலங்கினவே. 
 
முழுமை அடைந்த கண் குறைந்த மலர்கள் கொண்டவன் நின்று நாடகம் ஆடும் தில்லை. சிறை அடைந்த கண் குறைந்து கூடும் சீர் நகர் காக்கும் சிவந்த வேல் கொண்ட இளைஞர். வெளிப்படுத்தும் கண் படும் இடம் எல்லாம் பட்டு விலகமுடிய மார்பகம் கொண்ட பைந்தொடியாள். எல்லை கொண்ட கண் வெப்பம் குறைந்த கண் அறியாமல் கலங்கிடுமே. (பொருளின் பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 8

 வான்றோய் பொழிலெழின் மாங்கனி

மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
போலும் வரிவளையே.
 
வானலாவிய பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் பட்டதை கண்டு மகிழ்ந்த தேன் போன்ற ஒருத்தி நீள் முடி மேல் கூடும் பெண்ணை வைத்து உடையாளையும் மேனியில் வைத்தான் வானலாவிய மதில் தில்லை மாநகர் போல் வரிவளையே. (ஒத்திசையும் திருவடி பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 7

 விண்ணுஞ் செலவறி யாவெறி

யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
நோக்கினள் கார்மயிலே. 
 
மேலும் கடக்க அறியாதவர் கழல் வணங்காமுடி தீ வண்ணன் சிவன் தில்லை மலிவு இல்லாத எழில் கானல் நல்லிரவில் நாட்டம் பயில அண்ணல் மணி நெடுந்தேர் வந்தது உண்டோ எனச் சிறிது கண்ணும் சிவந்தபடி அன்னை என்னையும் நோக்கினள் கார் மயிலே எனும்படி விரிந்து. (சென்னியின் பயன் அடைதல்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 6

 கழிகட் டலைமலை வோன்புலி

யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி
யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலின்
துவளு மிவள்பொருட்டே.
 
அச்சம் தவிர்க்கும் மலை உடையவன் புலியூர் எண்ணாதவர் போல் குழியில் விழ்ந்த ஆண்யாணை அலற அச்சம் தரும் இரவில் கைகூப்பி தொழுதபடி இருந்தேன் பொழியும் கடும் புயலில் மயில் துவளும் இவள் பொருட்டே. (திருவடி மயில் துவளும் அருள் மழையால்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 5

 களிறுற்ற செல்லல் களைவயிற்

பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
நீசெய்யும் மெய்யருளே.
 
ஆண்யானையின் பிடியில் இருந்து தன் களைப்பை போக்க மரத்தை பிடிக்கும் பெண்யானை போல் வானத்து பெருவரை நாட துணையாக நடக்கும் ஒளி பெற்ற மேனியன் சிற்றம்பலத்தை நினையாதவர் போல் வெளியேறினர் வான் பழி கொள்வர் அகத்தவன் நீ செய்யும் மெய்யருளே. (இறை அருளால் திருவடி கவனம் கூடும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 4

 கடந்தொறும் வாரண வல்சியின்

நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு
நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீஅர வன்னம்
பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
நின்னருள் தோன்றுவதே.
 
வெற்றி பெற முயன்றிடும் வர்ணம் நிறை வன்மையை நாடி பலருக்கு வெளிப்பட்ட இடம் அறிந்து பார்க்கும் இயல்புடையவனாய் நீ எழில் பெற்றால் பார்த்து அறியும் இடமெல்லாம் தீமை ஒழியம்படி எம்மை தொடரும் துன்பம் எல்லாம் அழிந்து அப்பனே நின்னருள் தோன்றுவதே. (திருவடி அருளால் இன்பம் அடையலாம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 3

 சிறார்கவண் வாய்த்த மணியிற்

சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற்
றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக்
காத்தும் பெரும்புனமே.
 
மனமற்ற சின்னவர்கள் கையில் கொண்ட கவணில் (உண்டிகோல்) உள்ள மணி சிதைக்கும் பெருந்தேன். இழுக்கும் மென்மை ஏறால் கழியும் சிறுகுடில், தொடரும் உறவு தரும் எந்தை, உறவை வரைமுறை கடக்க செய்த குறவர், பெற்று ஆளும் கொடிச்சி, உம்பர் பெறாஅம்பலவன், மலை காக்கும் பெரும் புனமே. (திருவடி பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 2

 பரம்பயன் தன்னடி யேனுக்குப்

பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.
 
பரத்தை தனக்கு பயனாக தந்தவனின் அடிமையானவனுக்கு உலகம் வழங்கும் யாவற்றையும் ஊடுருவி வரம்பு அறிய மால் அயன் தில்லை வானவன் வானகம் சேர் அரம்பையர் இடத்தில் மட்டுமே இல்லாமல் யானைக்கு நட்ட குரம்பையருக்கும் இடம் தோன்றும் இக் குன்றிடத்தே. (இறை யாரும் அறியும் வாய்ப்புடன் இருக்கிறது)
#திருவாசகம்

திருக்கோவையார் | வரைவுமுடுக்கம் | பாடல் எண் : 1

 எழுங்குலை வாழையின் இன்கனி 

தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
னோநின் னருள்வகையே.
 
வளரும் வாழையின் குலையில் உள்ள இனிமையான பழத்தை உண்ட இளம் குரங்கு குளிர்ந்த செழுமையான குலை நிழலில் விழாமல் முனை மேல் உறங்க கொலை செய்யும் வேல் திருச்சிற்றம்பலத்தை எண்ணாதவரை கூட்டமாய் அழிக்க வேல் போன்ற கண்ணிக்கு என்ன சொல்வேன் உன் அருள் வகையே. (அச்சம் தவிர் இறையருள் காக்கும்)  
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 56

 ஆண்டி லெடுத்தவ ராமிவர்

தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
கீழும் பழனங்களே. 
 
ஆயுள் முழுமையடை வந்தவராம் இவர் வேறு மாற்றம் அடையமாட்டார் தீமை அடைந்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின் கண் சென்று தூண்டி எடுத்தவரால் கொடிகள் தழைத்து பழங்கள் விழுந்து பாண்டி போல் பசுமை கொழிக்கும் வயல்களே. (இறை உணர்ந்தவன் இருப்பிடத்தில் தீவினை ஒழிந்து வளமை பெருகும்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 55

 சுரும்பிவர் சந்துந் தொடுகடல்

முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
நீர்மையர் காணுநர்க்கே. 
 
வண்டு சத்தமிடும் சந்தும் தொடப்படும் கடலாகவும் முத்தும் வெண் சங்கும் என எங்கும் விரும்பினர் இடம் சென்று உடலின் அணியாம் வியப்பான கங்கை என்னும் பெருகும் நீர் சூடும் தலைவன் சிவன் சிற்றம்பலம் அனைய கரும்பு போன்ற மென் மொழி கொண்டு காண்பவர்க்கே துன்பம் இல்லை. (திருவடி அறிந்து இறை கண்டோர் துன்பப்படுவதில்லை)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 54

 மீள்வது செல்வதன் றன்னையிவ்

வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
னெல்லை யணுகுவரே.
 
தேவையற்றதிலிருந்து மீள்வது செய்யும் அன்னை இந்த வெங்கடத்தை தகுந்த இடமாக அடையச் செய்த கிழமைக்கு உரியவனுடன் கிளர்ந்து எழும் கெண்டை மீன் என நீள்வது செய்த கண் கொண்டு பெருந்துன்பத்தை கடக்கச் செய்து எம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே. (குருவுடன் நானும் துன்பத்தை கடத்தோம் சென்னியின் அருளால்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 53

 மின்றொத் திடுகழல் நூபுரம்

வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
நீசொன்ன கொள்கையரே.
 
மின்னல் ஒத்த இடுகழல் நுட்பமான புரம் வெள்ளை மற்றும் சிவந்த பட்டு மின்னிட ஒன்றுடன் ஒத்து நடந்திடும் ஓருத்தியோடு புலியூரன் என்றே நன்றாய் அந்த எழிலை தொழுதேன் என உரைக்கமாட்ர்டாதார் நன்மைகள் குன்ற கண்டிக்க தகுந்த நீ சொன்ன கொள்கையரே. (திருவடி எழிலை புகழாதவர் வாழ்வின் நன்மை அடையாது கொள்கை பற்றாளர்களாக இருப்பர்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 51

மீண்டா ரெனஉவந் தேன்கண்டு

நும்மையிம் மேதகவே

பூண்டா ரிருவர்முன் போயின

ரேபுலி யூரெனைநின்

றாண்டான் அருவரை ஆளியன்

னானைக்கண் டேனயலே

தூண்டா விளக்கனை யாயென்னை

யோஅன்னை சொல்லியதே.

 

வென்றார் என வியந்து கண்டேன் நியும் மேன்மையுற முன்னம் இருவர் இணைந்தார் புலியூர் நின்று ஆண்டவன் அருமையானவர் தலைவன் உண்மை கண்டேன் ஆகையாலே தூண்டாது எரியும் விளக்கானவன் என்னை அன்னை என அழைக்கச் செய்ததே. (திருவடியே தூண்டா மணி விளக்கு)

#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 52

 பூங்கயி லாயப் பொருப்பன்

திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
திண்டிற லாண்டகையே.
 
பூ நிறை கயிலை மலையன் திருப்புலியூரன் தென்னகத்து தீங்கு இல்லா சிறியவள் நின்ற இடம் சென்று எதிர்த்த வேங்கையின் வாயை கை மறித்து சோம்பி கிடப்பதை தடுத்து பணி கொண்டது திண்ணிய ஆண்டகையே. (சென்னி சென்று உலக இன்பத்தை தூய்ப்பது)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 50

 வெதிரேய் கரத்துமென் தோலேய்

சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
வெறுப்பவொ ரேந்தலொடே. 
 
மூடும் திரை கரமாய் கொண்ட மென்மையான தொலுடையவனே மாறும் வெண்மை கொண்டு அதிரும் மறை பொருளாய் சொல்லப்படும் தில்லை அம்பலத்து கதிரவனே சடை உடையவனே கரமான் என ஒரு மான் மயில் போல் எதிர் வந்து சுரத்தையும் வெறுப்பையும் வேரோடு அழித்ததுவே. (திருவடி பெருமை)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 49

 சுத்திய பொக்கணத் தென்பணி

கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவொர் பெருந்தகையே.
 
வளைந்து பொருந்திய கணம் தெரியப்படுத்தும் பணி கட்டமைப்பு கொண்ட சடை வெண்மை கோலமாய் புலியூர் என பலபேர்களுக்கு உற்ற உறவாய் பணித்தபடி செயல்பட இருமாப்புடன் பணியதவர் பின்னடையும் படி செய்து முன்னேறி செல்பவர் பெருந்தகையே. (திருவடி பெருமை)

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 48

 பாயும் விடையோன் புலியூ

ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக்
கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
நிலாவிடும் நீள்குரவே.
 
வேகமாக செல்லும் விடையானவன் புவியூர் ஒத்த பாவை முன்னே அழியும் உடலில் ஆடி கடக்க வழி கண்டு நின்று வாயும் திறவாமல் குழை எழில் வீசும் வண்டாய் உறுத்த நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நினைவில் நீண்டு இருக்கலாமே.(யோக அனுபவத்தில் நிலைத்திரு)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 47

 புயலன் றலர்சடை ஏற்றவன்

தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
வாழி எழிற்புறவே.
 
நீரில் இருந்து அகன்ற சடை ஏற்றவன் தில்லை மலையரசி கூடியவன் இவனை பணியாதவர் போன்ற அதிக பாவம் செய்தவருக்கு அன்னியன் தனித்தவன் அச்சம் தரும் துணையாக இசையும் மாதர் சென்றால் இயலதவன் என்னை இந்நிலை மாற்றி வாழ்த்திய எழிலான உறவே. (இயலாமை போக்கும் இறை பக்தி)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 46

 பேதைப் பருவம் பின்சென்

றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின்
றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
பற்குரற் பொற்றொடியே.
 
குழைந்தை பருவம் கழிந்து பின் சென்றது முன் இருந்தே இருந்தது என்னை பிரிந்தால் ஊத்தை என மாறும் கலத்தில் அமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள் எங்கும் கலந்து நிற்கும் நெடியோன் முயன்று அடைந்தாள் அத்தருணம் பொலிவுடன் தொழிற்படும் புலி போன்ற பாங்குடைய பொற்கொடியே. (சென்னியில் ஏற்படும் மாற்றம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 45

 பாலொத்த நீற்றம் பலவன்

கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
மாணிழை கால்மலரே. 
 
பால் போல் இளகிய அம்பலவன் கழல் போற்றாதவர் நோய் பட்டு தராசு போல் ஆடி பதைக்க கொடிய புண் ஆகும் வேல் ஒத்த வெறுமை நிறை காட்டில் அடுத்த விடலை பின் போக கால் ஒத்த வினை உடையவன் பெற்ற மாறும் இழை கால் மலரே .(திருவடி சுவாசம் தெளிவை தரும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 44

 தெள்வன் புனற்சென்னி யோன்அம்

பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
யென்று கருதுவனே.
 
தெளிந்தவன் கூடும் சென்னி உடையவன் அம்பலம் எண்ணாதவர் இனம் சேர்க்கும் முதல்வன் தொடரும் முன் வினை ஒழிப்பவன் படைகண்ணி சீறடி இங்கே அங்கே மறைந்த கள்வன் எளியவர் அடி கருதுவனே. (நன்மை வளர்த்து தீமை அழிக்கும் எளிமையாவன் அடி பணிவோம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 43

 முன்னுங் கடுவிட முண்டதென்

தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
நான்மறை யுத்தமரே. 
 
முன்னர் கொடிய விடம் உண்ட தென்னகத்தின் தில்லை முதல்வன் அருளால் இன்னும் கடுமையான கடுமை உடைய இடத்தில் மாற்றியும் செய்த வாசமலர் கூந்தலை தான் நேர்ந்தால் தீமை என எண்ணாமல் ஓதுங்கள் நான்மறை உத்தமரே. (எது செய்தாலும் முழுமையாய் செய்யவும்)

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 42

 பணங்களஞ் சாலும் பருவர

வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல
சேட்டைக் குலக்கொடியே.
 
ஆசைகள் அடங்கும் பருவத்தை அருளியவன் தில்லை நின்று வாசம் தந்து மயக்கலும் மன்னனும் இங்கே அழைக்கப்பட்டால் உணர்வு கலந்து ஏற்க நினைப்பு ஒழித்து குணம் மிளிரும் நன்நல விளையாட்டு குலக் கொடியே. (அருகே அழைத்து இன்பம் தரும் இறை)

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 41

 வேயின தோளி மெலியல்விண்

ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
நாடுவன் பொன்னினையே. 
 
அழகிய தோள் மெலிய விண்ணவர் தக்கன் வேள்வியால் பழித்த சீர்த்த அம்பலத்தானை பழித்து மூலத்தி நெருப்பை ஆற்றி சிரத்தின் கண் இழந்து திசை திசையாய் போயின எல்லை பல கடந்து நாடுபவர் பொன்னினையே. (உள்ளதை மறந்து தேடி ஓடாதே)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 40

 வைம்மலர் வாட்படை யூரற்குச்

செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ராற்கண் புதைத்துப்
பதைக்குமெங் கார்மயிலே.
 
வைத்த மலர் வாள் என படை கொள்ளும் ஊரார்க்கு செய்யும் சிறு வேலை மாறாக என் மெய் மலர் வாள் கண்ணி வல்லள் அடையும் தில்லையான் மலையில் மொய்க்கும் மலர் காந்தளை பாந்தள் என எண்ணி அனுபவிக்காமல் விலகி கைம்மலர் கண் புதைத்து பதைக்கும் என கார் மயிலே. (திருவடி தரும் அருள் பெறாமல் பொருள் மேல் நாட்டம் போதுமானது இல்லை)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 39

 பெற்றே னொடுங்கிள்ளை வாட

முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
தேன்சுடர் வானவனே.
 
அடைந்தவனுடன் அடைந்ததும் வாட அதிகபட்ச குறை பெற்று இருக்கையில் நல்லபடி மொழியால் வளம் தருபவள் நடந்தாள் அவளை நேரடியாக நான் அணுக பெற்றேன் பிறவி பெறமால் செய்தோன் தில்லை தேன் பருக மறுக்கமாட்டேன் மலரின் மலர் திரம் தேன் சுடர் வானவனே. (பிறவி தடுக்கும் மலர் அறிய என் மொழி உதவியது)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 38

 கொன்னுனை வேல்அம் பலவற்

றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
சேரு மெனஅயரா
என்னனை போயினள் யாண்டைய
ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
னுள்ளத்தை யீர்கின்றதே.
 
கொல்லும் முனை உடைய வேல் அம்பலவர் தொழாதவரின் குன்றங் கொடியோள் எப்படி விலகி சென்றோமோ அப்படி சேரும் என சோர்வின்றி என்னைப் போல் போயினள். உரிமை கொண்டு என்னை ஆளபவள் மிகைப்படுத்தி கிள்ளை என் உள்ளத்தை ஈர்க்கின்றதே. (இறையிடம் இருந்து விலகிய நாமே இணையும் அற்புதத்தை மெய்பொருள் அருளும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 37

 யாழியன் மென்மொழி வன்மனப்

பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
யாரின் அருஞ்சுரமே.
 
யாழின் மென்மையான இசை போன்ற பேசும் கடின மனப் பேதை ஓர் ஏதுமற்றவனாக பார்த்து பின் தோழியிடம் விலகி என்னை முன்னே துறந்து எண்ணாதவர் கண் முன்னே வாழச்செய்த இம் மூதூர் மறுகச் சென்றாள் என்று அளவற்று முறையிட ஆழி தந்தானம் பலம் பணியாரின் அருஞ்சுரமே. (இளம் வயது அனுபவமே மீண்டும் அடைகிறோம் என உணர்ந்த யோகியின் புலம்பல்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 36

 தழுவின கையிறை சோரின்

தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம்
பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
யாலுற்றுத் தேய்வித்ததே.
 
தழுவின கைகள் சற்றே சோர்வு பெற்றால் தளரும் என்றே செயல்பட நொந்து செற்கள் பேதம் தரும் அறிவுடை விண்ணோர் வினை தீர நஞ்சு உண்ட அம்பலத்து பணிக்கும் தலைவன் செழுமையான தாள் பணியாதவர் பிணிவாய் பட்டு தேய்வித்ததே. (இறை உணர்வுடன் செயல்பட்டால் சோர்வு வருவது இல்லை) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 35

 தாமே தமக்கொப்பு மற்றில்

லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை
யேன்பெற்ற அம்மனைக்கே. 
 
தனக்கு தானே நிகர் மற்றபடி தில்லை குளிர்ந்த பூ மேல் மிதக்கும் பதைத்து பொங்கும் நங்காய் எரியும் தீமேல் வெப்பமாய் செறிவுடன் பரந்து இருக்கும் சிலம்படியாய் உள்ளபடியே நடக்க அருமைய செயல்புரிந்தேன் அம்மனைக்கே. (நற்செயல்கள் செய்து எனக்கு நானே நிகர் என உணர்ந்தேன்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 34

 முறுவல்அக் கால்தந்து வந்தென்

முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர்
வானா மொளியிழையே. 
 
இணையும் காலத்தில் முறுவல் தந்து மார்பகம் முழுவதும் கைகொண்டு தடவித் தழுவி செய்தவை எல்லாம் முழுமையாய் சிதைய ஏறு வலக்காலனைத் சென்றவன் சிற்றம்பலம் சிந்திப்பவர் உறு வலக்கானகம் தான் படர்வான் ஒளி இழையே. (போகம் மட்டும் செய்தவர் காலனையும் போகத்துடன் யோகம் செய்தவர் ஒளி இழையும் அடைவார்கள்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 33

 வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்

தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
யாவன எம்மனைக்கே.
 
வழி கொடுத்தான் வழிதேடி வரும் கண்ணிக்கு தகுதி தந்து தகுதிக்காக முன்னை தீமை கெடுத்தான் கெடுப்பதில் தொல்லோன் தில்லை பன்மலர் ஆழமாய் கிளர மடக்கி குடைந்து அழங்க அழுங்கி தழைத்து மகிழ்வுற்று அடுத்தும் இனிமையானதே இனி எனது மனைக்கே. (இறை தேட முற்பட்டால் இனிமையுடன் நல்வழி கிடைக்கும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 32

 ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை

யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
லாயத்தெம் வாணுதலே. 
 
ஆள அரிக்கும் அரிதான தில்லை யாவருக்கும் எளிதாய் தந்து அருளும் இக்குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ்பவருக்கு அளக்கும் நிகரான ஒருவர் குரு அவர் மலர்ந்தார் என அறிந்து கொண்டார் கண்ணிகொண்டாள் ஆண்ட லயம் எம் வாணுதலே. (குரு மலர்ந்ததை அறிந்தவர் தானும் மலர்வார்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 31

 மயிலெனப் பேர்ந்திள வல்லியி

னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
கொலாமின் றயர்கின்றதே.
 
மயில் என விரியும் இளம் வல்லி இணையுடன் மென்மையாய் மான்விழி விழித்து குயில் என பேசும் குட்டன் என் குன்றாய் எனது நெஞ்சகத்தே பயிலும் பிரிய அறியாதவன் தில்லை பல பூங்குழலாய் நிறையும் அரும் கண்ணா என் கோலம் இன்று அயர்கின்றதே. (இறை தேடும் எழில் கண்கள் அயர்கின்றதே)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 30

 செய்குன் றுவைஇவை சீர்மலர்

வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிடம் ஏந்திழையே.
 
செயல்பட தகுந்த குன்றுகள் இவை சீர் மலர் இருக்கும் வாவி குறைந்து வளர்ந்து திங்களாய் பாயும் பொழில் இவை ஞானியர் எங்கும் பொய் குறையவும் வேதியர் ஓதிடும் திடமானதும் ஏமாற்றுத்தனம் குறைக்கும் சிலை அம்பலவற் இடம் ஏந்திழையே. (உண்மை அடையும் வழி)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 29

 மின்போல் கொடிநெடு வானக்

கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
தோன்றுநன் னீணகரே.
 
மின்னல் போல் கொடி நெடிய வானமாகிய கடலுள் திரை விரித்திட பொன்போல் புரிப்புடன் வடவரை காட்டி பொலியும் புலியூர் மன்னரைப் போல் பிறை அணியும் மாளிகை சூல் ஒத்த வாய் தடையற்ற வாய் நின்போல் நடை அன்னத்தை முன் காட்ட நாடிடும் நகரே. (ஒப்பில்லா அளவை காட்டும் மெய்பொருள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 28

 மின்றங் கிடையொடு நீவியன்

தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
சூழ்தரு சேண்நகரே.
 
மின்னல் என இடையுடன் நீண்டு இயங்கும் தில்லை சிற்றம்பலவர் குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குருகும் கமலம் கிடக்கும் துறை துறை வளைந்த வெள்ளை நகையார் சென்றிட கடையான தடமும் புடைசூழ தரணம் சேர்க்கும் நகரே. (மெய்பொருள் பெருமைகள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 27

 கண்கடம் மாற்பயன் கொண்டனங்

கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
கானகந் தண்ணெனவே.
 
கண் அடைந்த கடத்தின் பயனாக கண்ட இனிய காரிகை நின் பண் கடந்த மென் மொழி முழுமையாக பருக வருக இப்பொழுதே. விண் கடந்த நாயகன் தில்லையின் மெல்லியல் பாகமான மன்னவன் தணிந்த கடம் பசுமையான தடம் போல் கடுமையான கானகத்தில் குளுமையாய் நின்றதுவே. (புலன்கள் இறை அனுபவத்திற்கே அருளப்பட்டது).
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 26

 அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்

ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
போன்றொளிர் நாடகமே.
 
அன்புடன் அணைத்து அஞ்சாத என சொல்லி பின் விலகி செல்லும் ஆடவன், பின் என்றும் விலகாது நீண்டு வரும் ஒருவன், வந்த பெரிய சுரம் விலகாது பொன் பணை என இறையுறை தில்லை, பொலிவான மலர் மேல் நட்பாக குளிர்ச்சி அளிக்கும் ஒளி என இவை நாடகமே. (இறை தவிர அனைத்தும் நாடகமே)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 25

 விடலையுற் றாரில்லை வெம்முனை

வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
இன்றிக் கடுஞ்சுரமே.
 
இளமையாகவே இருப்பவர் இல்லை, கூர் மங்காத வேல் கொண்ட வேடர் குளிர்ந்த மென்மையான பூ கண்டு துன்பம் அடைந்தார், குழல் வாடியவள் இருக்கும் சிற்றம்பலவர் கடலை அடைந்தவரின் வெப்பம் தணிந்து சுருக்கி கடலை அடைந்தான், இப்படி கடக்க திறன் அற்றவர் கடுஞ்சுரமே அடைவார். (நிலையற்ற உலகில் வாழ்ந்து கடந்து கடவுளை அடைந்துவிடு)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 24

 முன்னோ னருள்முன்னும் உன்னா

வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
மாடுசிற் றம்பலமே.
 
யாதொன்றுக்கும் முன்னோன் அருள் முற்பிறப்பிலும் எண்ணாத வினையின் சிக்கியவர் அனுபவிக்கும் துன்பத்தை துடைத்துக் கொள் இப்பொழுதே. துன்பம் கடந்து இன்று கண்டு பொன் ஆர மணி மாளிகை தென்புலியூர் புகழ்பவர் தென்னவன் என உடையான் உடன் நடமாடு சிற்றம்பலமே. (இறை கண்டு இன்பம் அடைந்துவிடு)

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 23

 கொடித்தேர் மறவர் குழாம்வெங்

கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்தோய் கனவரையே.
 
கொடியுடைய தேர் கொண்ட மறவர் கூட்டம் வெள்ளை யானை வரிசைபட்டு கூடி தன் கை வடித்து தேரி விளங்கச் செய்தால் வாய்ப்பு அருளும் அம்பலத்தோன் அடியால் தேர்ந்திட அஞ்சுபவன் உங்கள் தலைமை என உணர்வோர் வண்டு தேடும் குழல் உடைய மங்கை கண்டு இந்த விண் நிறை கனவரை தேறமாட்டார். (தனக்குள் உள்ள நுட்பம் அறியாதவர் இறை உணரமாட்டார்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 22

 பேணத் திருத்திய சீறடி

மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன்
னாமன்னு கானங்களே.
 
பராமரித்து திருத்திய சீரான அடி மெல்ல முன்னேறிச் சென்று பேரரவம் அணிய திருத்திய பொங்கும் ஒளியோன் புலியூர் உரைபவன் கூடிட திருத்திய வான்பதி சேரும் இருமருங்கும் காண்பதற்கு திருத்தியது போல் முன்னே அறிந்த கானங்களே. (இறை உணர்ந்தால் இசை உணர்வாய்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 21

 ஈண்டொல்லை ஆயமும் ஔவையும்

நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.
 
இங்கே என்னை எல்லைபடுத்தி ஆயும் அறிவும் தீர்க்கமான முடிவும் நீங்காத இந்த ஊர் துன்பம் தீர்த்தும் ஈடு இல்லா எல்லை கண்டிட அழைத்து உன்னையும் என்னையும் பிடித்தபடி ஆண்டு எல்லை தீர இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு சேர் தில்லை மாநகர் வழி சென்று சேர் என திருத்தினானே. (தீய வழி தடுத்து நல் வழி காட்டும் இறைமை).
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 20

 பறந்திருந் தும்பர் பதைப்பப்

படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
வற்றுமிச் சேணிலத்தே.
 
சுற்றித் திரிந்த தெய்வீகமானவர்கள் பதைக்க எதிலும் படரும் வெளியானது சிறப்புடன் தெரிவிக்கும் அடியான தென்தில்லை அன்னாள் திறத்துடன் சிலம்பாததால் அறத்துடன் உள்ளம் உருக அருளாக இருக்கும் அருமறையின் திறத்தை தெரிந்தார் கலி முற்று பெறும் சேணிலத்தே. (அருமறை விளக்கம் அறிந்தால் வீடுபெறு அடையலாம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 19

 வைவந்த வேலவர் சூழ்வரத்

தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
துயிலுமிம் மூதெயிலே.
 
வழி விழியாய் இருக்க வந்த வேலவர் சூழ்ந்திட வரும் தேர், வள்ளல் உள்ளம் தெய்வம் தரும் அருள், உறக்கம் முழுவதும் செழுமையான மிடற்றில் மையம் கொள்ளும் கோன், தில்லை வாழ்ந்தார் மனத்தின் வாழ்த்துதல் போல் ஊற்றேடுக்கும் வாவி, தெளிவுத் தர துயிலும் இந்த முழுமையான எழிலே. (மெய் பொருள் பெருமைகள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 18

 பனிச்சந் திரனொடு பாய்புனல்

சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி
யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
லாம்புகுந் தெய்துவதே.
 
குளிர் தரும் நிலாவுடன் பாயும் நீர் சூடிய பரன் புலியூர் அனிச்சம் என திகழும் சீறடி வெப்பத்தில் வெந்த கனி சிவந்திட கடுமையான கடம் புகுந்து கடக்க முடியும் என்றால் இனி சந்தமேகலை என மேலாடை புகுந்து ஏய்துவேன். (மெய் பொருள் புகுந்து ஏகனை அடைவேன்)  
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 17

 முன்னோன் மணிகண்ட மொத்தவன்

அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
யாம்விழை பொங்கிருளே.
 
முன் நின்றவன் மணிகண்டனாக மொத்தமானவன் அம்பலத்தே முடிவாகி நின்றவன் தலை சாய்த்து போற்றதவர் வினை வளர்க்கும் என் உயிரானவன் அன்னாள் அரும் பெறுதலை உண்டாக்கும் இயல்பானவன் அவன்மேல் அருள் பெறும் ஆசையால் பொன்னானவர் மணி மகிழ்ந்து பூ மலர விரும்பும் பொங்கிடும் அருளே. (வன்னி சென்னிக்கு அருளும் மனம் மகிழ்ந்து)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 16

 கம்பஞ் சிவந்த சலந்தரன்

ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
கும்மலர்ச் சீறடிக்கே. 
 
கொடி மரத்தில் சிவந்த ஈரமானவன் போன்று கறுத்த தில்லையில் இருக்கும் நம் அன்பன் சிவநகர் நன்மை அருளும் துளிர்த்தவன் கடும் சுரத்திற்கு அஞ்சி பாதுகாப்புடன் அடைக்கலம் புக மிகநீண்டு சிந்தும் கண்ணாள் சிவந்து ஒன்றாக இருந்து நமக்காய் பதைக்கும் மலர் சீறடிக்கே. (துன்பம் துடைத்திடுவாள் சென்னி என நின்றவள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 15

 மற்பாய் விடையோன் மகிழ்புலி

யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
வாழி எழுமையுமே.
 
மறைப்பற்ற விடையானவன் மகிழ்ச்சி தரும் புலியூர் கொண்டு வளர்ந்த பொறுமையானவர் திருநாண் பொருப்பர் விருப்பமுடன் புகுந்து உந்தப்பட்டு கற்பார் பெரிய சுவாசத்தால் பறித்தெறிந்து ஒழிக்க இயலாதவர் பிறவாமல் இருக்க ஏழையர் வாழி எழும் பிறப்பு எல்லாம். (பிறவி கடக்க தெரியாவர் பிறந்து வாழட்டும் சிறப்புடனே)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 14

 காயமும் ஆவியும் நீங்கள்சிற்

றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர
லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
போக்குத் துணிவித்தவே.
 
நீங்கள் உடலும் உயிரும் சிற்றம்பல வன் கயிலைச் சீலமும் யாவும் பெற்று செழுமையான திரையும் நீர் கொண்ட தேகத்தில் எல்லாம் பெற்றாலும் நமனுக்கு ஈடு கொடுக்கவில்லை என உணர்ந்து தோய்வையும் நாட்டமில்லா சுரத்தையும் போக்க துணிவித்ததுவே. (அவனே ஆர்வத்தையும் ஆற்றலையும் அருள்கிறான்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 13

 நிழற்றலை தீநெறி நீரில்லை

கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
பாகும்நங் கொற்றவர்க்கே. 
 
நிழல் இல்லாமல் தீயால் நீர் வற்றிய காட்டில் நரி கத்தும். துன்பம் இல்லாமல் இருப்பதே பரன் என்ற தில்லை அம்பலத்தான் கழல் இடத்தே கவனம் வைத்து வணங்க கிடைக்கும் என்பதை கல்லாதவர் போல் குறை கழல் சொல்லி செல்லக் குறிப்பாகும் நம் கொற்றவர்க்கே. ( மன்னனைப் போல் வாழ மதித்து தொழு உண்மையை) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 12

 குறப்பாவை நின்குழல் வேங்கையம்

போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
னத்தகும் பெற்றியரே.
 
குறுகிய பாவை உன் குழல் அணியும் வேங்கை போது உடன் கோங்கம் விராய் நறப்பாடலம் சூடும் உன்னை புனைய நினைப்பவர் தலைவன் புலியூர்தனை மறக்க வரும் தீவினை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் பிறப்பார் ஏது ஏற்படினும் பின்தள்ளிடும் பெறு பெற்றிட அறியாதரே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 11

 தாயிற் சிறந்தன்று நாண்தைய

லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
சிறந்த மதிநுதலே.
 
தாய் சிறந்தவள் அதைப்போல் நாணமும் பெண்மைக்கு ஆகையால் நாணம் உள்ளவள் மென்மையும் திடமான கற்பு நெறியும் விருப்பமாக ஏற்று கோயிலில் சிறந்த சிற்றம்பலத்தே ஆடும் நடனநாயகன் வாயில் சிறந்து அறிவில் சிறந்த நுட்ப அறிவாக ஆனளே. (சென்னியின் கவனம் சிறந்த அறிவை நல்கும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 10

 இங்கய லென்னீ பணிக்கின்ற

தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
கண்ணித் திருநுதலே. 
 
இங்கே சார்ந்திருப்பதற்கே நீ என பணிக்கின்ற ஏந்தல் இணையான பதி இல்லாத கங்கை செழுமையான சடை கண்ணூதல் அண்ணல் கடினமான தில்லை பங்கய பாசடை படர்ந்த பாய் வழி நீ என படர்தடத்து செழுமையான கயல் என்ற கருமையான மீன் கண்ணித் திருநுதலே. ( மெய்பொருள் பெருமைகள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 9

 பிணையுங் கலையும்வன் பேய்த்தே

ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
 
பிணையாகவும் கலையாகவும் உள்ள கடினமான தேரினை பெருகி வரும் நீரால் அணையும் முரண்பாடு நிறைந்த முடிவும் ஐயமில்லாமல் உண்மையே. இணையும் அளவு இல்லா இறையோன் உறை தில்லை குளிர்ந்த பூம் பணை உள்ள தடமும் அன்றோ உன்னோடு ஏகினேன் பைந்தொடிக்கே. (ஐயும் மெய்யும் காட்டும் இடத்தே இறைவனும் உணர்த்த காத்திருக்கிறான்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 8

 மெல்லியல் கொங்கை பெரியமின்

நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங்
கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை
சேய்த்தெம் அகல்நகரே.
 
மென்மையானவள் மார்பகம் பெரியதாகவும் மின்னலை ஒத்த இடையும் மெல்லிய அடி பூவாகவும் அவள் இயல்பு வெம்மையும் கடலை சுடும் தீக்காற்றாகவும் வானம் எங்கும் நிறைய குளிர் நிலவாகவும் கண்ணித்தொல்லோன் புலியூர் அல்லி கோதையே நல்லாள் என எல்லை கொண்டு குழைந்தை போல் இருப்பவர் எம்மைப் போல் அகலாத நகர் அடைந்தவரே. (சென்னியில் கவனம் சிறப்புகள் நல்கும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 7

 மாவைவந் தாண்டமென் னோக்கிதன்

பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
தாளின்றென் பைந்தொடியே. 
 
சிறந்ததை வைத்து அதில் ஆண்டபடி மென்மையாய் தன் தோழரை நோக்கும் வண்தில்லை வீரர் அரசி வந்தாண்ட சிவந்தவாய் கருமையான கண்ணியின் குறிப்பறியேன் பூவை அவள் பொன்பந்து தந்து என்னை பற்றிக் கொண்டு பாவை அவள் பைங்கிளி அளித்தாற் என் பைந்தொடியே. (பெண் என்று நின்ற மெய்பொருளின் பெருமைகள் இது)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 6

 மைதயங் குந்திரை வாரியை

நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
யும்மல்குற் பைந்தொடியே.
 
மை கரைய தயங்கும் திரை கொண்டு வாரிடும் ஒன்றை நோக்கி இதழ் விரியும் பூவான பெண் போன்ற மாயையை நோக்கி கண்ணீர் கொண்டு அங்கே கண்டார்கள். தில்லையில் பொய் தயங்கும் நுட்ப அல்குல் கொண்டு நல்லாரை எல்லாம் புல்லினாள். புற்றில் நிலைக்க தயங்கும் அரவம் புரையும் அல்குல் கொண்ட பைந்தொடியே. (மெய்பொருள் உண்மையையும் பொய்யையும் காட்டும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 5

 விசும்புற்ற திங்கட் கழும்மழப்

போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
தளர்கின்ற நன்னெஞ்சமே.
 
குறைபட்ட நிலவாய் கழிதலுடன் மழுவியது போல் விம்மிவிம்மி அல்லல் அற்ற கண்ணோடு கிடந்தவன் தில்லை அன்னாள் சிறிய புற்றில் நின்ற பாம்பு என கூரான எழில் கொண்ட குழல்மொழியின் நயத்தை பற்றி நின்று நடுக்கமுடன் தளர்வாகிடும் நல்ல நெஞ்சமே. (நீர் நிறைந்து இறைபற்றி நிற்கும் நல்ல உள்ளம்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 4

 எலும்பா லணியிறை யம்பலத்

தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
யென்நீ கருதுவதே.
 
எலும்பால் அணிகலன் கொண்ட இறை அம்பலத்தோன் தில்லை செல்ல ஆர்வமுள்ளவர் நலத்தை முழுமையாக நல்கிட்டாலும் கல்லான இடத்தை நாடுபவர் இல்லை. சிலம்புடன் வடிவுடைகண்ணி சிற்றிடைக்கு நிகர் அறியமாட்டார் கலமான வியப்புக்குரிய முலையின் நிகர் என்ன என நீ கருதுவதே. (உண்மை உணர அறியாமல் பொய் மேல் கருத்து வைக்கதே) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 3

 பாப்பணி யோன்தில்லைப் பல்பூ

மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
தழங்கும் மணமுரசே.
 
பாம்பை அணிபவன் தில்லையில் பலவகை பூவாக மருவும் சிலையாகும் சோதியை நன்றாக காத்து பணிபவர் பொன் போன்றவர். இனி கமழும் பூ துறையின் கோப்பை பணிபவன் கொடி மூன்றில் நின்றதை சிறப்புற கூடி மாப்பிள்ளை அணிகலங்கள் இவை என முழங்க தழைத்திடும் இணைந்திட ஒலிக்கும் முரசு. (மெய்பொருளும் மறைபொருளும் இறை கூட உதவும் அலாங்கார பொருட்கள்)
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 2

 மணியக் கணியும் அரன்நஞ்ச

மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
மேன்மே லயலவரே. 
 
மணி என கணக்காய் இருக்கும் அரன் நஞ்சிக்கு அஞ்சி மாற்றாகி விண்ணவர் பணியக் கருணை தரும் பரன் தில்லையன் ஒத்தவள் திறமையுடன் துணிந்து கருத்துடன் உலர்த்தும் துறையில் நிறைவான பொன் அணி போல் கருதுகின்றவர் பலர் அவர்கள் மேன்மேலும் மாறுகின்றனர். (நஞ்சி நின்ற இடத்தை நாடுபவர் வளர்கின்றனர்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | உடன்போக்கு | பாடல் எண் : 1

 ஒராக மிரண்டெழி லாயொளிர்

வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.
 
ஓர் அகத்தில் இரண்டு எழிலாக ஒளிர்பவன் தில்லையில் ஒண்றும் தலமாக பயிலும் காரணமாக தாம் பொதிந்து தீர்த்தம் சுரக்கும் காடகத்தின் பார்க்க கச்சிதமாய் பயன் தரும் பரிசாக அணைத்த இராகத்தை கண்டு உணரும் வள்ளவர் இல்லை என ஏமாற எண்ணுவதே. (செவிச் செல்வம் அடையும் சூழல் யாவருக்கும் உண்டு) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 13

 வளருங் கறியறி யாமந்தி

தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும்
மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.
 
வளரும் இளம் மிளகை அறியாம குரங்கு தின்று அல்லல்படுவது போல் தளரும் தடம் வரையும் சிலம்பு தங்கும் எங்கும் விளங்கும் அதை விரும்பி விம்மி மெலியும் வெண் மாமதி நின்று ஒளிரும் சடைமுடியோன் புலியூரன்ன ஒண்ணுதலே. (பொருள் பற்றுவதை பற்றாமல் பொருளையே பற்றி இரு)
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 12

 நில்லா வளைநெஞ்சம் நெக்குரு

கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.
 
நில்லாமல் சுற்றி திரியும் உள்ளம் நினைந்து உருகும் ஆழ்ந்த உறங்க அறியாத பொழுது கதிர் என வெளிச்சம் முற்றி காற்று எனக் காட்டும் தில்லை பழையவன் அருள் இல்லாதவர் அழிந்தார் அதை கண்டு எல்லார் மதியே இது உன்னை யான் இல்லாமல் இருக்க இரக்கின்றதே. (நான் அழியாதவரைக் கண்டு நானை அழிக்க வேண்டினேன்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 11

 மூவல் தழீஇய அருண்முத

லோன் தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
தளிய களியன்னமே. 
 
மூன்றால் தழுவும் அருள் தரும் முதல்வன் தில்லை செல்வன் முந்தி வரும் நீரில் நாவல் படகுபோல் அசைந்து நானிலத்தில் உறங்கும் விரும்ப இன்பம் தந்து சேவல் என மாறி உறங்குவதை தவிர்த்து காவலாய் நின்று இயங்குபவரை குளிரவைக்கும் களியன்னமே. (மெய்பொருள் தவத்தால் களிப்பூட்டும் அன்னமாகும்)
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 10

 கருங்கழி காதற்பைங் கானலில்

தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில்
செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென்
றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
கூப்பும் மலர்க்கைகளே.
 
கருமை கழிக்கும் காதலால் உண்டாகும் கானலில் தில்லையில் கண்டவர் விண்டார். ஒன்றிட கழிப்பதற்கு ஆதாரமும் மூன்று எழில் ஒன்றாக சிலையாய் சூழ்ந்த அருமையானது தீதை கழிக்க தம்முள் உழன்று கண்ணீர் வரச்செய்து காதல் வசப்பட்டு கூப்பும் மலர்கைகளே. (மெய்பொருள் எழில் அடைவது தன்னுள் இருக்கும் தீமை அழிவதால்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 9

 பொன்னும் மணியும் பவளமும்

போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
விரவா தவரினுள்நோய்
இன்னு மறிகில வாலென்னை
பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
தேரும்வண் டானங்களே.
 
பொன் போன்றும் மணி போன்றும் பவளம் போன்றும் பொலிவுடன் மின்னும் சடை உடையவன் புலியூர் விலகாதவர் உள்ளத்து நோய் இன்னும் அறியா என்னை பாவம் இல்லாதபடிச் செய்யும் பகலானவன் மகிழ்ந்திடும் மறைப்பை நீக்கும் வண்டென அனங்குகளே. ( உண்மை அறியும் மெய்பொருள் உணவை அறியும் வண்டு போன்றது)
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 8

 பகலோன் கரந்தனன் காப்பவர்

சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட அன்னங்களே.
 
கதிரவன் மறைந்தான் பாதுகாப்பவர், குழைந்தை போன்றவர், பற்று இல்லாதவர்களுக்கு புகலிடம் தருவோன், அரிய போக்குடையவன், கலந்தால் அகலாதவன், தில்லையில் பயில்பவன், சிறப்புடை இடத்தில் நோக்கிட அகலாதவன், குத்தும் கொழுத்த மீனை உண்ட அன்னங்களே. ( மெய்பொருளை அடைந்தவர் மீன் உண்ட அன்னம் போன்றவர்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 7

 கார்த்தரங் கந்திரை தோணி

சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
மாறென்கொ லாழ்சுடரே.
 
காத்தபடி அரங்கமாக இருக்கும் அலைகடல் தோணி கொண்டு சுறாமீன் பிடிக்க முயல்வோர் போர்த்தபடி காக்கும் அரங்கத்து துறை நிற்கும் துறைவர் தனது போக்கிற்கு இணங்க நீர் வடியும் தில்லை பலவகை கட்டமைப்பை  சொல்லும் வஞ்சினமும் விரும்பியபடி செய்யும் உய்யும் வழி உண்டோ ஆழ் சுடரே.( பின்குறிப்பு – மெய்பொருளே என்னை முழுமையடையச் செய்) 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 6

 ஆழி திருத்தும் புலியூ

ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின்
நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக்
கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
யோவுள்ளம் வள்ளலையே
 
பெருங்கடலை திருத்தும் புலியூர் உடையவன் அருளினால் பெரும்பானை திருத்தும் மணல் குன்றில் நின்று அகன்டார் வருக என்று வட்டமடித்து சுற்ற பாராட்டி பிறப்பு கொடுக்க வாழ்க என திருத்தி தரமாகிய உள்ளம் வாழ்த்தும் வள்ளலையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 5

 உள்ளு முருகி யுரோமஞ்

சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
ஆர்க்கும் பொருகடலே.
 
உள்ளம் உருகி மயிர் சிலிர்க்க உடையவன் ஆட்கொள்ளும் அரியவர் கூட்டத்தில் தன்னையும் இணைக்கும் புலியூர் வென்று பரிசு பெற்றவர் வியப்படையும் ஓர் வழி தெளிவாய் அறிந்தால் உள்ளத்து எண்ணமும் மறைப்பும் அழிந்து தேறச்செய்யும் பொருகடலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 4

 பகன்தா மரைக்கண் கெடக்கடந்

தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
லோநம் மகன்றுறையே. 
 
பகிர மாறுபடுவது கண்ணால் கெடும்படி கடந்தவன் புலியூர் பழுக தகுந்தவன் மாறத்தகுந்த மலர் மேல் வண்டு போல் நீல மணி அணிந்து முகம் தாழ்துவது குறை என உணர்ந்து செம்பொன் முத்து அணிந்தபடி புன்னை என்பதை உரைக்காமல் அகன்றார் அன்றே.பிறவி ஓழிப்பவர் கொல்லோ நம் மகன் என்ற முறையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 3

 பாணிகர் வண்டினம் பாடப்பைம்

பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
யூர்சுற்றும் போர்க்கடலே. 
 
பண் இசைந்து பாடும் பாணருக்கு நிகரான வண்டினம் பாடிட பழுமையாய் பொன் உரு வெண்மையால் மறைய அஞ்சும் குழைந்தைக்கு நிகரானவரை அழகிய தோட்டத்தின் புன்னை நிறைந்த இடத்தில் சேர்ப்பர் திங்கள் வார்த்தைகளுக்கு நிகரான வெள்ளை வளை அகத்தே கொண்டவர் அகன்றார் திறம் படைத்தவர் திறக்கமுடியாமல் அணிந்தவர் வாள் என வன்புலி ஊர் சுற்றும் போர்க்கடலே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 2

 ஆரம் பரந்து திரைபொரு

நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே. 
 
வட்டம் விரிந்து திரை பொருந்தும் நீர் உண்ட மேகம் மீன் பரப்பி சீரான அம்பரத்தில் திகழும் ஒளி தோன்றும் துறை அடைந்தவர் சென்றார் போரும் பரிசு அறியப்படுத்த புலியூர் புனிதனை சீரான தேவர் சுற்றி இருந்து போற்றி சிறந்தவர்களுக்கு செறிகடலே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | ஒருவழித்தணத்தல் | பாடல் எண் : 1

 புகழும் பழியும் பெருக்கிற்

பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல்
லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை
யாம்பழி சின்மொழிக்கே.
 
புகழும் பழியும் கூடிட கூட்டிக்கொண்டே போகும் அப்படி கூடுவது நிழாமல் இருப்பது நினைப்பால் அகத்தே மதிலாக அணிய தில்லையோன் அடி சென்னியில் வைத்து அழித்தவர் போல் இல்லை. எனது பழியும் சின் மொழிக்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 33

 அலரா யிரந்தந்து வந்தித்து

மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத்
தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே.
 
இதழ் ஆயிரம் தந்து வஞ்சித்து மலர் ஆயிரம் கரத்தால் இதழார் கழல் வழிபாடு செய்து ஒளியான வில்லால் பலவகை படைகொடுத்தோன் தில்லை நின்று அருள்பவன் தவறுதலாய் விளைகின்ற பலவற்றை அழிக்க மிகுந்திடும் மெய்யருளே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 32

 பூங்கணை வேளைப் பொடியாய்

விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
ரோசென் றகன்றவரே.
 
பூவால் கணை வரும் தருணம் பொடியாய் விழ்ந்திட விழித்தோன் புலியூர் நின்று ஓம் என்ற கணை மேவி புரண்டு விழித்து எழுந்து ஓலமிட்டு தீதான கணை தோரலும் தேறாது கலங்கிடும் செறிகடலே அக்கணைக்கு ஆட்பட்டார் நின்னை அடைந்தவர் உளரோ சென்றாலும் அகன்றிடுவாரே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 31

 பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்

பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ
னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே.
 
பற்றுவதற்கு ஒன்றும் இல்லை என ஆனவர் பற்றும் தில்லைப்பரன் பரங்குன்றில் நின்ற புற்றில் வாழ் நாகமாய் புதல்வன் என நீ புகுந்து நின்றால் மருவு இல்லா மாமலர் இட்டு உன்னை வாழ்த்திட வாழ்த்தாமல் வேறு ஒன்றை சிந்திக்க வல்ல மங்கை வாழ வகையுளதோ. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 30

 விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்

தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
யேற்கொரு வாசகமே.
 
அடைந்த அனைவருக்கும் தலைவன் திடமான நடனம் மெல்ல அங்கே அழிய காண அரிதான கன்னிதனை கலந்த கள்வர் கண்டிலை அறிய காண்பது எல்லாம் மங்கி மறைவதாய் விளங்கும் மண்டலமே பணியாய் தரமானவற்கு ஒரு வாசகமே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 29

 தாருறு கொன்றையன் தில்லைச்

சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும்
அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற்
பாற்றன்று தூங்கிருளே.
 
தார் போன்ற உறு கொண்ட நடனம் ஆடும் சடைமுடியோன் நீர் போன்ற உறு கொண்டதை நீந்தி கடந்தால் நினது போர் உறு வேல் வசப்பட்டு பொங்கும் அஞ்சுகம் அஞ்சி வரும் சூல் பற்றும் சோலையின் இடத்தில் பற்று இன்றி தூங்குவதும் உன் அருளே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 28

 இன்னற வார்பொழிற் றில்லை

நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமில் லோருந்
துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
ஞாளி குரைதருமே.
 
இன்பத்தை துறக்காத பொழில் நிறை தில்லை நகரில் சீர் விரும்பி பல நிற மாலையுடன் பகலாக்கும் விளக்கும் இருளின் அச்சம் இல்லாமல் துயில்கையில் எடுப்பவர் கொன்றிடும் வேலோடு வந்திடின் நாய் குரைப்பதை தருமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 27

 மாதுற்ற மேனி வரையுற்ற

வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
வோநன்மை செப்புமினே. 
 
பெண்மைக்கு இடம் தந்த உடல் வரைவற்ற தில்லை நகர் சூழ் மொட்டு விரியும் மலர் நிறைந்த பொழில்கள் மறுக்கமுடிய பறவைகள் ஏதும் அழகற்றதாக்கும் எடுப்பவர்களுக்கு தீது தருவது அரிது எனவே எனக்கு நன்மை செப்புவீர்களாக.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 26

 சோத்துன் னடியமென் றோரைக்

குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை
யன்னா ளிவள்துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
மதியும் இழந்தவம்நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி
நோக்காய் பெருங்கடலே.
 
சோர்ந்த உன் அடியார் என்பவரை கூட்டி சிறந்த வானவர் சூழ்ந்து வாழ்த்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் துவள ஆர்வமுட்ன அமிழ்து வரவும் மதியும் இழந்து நீ உன்னை முடியபடி இருந்து பழி நோக்காதே பெருங்கடலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 25

 மின்னங் கலருஞ் சடைமுடி

யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
துயிலா தழுங்கினவே. 
 
மின்னல் கண்டு அலரும் சடைமுடியோன் வியப்புக்குரிய தில்லை நின்றோன் என்னை அங்கே அமரச் செய்த எழிலை முத்தம் தொடுத்து பொன் நிற புன்னைச் சேர்க்கையில் வாய்ப்பு நிறைந்து முழைமையுறும் அன்னம் புலரும் அளவும் உறங்காது இணங்கினவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 24

 நாகந் தொழவெழில் அம்பலம்

நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
யேநவில் வேற்கையெங்கள்
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
வாய்த்தநின் நாயகமே.
 
நாகமும் தொழும் எழில் அம்பலம் நண்ணி நடனம் தருபவன் நாகம் என்பது அறிவே அறிவே என அழைத்து எங்கள் நாகம் எதிர்வர நாங்கள் அடைந்த நல்ல இருள் கூற முடியாது நாகம் நிறைந்த பொழில் வாய்த்த நின் நாயகமே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 23

 பைவா யரவும் மறியும் 

மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
நீண்முத்த மாலைகளே.
 
புற்றில் இருக்கும் பாம்பு அறியும் வழுவாது பயிலும் மலர்கையுடன் நாடுபவர் சடைமுடி முன் கொண்டபடி இருப்பவன் தில்லையின் முன் எனக்காய் செவ்வாய் கருவாயில் சேர்த்து சிறியவளின் பெருமலர்கண் மை திட்டி குவளை மலர் கொண்டு நீளமாய் கோர்த்த மாலைகளே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 22

 பைவா யரவரை அம்பலத்

தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
தென்றுமென் இன்னுயிரே. 
 
பாம்பை அரையில் வைத்த அம்பலத்து என் தலைவன் பழமையான கயிலை சிவந்தபடி கருமையில் பெரியதாய் பருத்து சின்ன இடைக் கொடியை மொய்த்திடும் கமலத்து முற்றிழையின் என முன் செய்த தவத்தால் இப்படி இருக்கும் என்று என்றும் நிற்பது என் இனிமையான உயிரே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 21

 நற்பகற் சோமன் எரிதரு

நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத்
திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
நாடஇக் கல்லதரே.
 
நற்பகலில் நிலவுடன் வெப்பம் தரும்படி நாட்டம் கொள்ளும் தில்லை என்ற வில் என பகை வெல்லும் புருவம் கொண்டவளின் மெய்யே ஒளிதே. வெறுமையான சோலையின் நிறைந்தபடி வளரும் தீச் சென்று விண்ணில் இருக்கும் கற்பகச் சோலை எது என்று நாட இவர்கள் கல்லாதவரே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 20

 சுரும்புறு நீலங் கொய்யல்

தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து
நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.
 
விரைந்து வளரும் நீல பூக்களை கொய்யாமல் தனித்து உறங்கி, பயிலும் அருமை அறியாது ஒழிவேனோ, அருமை பெறமால் அழிந்து உலகில் நல்ல பண் அறியாது இரும்பால் ஆன மாமதில் பொன் அஞ்சனம் வெள்ளி புரிசை அடைந்தோர் துரும்பாய் புறம் சென்றார். என திறத்தை உணர்த்தும் என் தலைவன் தில்லை சூழ் பொழிற்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 19

 அழுந்தேன் நரகத் தியானென்

றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப்
புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
வானத் திளமதியே.
 
நரகத்தில் மூழ்க முடியாமல் இருந்தவனை வந்து ஆண்டு கொண்ட செழுத்தேன் திகழும் தில்லை வெளிப்புறத்தில் கொழுத்த தேன் கொண்ட மலர்வாய் குமுதம் இவள் என குரு உச்சுடர் கொண்டு எழுந்து மலர்த்தும் உயர் வானத்து இளம் மதியே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 18

 அகிலின் புகைவிம்மி ஆய்மலர்

வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத்
தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித்
தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிகஇங்ங னேயிறு
மாக்கும் புணர்முலையே. 
 
அகிலின் தூபத்தில் உடலை நனைத்து சிறந்த மலர்களை சூட்டி அஞ்சனத்தை பூசி மென்மையான ஆடை அணியத் தகாதவளாக சங்கரன் புலியூர் இகலும் அவர் அளரத் தேம்ப இடையும் மெலிந்திட புகுந்தால் இக்கணமே இறுமாக்கும் புணர்முலையே.   
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 17

 காமரை வென்றகண் ணோன்தில்லைப்

பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத
வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத் தென் னோவந்து
வைகி நயந்ததுவே.
 
ஆசைபடுவதை அழித்த கண்ணோன் தில்லை பல்கதிரோன் அடைத்த மாறும் இடத்தின் இதழ் கதவு திறந்தோன் முடிய மேகலை பாங்குடைய அரை பற்றும் சிலம்பு ஓதி விரைந்தே நான் என அரையில் நாம் என வந்து நிறைந்து நயந்ததுவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 16

 நந்தீ வரமென்னும் நாரணன்

நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
வீயுந் தருகுவனே. 
 
நல்ல தீ வரம் என்றுரைக்கும் மனிதன் நாணமுடைய கண்ணிற்கு ஏங்க தனது தீ மிக புலி ஊர் என கண் காட்டிய தடம் கடந்த தீவிரம் காட்டி காண்டால் இருள் சேரும் குழலுக்கு எழில் சேர்க்கும் சந்திக்க வரம் முடிவுறும் வெறியும் தருகுவனே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 15

 விண்ணுக்கு மேல்வியன் பாதலக்

கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
வாழுங் கருங்குழலே. 
 
விண்ணுக்கும் மேல் வியப்புக்குரிய கீழ் விரிந்த நீர் அடுத்த மண்ணுக்கும் நடுவாக நயமுடன் தென் தில்லை நின்றவன் குரல்வளை வண்ணக் குவளை மலர் மலர்கின்றது மின்னலாய் வளர்ந்து மிளிரும் கண் நோக்க காணும் வண்டு வாழும் கருங்குழலே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 14

 கூடார் அரண்எரி கூடக்

கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன்
னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே. 
 
தேவையற்றவரின் அரனை எரித்து அழிக்க வெட்டும் வட்டம் கொண்ட உலகோன் அழகுடைவரின் மதில்களை காக்கும் தில்லையன் சிறிய கண் பெரிய வெண்கோடு கொண்ட யானை என குரு மாமணி பூசலை முழுமையாக அழித்து தோடு அணிந்தவர் மது நிரம்பிய மலர் நாடும் நாகத்தை தூதாக அனுப்பும் நஞ்சு சூழ் பொழிற்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 13

 முன்னு மொருவ ரிரும்பொழில்

மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந்
தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
பேரும் மயிலினமே.
 
முன்பு இருவர் இறை பொழில் முயன்று அறியமுடியாமல் பின்பும் ஒருவர் சிற்றம்பலத்தார் பெற்ற பேரருள் போல் எண்ணி அவர்கள் அடைந்த இன்பத்தை அடைந்தோம் என்று தோகை விரித்த மயில் பார்த்து தனது தோகை விரிந்தது போல் எண்ணும் மயில் இனமாய் உரமற்று வீணாய் போனர்கள். 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 12

 ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்

கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லுஞ் செல்லல்களே.
 
வளர்ந்த பயிர்கள் பசுமை அழியாதபடி ஏழிலி காக்க எண்ணி காட்டு மனிதர்கள் வணங்கி தொழும் சிலம்பை அணிந்த எந்நேரமும் அருளும் ஒருவனை ஏற்றுச் சென்றேன். தேன் ஒத்த கொற்றை மலர் கொண்ட தில்லை ஊரார் நடக்கும் வழியே நடப்பதுவே.

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 11

 ஓங்கு மொருவிட முண்டம்

பலத்தும்ப ருய்யவன்று
தாங்குமொருவன் தடவரை
வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி
யேன்சொல்லும் வாசகமே. 
 
பெரும் விடம் உண்டு அம்பலத்து தேவனாய் தங்கும் ஒருவன் வழிகண்டு வீழும் அருவி வீங்கி நிலைக்கும் சுனையாய் நின்று மலர் வாங்க அறியவனானவனை சிறியவன் சொல்லும் வாசகமே

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 10

 செழுங்கார் முழவதிர் சிற்றம்

பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
மோவின்றெம் வள்ளலையே.
 
செழுமையான கார் மேக முழக்கம் அதிரும் சிற்றம்பலத்துப் பெரும் திருமால் கொழுத்த மலர்கள் இடத்தே கூத்தாடுபவன் கழலை மதியாதவர் போல் முழங்க மாட்டார் முரண்பட்டவரை வேட்டை செய் மூடும் இருள் வாயானது, வழங்காதவரை வழங்கு என்று மோவி நின்றோம் எம் வள்ளலையை.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 9

 மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்

தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
வான்சொல்லு மெல்லியலே. 
 
குவிந்த ஒளிவிசும் பெண் மார்பகம் போன்ற தில்லையில் முந்தவன் கழற்கே அடைக்கலம் தரும் நற்குரு முடி வளைய மழையில் நனைய நாட்டத்தை மறைத்தபடி நள்ளிருளில் நாகம் நடுங்க சிங்கம் வேட்டையாட திரிய வரும் வான் சொல் மெல்லிய இயல்பே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 8

 மலவன் குரம்பையை மாற்றியம்

மால்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
கானலிற் சீர்ப்பெடைய
ோ டலவன் பயில்வது கண்டஞர்
கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன
தாங்கொன்மன் சேர்துயிலே
 
மலம் நிறைந்தவன் உடலை மாற்றிய மால் முதல் வானவர்களுக்கு அப்பாற் செல்வேன் என்பவர்க்கும் சிவன் தில்லை கனல் கொள்ள சீர் பொருந்தி கொண்டவருடன் பயில்வது. கண்ட அறிஞர் கூர்ந்த வேல் கொண்ட அரவோன் மறையும் அந்தியில் கண்டான் என்ன தானும் அடைய சேர் துயிலே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 7

 பனைவளர் கைம்மாப் படாத்தம்

பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற்பொதியின்
மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
றாடுஞ் செழும்பொழிலே.
 
வளர்ந்த பனை என கைகொண்டு படரும் அம்பலத்து அரன் பாதம் விண்டவர் புனைந்து வளர்க்கும் சாரல் பொதியின் மலையில் பொலியும் சந்தனம் அணிந்து சுனை வளர் காவிகள் சூடி பசுமையான தோகை மயில் துயில் பயிலும் சினை வளர் வேங்கைகள் யாவும் கண் நின்று ஆடும் செழும்பொழிலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 6

 செம்மல ராயிரந் தூய்க்கரு

மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
வாய்நும ராடுவதே.
 
செம்மலராய் ஆனவை தூய்க்கும் திரு கண் அணியும் மெய்மலர் இங்கே அம்பலத்தோன் இருக்க தென் மலையின் எம் மலர் சூடி நின்று சாந்தணிந்து என்ன நல்ல அழல் வாய் அம்மலர் வாட்ட நன்கு ஒல்லி வாய்ப்பு உமக்கு என்று ஆடுவதே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 5

 வரையன் றொருகா லிருகால்

வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன்தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே. 
 
ஒருகால் வரையறுக்க வேண்டும் என்றால் இருகால் வளைய நிமிர்ந்து வன்மையானவரை கவர்ந்தவன் என அழல் எழும்படி நின்றோன் தில்லை எனப்படும் உன் ஊர் அடைய மென் அழல் என வெறி அடையும் தாதி போன்ற துரையும் சிலம்ப நலம் தந்து ஒளிர்வனவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 4

 கூளி நிரைக்கநின் றம்பலத்

தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி
யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
தேரு மிரவில்வந்து
மீளியுரைத்தி வினையே
னுரைப்பதென் மெல்லியற்கே.
 
பிசாசுகள் நிரம்பி நிற்கும் அம்பலத்தில் ஆடி ஒசை எழும்பும் திருவடி கீழ் தூசு நிரப்பும் சுடர் முடி மேல் கொண்டவளோ இவள் தோள் மேல் கொண்ட ஆசையால் அவள் ஆளுப்படி ஆனைகள் ஏற்று நடத்திட திறமையில் நிரம்பி இதுவே வினை என்று உரைப்பது என் மென்னையான இயல்பே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 3

 மாற்றே னெனவந்த காலனை

யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே. 
 
எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என வந்த காலனை ஓலமிட்டு விலகச் செய்த திடமான தலைவன் குளிர்ந்த தில்லையில் கூத்தாடுபவன். ஏற முடியாத கொடுமையான குன்றில் வளர்ந்த உச்சியில் இருக்கும் தேன் விரும்பும் முடவனைப் போல் ஏங்கும் நெஞ்சே ஆற்றுப்படுத்த இயலாத அரிய பருவத்தாள் இடத்தில் நீ வைத்த அன்பினுக்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 2

 விசும்பினுக் கேணி நெறியன்ன

சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.
 
ஆகாயத்தை அடைய முற்பட்டவனுக்கு கிணறு கிடைத்தது போல் சிறுமைபட்டு மேலும் மழை தூவி நூரையில் மூழ்கியது போல் ஆனது மெய்யே. தடைபடாத சிந்தைக்கு ஆட்பட பெரிய காரியம் நடக்கும் அம்பலத்தில் பசும்பனிக் கோடு காட்டி அருளினான் மலையில் ஒத்து வாழும் பதியே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | இரவுக்குறி | பாடல் எண் : 1

 மருந்துநம் மல்லற் பிறவிப்

பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும்
அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ
ரதனுக்கு வெள்வளையே. 
 
மருந்தாய் நமது துன்பப் பிறவிப் பிணிக்கு ஆக்கமான அமிழ்தாய் இருந்தனர் அருவி வரும் குன்றில் இருந்தவர் சிறப்பான நன்மைகள் பொருந்திய மேகமாய் யாவற்றையும் மறைத்துக் கொள்ளும் இருளில் அடைந்து ஏற்கும் காட்டின் விருந்தினன் நானும் உங்கள் சீர் பொருந்தியவனுக்கு வெள்வளையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 32

 ஆனந்த மாக்கட லாடுசிற்

றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ
ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
தளர்ந்தனை நன்னெஞ்சமே. 
 
ஆனந்தமான பெரிய கடலுடன் சிறிய அம்பலமான பொன் போலவும் தேன் ஊறும் மாமலை சீர் இது அரியது என உணர வழியில்லை. வானில் வலம்வரும் மாமதி வேண்டி அழவது போல் நானும் தளர்ந்தேன் நீயும் தளர்ந்து நெருங்கு நல்ல நெஞ்சமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 31

 பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்

புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற்
றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே.
 
கூட்டத்தில் இருந்து பிரிந்து என்னை ஆண்டவன் புலியூர் அரன் பொருப்பே. இது என்னில் இருக்கின்ற படியே பெரும் பொழிலே எது உமக்கு அமைந்தது என்று இரண்டு அறை அருவி மதுவை காட்டிலும் சிறந்தது தரும் பூவை ஒத்ததாக மாற்றிட வரும் வான்புனமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 30

 கணியார் கருத்தின்று முற்றிற்

றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
நீர்மைகள் சொல்லுமினே.
 
நாடக மாதரின் எண்ணம் இன்று முறிந்து நான் சென்று மழையாய் நீர்வடிந்தது. மணி போன்றவர் பொழில் காண மறந்தவர்களே நிலைக்கும் அம்பலத்தான் அணி போன்றவர் கயிலை மயில்களாய் வேல் உருவில் ஒருவர் வந்தால் துணிவற்றவர் துணிந்தார் என்று நீர் உண்மைகள் சொல்லுங்கள்.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 29

 பரிவுசெய் தாண்டம் பலத்துப்

பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
காட்டு மிளங்கிளியே.
 
பரிவு செய்து ஆளும் அம்பலத்தை நடத்துபவன் பரங்குன்றில் அருவி செய்து வழியும் நீர் வனத்தை அடையவும் அந்த வனத்தில் இருந்து பிரிவது அரிதாக்கி பேயொடு இணைத்து இரண்டற செய்தான் என்று காட்டும் இளங்கிளியே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 28

 பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்

புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக்
கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
தின்றிக் கடிப்புனமே.
 
விலகியவர் என்று விலக்க மாட்டோம் அடைகலம் அடைய அடைக்கலமாம் எமக்கு விரும்பியவர் அவருக்கு மேலானவர் மேல் வரும் நெருப்பை போன்றவர்க்கு நீளும் அம்பலவருக்கு அன்பர் குல நிலத்து கருப்பற்று விட்டேன் என்று செயலாற்ற மற்றபடி கடினப்புனமே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 27

 வழுவா இயலெம் மலையர்

விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்
லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
தாவதித் தொல்புனத்தே.
 
மாறாது இயல்பில் நிற்கும் மலை போன்றவர் விதைப்பார்கள் மாற்றவர்கள் வளர்த்தபடி ஒழுகுவார்கள். தினையின் குழாம் ஆகிய கூட்டங்கள் எல்லாம் என் கூட்டங்கள் வணங்கும் செழுமை தரும் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று தொழுவார் வினை நிற்பது இல்லை நின்றால் தாவாமல் தொல் புனத்தே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 26

 கனைகடற் செய்தநஞ் சுண்டு

கண் டார்க்கம் பலத்தமிழ்தாய் 
வினைகெடச் செய்தவன் 
விண்தோய் கயிலை மயிலனையாய் 
நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் 
செய்திடுவான் தினைகெடச் 
செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.
 
பார்வை அம்புகள் செய்த விடத்தை உண்டு கண்டவர்கள் ஆக்கமுடன் அறியும் தமிழ் கொண்டு தாய் வழி வரும் வினை அழிக்கச் செய்தவன் விண் முட்டும் கயிலையில் மயில் போன்றவன் நனைதல் கெடச் செய்தால் நம்மை கெடச்செய்வான் தினை கெட செய்ய மாற்று வழி உண்டோ இத்திருக்கணியே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 25

 நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்

திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட
தாகி விளைந்ததுவே. 
 
நினைவு கொடுத்து தன்னை நெஞ்சில் இருக்க அம்பலத்தே நின்று கூட்டிவைத்த ஈசன் குவித்த மலை காப்பவன் விருப்பத்தில் விளைவித்து காத்து சிறந்து நின்ற நமக்கு சென்று சென்று வினை தந்து காத்து விளைச்சல் உண்டதாக மாற்றி விளைந்திதது அதுவே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 24

 வடிவார் வயற்றில்லை யோன்மல

யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
பெருமஇத் தண்புனமே.
 
வடிவான வயல் நிறைந்த தில்லையோன் மலையில் நின்று வடியும் தேனை அதிகம் உண்டு களித்த வண்டாய் நின்று அலர் தூற்ற நிறைய நடனமகளீர் வருந்துவார்கள் நமக்கு இனி இது இயலாது என உரைத்து கொழுத்த தினை காப்போம் இனி இதுவே நமக்கு குளிர்ந்த நீர் ஆகும். 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 23

 மாதிடங் கொண்டம் பலத்துநின்

றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு
வித்தது தூமொழியே. 
 
மாது இடத்தில் இடம் கொண்டு அம்பலத்தில் நின்றவன் வளர்ந்த வான்கயிலையில் இடம்கொண்ட பொன் வேங்கையாய் தினம் புனங் கொய்க என்று வளர்ப்பு பெண் இடம் பொன் கொண்டு வீசி தன் கள் வாய் சொரிய நின்று சோதியாய் இடம் கொண்டு எம்மை மாற்றிவிட்டது தூய மொழியே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 22

 உருப்பனை அன்னகைக் குன்றொன்

றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை
யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் னோவினை
யேன்யான் புகல்வதுவே.
 
உருவில் பனை போன்ற கைக் கொண்டு குன்றை உரித்து வலிதரும் ஊர் எரித்த நெருப்பு போன்ற அம்பலத்து ஆதியை தேவர்கள் போற்றி நிற்கும் திருப்பனை ஊரனை தனக்குள் முழ்கடிக்கும் பொன் போன்றவளை புனைய செய்த பொருப்பனை முன்வந்து என்ன வினை செய்தவனோ நான் புகல்வதுவே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 21

 படையார் கருங்கண்ணி வண்ணப்

பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க
ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
போலு முருவினதே.
 
போர் குணம் கொண்டவர் போன்ற கருத்த கண்ணில் வண்ணம் மிகுந்தபடி மார்பக பாரமும் இடையின் மெலிவும் கண்டு அகலாதவர்களாக முல்லை வேலி கொண்டு எனது ஊர் விடையாக நின்று மருவி திருத்திவிட்டார்கள். வியப்புக்குரிய புலியூர் உடையவர்கள் கடந்து வருவது போல் வளைந்து உள்ளதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 20

 வழியும் அதுவன்னை யென்னின்

மகிழும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல
வென்னோ கிளக்கின்றதே.
 
அன்னை அவள் வழியாகவும் என்னை மகிழு செய்த தந்தையும் நின் மொழியின் வழி நிற்கும் உறவுகளும் வசப்படும் அம்பலது குழியும் பரம் எங்கும் ஆடும் கூத்தும் குற்றாலம் முற்றும் அறிய எழும்பவே பணைத் தோள் பல என்று கிளக்கின்றதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 19

 சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்

பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
பகர்பெரு வார்த்தைகளே. 
 
சுற்றி வணங்கா முடி கொண்ட சிற்றம்பலவனை தொழாமல் பழைமை பல கற்றும் அறியாதவர்கள் அரிய சிலம்பின் விடை வெளிப்படும் கண் ஒற்றும் திரையின் அமிர்தத்தை இனி நிங்காமல் செறிப்பார் மற்றும் சிலபல சீறூர் வெளிப்படுத்தும் பெரு வார்த்தைகளே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 18

 ஈவிளை யாட நறவிளை

வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
யாடி திருமலைக்கே. 
 
ஈ விளையாடும்படி வாசனை மலர் அணிந்து மார்பில் விளையாடி இசையும்படி விளையாட வெண்பா கொண்ட மெல்லியலாள் உற்று நோக்கி போய் விளையாடு என்றாள் என்னை. அம்பலத்தான் பக்கத்தில் தீ விளையாட நின்றே விளையாடினேன் திருமலைக்கே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 17

 பனித்துண்டஞ் சூடும் படர்சடை

அம்பல வன்னுலகந்
தனித்துண் டவன்தொழுந் தாளோன்
கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
கென்றஞ்சு மெம்மனையே. 
 
பனித் துளியை அணியும் விரிந்த சடை அம்பலவன் உலகத்தில் தனித் துண்டாக இருப்பதை உணர்த்தும் அதை அடைந்தவனாக ஆகவேண்டும். கயிலையில் பயிலும் சிலம்பாக இருப்பவனே கனி சுவை அருளும் தொண்டைக்கு வாய்ப்பு கிடைக்க முலை கண்டு ஆர்பரித்து அழியும்படி சிற்றிடைக்கு பற்று வைக்க அஞ்சும் என் மனையே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 16

 மன்னுந் திருவருந் தும்வரை

யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
வாடு திரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
னென்னப் புலம்புவனே. 
 
தன்னை தானே வரையறுக்காவிட்டால் காக்கும் திரு வருந்தும், இடத்திற்கு ஏற்ப வடிவம் பெறும் நீர் அதற்கு தளர்ந்து ஒளியாய் ஆடும் அதை அடைந்தவர் எல்லாம் புகழும் பரமன் பரஞ்சோதி சிற்றம்பலத்தான் பொன்னான கழல் வழுத்தார் பலனை ஏன்ன என்று புலம்புவனே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 15

 வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்

கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ்
சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட 
அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங்
காவலித் தாழ்வரையே.
நிலத்தை மூடிய கடலாகிய வேய் தந்த வெள்ளை முத்தும் அது சிந்திக் கிடக்கும் கரையில் பரப்பிய மீனும் குழந்தை தந்த காட்டு மானும் ஆயன் தந்த அன்பு கொண்டு ஆட்கொண்ட அம்பலவன் மலையில் தாய் தந்தை காப்போர் என எல்லாம் காவலாக நிற்பது இந்த தாழ்வரையே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 14

மாடஞ்செய் பொன்னக ரும்நிக
ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
றோநின்று கூறுவதே.
 
பொன்னால் செய்த மாடமும் நிகரில்லை, மாதர்க்கு என்ற பீடம் செய்யும் தாமரையோன் பெற்ற பிள்ளையை எண்ணத்தால் இடம் செய்து என் பிறப்பை அறுத்த தில்லை நின்றோன் கயிலையில் கூடிடச் செய்ய கொடி உச்சியை சார்ந்து நின்று கூறுவதே  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 13

 தள்ளி மணிசந்த முந்தித்

தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை
பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
போன்ற வனமுலையே.
 
மணியை உள்ளே தள்ளி சந்தாமுடன் நினைக்க அருட் புரியும் ஆண்யானை யின் இருமாப்பை அகற்றி திசை மாற்றி சரியான திசை பாயச்செய்யும் மலை கொண்ட சிலம்பா வெள்ளி மலை போன்ற மால் விடையோன் புலியூர் விளங்கும் வள்ளி மயங்கி வருந்துவது போன்ற வனமுலையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 12

 தழங்கு மருவியெஞ் சீறூர்

பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண்
டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென்
தில்லை மணிநகர்க்கே.
 
தயக்கமுடன் வரும் அருவி உள்ள சிறந்த ஊர் பெருகிட மதுவும் கிழங்கும் அருந்தி என்னோடு இருந்தபடி இன்று கிளர்ந்து மலைவாழ்பவர் முழங்குங் குரவை இருண்ட காலத்தில் அடைந்திட முத்தன் முக்தி வழங்கும் தலைவன் அரி ஆடும் தென் தில்லை மணி நகர்க்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 11

 அறுகால் நிறைமல ரைம்பால்

நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.
 
சுவாசத்தை பங்கிட நிறைய மலர்களால் நிறைவை அணிந்தேன். அணியாதவர்கள் உணராத மலர் எது என தொடர்ந்து விரிந்து தேடி மெல்லப் புகுக. சிறுமையால் நோய்பட்டு வருந்தா வகையில் மிகவும் என் தலையில் உறுகின்ற அரியவன் புலியூரன் அவளை கூடி இணைவதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 10

 பொன்னனை யான்தில்லைப் பொங்கர

வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர்
போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
தாழ்குழற் கேய்வனவே.
 
பொன் போன்றவன் தில்லையில் பொங்கி எழும் பாம்பை சடையில் அணிந்த மின்னல் போன்றவன் அருள் இல்லாதவர் மெலிந்த விரல் போல் மென்மையை மறித்து பறிக்காதே. வெறிகொண்டவர் மலர்கள் இன்னல் என தருபவன் கொணர்ந்தேன் மணம் தாழ் குழல்களுக்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 9

 கொழுந்தா ரகைமுகை கொண்டலம்

பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
சேர்க திருத்தகவே.
 
பளிச்சிடும் நட்சத்திரம் கருத்த மேகமும் கொண்ட மண்டலமான விரிந்த விண் என்ற மடுவில் எழுந்தார் நிலவென எழில் நிறை மலரை தந்தான் என இப்பிறப்பில் மூழ்காதபடி வகை கொண்டு ஆண்டவன் சிற்றம்பலம் உடையவன் செழுமையாய் அழியும் எழிலான ஆயத்துள் சேர்க்காது இருக்கவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 8

 செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்

பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே.
 
செழுமைநீர் வடியும் மதியாகிய கண் சிற்றம்பலவன் திருக்கழலே எழும்நீர் மையமாக சென்று கிண்கிணி என்ற மறைவான இடத்தை அடையும் கழிவான நீர் மலராகிய அவள்தன் கண் மருவி பிரியாத கொழுத்த நீர் பருக அருளும் பெரு நீர்மை அளிக்கும் குலமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 7

 அளிநீ டளகத்தின் அட்டிய

தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.
 
எல்லாவற்றையும் அளிக்கும் உடலில் பூசிய வாசணை பொடியும் ஒளிரும் அணிகலன்களும் சுருண்ட முடியும் சூழ்ந்த வெண் மாலையும் நிறைவாய் உண்ட உணவும் கொண்டு களித்திடு நீ என செய்தவன் கடல் கொண்ட தில்லையன் கலங்கினால் தெளிந்திடு நீ என்று பொன் போல் கோலம் கொண்ட திருநுதலாலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 6

 தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்

லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் 
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே. 
 
ஒன்றுடன் ஒன்று பற்றியபடி இருக்கும் மலர்கள் நிறைந்த எழிலான தில்லையின் பழையவன் இருக்கிறான் என உணர்ந்து முத்திடும் குவளை மலர் மென்மையான காந்தள் என முடிந்திடும்.
ஏற்றபடி அருள் அளிப்பவள் ஒத்திசைந்து கொடி என ஒதுங்குகின்றாள். மருங்குல் நெருங்கிட பித்தம் தரும் பணைமுலைகள் எனக்கு இன்னும் பெரியதாக தெரிகின்றதே.   
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 5

 படமா சுணப்பள்ளி யிக்குவ

டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ் வார்பொழிற்கே. 
 
படம் எடுக்கும் பாம்பை பள்ளிகொள் இடமாக்கிய பங்கயன் கண் நெடுமால் என்று நீ நினைத்தாயே நெஞ்சத் தாமரையே இடமாக இருத்தலை உடைய தில்லை நின்றவன் ஈரமாக இருக்கும் கயிலை, வளர்ந்த மார்புடைய இளம்பெண் எழிற்கு யார் இணைவைப்பார்.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 4

 நரல்வே யினநின தோட்குடைந்

துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கர்
தடமலர் கொண்டுவந்தே. 
 
நசுக்கும் தோள்களால் அணிந்த நல்முத்துக்கள் சிந்திப் பரல்கள் தேய்ந்து குவியச் செய்யும் பரன் தில்லை ஒப்பவன் இணைமலர் தருவான் இங்கே நீண்டு நிற்கும் குழல் மற்றும் கீர் என்று குரல் அளித்து முரன்பட அழகிய மார்பு கொண்ட தடமலர் கொண்டு வந்தே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 3

 தினைவளங் காத்துச் சிலம்பெதிர்

கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன
காண்டும் புனமயிலே.
 
தினை வளரும் மலை வளத்தை காத்து சிலம்பு என்ற நாத அனுபவத்தில் நிறைந்து சுனையாகும் நீர்வீழ்ச்சி பாய்ந்து துணையான இணையடி நினைத்து வணங்க வணங்குவார் தன் வினை வளம் நீர் என அழிய நீற் அணியும் அம்பலவன் வெறிமையால் புனைந்து வளரும் என்பரன் என அறியும் புனமயிலே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 2

 புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்

னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான்வரைத் தண்புனத்தே. 
 
புயல் வளரும் ஊசல் முன் ஆடிடும் பொன்னே அடுத்து போய் பொலியும் அயல் வளரும் குன்றில் நின்று உயர்ந்தும் அருவி திரு உறுவில் மீன் வளரும் வாள் போன்ற கண்ணில் தீர்த்தம் தந்து அருளும் அயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரைந்த குளிர்ந்த நீரே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | பகற்குறி | பாடல் எண் : 1

 வானுழை வாளம்ப லத்தரன்

குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே. 
 
வெற்றிடம் நுழையும் விரிந்த அம்பலத்து அரன் குன்று ஒன்றில் வெய்யில் போல் நின்றவன் தான் நுழைய இருளாக புறத்தே சென்று தாரகையாக தேன் நுழைந்து இருக்கும் நாகம் போல் மலராக மலர்ந்து பளிங்கு போல் நிலவாக இருப்பவன் கானகம் நுழைந்து வாழ்வு பெற்று எழிலை காட்டிட கார்மேகமாக பொழிகிறதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 26

 பாசத் தளையறுத் தாண்டுகொண்

டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப் 
பூசிற் றிலளன்றிச் செய்யா
தனவில்லை பூந்தழையே.
 
பாசம் என்ற தடையை அறுத்து ஆண்டு கொண்டவன் தில்லை அம்பலம் சூழ்ந்த தேசத்தின் செம்மல் நீ தந்ததையே நான் சென்று கொடுத்தேன். நிறைய பேசி சுருங்கு மருங்குல் பெயர்த்து அரைத்து பூசியதை தவிர பிற செய்யவில்லை பூந்தழையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 25

 தெவ்வரை மெய்யெரி காய்சிலை

யாண்டென்னை யாண்டுகொண்ட 
செவ்வரை மேனியன் சிற்றம்
பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண்
டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி
திற்றந்த ஈர்ந்தழையே. 
 
யாருக்கும் மெய்யில் ஏறி காயாய் சிலையாய் ஆண்டு என்னையும் ஆண்டுகொண்ட சிவந்த அரை மேனியன் சிற்றம்பலவன் செழுமையான கயிலை கண்ட ஆயுள் உள்ளவரை அருள்பவன் இந்த அரைமேல் சிலப்பொளி சிறந்து ஆற்ற கவர்ந்த ஏந்திழையே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 24

 ஏறும் பழிதழை யேற்பின்மற்

றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
மலைநம் மிரும்புனம் காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
யாஞ்செய்வ தேந்திழையே. 
 
பழிக்கப்படும் மடல் ஏறுதலை ஏற்பின் அதை மாற்ற வேண்டின் இடபத்தில் ஏறி கொடி ஏற்றி வந்த அம்பலத்துள் ஏறும் அரன் தங்கும் இங்கே இருக்கும் மலையில் ஈரம் காய்ந்து ஏறும் மலை தொலைந்தால் யார் தான் என்ன செய்வது ஏந்திழையே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 23

 தவளத்த நீறணி யுந்தடந்

தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும்
பார்குழல் தூமொழியே.
 
மாறிவிட்ட நீறு அணியும் விரிந்த தோள் உடைய அண்ணல் தன் ஒரு பாலகனாய் அவதானித்தான் தில்லையன் என உரிமை கொண்டு கட்டுபடாத யானையை அடக்கினார். நீர் சுரக்கும் கண்களை உடையவர் நிறைந்து வாழ்வதற்கு தகுந்ததுவோ சுருண்ட முடி உடையவர் அழகிய மொழி. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 22

 கழைகாண் டலுஞ்சுளி யுங்களி

யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகுமென்
நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி
யேன் சொல்லும் ஈடவற்கே.
 
குத்துக் கோல் கண்டவுடன் சுளிக்கும் யானை ஒத்தவன் கைகளில் தாழம்பு கண்டவுடன் பொய் அதிகம் உரைக்க, அடுத்ததை முன்னே காணும் அம்பலத்தவன் தந்த ஊழ்வினை கண்டு நினைக்க என்ன ஆகும் என நோக்கி நோக்கம் கண்டு இசைந்து காணும் பணைமுலையை நான் அறியேன் என சொல்பவற்கு ஈடானவர் அவரே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 21

 தோலாக் கரிவென்ற தற்குந்

துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ
லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய
நீதந்த கொய்தழையே. 
 
அடங்காத யானை வென்றதற்கும் சோர்வுறாத தன்மைக்கும் ஈடு இல்லா பரிசு உள்ளது அன்றி எலம் இருஞ்சி இலம்பு என மாமலர்களுக்கும் அரிய மலர்கழல் அம்பலவன் மலையில் கோலம் பூண்ட ஆளுமை நீதந்த கொய்தழையே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 20

 ஈசற் கியான்வைத்த வன்பி

னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்தில்லை
யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
நீளம் பெருங்கண்களே. 
 
ஈசன் நான் வைத்த அன்பால் அகன்றவன் கொடுத்த பாசத்தால் கார் ஒன்றியவன் தில்லை ஒளி போன்றவன் தோள் பூசத் திருநீறு என வெளுத்த அவன் பூங்கழல் யாம் பேசும் திருவார்த்தையால் பெரு நீளம் பெருங்கண்களே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 19

 குவவின கொங்கை குரும்பை

குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
கின்ற தொளிமுகமே.
 
குவிந்த மார்பகமும் அதில் படர்ந்த வளர்ந்த முடியும் கோவைப்பழம் போன்ற சிவந்த வாயும் கவரும் நகைப்பும் அதில் வெண்மையான முத்தும் கண் மலர் காண செழுமையாக நீர் கழியும் தவத்தால் வினை தீர்ப்பவன் தாழ்ந்த குளத்தில் சிற்றம்பல மனையாள் நாணத்தால் குவிந்த நிலவாய் ஒளிரும் ஒளி முகமே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 18

 விண்ணிறந் தார்நிலம் விண்டவ

ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.
 
விண்ணை கடந்தவர் நிலத்தை விண்டவர் என மிகுதியான இருவர் கண்ணை கடந்தார் தில்லை அம்பலத்தார். கழுக்குன்றில் இருந்து குளிர்ச்சியுடன் இருந்து சந்தனச் சோலை பந்தாடுகின்றார். எண்ணம் கடந்தவர் யார் கண்ணோ எல்லாம் உன் அருளே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 17

 மத்தகஞ் சேர்தனி நோக்கினன்

வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
றோன்தில்லை யொத்திலங்கும்
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந்
தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன்
றோஎன் விழுத்துணையே. 
 
கடையப்படுவதால் கிடைத்த தனி பார்வை கொண்டு அமுது ஊறும் வாக்கு அளிப்பவனே. ஒத்தபடி அகம் சேர்ந்து என்னை வீடுபெறு அடைய நின்றான். தில்லை ஒத்து இலங்கும் முத்து அகத்தை சேர்ந்ததைப் போல் என் பெருந்தோளி சேர்ந்தவன் முகத்து மதியின் வித்தகமாய் சேர முயல்வதே என் நோக்கம் அன்றோ என் விழுத்துணையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 16

 பண்டா லியலு மிலைவளர்

பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
கொல்லோ கருதியதே.
 
முன்பு ஆல் இலையில் வளந்த பாலகன் உலகை கிழித்து தொண்டு செய்து இயல்பாய் அடையும் சுடர் கழலை அடையவில்லை. தொல்லை நீக்கும் தில்லையின் வாய் வண்டாகும் ஒலியால் இயலும் வளர் பூந்துறையை மறைக்க இயலாத என்னை கன்டு இயலும் கடன் இல்லை முடிவோ எண்ணியதோ.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 15

 உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்

அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே. 
 
உள்ளத்தால் உருகுவதை செய்து அம்பலத்து ஒளி பெருகுதலைச் செய்து நின்றோன். பெருந்துறை மேல் போதை கொண்டவர் வட்டத்தை சென்று ஊழ் முடியாது முலை கண்டு தலைப்படும் மழலை என ஓதுவதோ.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 14

 அக்கும் அரவும் அணிமணிக்

கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
யாத வியல்பினவே.
 
அஃகாகிய அயுத எழுத்தையும் அரவமாகிய ஒளியுடலையும் அணியும் மணி கூத்தன் சிற்றம்பலமே நிகரான ஒளி வளர் வஞ்சி மஞ்சம் சார அழைக்க கொக்கும் சுனையும் குளிரந்த இருக்கும் இடத்தில் கொழுத்த இளம் மலர்களும் இந்த குன்றில் ஒன்றும். மலர்ந்து அறியாத இயல்பில் இருந்தனவே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 13

 மைத்தழை யாநின்ற மாமிடற்

றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
பாவம் பெரியவரே.
 
கருமை நிறைந்து நின்ற மா இடை அம்பலவன் திருவடிக்கே உடல் நிறைந்து நின்றவன் வம்பு நிறைந்தவர் போல அதிரதிர கை நிறைய ஏந்தி முடிவற்ற கேள்வியுடன் வில் இல்லாமல் பித்து நிறைய நிற்பவரானால் பாவம் பெரியவர்களே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 12

சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்
கையிற் கொடுஞ்சிலையே. 
 
திடமான கல்லால் ஆன சிலை ஒன்று வாள் போன்ற நெற்றியில் பாகமாக கொண்டவன் சிற்றம்பலவன் கயிலை மலை ஒன்று மாமுகத்தில் விசப்படும் அம்பாய் மண் கூட உணர்ச்சியுடன் குளிக்கும் கலை ஒன்று வெறும் கனையுடன் காட்ட என்னில் கெட்டேன். கொலை செய்ய ஒன்றும் திடமானவர் கையில் கொடும் சிலை உள்ளதே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 11

தெங்கம் பழங்கமு கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியெந் தேமொழியே.
 
தென்னைமரக் கனிகள் பாக்கு குலைபோல் நிறைந்து வாழை வளர்ந்து கொழுத்த பழங்கள் உடன் குளிர்ந்த நாட்டினை நீ உடமையாக கொண்டாய். பாகமாக கொண்ட அம்பலவன் பரங்குன்றில் குன்று என நின்று மனம் பதைக்க சிங்கம் திரிவது போல் திரியும் சீர் நிறை ஊரின் சிறுமியே என் தேன் மொழியே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 10

 அந்தியின் வாயெழி லம்பலத்

தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.
 
இளம் சிவப்பு கொண்ட அந்தியின் எழிலுடன் இருக்கும் அம்பலத்து என் தலைவன் பொன்னின் நிறம் மாறி பலவகை சுவை நிறைத்து கொடுப்பான். பெண்குரங்கின் வாய் நிரப்பும் தோப்பும் சிலம்ப மனம் கனிய முன்னும் வாய் மொழியாகியது நீயே என பேசி மகிழ்ந்தோம் உன் திருவடிக்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 9

 முனிதரு மன்னையும் மென்னையர்

சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய
குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம்
பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
றான்சுடர்க் கொற்றவனே.
 
முழமை அருளும் அன்னையும் மென்மையானவர்கள் போற்றவும் திடமுடன் தனிமை தரும் நிலத்திடை குன்றம் உள்ள தாழ்ந்த சடை மேல் பனி தரும் திங்கள் அணியும் பலரின் பகை அழிக்கும் பணிவு தரும் திட சிலைக் கோடு சென்றான் சுடர் உடைய கொற்றவனே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 8

 கற்றில கண்டன்னம் மென்னடை

கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
யூரன்ன பூங்கொடியே.
 
பார்த்து கற்காத மென்மையாக நடக்கும் அன்னம் கண் மலர்கள் அருளுடன் நோக்க மென்மையை பெறவில்லை, அன்பினை பெறாத கிள்ளை பேச்சு, பிள்ளை என்றால் ஊற்று இல்லா ஊற்று தரித்து இளக ஒளி மிளிரும் புற்றில் வாழ் அரவம் புலி ஊர் என்ற பூங்கொடியே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 7

 நறமனை வேங்கையின் பூப்பயில்

பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
பலவன் நெடுவரையே.
 
இனியவை இருப்பிடத்து புலியின் மென்மையான அசைவுடன் பாறையை அடைந்த மலரை நாகம் என நாடிய வீரம் குடி கொண்ட வேங்கை என அஞ்சம். தருபவர் அச்சம் அடைய குகை கொண்ட வேங்கை அடங்கியது போல் அடையவோ நிறைவான இடத்தில் வேங்கை பலமுடன் இருக்க நேடிய வழி இதுவே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 6

 உறுங்கண்ணி வந்த கணையுர

வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
நாணுமிக் குன்றிடத்தே. 
 
ஆசை ஊறச் செய்யும் கண்ணி வந்த கணை கொடுப்பவன் பொடியாய் ஒடுங்கத் தகுந்த கண்ணி வந்த சிற்றம்பலவன் மலையின் சிறு வாய் நறுங்க வந்த கண்ணி அணிந்தாலும் நாகம் ஒடுக்கும் பூ ஆகும் குறுகிய கண்ணி ஏய்ந்த மந்திகள் வெட்கப்படும் இந்த குன்றிடத்தே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 5

 எழில்வா யிளவஞ்சி யும்விரும்

பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
தில்லையிப் பூந்தழையே.
 
எழிலான வஞ்சியும் விரும்பும் மற்றபடி குறையுடன் இருக்கும் குழல் வாய் ஒளியுடன் அம்பலத்து ஆடும் சோதியான தீ கொண்ட குழல்வாய் மொழி மங்கை பாகன் குறுகிய அருவியின் கோலம் காட்டும் பொழில்வாய்  தடம் தரும் வாயில்லாமல் தில்லையின் பூந்தழையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 4

 யாழார் மொழிமங்கை பங்கத்

திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
சிலம்ப தருந்தழையே. 
 
யாழ் போன்ற மொழியை உரிமையாக கொண்ட மங்கைக்கு பாகமான இறைவன் திரையில் வழியும் நீர் வராதபடி வந்து எழிலாக நிறைந்தவன் நின்ற தில்லை என சுருண்ட எழிலான கூந்தல் தொண்டை செவ்வாய் நாடி சொல்லை அறிந்தால் தாழ்ச்சியடைய செய்யாதது எதிர் வந்து கோடும் சிலம்ப தரும் தழையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 3

 முன்றகர்த் தெல்லா விமையோரை

யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
மூடுமென் றெள்குதுமே.
 
முன் வெற்றிபெற்ற எல்லா இமையாதவரையும் கடந்தபடி தக்கன் மூட்டிய தீ சென்று அகத்தே இல்லா வகை சிதைத்த அம்பலவன் குன்றகத்தே இல்லா தழையன் நாணமுடன் கொடியானவர் அகத்தே இல்லா பழி வந்து மூடுமோ என்றே எண்ணுகிறேன்.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 2

 ஆரத் தழையராப் பூண்டம்

பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா
ரெனவரும் ஐயுறவே.
 
மனம் நிறைய தழை நிறைய பூண்ட அம்பலத்தான் அன்பர்களுக்கு தழையன் அருளி நின்றான்  மாமலயத்து தழை அண்ணல் தந்தான் இவை அவள் அல்குல் கண்டால் நிறைந்த தழை கொடுத்தான என வரும் ஐயுறவே.
#திருவாசகம்

திருக்கோவையார் | சேட்படை | பாடல் எண் : 1

 தேமென் கிளவிதன் பங்கத்

திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.
 
தேன் என மென்னையான வர்த்தையுடன் நட்பு கொண்ட தில்லை போன்றவர்களே, பூ என மெல்லிய தழை என்றாலும் போதும் என கொள்ளவில்லை என தனியே புலம்ப ஆம் என்று அரும் கொடும் பாடுகள் செய்து உங்கள் கண் மலரால் காமன்கணை கொண்ட் வலை கொள்ளவோ முற்றும் கற்றதுவே.  
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 8

 பொன்னார் சடையோன் புலியூர்

புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே. 
 
பொன் அணிந்த சடையோன் புலியூரை புகழாதவர் புரிவதில் நோய் என நான் அறியவில்லை இதை நான் ஏன் உரைக்கவில்லை. அடுத்தவர் வந்து சொன்னாலும் உடனே உணராமல் துணை நின்ற மனமே என் ஆழ்ந்த துயர் இல்லாமல் போக வழி சொல்லு, நீர்மை இனிமையானவர்க்கே.
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 7

 மேவியந் தோலுடுக் குந்தில்லை

யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
லேறக்கொல் பாவித்ததே
 
முடிடும் தோல் உடுக்கும் தில்லையனின் பொடி மெய்யில் இடுகையில் ஓவியம் தேன்றும் கிழிசலும் எழிலாக இருக்கும் என்ற உரை உளதால் விரிந்த தோகை என பாவமான சொல்லாடல் செய்யமாட்டார். பாவி நான் அந்தோ பனை மடலேறக் பாவித்தேனே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 6

 உள்ளப் படுவன வுள்ளி

யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
தறிவிலென் கூற்றுக்களே. 
 
நினைக்க வேண்டியதை நினைத்து சொல்ல வேண்டியவர்க்கு சொல்லி மெல்ல முன்னேற துணிபவர்கு துணிய வேண்டுவேன் நான். திருட்டதனமாக முன்னேற முயல்பவர்க்கு அருளாத அரன் தில்லை காணமாட்டார் போல் மறக்க அறியவில்லை கூற்றுக்களே.
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 5

 புரங்கடந் தானடி காண்பான்

புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.
 
எல்லை கடந்தவன் அடி காண்பவர் புவியை கடந்து புகுவது அறியாமல் இரங்கி தாய் நீ என இரக்கும் பக்தன் இரண்டு அடிக்கு என் இரண்டு கரத்தை கடந்தான் என்று காட்டமல் அங்கே அதை காட்டி வரம் தந்தான் தில்லை அம்பலம் முற்றிலும் அவனே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 4

 சங்கந் தருமுத்தி யாம்பெற

வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
வானவன் நேர்வருமே. 
 
கூடுவதால் தரும் முழுமையை பெற வான் வழியே நோக்கி அங்கு பொங்கும் நீர் கொண்ட கங்கை தாங்கி பொலிவுடன் கலித்து உலவி அமைதியாக ஏந்திழை தொல்லை பல வாங்கி அமையாக்கும் நீர் தில்லை வானவனுக்கு ஒப்பாகுமே.
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 3

 நீகண் டனையெனின் வாழலை

நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ
ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின்
றானப் பெருந்தகையே. 
 
நீ அதைக் கண்டால் வாழ மாட்டாய், நேரிழை அம்பலத்தான் பிள்ளையை பார்த்ததைப் போன்ற ஒருவன். என் அரசன், அழகிய பெண்மையின் வாய் வண்டு அனைய ஓரு நாவய் கனி நல்லது எனக் கண்டு பேய் கண்டதைப் போல் ஒன்றாகி நின்றவன் என பெருந்தகையே. 
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 2

 வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்

மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
னொருவனித் தேம்புனமே. 
 
கோடுகள் நிறைந்த கண்ணை உடையவள் கைகளுக்கு மயக்கம் அடைந்தது ஏனோ? நெருப்புடன் இணையும் தளிர் போன்ற மேனியன், ஈரமுள்ளவன் புலியூரில் புரி சடையோன் புதல்வன் அடைந்த பூ போன்ற வேல் என தெரியாத உரையவன் பிரியாத ஒருவன் கூடும் உறுப்பு தேன் புலமே.
#திருவாசகம்

திருக்கோவையார் | குறைநயப்புக் கூறல் | பாடல் எண் : 1

 தேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை

வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
வார்குழ லேந்திழையே.
 
தேயும் மலருக்கு அஞ்சி அறைகளில் தங்கும் வண்டு தண்டு தேன் பருகியதோ என்னும் தில்லை வாழ்பவன் சேய் என சினம் கொண்ட வேல் என ஒருவர் மாதரால் வாழ வருவார் வந்து ஏதும் சொல்லார் எது செய்யத்தக்கது அது வார்குழல் ஏந்திய இடையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 9

 பைந்நா ணரவன் படுகடல்

வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே. 
 
அடங்கி இருக்கும் பாம்பை கொண்டு கடலை கடைய நஞ்சும் அமுதாகும். மைவளை கொண்ட மணிகண்டன் இருக்கும் புலியூர் வாசமும் பொன்னும் நிறைத்து வலைத்த அமுது அலை வாய் உடையவன் என்னுள் மறைந்தபடி முன்னும் இன்றும் மது ததும்பும் வார் குழல் ஆட்கொள்ள காண் என அருளியதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 8

 ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்

திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
செய்க அறிந்தனவே. 
 
ஊரார் பழிக்கும் வாயை முடி அடைக்கும் உயர் பெண்ணை திண்ணமாய் மடல் குறித்து சீராக பேசி திருத்த இருந்திலர் ஈசர் தில்லை கருத்த வாய் குழலிக்கு ஆதாரத்தை ஓதி கற்பித்து கண்டால் தேறும் வாய் அரிது என அறிவார் பின்னர் செய்க அறிந்தபடியே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 7

 யாழு மெழுதி யெழின்முத்

தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
டேற்கொண்டு போதுகவே. 
 
ஏழும் எழுதி ஏழின் முடிவையும் எழுதி இருளாக பூசும் சூழ்ச்சியும் எழுதி ஓரு தொண்டையும் தீட்டி என் பழம் பிறவி ஏழும் எழாதபடி வகையாக சிதைத்தவன் புலியூர் இளமாகும் பொழுதில் கொம்பை அரணாக கொண்டு போதும் என ஆக்கியதே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 6

 அடிச்சந்த மால்கண் டிலாதன

காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
வோநும் பரிசகத்தே.
 
சந்ததமாய் அளவற்றும் கண்டிடாத திருவடி காட்டி வந்து ஆண்டுகொண்டு என் சந்தத முடிச்சி அவிழ்த்து மாமலர் ஆக்கும் முன்னவன் புலியூர் புரையும் ஆழ்ந்த அமைதி தரும் யாழ் பயின்ற மென்மையான மொழி பேசும் கன்னியன் நடைக்கு முன்னேற்றமாக்கும் படம் உள்ளதோ பரிசுகளில். 
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 5

 நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை

நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும்
முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
தோமன்ன இன்னருளே.
 
ஆட்டக்காரன், வணங்கக்கூடிய பழையவன், எல்லையை நான்முகனும் மாலும் அறியாதபடி கடந்தவன், உருவமற்றவன், தில்லை அல்லல் கண்ணார்ந்த பெண்ணை உடன்கொண்டவன், பெட்டையுட்ன சேவலை இணைத்து முட்டையும் தந்து அழித்து மடல் நாம் ஏறின் யார் காரணமோ, இன்னருளை தருவாயாக. 
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 4

 கழிகின்ற வென்னையும் நின்றநின்

கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
தெருவிடைப் போதுவனே. 
 
இல்லாமல் போகும் என்னையும், நிலைக்கும் உன் கார்மயில் தன்னையும் நான் கடந்து கிழியும் ஒன்றை நாடி ஏழு திசைகளை கொண்டேன் ஆகையால் பிறவி கெட்டு அழிகின்றபடி ஆக்கியது. தாளம் பலவாகும் கயிலை உடைய தேன் பொழிகின்ற சாரல் நுகர சீறார் தெருவே போதும் என்பேனே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 3

 விண்ணை மடங்க விரிநீர்

பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
பண்ணிற்றொர் பெண்கொடியே. 
 
விண்ணையும் மறைக்கும்படி விரிந்தநீர் பரந்து வெற்றிடம் நிரப்ப மண்ணை மறைக்க வரும் ஒரு காலத்தில் பொறுத்து நிற்கும் அண்ணல் அடங்கா தளம் பலவற்றை அருள் இல்லாதவர் போல், பெண்ணை மடல் மேல் வரச் செய்தாது ஓர் பெண் கொடியே.
#திருவாசகம்

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 2

காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.
 
வீரியம்கொண்ட வேல் போன்ற மின்னல் என கண்ணின் வலை கலந்து வீசியபொழுது வலையில் இருந்த மீனை இழந்தனர். வியப்புமிகு தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தவர் பிளவுபடாமல் பிடித்து சினமுடன் பாய்ந்து பனைமடம் ஏறுவர்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 1

 பொருளா வெனைப்புகுந் தாண்டு

புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
தழியுமென் னாருயிரே. 
 
பொருளாய் என்னுள் புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன் இவர்களுக்கு இருளாக இருந்து ஒளியாய் நின்ற சிற்றம்பலம் என ஆனாய். வளைந்த கூந்தலும் வெண்ணை போல் கையும் சிவந்த வாயும் துள்ளும் இடையும் உள்ளவர் இடத்தில் அருள் அற்று ஒழித்தால் ஒழியும் என் ஆருயிரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மடற்றிறம் | பாடல் எண் : 1

 பொருளா வெனைப்புகுந் தாண்டு

புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
தழியுமென் னாருயிரே. 
 
பொருளாய் என்னுள் புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன் இவர்களுக்கு இருளாக இருந்து ஒளியாய் நின்ற சிற்றம்பலம் என ஆனாய். வளைந்த கூந்தலும் வெண்ணை போல் கையும் சிவந்த வாயும் துள்ளும் இடையும் உள்ளவர் இடத்தில் அருள் அற்று ஒழித்தால் ஒழியும் என் ஆருயிரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நடுங்கநாட்டம் | பாடல் எண் : 1

 ஆவா விருவ ரறியா

அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றொ ராண்டகையே.
 
ஆர்வம் கொண்ட இருவர் அறியா அடியை தில்லை அம்பலத்தில் மூவாயிரம் பேர் வணங்க நின்றோனை நினையாதவரைவிட முதலாக தீ வாய் உழுவை கிழித்து எப்படியோ பிழைப்பித்தவா மணிவேல் பணிகொண்டு ஆட்கொண்டனையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 5

 காகத் திருகண்ணிற் கொன்றே

மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி
லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
வருமின்பத் துன்பங்களே. 
 
காகத்திற்கு இரு கண்ணிற்கும் ஒன்றே மணி போல் கலந்த இருவர் அகத்துள்ளே ஒன்றே உயிர். இதை கண்டவர் யாம் மட்டும் அல்லாமல் யாவையுமாய் ஏகமாய் ஒருவனே இருக்கும் பொழில். அம்பலவன் மலையில் தோகை விரிந்து ஆடி மகிழ்பவருக்கும் மகிழாதவர்க்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே.
#திருவாசகம்

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 4

 பருங்கண் கவர்கொலை வேழப்

படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
றோமற்றவ் வான்சுனையே.
 
பருத்த கண்கள் யானைப் படை கொண்ட கொலை வெறியுடன் கவர்ந்திட படராமல் ஆற்ற கண்ணுக்கு இல்லை. தில்லை அம்பலத்தோன் அளவு தரும் கருங்கண் சிவந்து கனிவாய் வெளுக்க கண்ணார அளித்தபின் வருங் கண் மலைமலர் சூட்ட வற்றாமல் வரும் வான் சுனையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 3

செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி
லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையுந்
தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங்
குடைவ னிருஞ்சுனையே.
 
சிவந்த நிற மேனியும் வெப்பமான நீரும் அணிபவன் தில்லையில் வெளிப்பட்டதைப் போல் அந்நிற மேனி கொங்கையின் குங்குமமும் மை போன்ற கருங்குழல் மாலையும் சூடியவளாய் மதம் சேர் இந்நிறமும் பெறினுங் குடைவேன் இரண்டு சுனையே
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 2

 அக்கின்ற வாமணி சேர்கண்டன்

அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே. 
 
அஃ என்றவுடன் மணி சேர்கின்றவன். வெளிப்படையானவன். திசை அறிந்தவர் கொழிந்து விட்டு செம்மை நிறமடையும் இடம் உடையவள். அஃ என்றபடியே அமர்ந்து சென்று அங்கே ஔ வை ஒத்தபடி ஒசை கேட்க இணங்கமுடன் இருப்பவளே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | நாணநாட்டம் | பாடல் எண் : 1

மைவார் கருங்கண்ணி செங்கரங்
கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறுபிறைக்கே.
 
மையிடும் கருங்கண் உடையவர் செழுமையான கரம் கூப்ப மறந்தும் மற்றப் பொய் வானவரின் உள்ளே புகாமல் தனது பொன் கழற்கே அடியேன் உய்வேன். வெளிச்சம் புக ஒளிரும் தில்லை நின்றவன் சடை மேல் படரும் செவ்வண்ணம் அடைந்த பசுமையான கதிர் வெள்ளை சிறுபிறைக்கே ஆனது.  
#திருவாசகம்
 

திருக்கோவையார் | குறையுறவுணர்தல் | பாடல் எண் : 3

 பிழைகொண் டொருவிக் கெடாதன்பு

செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின்
றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண் டொருவனென் னாமுன்ன
முள்ளந் தழைத்திடுமே. 
 
தவறு அறிந்து அதன்பொருட்டு குறையா அன்பு செய்து இருப்பிடம் கொண்டு அதை விலகாமல் நின்று அம்பலத்து ஆடும் முன்னோன். ஊழ்வினை கொண்டு விரும்பும் நோக்கம் பயின்ற என் எண்ணுதல் மாந்தழைக் கொண்டு ஒருவன் என்ன என வினவ முள்ளும் தழைத்திருமே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | குறையுறவுணர்தல் | பாடல் எண் : 2

 அளியமன் னும்மொன் றுடைத்தண்ண

லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே. 
 
கொடுக்க விரும்பும் ஒன்றை உடைமையாக கொண்ட என் அரன் தில்லை அன்னாள் கிளியை விரும்பி வலிந்து செல்ல நின்று கிளிர்ச்சியை விட்டு அமர்ந்து இருக்க பளிங்கை அடுத்த ஒளி அமர்ந்து அங்கே ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | குறையுறவுணர்தல் | பாடல் எண் : 1

 மடுக்கோ கடலின் விடுதிமி

லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர்
மலர்நும் சுரிகுழற்கே.
 
ஆழ்கடல் விட்டு திமிங்கலமோ திரைகடல்விட்டு மீனோ இடம் மாறாது. படுக்க பல நிலமோ, கோபரன் தில்லை முன்றை விட்டுக் கொடுப்பேனோ, நுட்பமானவர்களுக்கு குற்றேவல் செய்வேனோ, தொடுக்க மலர் வளைந்த குழலுக்கே குளிர்ந்த இரு அணி உடையோரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | முன்னுறவுணர்தல் | பாடல் எண் : 1

 நிருத்தம் பயின்றவன் சிற்றம்

பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
மெல்லியல் வாடியதே. 
 
சிற்றம்பலத்தில் நெற்றித் தனிந்து கண் நிருத்த பயின்றவன். கயிலை மலையில் உயர பயிலும் ஒருவன் குடுமித் திருத்தி சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர்கொள்ள வருத்தம் பயின்று கொல்லவோ வல்லி மெல்லியல் வாடியதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | இருவருமுள்வழி அவன்வரவுணர்தல் | பாடல் எண் : 2

 ஆழமன் னோவுடைத் திவ்வையர்

வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே.
 
ஆழமான மனநிலையுடைய தீர்க்கமானவர் வார்த்தையால் அனங்கன் நைந்து வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பில் புனத்தே யானைமுன்னே கலையாய் மற்றும் பிறவாய் பின்னும் மெல்லிய இழையாய் அணிகலன் மென்னோக்கி இடையாய் கழிந்தது வந்தே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | இருவருமுள்வழி அவன்வரவுணர்தல் | பாடல் எண் : 1

 பல்லில னாகப் பகலைவென்

றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.
 
பல என இல்லை என்பதை பகல் போல் உணர்ந்து வென்றவன். தில்லை பாடுபவர் போல் எப்படியும் இல்லாதவன். நாகத்துடன் கேள்வியாக இருப்பவன் யாரோ அவனுக்கு துன்பம் தராதவன். நாகத்தை அறிந்து வேட்டையாடி கொண்டாடும் மெய்யோர் சொல் அற்று கற்றதை கடந்த வானின் ஊற்றாமே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 10

 கலைக்கீ ழகலல்குற் பாரம

தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
எதுநுங்கள் சிற்றிடையே. 
 
கலை நயம் மிகுந்தவற்றுள் கீழ் இருக்கும் அல்குல் பாரம் கண்ணால் காண இலங்கும் முலைக்கீழ்  மெலிந்து நின்று தன் முற்றாத இலங்கையர் கோன் மலைக்கீழ் விழ. அடைந்த சிற்றப்பலவர் வலிமையான பூங்கயிலை சிலைக்கீழ் கணை நிகர்த்த கண்ணீர் என்பதே நுகர்த்த சிற்றிடையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 9

 வின்னிற வாணுதல் வேனிறக்

கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
மணிநிறப் பூந்தழையே.
 
வில் நிற வாள் நுதல் வேல் என கண் மென்மையான இயல்பை அல்லாமல் தன் நிறமாக ஒன்றி இருத்தி நின்றன. அம்பலம் போல் மின்னிற நுட்ப இடை பேரெழில் வெள்ள சிரிப்புடன் வளையல் அணிந்த பொன் நிற அல்குலுக்கு ஆகுமோ மணி நிற பூந்தழையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 8

 இரத முடைய நடமாட்

டுடையவ ரெம்முடையர் 
வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே.
 
இரதத்தை உரிமையாக கொண்டு நடனமாடுபவர் எம் உரிமையானவர். நித்தயத் தன்மை உள்ள அணி தில்லை அடைந்தவர். விரதம் இருப்பவர் விருந்துடன் பேசா தன்மையை மீட்டு அன்றே சாதகமான சூழலை உடையவர் மணிவாய் திறக்கிற் சலக் என்பவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 7

 தாரென்ன வோங்குஞ் சடைமுடி

மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
றம்பல வன்கயிலை
யூரென்ன வென்னவும் வாய்திற
வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
யீர்ங்குழற் பேதையரே.
 
தார் போன்ற அழகிய சிறு முடி மேல் இனிய திங்களை வைத்து வழிந்து வரும் கறை இடம் அம்பலம் ஆனவன். கயிலை ஊர் என்ற எண்ணவும் வாய் திறவாதீர் ஒழிவீர் பழி ஏற்பீர் என்றிட என்னவோ உரைப்பீர் குழற் பேதையரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 6

 ஒருங்கட மூவெயி லொற்றைக்

கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
யோவிங்கு வாழ்பவர்க்கே. 
 
மூன்று எழிலானவற்றை ஒருங்கே கொண்ட ஒற்றை அம்பை கொண்ட சிற்றம்பலவன். கருமையான கடம் மூன்று கொண்ட நான்கு வாசல் கதவுகளை திறந்தவன் கயிலையில் இரு கடம் மூடும் பொழில்எழில் அம்பரன் என்று புகழ்பவர்களே வரும் கடத்திற்காக மூன்றையும் பகிர்ந்தால் பழியோ இங்கு வாழ்பவர்க்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 5

 சிலம்பணி கொண்டசெஞ் சீறடி

பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
குரைமின்கள் சென்னெறியே. 
 
சிலம்பை அணியாக கொண்ட சிவந்த சீரான அடி தோழமையாளன் இணையடியார் கூட்டம் பணிந்திட என்னை கொடுத்தேன். என்னைக் கொண்டு தாள் அணியும் கலம்பணி கொண்டிடும் அம்பலங் கொண்டவன் கார்க்கயிலை சிலம்பணி கொண்டே உங்களின் சிறப்படைய தடுக்கும் குரைகளை சென்னி அறியவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 4

 கருங்கண் ணனையறி யாமைநின்

றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும்
வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு
புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
தீங்கொரு வான்கலையே.
 
கருமையான கண்ணை அறியாமல் நின்ற அவன் தில்லை கார்பொழில் இடத்தில் வரும் கண்ணை வண்டு நாடும் வளர்ச்சியின் திடத்தை அடைந்தவர் இருக்கண்ணை அனைய வெப்பம் கூடும் புண் புணரிப்புனத்தின் மாற்றம் தரும் கண்ணை அனைய தூண்ட வந்த தீங்கு ஒழிக்கும் வான்கலையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 3

 இருங்களி யாயின் றியானிறு

மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாஅன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.
 
களித்திருக்க மாட்டாமல் இறுமாப்பாய் இருக்க பணிவோர்க்கு இன்பம் அருகாமையாக களிய அனலாட வல்லவருக்கு இன்றி மற்றவருக்கு இல்லை. நான் மலைக்கும் வண்ணம் களிக்கவும் அதிலிருந்து மீளவும் மதத்தின் இரு கோட்டை நீள் கருங்களியார் மதயானை உண்டோ வரக் கண்டதுவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 2

 குவளைக் கருங்கட் கொடியே

ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே.
 
குவளை மலர் போன்ற கருங்கண் கொடியே ஏர் இடை கொடி கண்ணை தாங்கும் எனது உயிர் என்றது தனக்கு உவமை இல்லா மாற்றத்தின் பொருட்டு சிற்றம்பலத்தான் அருள் இல்லாதவர் போல் துவளத் முதன்மையாக வந்த துன்பத்தை இனி சொல்லுவேனே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | மதியுடம்படுத்தல் | பாடல் எண் : 1

 எளிதன் றினிக்கனி வாய்வல்லி

புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
வாழி யறிவிப்பனே.
 
எளிமையானது இது இல்லை என்ற கனி வாய் வலிமையுடன் சொல்ல எழிலான மதியின் கீற்று சென்ற செழுமையான சடைக் கொண்ட கூத்தபிரானை உள்ளே எரிச்சலுடன் கண் தெளிவாக வேல் போல் வெற்றியை வருவித்த வார்த்தைக்கு அப்பாற்பட்டு தெளிவித்த குளிரச் செய்த பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பேனே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | இடந்தலைப்பாடு | பாடல் எண் : 1

 என்னறி வால்வந்த தன்றிது

முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே. 
 
என் அறிவால் வந்தது இல்லை இது. முன்னாலோ இல்லை இனிமேலோ முயன்றால் இப்படி நிகழாது. தெய்வத்திற்கு வருந்ததே நெஞ்சே, மின்னலை கூந்தலாய் கொண்ட ஆட்ட நாயகன் வியப்பிற்கு உரிய தில்லையில் முந்நீர் பொன்னெறிவார் துறை இடத்தே சென்று நின்றாய் பொழிலிடத்தே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 30

 பொய்யுடை யார்க்கரன் போலக

லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
காக்கும்பைம் பூம்புனமே.
 
பொய்யை உடைமையாக கொண்டவர் கரம் போல் இணையாமல் அகலும். அகற்றவரும் புணரின் மெய்யுடையார்க்கு அவன் அம்பலம். அது போல் மிக அணுகும் மை கொண்ட வாள் போன்ற கண்மணி உடன் அணியப்பட்ட முலை பெருத்து படம் எடுக்கும் பாம்பை ஒத்த அல்குல் காக்கும் பழகும் மலர் வனமே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 29

 சூளா மணியும்பர்க் காயவன்

சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயிர்
ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
பலசொல்லி யென்னை துன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
லாயம் நணுகுகவே. 
 
நிலையற்ற மணியும் தேவர்களின் ஆயவன் சூழும் பொழில் தில்லை ஒப்பான அறியமுடியாது ஒழிந்த என் ஆருயிர் ஆர அமிழ்தே அணங்கே தோய்வற்ற மணியே எனக்கு நிகரே என பல சொல்லி என்னை அடக்கும் நன்மை பயக்கும் மலர் பொழில் பிதற்றலை ஒழித்த இலாயம் அண்டுவேனே
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 28

 நீங்கரும் பொற்கழற் சிற்றம்

பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு
மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
மாட்கொண்ட கொங்கைகளே.
 
பற்றில் இருந்து நீங்கயவரும் பொற்கழல் சிற்றம்பலத்தை அடைந்தவரும் நெகிழ்ந்து அழும் நீரை வாங்கும் தெண்கடல் வையமும் அடைந்தாலும் நான் மறவேன் இனிப்புடன் இருக்கும் அமிழ்தும் செழுமையான தேனும் உள்ளடக்கிய சொல்லத்தகுந்த கோங்கரும் புதைந்த தொலைந்த என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 27

 கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்

கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
காள்கொண்டை சார்வதுவே.
 
அளக்கும் தனிக் கொம்பர் தேவர்களுக்கும் குறையாக இருப்பவர் தனது பெருமைக்கு உரிய தனங்களை தேற்ற முடியாமல் சிவன் தில்லையில் இருப்பவள் நுலொத்த நெரிடையாள் சிறப்பை எண்ணாமல் தேனை நுட்பமாக எடுக்க தகாமல் வண்டுகள் கூந்தல்கொண்டையை சார்கின்றதுவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 26

 குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்

கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்
மெழுகொத் தழிகின்றதே.
 
குரு என்ற கடிவாளம் மலர் நிறைந்த பொய்கை சூழ்ந்த தில்லைக் கூத்தனை வாழ்த்தி வணங்குபவர் போல் தொடரும் நாட்களை பிறக்காமல் இருக்க செய்பவரோ. மற்றும் என் கண்மணிபோல் ஒருநாள் பிரிவதற்கு பழகி வளர்த்த அருள் நாண் அனல் இணையும் மெழுகைப்போல் அழிகின்றதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 25

 தாழச்செய் தார்முடி தன்னடிக்

கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
புதைநின்னை வாணுதலே.
 
தனது அடியின் கீழ் பணிந்து தாழச்செய்தவரை வனோர்கள் சூழச்செய்தானம். பலவற்றை தொழாதவர் உள்ளம் தெளிவு பெறாதபடி வேல்கண்ணை மறைத்து பொன்னே நீ என்னை வாழவைத்தாய் உறவுகள் முழுவதும் மறைய நின்னை வானம் அளவு உயர்த்தி உணர்த்தினாய்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 24

 அகலிடந் தாவிய வானோ

னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
வாய்தரு பூங்கொடியே. 
 
விலகிட ஏற்ற வானமோ என அறிந்து இறைஞ்சும் அம்பலத்தின் துன்பத்தின் இடையே விடையாக நிற்கும் ஈசா உன்னை தொழாதார் இன்னலுக்கு இடமாய் சென்றே எனது உயிர் நொந்திடாதபடி வகை ஒதுக்கிட புகலிடம்தான் ஈரம் நிறைந்த எழிலான வாசலாகும் பூங்கொடியே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 23

 காவிநின் றேர்தரு கண்டர்வண்

தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
கேயின் றழிகின்றதே. 
 
காவியுடன் நின்று சிறப்புற கண்டவர் திடமான தில்லை கண் உடையவர். தாமரையில் தேவி என்றே இறையை அறிந்து தன்னையறியாது சிறியதாக வியந்தவன் மேல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் ஆவி என்றே தமிழ் அணங்கே இன்று அழிகின்றதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 22

 தாதிவர் போதுகொய் யார்தைய

லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார்
சுனைப்புன லாடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
தான்மலை யெய்துதற்கே. 
 
பாதுகாப்பவர், மலராததை கொய்யாதவர், நடனமங்கை வணங்க நின்று சோதி வரிசைப்படுத்தி பணிபவர், ஊற்றுநிரில் குளிக்காதவர், உரைப்பவர், கற்பகநாடு முதல் என நித்தம் பொன்னடிப் போய் வாழ்பவர், அம்பலத்தான் மலை ஏய்துதற்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 21

 நேயத்த தாய்நென்ன லென்னைப்

புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங்
காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய
தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து
நின்றதென் மன்னுயிரே.
 
நேசமுடன் நினைத்த என்னை புணர்ந்து நெஞ்சம் நெகழச்செய்து செயல்பட துணிவுடையதாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலமானது போல் மறையக்கூடியதாய் எந்தன் சிந்தையில் தெரிவித்த பெரியதுமாய் வந்து நின்ற என் மன்னுயிரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 20

 காம்பிணை யாற்களி மாமயி

லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றுமென் சிந்தனைக்கே.
 
காக்கும் காம்பிற்கு இணையானவன் மகிழ்வுடன் களிக்கும் மயில் போன்றவன் ஒளிவீசும் மணியால்  அளவுக்கு இணையால் படர்ந்து வளருவதால் நிலைக்கும் பலவாக இருப்பவன் பாம்பை தனக்கு அணியாக கொண்டவன் கயிலையில் பயிலும் ஈரமும் வார்குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 19

 ஆவியன் னாய்கவ லேல்அக

லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
லாயத் தருவரையே. 
 
உயிரானவனே கவராமலும் விலகாமலும் அளித்து ஒளித்த, உயிரானவன் மிகுதியாக கழிவு இல்லாமல் ஆகிட, விரும்பி சேர்வார் உயிரானவன் பயிலும் கயிலாயத்து கருவரையே.
#திருவாசகம்

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 18

 எயிற்குல மூன்றிருந் தீயெய்த

வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற்
கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது
வென்னுடை மன்னுயிரே.
 
அழகிய குலம் மூன்றில் தீ எய்த அதை எய்தவன் தில்லையை நாடி குயிற்குலம் கொண்டு தொண்டைக்கு கனிவாய் குளிர்வித்து நிரப்ப அயல் குல வேல் கமலத்தில் கிடத்தி அனலாய் நடக்கும் மயில் குலம் கண்டல் அதுவே என்னுடைய மன்னுயிர்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 17

 கயலுள வேகம லத்தலர்

மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற்
பாநின தீர்ங்கொடிமேற்
புயலுள வேமலர் சூழ்ந்திருள்
தூங்கிப் புரள்வனவே.
 
மீன் அமர்ந்த தாமரை போன்றவர் மீது பவளக்கனி போல் மொத்தம் முத்த நிரப்பும் அரன் அம்பலத்தின் இயன்ற அளவே இணையாக சொல்லும் போதமற்ற தீர்க்கமான கொடிமேல் பூக்கும் அளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி ஈடுபடுமே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 16

 பணந்தா ழரவரைச் சிற்றம்

பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
டேனொன்று நின்றதுவே.
 
மேலான இடத்தில் தங்கும் பாம்பை சிற்றம்பலத்தில் இருப்பவர் பொன் போன்ற கயிலையில் கூடி பிரிந்த விளக்கமாய் நின்ற நீரான நெருப்பே வாசம் விசம் எழிலான குளமான கண் வடித்தல் பரப்பி இறுக்கமாய் பிடித்து குளிர்ந்த சுடராய் வேல் போல் கண் இன்று நின்றதுவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 15

 வளைக் களத்தம் பலவன்

குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்
றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
யானிக் கடலிடத்தே.
 
குவிந்த களமாய் இருக்கும் அம்பலத்தவன் சிறு மலர் போல் கமலமான அவளை முழுமையாய் நின்று ஆண்ட அவயத்தில் இவளைக் கண்டு இங்கு நின்று அங்கும் வந்து அத்தனையும் பகர்ந்த யானை பசி தீர்ந்தது போன்ற அண்ணலே கடலாகிய உம்மிடத்தே உண்று களித்தேன்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 14

 வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்

இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ
ளேஅப் பணிமொழியே.
 
வடிவு உடைய அணியை வஞ்சி அஞ்சும் இடையிது வாய் பவளம் துடிக்கின்ற வாய் வெப்பத்தில் சொற்கள் பரிசு என பிள்ளையாய் தொடர, தொடரவிடாத அடியாய் மாமலராய் நின்ற அண்ணல் விண்ணோர் வணங்கும் அம்பலம் போகவேண்டிய படியான சந்தம் இதுவே. இவளே அப்பணிமொழியே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 13

 கொடுங்கால் குலவரை யேழேழ்

பொழிலெழில் குன்றுமன்று
நடுங்கா தவனை நடுங்க
நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
நீழலந் தண்புனத்தே.
 
அருள் கொடுக்க காலை குலத்தின் இறுதிவரை கொடுத்ததுவே எழும் ஏழு ஆதார ஊற்றை கடந்து எழிலான குன்றில் அமர்ந்து நடுங்காதவனை நடுங்க மடக்கிய நடுவுடைய விடம் கண்ட அயற்கண்ணி மேவும் தில்லை ஈசன் வெப்பத்தை தங்காதவர் அமைதி பெற வான்பொழில் மற்றும் நிழல் குளிர்ச்சியுடன் அருளினானே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 12

 குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்

தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
நண்ணும் பளிக்கறையே.
 
குயிலை சிலம்பு ஒலி தாங்கும் கொம்பை தில்லையை எங்கள் நடனநாயகன் கயிலை சிலம்பில் வடியும் ஈரம் காக்கும் கருத்த கண்ணும் சிவந்த வாயும் கொண்ட மயிலை சிலம்பை கண்டு நான் போய் வருவேன். திடமான பூங்கொடிகள் பயிலும் சிலம்பு எதிராக வளர்த்த பண்ணை உறங்க வைக்கும் அழுக்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 11

 விழியாற் பிணையாம் விளங்கிய

லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா
னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி
லாமெங் குலதெய்வமே. 
 
கண்ணழகியற்கு அடிமையாம் உண்மையான இயல்புடையவனாம் மயில் போல் கழுத்து கிளி போன்ற பேச்சாம் முதிர்ந்த வானவர் முடித்தொகை விலகாமல் இருக்கும் கழல் தில்லை கூத்தன் கயிலை நின்று முத்தம் மலைத்தேனாய் பொழியாத் திகழும் எழில் சிறந்த எங்கள் குல தெய்வமே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 10

 நின்னுடை நீர்மையும் நீயு

மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே.
 
உன்னுடைய நெகிழுவும் நியும் எவ்வாறு நினைத்தீரோ அதன் பொருட்டு என்னுடைய நெகிழ்வில் எனது என்பதே இல்லை, தில்லை வாழ் முக்கண்ணார் அளவையோ, மலரோ, விசும்போ சிலம்பா என்னிடம் ஆதியால் உன்னை இப்படி செய்த ஈரம் நிறை கொடிக்கு உருகுவாயாக.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 9

 ஆலத்தி னாலமிர் தாக்கிய

கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட் டாக
வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
தொழிவதென் தீவினையே. 
 
சுற்றுவதால் அமிர்தம் ஆக்கிய அரச தில்லை அம்பலம் போல் கோலம் உடையவள் முன்னிறுத்தி அமிர்தம் தன் குணத்தை இழந்தாலும், மழை தன் இயல்பை மாற்றினாலும் மாறாத சீராக்கும் உன் கை என்ற பொற்சீலத்தை நீயும் நினைக்காமல் இருப்பது என் தீவினையே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 8

 நல்வினை யும்நயந் தந்தின்று

வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும்
பாமென்று பாங்கன்சொல்ல வில்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
தாருயிர் துப்புறவே. 
 
நல்ல செயல்களும் தானாகவே வந்து நடுங்குப்படி கொல்வினை வலுத்தன, காப்பவரும் பாராம் என்று பாங்கன் சொல்ல அழிக்கும் செயல்களை மேருவில் வைத்தவன் தில்லை தொழுபவர் கூட்டத்தில் இணைந்து பழைய வினைகள் அழிந்து உயரும் என் ஆருயீர் அழுக்கு அழியவே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 7

 தலைப்படு சால்பினுக் குந்தள

ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
வுற்று மயங்கினனே.
 
ஈடுபடும் ஒருவருக்கு இணங்கும் என் சித்தம் பித்தம் என்று அதிசயக்க யாரும் இல்லை. யாரையும் தேற்றுபவன் அனைத்தையும் துணையாக்கும் வளரும் திங்கள் இளைத்த சிற்றம்பலத்தான் வலுத்த கயிலை மலை சிறியமான்விழி அழிவுற்று மயங்கினேன்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 6

 விலங்கலைக் கால்விண்டு மேன்மே

லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
லுள்ளந் துயர்கின்றதே.
 
சிற்றின்பத்தை நாடி கால்கள் மேன்மேல் தொடர, விண்ணும் மண்ணும் நீரால் கலங்குவதை கண்டும் கலங்காது, வாசம் வீசும் கொன்றை நிறைந்து அசையும் இடம் சூழ்ந்த சிற்றம்பலத்தில் அருள் இல்லாதவர் போல் புரியும் திறன் அற்று உள்ளம் துயர் அடைகின்றதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 5

 சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்

தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
மென்றோட் கரும்பினையே.
 
உயர்த்தும் பொலியக்கூடிய செம்பொன் மாளிகை சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் வடப்பக்க மலையன் மயில் வாழும் கயிலையில் இருப்பவன் கூடினான் பொலியும் கொங்கையுடன் ஓவியப் பொற்கொழுந்தை கண்டால் நெகிழ்ந்து காட்சி மறந்து கரும்பேன ஆகுமே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 4

 உளமாம் வகைநம்மை யுய்யவந்

தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய
தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
நின்றொர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
மண்ண லிரங்கியதே. 
 
உள்ளத்தின் வகைக்கு ஏற்றபடி நம்மை உயர்த்திட வந்து ஆண்டு, தவறினாலும் மீண்டும் உயர களம் அமைத்த தில்லை தொல்லோன் கயிலை வளமாம். இதை பொது என வஞ்சித்து நின்றவர் வஞ்சிக்கப்படும் அல்குல் இளம் மான் விழித்தது போல் இன்றே எம்மால் இரங்கியதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 3

 கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை

குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென்
னாற்ற லகற்றியதே.
 
மேல் எடுத்து நிமிர்த்தி சதை பருக்கும் பாம்பைப் பிடித்து அதன் படம் கிழித்து தன்னை தாங்க பணைமுலையுடன் பற்று கொள்ளும் இடை கொண்ட மருளும் பார்வை கொண்ட மான் போன்றவளை நோக்கி தில்லை சிவந்தவளாம் பொன் தாமரை சூடும் அவளை ஆற்ற அகற்றியதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 2

 சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்

பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.
 
சிறைபட்டும் வான் என விரிந்தும் ஈரமுடன் ஆடும் சிறிய அம்பலத்தில் என் உள்ளத்தில் இருப்பவன். உயர் ஞானக் கூடலில் ஆய்ந்திட்ட தமிழின் துறையின் வாசலாக நூழைந்தவனை அல்லாமல் ஏழு இசைக்கு மயங்கிடாமல் இறைவா விளம்பரத்திற்கு இருப்பவரை தேறச் செய்து எனக்குள் புகுந்து ஆட்கொண்டதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் | பாங்கற்கூட்டம் | பாடல் எண் : 1

 பூங்கனை யார்புனற் றென்புலி

யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண் டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை யெய்துதற்கே.
 
பூப்போன்ற கனை வைத்திருப்பவர் ஈரம் நிறைந்த புலியூர் அம்பலத்தில் ஆண்டு கொண்டாடும் தலைவன் அடி தாமரைக்கே நண்பன் போல் உறவாடும் பண்புடையவன் என்னை கண்டு பரிசு தந்தால் இங்கே யார் தடுப்பார் இளம்பெண்ணின் இன்பம் அடைவதற்கே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 18

 உயிரொன் றுளமுமொன் றொன்றே

சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
லாகும் பணிமொழிக்கே. 
 
உயிர் ஒன்று உள்ளம் ஒன்று என்றே சிற்ப்பித்து ஆட்கொள்ள என்னை கற்கின்ற செவி சென்று நீண்ட கண்கள் விண்டிடுவாய் என்று முப்புரம் சென்றவன் தில்லை சிற்றம்பலத்து நிலைக்கின்ற கூத்தன் அருள் என ஆகும் தொழில்படும் வார்த்தைக்கே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 17

 புணர்ப்போன் நிலனும் விசும்பும்

பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
அறியேன் புகுந்ததுவே. 
 
கூட்டிடுவான் நிலத்தையும் நீரையும் மலையையும் தன் பூங்கழலின் உணர்ந்திட பழைமையுடன் முன்னே கணித்தான், நீர்நிலை நிறைந்த தில்லை யில் நீர் நிலையுடன் இணைந்த குழலை இணைத்தான் இது கனவோ வேறு ஒன்றோ அறியமுடியவில்லை புகுந்ததுவே.  
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 16

 தெளிவளர் வான்சிலை செங்கனி

வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன்
கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங
னேவந்து தோன்றுவனே.
 
தெளிவு வளர்க்கும் வான், சிலையான செங்கனி, வெண்மையான திங்களின் குளிர்ச்சி போலும் வாய்ப்பேசும் வல்லவன், முன்னே ஆடி பின்னும் ஆள்பவன், ஒளிவளர் தில்லை ஒருவன், கயிலை உகுந்த பெருந்தேன் என துளிர் வளர்வதை சார்ந்தவரிடத்தில் வந்து தோன்றுவனே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 15

 வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை

யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
மேய்க்குங் கனங்குழையே.
 
வரும் குன்றத்தை உரிமை ஆக்கிய தில்லை அம்பலத்தான் மலைக்கும்படி திருக்குன்றவாண இளங்கொடி இடர் ஏய்த எம் முன் பரங்குன்ற மாளிகையில் நுட்பமாய் பத்தொளி பாய நம்மூர் கருக்குன்றம் வெண்மை இழக்க சுகம் அளிக்கும் கனங்குழையே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 14

 தேவரிற் பெற்றநஞ் செல்வக்

கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
வாடிப் புலம்புவதே.
 
தெய்வமே நான் பெற்ற நல்ல செல்வமே அசையா வடிவத் திருவே யார் இப்படி நற்பேறு பெற்று இதை சிதைப்பார் இமையாத முக்கண் முவரில் பெற்றவர் சிற்றம்பல மணி மொய்க்கும் பொழில் நிறை வாசல் பூவில் பெற்ற குழலி என வாடிப் புலம்புவதே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 13

 கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை

பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
அறியே னயர்கின்றதே. 
 
கோங்கு மரத்தில் பொலியச் செய்தது போன்ற கொங்கை கொண்டவள் பாகமாக கொண்டவன் குறுகிய மனம் படைத்தவரை தீங்கற்கு புகுச்செய்ய தலைவன், சிற்றம்பல மனையாள் தன்னிடம் இருந்து நீரை வெளியிட நிலவைப் போல் குளிராக இருந்தால் பழியாகுமோ அறியேன் அல்லல் அடைகின்றேனே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 12

 சிந்தா மணிதெண் கடலமிர்

தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
வாட்டந் திருத்துவதே. 
 
சிந்தாமணி தெளிந்த கடல்நீர் அமிர்தம் தரும் தில்லை என அருளால் வந்தால் இகழப்படுமே. மயங்கும் மான் விழியே மயிலே தாமரையே அன்னமே நின்னை நான் விலகி வாழ்வேனோ. சிறிதும் குறையாமல் முற்றுமாய் என்குலம் என்னை வாடவிடமால் திருத்தட்டும்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 11

 கூம்பலங் கைத்தலத் தன்பரென்

பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே.
 
கூப்பிய கையுடன் பணிவுடன் குனியும் அன்பர்களுக்கு பாம்பை அலங்காரமாக அணியும் பரன் என்று இல்லாமல் அம்பலப் பாடலரின் தேன் போன்று பலந்தரும் சிற்றிடையுடன் இங்கே சுவை ஏறிய கனியாய் வாய் மனக்க ஆம்பலம் போல் விரியும் மலர் கள் தரும் போதையை நுகர்ந்த அகமாய் இருக்கும்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 10

 அளவியை யார்க்கு மறிவரி

யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங்
கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
தோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை
யார்வாயிற் கேட்கின்றதே. 
 
அளந்தவனை அறியும் யாருக்கும் அருமையானது ஒன்று இல்லை, அம்பலம் போல் அளவில் வான் என கொங்கை காட்ட கண்ணுதல் மாமதியின் மின்னலால் பிளந்திட பேரமை தோளிது. பெற்றேன் என்பர் கிளவியை என்னவோ, இனிமையான கிளவி யாரிடத்தில் கேட்கின்றதோ.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 9

 உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்

சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்
போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
போல வளர்கின்றதே.
 
உணர்ந்தவர்களுக்கு உணர்வில் அருமையானது என தனியாக ஒன்று இல்லை, சிறிய அம்பலத்தே வெளிப்பட்ட ஒருத்தன் குணம்தான் வெளிப்பட்டதால், கவ்வும் செவ்வாயின் கொடி பொன்ற இடையே தோன்றும் தோள் புணர்ந்தவர் புணரும் பொழுதெல்லாம் பெரும் போகமும் மேலும் புதிதாய் மணந்து ஆளும் வளைந்த முடி கொண்ட அல்குல் போல வளர்கின்றதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 8

 சொற்பா லமுதிவள் யான்சுவை

யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப்
புனிதன் பொதியில்வெற்பிற்
கற்பா வியவரை வாய்க்கடி
தோட்ட களவகத்தே. 
 
அமுது போன்ற சொற்கள் உடையவள், நான் அதை சுவைக்க துணிந்தேன் நன்மை தரும் பொருட்டே தெய்வம் தந்தது என்று, நானே இவள் என பகுதியானதை யார் அறிவார். புலியூர் புனிதன் பொதியில் வெற்பி கற்புடன் இயங்கியதை வாய்கடி கொண்டே களவகத்தே நடந்ததே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 7

 ஏழுடை யான்பொழி லெட்டுடை

யான்புய மென்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன
பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும்
விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங்
காய்வந் தகப்பட்டதே.
 
ஏழு ஆதாரங்களை உடையவன் அழகுடன் சேர்த்து எட்டு உடையவன் என்னை முன்னாள் வினையால் உடைமையாக்கி கொண்டவன் புலியூர் என்பது போல் பொன் நிறைந்த பொழில் வாசல் சூழ்ந்த துன்பத்தை நீக்கும் விதி துணை ஆனவன் யாழ் என்ற இசைக்கருவி கொண்ட மணம் முடிக்காத அணங்காய் வந்து அகப்பட்டதே. 
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 6

 வளைபயில் கீழ்கட னின்றிட

மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
வேன்தெய்வ மிக்கனவே. 
 
மீன்பிடி வலையில் கிழே கடலில் நின்றிட மேல் கடலில் வான்பார்த்த நூனியில் துளையின் வழி கிழ் உடன் கோர்த்த தில்லை பழையவன் பக்கவாட்டில் விலகிடாதபடி கெண்டையை கண்ணி வழியாக கொண்டுவந்த விளைவை அல்லாமல் வேறு ஒன்றை நாடமாட்டேன் தெய்வம் என்றும் ஏற்கமாட்டேன்.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 5

 அணியு மமிழ்துமென் னாவியு

மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை
யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும்
பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந்
தோளி படைக்கண்களே. 
 
அணியாய் அமிழ்தாய் என் ஆவியாய் ஆனவன் சிந்தாமணியும் உலகம் அறியா மறையோன் அடி வாழ்த்தல் அரிது. பிணியும் அதற்கு மருந்தும் தவறியும் தவறாதும் மின்னும் பணியும் பக்கு கட்டிய உறுப்பும் பெருந்தோளி படைக்கண்களே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 4

 அகல்கின்ற வல்குற் றடமது

கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
னம்மன்ன பல்வளைக்கே. 
 
விரியும் உறுப்பு தடமாக கொங்கை கொண்டதை நீ புகழ்கின்ற தென்னை போன்ற நெஞ்சமே இடை இடையே இருப்பதை தொடுக்க மறையும் வில் போல் அன்றி வேறில்லை. ஈசன் எம் மனம் எதிர்த்து பகல் குன்றாதபடி பல்லில் பழமாய் கசங்கி நின்றானே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 3

 பாயும் விடையரன் றில்லையன்

னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.
 
பாயும் விடைக் கொண்ட அரன், தில்லையன் வாள் படை கண்ணிமைக்குள் வெல்லும். நீர் ஊறும் நிலத்தடியில் வாடி உதிரும் மலர் கண்டு துயரம் அடையும் மனமே, அணங்கு என்ற ஒன்று இல்லை அது முலை சுமந்து தேயு மருங்கு என்றாலும் பெரிய பணை போன்ற தோளில் சிறிய நெற்றியே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 2

 போதோ விசும்போ புனலோ

பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது
மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ
விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென
நின்றவர் வாழ்பதியே. 
 
கூர்மையான ஈட்டியோ, கூர் கொண்ட முனையோ, மூழ்கடிக்கும் வெள்ளமோ, செயல்கள் செய்யத் தூண்டும் தலைமையோ, எது என்று அறிவது எப்படி ?. தூதாக நிற்பதோ, காடுகளுக்கு துணையோ, செயல்பட தொல்லையற்ற தில்லை மாதோ, இளம் மயிலோ, என ( இயற்கையை பார்த்து) நின்றவர் வாழும் தலைமையானவரே.
#திருவாசகம்
 

திருக்கோவையார் |இயற்கைப் புணர்ச்சி | பாடல் எண் : 1

 திருவளர் தாமரை சீர்வளர்

காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்
கொடிபோன் றொளிர்கின்றதே.
 
புகழ் வளர்க்கும் மாற்றமும் சீர் வளர்க்கும் காவிகளீசர் தில்லையில் குரு வளர்க்கும் பூங்குழல் கோங்கு பைங்காந்தன் கொண்டு தெய்வமாய் வளர மலர் கொண்டு மாலையாக்கி அணிந்து நன்நடை வாய்க்க வளரும் காமனை வென்று கொடி போல் ஒளிர்கின்றதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 9

 செம்மைநலம் அறியாத

சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து
முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி
நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 
 
செழுமையும் நலத்தையும் அறியாத சிதவடைபவர்களுடன் கூடித் திரிபவனை மூன்று மலத்தை அறுத்த முதலான முதல்வன் நம்மையும் ஒரு பொருளாக்கி மேடையில் ஏற்றுவித்த அம்மா போல் அருள் செய்ததை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 8

 சாதல்பிறப் பென்னுந்

தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார்
கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 
 
இறத்தல் பிறத்தல் என்ற இழுக்கும் சுழியில் தடுமாறி காதல் இன்பம் தரும் கணிவானவர் கலவியிலே வீழ்பவனை பெண்ணை ஒரு பாகமாக உடைய தலைவன் அவனது கழலே சேரும்படி முதன்மையை எனக்கருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 7

 தையலார் மையலிலே

தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து
பாசமெனுந் தாழுருவி
உய்யுநெறி காட்டுவித்திட்
டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
நளினமானவர் மேல் கொள்ளும் மோகத்தால் தரம் குறைந்து போக வேண்டியவனை நேர்த்தியாய் கொண்டுவந்து பாசம் என்ற நூல் அறுத்து வெற்றி பெறும் வழி காட்டிய ஓங்கார உட்பொருளை ஐயன் எனக்கருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 6

 வெந்துவிழும் உடற்பிறவி

மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார்
குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு
பரிசறஎன் துரிசுமறுத்
தந்தமெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
முடிந்துவிடும் உடல்கொண்ட பிறவியை மெய் என்று செயல்களைப் பெருக்கி அடர்ந்த கூந்தலுடன் அழகிய வளையலும் குவிந்த முலைகொண்ட மார்மேல் வீழ்வேனைப் பந்தம் அறித்து என்னை ஆண்டுக்கொண்டு பரிசு அளித்து துன்பம் துடைத்து அருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 5

 பஞ்சாய அடிமடவார்

கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர
நிற்பேன் உன்அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே
அடியேனை வருகஎன்
றஞ்சேல்என் றருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
இடுப்புக்கு ஆடை அணிபவர் கடைக்கண்ணுக்கு அடிமைப்பட்டு நெஞ்சில் துன்பத்தை ஏற்று நின்ற நான் உன் அருள் பெற்றேன் உய்வுற்றேன் என்னை அடிமையாக்கிக் கொண்டவனே அடிமை என்னை அருகில் வருக என்று அருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 4

 மண்ணதனிற் பிறந்தெய்த்து

மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி
எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத்
தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 
 
மண்ணில் பிறந்து வளர்ந்து மாண்டு விழக் கிடந்தவனை எண்ணமற்ற அன்பை அருளி என்னை ஆண்டு என்னையும் உன்தன் தூய வெண்ணீறு அணிவித்து தூய வழியே சேரும்படி அண்ணல் எனக்கு அருளியபடி யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 3

 பொய்யெல்லாம் மெய்யென்று

புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை
மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
எல்லாப் பொய்யையும் மெய் என்று கூடும் மார்பகம் கொண்டவருடன் போகம் செய்து அதில் மையம் கொண்டு இருப்பவனை அதில் அழுந்தாமல் காத்து அருளி பெண்மையை இடமாக கொண்ட தலைவன் தன் கழலே சேரும்படி ஐயன் எனக்கு அருளியபடி யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 2

 நெறியல்லா நெறிதன்னை

நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 
 
வழி இல்லாத வழியை வழியாக நினைப்பவனை அற்ப வழியில் சேராமல் திரு அருள் சேரும்படி குறிப்பாக சொல்லமுடியாத ஆடலரசன் ஆடலை நான் அறியும்படி அருளியதை யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சோப் பதிகம் | பாடல் எண் : 1

 முத்திநெறி அறியாத

மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
 
முக்தி அடையும் வழியை அறியாத மூர்க்கரொடு இணைந்திருப்பவனை பக்திப் பாதைக் காட்டி பழைய வினைகள் அழியம்படி சித்தமுடன் மலம் அறுத்து சிவமாக்கி என்னை ஆண்ட அத்தன் அருளியபடி யார் பெறுவார் அதை அறிவேனோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 7

 நரியைக் குதிரைப் பரியாக்கி

ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவினாசி
அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
செய்வ தொன்றும் அறியேனே.
 
நரி போன்ற மனதை குதிரை போல் செய்து பயணிக்கச் செய்பவனே, உலகம் எங்கும் இதை நிகழச்செய்த அளவற்ற தென்னவன் மதுரை எல்லாம் இந்த மயக்கத்தில் ஆழ்த்திய பெருந்துறையாய் அரிய பொருளே, அவினாசி அப்பா, பாண்டி வெள்ளமே தெரிந்துக் கொள்ள அரிய பரஞ்சோதீ நான் என்ன செய்வது என்று அறியமாட்டாமல் தவிக்கிறேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 6

 கோவே யருள வேண்டாவோ

கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னா விடில்என்னை
அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ
தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ
திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.
 
அரசனே அருள மாட்டாய் என்றால் கொடியவன் நான் கெட்டிட வாய்ப்பு அமைந்துவிடுமே, அறந்திட முடியா என்னை யார் கேள்வி கேட்டு அச்சமுறாதே என்பார்கள். மரணத்தை ஏற்பவர்கள் எல்லாம் என்னைப் போல் பாதுகாக்க அழைத்தாரோ, தேவனே தில்லையில் நடனம் ஆடுபவனே திகைப்புற்றேன் இனியாவது என்னை தேற்று.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 5

 தாயாய் முலையைத் தருவானே

தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன்
தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.
 
தாயாக முலையை தந்து பசி தீர்ப்பவனே, தாராமல் இருந்தால் தாயற்ற பிள்ளைப் போல் சவலையாய் நாய் போன்ற நான் இருக்க மாட்டாமல் கழிவேன், நம்பி இனிமையாக அருளினான் நற்கதியே, தாயே என்று உன் அடி பணிந்தேன். தாயாக நீ எனக்கு இல்லை என்றால் எப்படி? . நாய் போன்ற என்னை உன் அடிமையாக செய்துகொண்டாய், நான் தனித்து உன்னை வேண்டவேண்டுமா?
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 4

 கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்

கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான்
பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே
காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
நன்றோ எங்கள் நாயகமே. 
 
அழிந்துவிடுபவன் எப்படி அழிவானோ அப்படி அழிந்துவிடுகிறேன். கேடு இல்லாதவனே என்னால் பழி அடைந்தாய், துன்பத்தை ஏற்பேன் நான் துன்பப்படுவதான் பயன் என்ன, கொடிய நரகத்தில் வீழாமல் காத்து அருள் குரு மணியே, நடுநிலையில் நில்லாமல் போனால் நன்றோ எங்கள் நாயகமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 3

 சீல மின்றி நோன்பின்றிச்

செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே. 
 
நேர்மை இல்லாமல், நல்ல பழக்கம் இல்லாமல், சிறப்புடன் இல்லாமல், அறிவும் இல்லாமல், தோல் கொண்டு செய்த பொம்மைப்போல் சுற்றி வீழ்ந்து கிடப்பவனை அளவு காட்டி வழிகாட்டி அடையமுடிய உலக நெறி அடைய கோலம்காட்டி ஆள்பவனை கொடுமையான நான் கூடுவது என்றோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 2

 என்னால் அறியாப் பதம்தந்தாய்

யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடிய ரொடுங்கூடா
தென்னா யகமே பிற்பட்டிங்
கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே. 
 
என்னால் அறிய முடியும் படியான வாய்ப்பு தாந்தாய், நானோ அறியாமல் கெட்டேன் உன்னால் ஒரு குறையும் இல்லை, என்னை அடிமையாக்கிக் கொள் என்பேன், பலநாளாக உன்னை பணிந்து வணங்கும் பழைய அடியாருடன் கூடமாட்டாமல் கீழ்மைப்பட்டு இருந்தேன் நோய்க்கு விருந்தாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆனந்த மாலை | பாடல் எண் : 1

 மின்னே ரனைய பூங்கழல்க

ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே. 
 
மின்னல் போன்ற மலர் கழல்கள் அடைந்தவர்கள் வியப்புக்கு உரிய உலகை கடந்துவிட்டார்கள். பொன் போன்ற மலர் கொண்டு போற்றாது நின்ற அமரர் எல்லாம் கண் போன்ற மனதின் வழியாக கழிக்கப்பட்ட வலக்கடல் வீழ்த்த என்னை போன்றவர்கள் இனி உன்னை கூடும் வண்ணம் எடுத்து சொல்வயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 7

 சொல்லிய லாதெழு தூமணி யோசை

சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி
தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த
பராபர மாகாதே
பண்டறி யாதப ராநுப வங்கள்
பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று
விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள்
இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை
எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள
எழுந்தரு ளப்பெறிலே. 
 
வார்த்தைகளால் முடியாதபடி உன்னை தொழுது தூய மணி ஓசையின் சுவை தருதல் ஆகாதோ, திடமாக என் உள்ளம் நிறைந்த சோதி தொடர்ந்து ஒளிவீசல் செய்யாதோ, பலவித இயல்புடன் வந்து பரந்து கிடப்பது பாரபரமாய் ஆகாதோ, வில் ஒத்தபடி கூர்மையானவர்களின் ஆர்வம் போல் எனக்குள் ஆர்வம் வளராதோ, வானவரும் அறியாத விரும்ப தகுந்த பொருள் இந்த பொருள் ஆகாதோ, எல்லை இல்லாதவன் எட்டு குணம் ஆனவை அடைதல் ஆகாதோ, சூரியனாய் தலையில் நின்ற மணி எங்களை ஆள்வதற்கு எழுந்து அருளினால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 6

 பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு

பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து
பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து
வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம்
மிகுத்திடு மாகாதே
தன்னடி யார்அடி என்தலை மீது
தழைப்பன ஆகாதே
தானடி யோம்உட னேஉய வந்து
தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக
இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன்
எழுந்தரு ளப்பெறிலே. 
 
பொன் போல் இயல்புடைய உடலில் வெண்ணீறு பொலிவுடன் இருத்தல் ஆகாதோ, பூக்கள் மழைபோல் மாதவத்தவர் கைகள் குவிந்து பொழிந்திடுதல் ஆகாதோ, மின்னல் போன்ற நுட்பமான இடை உள்ளவர்களின் கருத்து வெளிப்படையாக புரிதல் ஆகாதோ, தன்னை தானே ஆளும் அடியார் என் தலை காணுதல் ஆகாதோ, தானும் அப்படியே என அடியார் என தலைப்படுதல் ஆகாதோ, இனிமையே எங்கும் நிறைந்து இனிதாக இருக்க இயம்புதல் ஆகாதோ, என்னை முன் ஆண்ட ஈசன் என் அத்தன் எழுந்து அருளப் பெற்றாலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 4

 என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன்

இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி
தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற
நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும்
நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற
வைகுவ தாகாதே
மாமறை யும்அறி யாமலர்ப் பாதம்
வணங்குது மாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை
எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன்
எழுந்தரு ளப்பெறிலே. 
 
எனக்கு அணியாக உள்ள மார்பகம் இன்பத்தை அடைந்து விடாதோ, அளவற்ற கருணைக் கடல் இனி என்னுள் அசைந்தாடுதோ, நல்ல மணியின் ஓசை முழுங்கி என் உள்ளே நாடுவது ஆகாதோ, ஓசையானவன் அணியான திருநீற்றினை என்றும் நாடுவது ஆகாதோ, கிடைத்த அன்பரில் என் பணி பெரிதாக மாறாதோ, வேதங்களும் உணரா மலர்பாதம் வணங்குவது ஆகாதோ, இனிமையான நீர் நீறைந்த செந்தாமரை மலர் என் தலையில் இருத்தல் ஆகாதோ, என்னை உடைமையாக பெற்ற பெருமான் அருள்தரும் ஈசன் எழுந்தருளினால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 3

 பந்த விகார குணங்கள் பறிந்து

மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த
பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள்
அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர்
அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை
சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி
திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர்
ஏகுவ தாகாதே
என்னுடை நாயக னாகிய ஈசன்
எதிர்ப்படு மாயிடிலே.
 
உறவுகளால் உண்டான குணங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு அழிந்திடாது போகுமோ, பாவனையால் வந்த கருத்து எல்லாம் அமுதாக மாறாதோ, முடிவற்ற அண்டம் நம்முள் அகப்பட்டு போகதோ, ஆதியின் முதல் பரஞ்சுடர் நெருங்கி இருப்பது நடக்காதோ, மீன் போன்று கண்கள் அவனது திருமேனி கண்டு களிப்பது செய்யாதோ, இந்திர ஞாலம் அருளும் இடம் விந்து உயர்வது ஆகாதோ, என்னுடைய நாயகனே ஈசனே நீ எதிர்பட்டு நின்றால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 2

 ஒன்றினொ டொன் றுமோரைந்தி னொடைந்தும்

உயிர்ப்பறு மாகாதே
உன்னடி யார்அடி யார்அடி யோமென
உய்ந்தன வாகாதே
கன்றை நினைந்தெழு தாயென வந்த
கணக்கது வாகாதே
காரண மாகு மனாதி குணங்கள்
கருத்துறு மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம்
நடந்தன ஆகாதே
நாமுமெ லாம்அடி யாருட னேசெல
நண்ணுது மாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு
தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன்
என்னுள் புகுந்திடிலே.
 
ஒன்றுடன் ஒன்றும், ஓர் ஐந்துடன் ஐந்தும் உயிர்பது நிகழ முடியாது. உன் அடியார் அடியார் நங்கள் என உயர்வாக எண்ணுவதும் முடியாது. தாய் பசுவைக் கன்று அழைக்க பசுவது பாசமுடன் வருவதும் முடியாது, காரணம் என்று ஆகும் அனாதி குணங்கள் கருத்துடையானவாக முடியாது, இது நல்லத் இது தீயது என வரும் நடுக்கமும் வர முடியாது, நாம் எல்லாரும் அடியார்களுடன் விரும்பி செல்லவதும் முடியாது, என்றும் அன்பால் மிகுந்து அமுத கிடைக்க முடியாது, விடை உள்ள என்னை ஆளும் நாயகன் என்னுள் புகுந்திடாது இருந்தால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையாட்சி | பாடல் எண் : 1

 கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு

களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு
கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு
மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல்
பயின்றிடு மாகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள்
பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து
வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து
வெளிப்படு மாயிடிலே.
 
கண்கள் இரண்டும் இறையின் திருவடியைக் கண்டு மகிழாதோ, கார்மேக கூந்தல் உடைவர்கள் வாழ்வில் என் வாழ்வு முடிவாக அமையாதோ, பூமியில் பிறப்பது முடிவாக மாறாதோ, திருமால் அறியாத மலர் பாதம் இரண்டும் வணங்கத் தகுந்ததாக மாறாதோ, பாண்டி என்ற நல்ல நாட்டை உரிமை கொண்டவன் படையையும் ஆட்சியையும் பாடுதால் நிகழாதோ, விண் மகிழும் வேதகம் வந்து வெளிப்படுதல் ஆகாதோ, மீனுக்கு வலை விசும் கானவன் போல் இறைவன் வந்து செயல்பட்டால்.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 7

 பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த

மாசின் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 
 
பேசும் பொருளுக்கு இலக்கை கடந்த இதமுடன் பேச்சில் சிறந்த மாசு இல்லாத மணியை மணி போல் பேசிப் பெருந்துறையே என்று பிறப்பை அறுத்தேன் நல்ல மருந்தானவன் அடியை என் மனதில் வைத்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 6

 காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்

பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 
 
பார்க்கும் கருவிகள் எல்லாம் பேரின்பம் தரும் என்று பாதுகாக்கும் அடியார்கள் தன் பிறப்பு அகல காணும் பெரியவனை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருப்பவனை வாயாரப் பேசு.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 5

 நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல

எண்ணி எழுகோ கழிக்கரசைப் பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 
 
பெருந்துறையை விருப்பமுடன் நாடியதால் நமது இடர்கள் அகன்றிட அதை நினைத்து எழுந்து கோகழி அரசனை இசை பொருந்தும் வார்த்தையுடன் உத்திரகேச மங்கையை விலகாத இருந்தவனைக் காண்போம். 
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 4

 வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்

தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 
 
சிறப்பாக வாழ்பவர்களும், முன் வினைகளை அழித்தவர்களும், உலகம் தாழ்ந்து வணங்கும்படி வாழ்பவர்களும் சூழ்ந்தபடி சென்று இறைஞ்சி வணங்கும் உயர்ந்தோர் பெருந்துறையை நன்றியுடன் வாழ்த்துபவர் நம்மவர்கள். 
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 3

 காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்

நாட்டிற் பரிபாகன் நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 
 
திசை அறியாத காட்டில் வேடனாகவும், கடலில் வலை வீசும் மீனவனாகவும், நாட்டில் குதிரை வீரனாகவும்  வந்து நமது வினையை அழித்து அருளும் பெருந்துறையான் அங்கத்தில் அழுக்கு படரும் பாதம் மருள் அகன்று ஒழிய நெஞ்சே வாழ்த்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 2

 உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்

வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு.
 
அழியாது இருக்கும் அழுக்கு மூன்றும் காணது போகும்படி உருப்படியான பெரிய அளவில் தேன்வெள்ளம் தந்து எண்ணக்குதிரையின் மேல் வந்த வள்ளல் மாறும் பெருந்துறையை வாழ்த்துங்கள். வாழ்த்தினால் மீண்டும் பிறப்பு தருத் கரு கெட்டு ஒழியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | பண்டாய நான்மறை | பாடல் எண் : 1

 பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்

கண்டாரு மில்லைக் கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 
 
பழைமை வாய்ந்த நான்கு மறை நூல்களும் பால் பற்றாத மாலும் கண்டு உணரவில்லை என்றாலும் இந்த கடைசி உயிரினமான தொண்டனை தனக்கு உரிமையாக்கி அருளும் சிறப்புகளை அழிக்கும் எங்கள் தலைவனுக்கு என் நெஞ்சமே கைமாறு செய்ய இயலுமா?
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 11

 இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றுந்

துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.
 
இன்பத்தை பல மடங்கு பெருக்கி இருளை அழித்து எந்த வழியிலும் துன்பம் தொடர்வதை அறுத்து வெளிச்சமாய் அன்பை எனக்குள் அமையச்செய்த வளமானவர்களின் பெருந்துறை ஆள்பவன், என்னுடைய சிந்தனையை வாழும் இருப்பிடமாக கொண்டான் விரும்பி.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 10

 இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்

திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 
 
எனக்குள் இருந்தபடியே என்னை ஆள்பவன் இணையடியை சிந்திந்து இருந்தபடியே இரு என் நெஞ்சே. எல்லாம் தரும் பெருந்துறையில் உலவ பெருங்கருணையாளன் மருந்தாக என் மனதில் வந்து அருளினான்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 9

 மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

தேவருங் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.
 
மூன்று மூர்த்திகளும் முப்பத்துமூன்று மற்றும் பிற தேவர்களும் காணாத சிவபெருமான் சிறப்பு பெற்ற வையகத்தே வந்து தங்கும் எல்லைகள் காட்டும் திருவடியை கவனிக்க மெய்யகத்தே இன்பம் வளரும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 8

 யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்

யாவர்க்குங் கீழாம் அடியேனை யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 
 
யாவருக்கும் மேலான அளவற்ற சீர் பொருந்தியவர் போற்றும் ஏகன் யாவருக்கும் கீழான என்னை யாவரும் பெற்று அறியாத இன்பத்தை எனக்கு வைத்தான் என் தலைவன் இதற்கு கைமாறு செய்யும் வகை அறியேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 7

 வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி

ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 
 
மீண்டும் வாராமல் இருக்க வழி அருளி, எனக்காக வந்து மாறுபாடு இல்லாமல் ஆரா அமுதமாக அமைந்ததே சிறப்பானவர்கள் திருத்தமாய் வாழும் பெருந்துறையான் என் சிந்தை நிரம்ப ஒன்றுகூட பெருக்கும் ஒளி.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 6

 பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்

மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 
 
போதை ஏற்றி பிறப்பை அறுத்து பேசுவதற்கு அரிதான நிம்மதியே நிலைக்கச் செய்யும் அத்தன் என் மனதில் பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருள் தந்து மருத்தை தேவையற்றதாக செய்து பேரின்பம் வரச்செய்தான்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 5

 அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற

மறையோனும் மாலும்மால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்நெஞ்சத் தின்று.
 
அறியச் செய்கிறேன் அறிவார்க்கு அனைத்து உலகமும் ஈன்ற மறை உணர்த்துபவனும் திருமாலும் அளவு கொள்ளும் இறையோன் பெருந்துறையில் வாழச்செய்த பெருமான் பிரியாத் திருந்துறையால் என் நெஞ்சத்தில் நிலைத்தான் இன்று.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 4

 முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 
 
முன்னம் செய்த இரு வினைகளை தீர்க்கமாய் அழித்து மீண்டும் பிறப்பு இல்லா நிலை தரும் அருளாளன் தென்னன் பெருந்துறையில் வாழ பெருங்கருணை அருளியவன் வருத் துயரத்தை தீர்க்கும் மருந்தானான்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 3

 செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே

உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 
 
என்ன தவறு செய்தேன் என்பதை அறியவில்லை, சேவை செய்யும் திருவடியை வணங்கி வெற்றிபெறும் வகையில் உயிர்ப்பறியேன், உலகின் திருந்துறையில் வேல் கொண்டு தடுத்து என் சிந்தனைக்கு இணங்கினான் பெருந்துறையில் ஆளும் தலைவன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 2

 ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ

பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து.
 
யாரை அழைப்பேன் எப்படி கதறுவேன் என்னவென்று ஆடுவேன் எப்படி பாடுவேன் எதைப் பார்ப்பேன் பரம்பரனே என்ன செய்வேன், எடை போட முடியாத ஆனந்த அளவேற்றும் அத்தன் பெருந்துறையான் திருவடி இது என்பார் யாரோ அவரை பணிந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவெண்பா | பாடல் எண் : 1

 வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்

பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 
 
வெய்யில் போல் காயும் வினைகள் இரண்டும் வெந்திடச் செய்ய உடலும் உருகி பொய்யும் பொடியாக மறுக்கிறதே என்ன செய்வேன். செய்வேன் திரு உடையவர் வாழும் பெருந்துறை ஆள்பவன் தேன் போன்ற செம்மையான தீ மாறாமல் மனதில் இருக்க.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையெழுச்சி | பாடல் எண் : 2

 தொண்டர்காள் தூசிசெல்லீர்

பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்டிறல் யோகிகளே
பேரணி உந்தீர்கள்
திண்டிறல் சித்தர்களே
கடைக்கூழை சென்மின்கள்
அண்டர்நா டாள்வோம்நாம்
அல்லற்படை வாராமே. 
 
தொண்டர்களே தூரமாக போகதீர்கள், பக்தர்களே கூட்டமாக சூழ்ந்திடாமல் இருங்கள், இறையுடன் ஒண்றிய யோகிகளே பேரணியை உடன்படுங்கள், திடமான சித்தர்களே இறுதிவரை கூட்டத்தை செல்லவிடுங்கள் வேற்று உலகத்தை ஆள்வோம் நமக்கு துன்பம் தரும் படை வராதபடி.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்படையெழுச்சி | பாடல் எண் : 1

 ஞானவாள் ஏந்தும்ஐயர்

நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர்
மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம்
அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம்
மாயப்படை வாராமே. 
 
ஞானம் என்ற மடமையை அறுக்கும் வாளை கைக்கொள்ளும் தலைவன் அடைந்த நாதப் பறையை அடையுங்கள், உயர்ந்ததில் உயர்ந்ததை அடையும் தலைவன் மதியாகிய வெண்குடையை புகழ்ந்து பாடுங்கள், உண்டாகும் நீற்றுக் கவசத்தை அடைய முற்படுங்கள், இதனால் வான ஊர் அடைவோம் மாயப் படை எம்மை தாக்காது.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 10

 புரள்வார் தொழுவார் புகழ்வாராய்

இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார்
மதிஉட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீ ராகில் இதுசெய்மின்
சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருள்ஆர் பெறுவார் அகலிடத்தே
அந்தோ அந்தோ அந்தோவே. 
 
பொய்யில் புரள்பவராகவும், தொழுபவராகவும், புகழ்பவராகவும் இன்றே உங்களை மாற்றவேண்டாம். மேலும், உங்களை மதிப்பவர்களால் மயக்கம் கொண்டு கலங்கம் அடையவேண்டாம். தெளிய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் சிவலோக நாதன் பாம்பை அணிந்தவன் அருளை யார் பெறுகிறார்களோ அவரிடத்தே சேருங்கள் அதுவே அதுவே அதுவாகும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 9

 சேரக் கருதிச் சிந்தனையைத்

திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்
பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே. 
 
இணைவதற்கே எண்ணமிட்டு சிந்தனையை திருத்திக் கொள்ளுங்கள். போரில் பளபளக்கும் வேல் போன்ற கண்ணை கொண்ட பெண்ணை பகுதியாக கொண்டவன் பாம்பை அணிந்தவன் அருளும் அமுதத்தை முழுமையாக பருகி திராத ஆர்வம் கொள்ளுங்கள். சிவனது திருவடியை விலகாது இருங்கள், பொய்யில் கிடந்து புரளுவதை தவிருங்கள். 
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 8

 பெருமான் பேரா னந்தத்துப்

பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே.
 
எம்பெருமானின் அருளால் பேரானந்தம் பெற்று அதில் நிலைக்கப் பெற்றவர்களே, பின்பும் நீங்கள் மயக்கம் அடைந்து அம்மா என்று அலர வேண்டாம். திரு உடைய மணியை சேர்ந்து சிவபுரத்து திருக்கதவு திறந்த போதே திருமால் அறியா பாம்பணிந்தவன் திருத்தாள் சென்று சேர்வோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 7

 நிற்பார் நிற்கநில் லாவுலகில்

நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே
நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற்
பெறுதற் கரியன் பெருமானே. 
 
இருக்க வேண்டியவர்கள் இருக்கட்டும். நிலையில்லா உலகில் இனியும் நாம் நிற்க வேண்டாம். பொன்னால் ஆன பால் போன்ற திருமேனியுடன் புலன்களை ஆள்பவன் பொன்னடிக்கே தன்னை ஒப்புகொடுத்து நீற்பீர், எந்தக் குறையும் இல்லாமல் இருக்கும் பரிசிற்கு உரிமையாக இருங்கள், பிறகு எப்பொழுதும் அடையமுடியாத அரியவன் நம் பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 5

 விடுமின் வெகுளி வேட்கைநோய்

மிகஓர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
டுடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
அணியார் கதவ தடையாமே
புடைபட் டுருகிப் போற்றுவோம்
புயங்கன் ஆள்வான் புகழ்களையே. 
 
விட்டொழியுங்கள் சினத்தையும் வேட்கை வியாதியையும், இப்படி ஓர் காலம் இனி இல்லை, நம்மை உடைமையாக்கியவன் திருவடிக்கு பெரிய கூட்டமாய் செல்ல ஒன்றுபடுங்கள். சிவபுரத்தை நாம் அடைவோம், அவனை அணிந்தவர்கள் கதவு அடைபடாதபடி பொங்கி எழுந்து போற்றுவோம். புலன்கள் ஆள்பவன் புகழ்களையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 4

 அடியார் ஆனீர் எல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து
கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே.
 
இறைக்கு அடிமையாக இருக்கும் அனைவரும் அளவற்று போக விடுங்கள் விளையாட்டை , சேர கடுமையாக இருக்கும் திருவடியை வந்தடைந்து இதுவே இறுதி என்ற குறிப்பை அறிந்திருங்கள், சிதையும் உடலினை சரியாக்கி சிவலோகத்தில் நம்மை வைப்பான், தூசுபடும் உடலில் பாம்மை அணிந்தவன் மலர் அடிக்கே அடைக்கலம் செய்வோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 3

 தாமே தமக்குச் சுற்றமும்

தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 
 
நாமே நமக்கு சொந்தமும், நாமே நமக்கு விதியையும் அமைத்துக் கொள்கிறோம். நாம் யார், நமது எது, பாசம் என்றால் என்ன, மறைவது எது என்ற இதுபோன்றவை களைந்து, மன்னன் ஆகிய இறையின் பழைய தொண்டர்களையும் அவர்களது குறிப்புகளையும் குறியாக கொண்டு பயணத்தை தொடருங்கள், பொய் நீக்கி நம் புலன்கள் ஆளும் ஏகனின் பொன் அடிக்கே பொருந்துங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 2

 புகவே வேண்டா புலன்களில்நீர்

புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத்
தளரா திருப்பார் தாந்தாமே. 
 
புலன்களில் மேல் அக்கரையுடன் இருக்க வேண்டாம், பாம்பணிந்த பெருமானின் நீர் வடியும் மலர் அடிகள் மிகவே நினையுங்கள், மற்றவை எல்லாம் மிகுந்தால் போக விடுங்கள், உலகார் நகைத்தாலும் நாய் போன்ற நம்மை ஆண்ட தகுதி உடையவன் தனைச் சார்ந்து தளாரமல் இருப்பவர்கள் தகுதி உடையவர்கள் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | யாத்திரை பத்து | பாடல் எண் : 1

 பூவார் சென்னி மன்னனெம்

புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.
 
மலரான சென்னி அணிந்த நம் மன்னன் பாம்பை உடைய பெருமான் சிறியவர்களாகிய நம் உணராத உள்ளத்திலும் கலந்து உணர்வாய் உருக்கும் வெள்ளம் போன்ற கருணையினால் அவனுக்கு ஆட்பட்டோம் என்பவர்கள் வந்து ஒன்றுபடுவோம். போகும் காலத்தில் பொய் விட்டு விலகி வீடுபெறு தரும் திருவடி புகுவோம்.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 6

 பாற்றிரு நீற்றெம் பரமனைப்

பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ்
சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந் தேத்திப்
புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை
ஆவஎன் றருளாயே.
 
பாலில் நிறைந்த நீராக இருக்கும் என் பரமனை, மேலான கருனையுடன் எதிர்கொண்டு கண்ட மெய் அடியார்களுக்கு கருத்துடன் உறை அளிக்கும் சோதியை, நெறி தவறும் நான் போற்றி அமுதே என நினைத்து ஏந்தி உயர்த்தி புகழ்ந்திட அறியேன். என் உள்ளத்திலும் இருந்து எனக்கு வழுகாட்டுபவனே என்னை தேறு என்று அருள் செய்.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 5

 காணும தொழிந்தேன் நின்திருப் பாதங்

கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. 
 
காணமல் விலகினேன், உன் திருப்பாதம் கண்டும் மகிழ்ந்து போற்றாமல் விலகினேன், உன்னைப் பற்றி பேசுவதிலும் விலகினேன், மேலும் என் பெருமானே தாணாகவே அழித்துக்கொண்டேன், உன்னை நினைந்து உருகும் தன்மையை அற்பத்தனமாக எண்ணி விலகினேன், நீ இனி வந்து காட்சி தந்தாலும் காண வெட்கப்படுவேனோ. 
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 4

 பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்

உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோஎன்
றெத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே. 
 
பக்தி இல்லாதவனாக இருந்தாலும் பணிவு இல்லாதவனாக இருந்தாலும் உன் உயர்ந்த பழைய கழல் காணும் ஆர்வம் இல்லாதவனாக இருந்தாலும் உன்னைப் பற்றியே பேசாதவனாக இருந்தாலும் என் பிறப்பை அறுத்துவிடு பெருமானே. முத்து போன்றவனே மணி போன்றவனே முதல்வனே முறையாகுமோ, என் அத்தனைக்கும் ஆதரமான உன்னை நான் இனி பிரிந்து இருக்க இயலாதவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 3

 என்பேஉருக நின்அருள் அளித்துன்

இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டு கொண்ட
முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே. 
 
திடமனமும் கனிந்து நின் அருள் பெற்றிட இணைமலர் திருவடி காட்டி முன்பே என்னை ஆட்கொண்ட முனிவனே. முனிவரின் முழு முதலே இன்பமே அருளி என்னை உருகிடச்செய்து உயிராகி நிலைக்கும் என் தலைவனே, நட்பை அருள் என்னுயிர் நாதனே நின் அருள் கூச்சமின்று கிடைக்கட்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 2

 உரியேன் அல்லேன் உனக்கடிமை

உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே. 
 
உனக்கு அடிமையாக இருக்க தகுதியுடையவன் இல்லை, உன்னை பிரிந்து ஒரு பொழுதும் இருந்து அறியேன், இனம் சேர்க்க நாய் போன்ற நான் எது எப்படி என்று அறியேன், சங்கரனே கருணையினால் பெரியவர் ஒருவர் கண்டுக்கொள் என்று பெய்கழல் திருவடி காட்டி பிரியாதே என அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | எண்ணப்பதிகம் | பாடல் எண் : 1

 பாருரு வாய பிறப்பற வேண்டும்

பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்கம லம்மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேஉன்
அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே.
 
உலகில் உருவம் தாங்காதபடி பிறப்பை அறுக்க வேண்டும், பக்தியும் பெறவேண்டும், சீரான உருவம் கொண்ட சிவ பெருமானே சிவந்த கமல மலர் போல் சிறந்த உருவம் பெற்ற ஆர அமுதே உன் அடியார்களின் கூட்டத்தின் நடுவே ஒரு உருவமாக வந்து நின் திருவருள் காட்டி என்னையும் வெற்றிபெற இணைத்து அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 10

 அங்கணன் எங்கள் அமரர் பெம்மான்

அடியார்க் கமுதன் அவனி வந்த
எங்கள் பிரான்இரும் பாசந் தீர
இகபர மாயதோர் இன்ப மெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தி னோடுஞ்
சதுரன் பெருந்துறை ஆளி அன்று
மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த
வகையறி வார்எம் பிரானா வாரே. 
 
உள்முக கண்கள் உடையவன் தேவர்களின் தலைவன், தொண்டர்களுக்கு அமுதானவன் உலகில் வந்த எங்கள் அரசன், இரண்டு விதமான பாசத்தை தீர்த்திடச் செய்து இங்கே மேல் உலகம் போல் இன்பத்தரும் கூட்டத்தை கவர்ந்தவன், வண்ணத்தை பூசிய நான்கானவன், பெருந்துறை ஆள்பவன், அன்று பெண்கள் நிறைந்த மதுரை சேர்ந்த வகை அறிந்துகொள்பவர் தலைவர் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 9

 தூவெள்ளை நீறணி எம்பெருமான்

சோதிமகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்த ஈசன்
தென்னன் பெருந்துறை ஆளி அன்று
காதல் பெருகக் கருணை காட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறி வார்எம் பிரானா வாரே.
 
தூய வெள்ளை நிறத்தை அணிந்த என் பெருமானே, சோதி மகா இந்திர நாதன் வந்து தேவர்கள் வணங்கும் வார்த்தையான ஈசனே, தென்னவனே, பெருந்துறை ஆள்பவனே, அன்று காதல் பெருக கருணைக்காட்டி தன்கழல்காட்டி மனம் நெகிழ குற்றம் அழித்து என்னை காத்து ஆண்டு அருளும் இருப்பை அறிபவர் எங்கள் தலைவர் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 8

 பூவலர் கொன்றைய மாலை மார்பன்

போருகிர் வன்புலி கொன்ற வீரன்
மாதுநல் லாளுமை மங்கை பங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்து றைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள் ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறி வார்எம் பிரானா வாரே. 
 
மலர்ந்த பூக்களை வெற்றி மாலையாக அணிந்த மார்பன், கூரிய நாகம் கொண்ட கொடிய புலியை கொன்ற வீரன், பெண்களில் நல்ல ஆளுமை கொண்ட பெண்ணை பாகமாக கொண்டவன், வணம் நிறைந்து எழில் பெருந்தும் பெருந்துறை மன்னன், நிகரற்ற பெரும் புகழ் கொண்ட எங்கள் ஈசன், அடர்ந்த கடலில் அமர்ந்தவற்கு தீயில் தோன்றும் வரைந்த பெண்கள் தோள் சாரும் உருவம் பற்றிய விவரம் அறிபவர் எங்கள் தலைவர் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 7

 நாதம் உடையதோர் நற்கமலப்

போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவி யேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்து றையெம்
புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல் லார்எம் பிரானா வாரே. 
 
நாதம் உடைய ஓர் நல்ல தாமாரைப் போன்ற அரும்பில் நாடி நன்மை அடைபவர் ஓதிப்பணிந்து விரிந்த மலர் தூவி பாராட்ட ஒளி வளரும் சோதியாம் எங்கள் ஈசன் நிலைக்கும் மொட்டும் மலரும் நிறைந்த சோலை பொருந்தும் பெருந்துறை எங்கள் புண்ணியன் மண்ணில் வந்து தோன்றி ஏற்றதாழ்வை கெடுத்து அருள் செய்யும் பெருமை அறியவல்லவர் எங்கள் தலைவர் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 6

 வேவத் திரிபுரம் செற்ற வில்லி

வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ
ஏவற்செ யல்செய்யுந் தேவர் முன்னே
எம்பெரு மான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கி யீசன்
எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொ டுத்த
கிடப்பறி வார்எம் பிரானா வாரே.
 
முப்புறமும் தீயில் அழித்த வில்லை உடையவன், வேட்டையடுபவனாய் வேறி பிடித்த நாய்கள் கூட்டி ஏவல் செய்யும் தேவர்கள் முன்னே எம்பெருமான் தன் காட்டுப்பாட்டில் உள்ள காட்டில் துன்பம் அடைந்த பன்றிக்கு இறக்கம் காட்டி ஈசன் என் தந்தை பெருந்துறை ஆதி அன்று அற்பத்திற்கு அற்பமாய் பால்கொடுத்ததை அறிபவர் என் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 5

 வந்திமை யோர்கள் வணங்கி யேத்த

மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும் எங்கள்
பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்
றோங்கு மதிலிலங் கைஅதனிற்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறி வார்எம் பிரானா வாரே. 
 
இமைக்காதவர் வந்து வணங்கி போற்றிடும் மாக்கருணைக் கடலாய் அடியவர்களின் பந்தப்பட்டவனை, எல்லையற்று அருளும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அன்று மறைக்கும் மாயத்திரையாகிய கடலை கடந்தான், அங்கு மதியாக நிற்கும் இலக்கை அடைந்து அதில் பந்தப்படும் மெல்விரலாளுக்கு அருளும் பரிசை அறிபவர் என் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 4

 வேடுரு வாகி மகேந்தி ரத்து

மிகுகுறை வானவர் வந்து தன்னைத்
தேட இருந்த சிவபெரு மாஅன்
சிந்தனை செய்தடி யோங்க ளுய்ய
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி
ஐயன் பெருந்துறை ஆதி அந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டு கொண்ட
இயல்பறி வார்எம் பிரானா வாரே. 
 
இன்பத்தை வேட்டையாட உருவம் கொண்டவன் மேலுலக தேவரும் தன் குறை தீர்க்க தன்னை தேடிட செய்த சிவபெருமான், அவனை சிந்திக்கும்படி செய்து அடியவர்கள் வெற்றி கொள்ள ஆடலுடன் எண்ணக் குதிரை ஏறி அமர்ந்த ஐயன், பெருந்துறை ஆதி அன்று யாவற்றையும் ஆண்டுக்கொண்ட இயல்பை அறிபவர் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 3

 அணிமுடி ஆதி அமரர் கோமான்

ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவ தேறிப்
பாரொடு விண்ணும் பரவி யேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்து றையெம்
பேரரு ளாளன்பெண் பாலு கந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
வகையறி வார்எம் பிரானா வாரே.
 
முடிவை அணிந்த முதல், தேவர் தலைவன், ஆனந்த கூத்தன், பல சமயங்களும் பணிந்து வணங்க வகை செய்திட மண்ணும் விண்ணும் போற்றி வாழ்த்த, பிணி அழித்து நலம் அருளும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண் பாலுக்கு உகந்து மணி என்ற வலை கொண்டு அனைத்திற்கும் ஆதாரமான மீனை விசிறிப் பிடிக்கும் வகை அறிபவர் எம் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 2

 மாலயன் வானவர் கோனும் வந்து

வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்
ஞாலமதனிடை வந்தி ழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாட நீடு
குலாவு மிடவை மடநல் லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறி வார்எம் பிரானா வாரே. 
 
திருமாலுடன் பிரம்மனும் வானவர் தலைவனும் வந்து வணங்கிட அவர்களுக்கு அருள் செய்த ஈசன் உலகத்தின் வாசலாக வந்து இறங்கி நல் ஒழுக்கத்தை காட்டி நலம் வளர்ந்த மணிமாடமுடன் நீண்டு உலவும் இடத்தில் குழந்தை குணம்கொண்ட பெண்களுக்கு மதிப்பு வளரும்படியான கருணை அளிக்கும் திறத்தை அறிபவர் எம் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவார்த்தை | பாடல் எண் : 1

 மாதிவர் பாகன் மறைப யின்ற

வாசகன் மாமலர் மேய சோதி
கோதில் பரங்கரு ணையடி யார்
குலாவுநீ திகுண மாக நல்கும்
போதலர் சோலைப் பெருந்து றையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்ந்
தாதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறி வார்எம் பிரானா வாரே.
 
பெண்களின் பகுதியானவன், வேதம் வகுத்த வாசகன், மாமலர் மேவும் சோதி, குற்றமற்ற பரத்தின் கருணையான தொண்டர் உலவும் நீதியை குணமாக அருளும் அரும்பு நிறைந்த சோலைப் பெருகி இருக்கும் துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து எழுந்தருளி பிரம்மம் வெளிப்படுத்தும் அருளை அறிபவர் தலைவன் ஆவாரே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 10

 முத்த னைமுதற் சோதியை முக்கண்

அப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோக னைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின் நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 
 
முடிவானவனை முதலாக நின்ற சோதியை மூன்று கண் உடைய அப்பனை விதையானவனை சித்தனை சிவலோகத்தில் இருப்பவனை அவனது பெயர் சொல்லி பாடித்திரியும் பத்தர்களே இங்கே வாருங்கள் நீங்கள் உங்களை பாசத்தோடு பணி செய்ய ஆட்படுவீர்கள் என்றால் சித்தமுடன் அளித்த சேவடிக்கண் நம் சென்னி மன்னி என திகழுமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 9

 வம்ப னாய்த்திரி வேனை வாவென்று

வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப்
புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளி மெய்யடி
யார்கட் கின்பந் தழைத்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 
 
வீணாக திரிபவனை வா என அழைத்து வலிமையான செயல்களும் பகையும் மாய்த்த தேவன் உலகுடன் உள்ள உறவை அறுத்து புறத்தவனாய் நின்ற என் தலைவன் அன்புள்ளவர்களுக்கு அருளி மெய் அடியார்களுக்கு இன்பம் வளர்த்திடும் செம்பொன் மாமலர் சேவடிக்கண் சென்னி மன்னி என திகழுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 8

 புழுவி னாற்பொதிந் திடுகு ரம்பையிற்

பொய்த னையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன் எம்பிரான்
என்னுடை யப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் தூய்மலர்க்
கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவிலாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 
 
சிறு உயிர்களால் நிரப்பபட்ட இந்த உடலில் பொய்யானவற்றை ஒழித்திடும் எழில் நிறை சோதி எம் ஈசன் எம் தலைவன் என்னுடைய அப்பன் என்று தொழுபவனாகி தூய மலர் போன்ற கண்கள் நீர் வடியும் தொண்டர்களுக்கு ஏமாற்றம் தராத சேவடிக் கண் நம் சென்னி மன்னி என மலருமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 7

 பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன்

பேர ருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்க
ளருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக் கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.
 
பிறவி என்ற இந்தக் கடலை நீந்திக் கடக்கவே தனது பேரருளை தந்து அருளினான், அறிந்தவர்கள் என்று கூறும்படி அடியார்களின் கூட்டத்தில் கலக்க செய்து உறவு பாராட்டி உயர்த்திய தலைவன் தன் உண்மை பெருக்கமாம் திறமை காட்டியபடி சேவடிக் கண் நம் சென்னி மன்னி என திகழுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 6

 சித்த மேபுகுந் தெம்மை யாட்கொண்டு

தீவி னைகெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்க ழற்கணே
பன்ம லர்கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவு லகுக்கும்
அப்பு றத்தெமை வைத்திடு
மத்தன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 
 
எண்ணமாகவே என்னில் புகுந்தபடி ஆட்கொண்டு  தீவினை அழித்து முழுமைக்கான பக்தி தந்து தன் பொன் திருவடியில் பல மலர் கொய்து சேர்த்ததும் முக்தி தந்து மூவுலகிற்கும் அப்புறமாக வைத்திடும் மாமலர் சேவடிக் கண் நம் சென்னி மன்னி என மலருமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 5

 மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி

மதித்தி டாவகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள்
திருப் பெருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூற ஊறநீ
கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.
 
மாயமாகும் இந்த வாழ்க்கையை நிலை என்று எண்ணி மதிப்பதை நிறுத்தும் வகை அருளினான், மூங்கில் போன்ற தோளுடைய மங்கையை பாகமாக கொண்ட எங்கள் திருப்பெருந்துறை மேவியவன். உடலின் உள்ளே அமுது ஊறச் செய்து என்னை கண்டுகொள் என்று காட்டிய குழந்தை போன்ற மாமலர் சேவடிக் கண் நம் சென்னி மன்னி எனத் திகழுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 4

 பத்தர் சூழப் பராபரன்

பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்த னாகிவந் தில்பு குந்தெமை
ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே.
 
பக்தியுள்ளவர்கள் சூழ்ந்து இருக்க பராபரன் இந்த உலகில் பார்பான் எனச் சித்தர்கள் சூழ்ந்திட சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான். ஏமாற்றுபவர் போல் என் இல்லம் வந்து புகுந்தான், எம்மை ஆளவும் பணிசெய்யவும் பணித்தான், கொடுத்த மாமலர் சேவடிக் கண் நம் சென்னி மன்னி மலர் எனலாகுமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 3

 நங்கை மீரெனை நோக்கு மின்நங்கள்

நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங் கொண்டெம்
உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிப் பொலியுமே.
 
நாட்டமுள்ள பெண்களே எம்மை பாருங்கள் நம் தலைவன் நமது செயல்களை ஏற்பவன், தென்னை தோப்புகள் சூழ்ந்த பெருந்துறை வலம் வரும் காவலன் நாயகன், பெண்கள் தம் கையில் வளையள் அணிந்தோம், உயிர் எனக் கொண்ட எம்மை ஏவல் செய்வான், பொங்கும் மாமலர் சேவடி கண் நம் சென்னி மன்னி நிலைபெற்று இருக்குமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 2

 அட்ட மூர்த்தி அழகன் இன்னமு

தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன்
தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர்
பாகம் வைத்த அழகன்றன்
வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.
 
எட்டு திசை தலைவன் இனிமையான அமுது போன்ற ஆனந்த வெள்ளமானவன், மேலானவன் உண்மையான உடலுக்கு நாயகன், தெரியும் பெரிய துறைக்கு காவலன், வாசனையான கூத்தல் உடைய மங்கையை ஒரு பாகமாக கொண்ட அழகன், வட்டமான மாமலர் சேவடிக் கண் நம் சென்னி  மன்னி மலர் எனப்படுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | சென்னிப் பத்து | பாடல் எண் : 1

 தேவ தேவன்மெய்ச் சேவகன்

தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அரியொ ணாமுத
லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிச் சுடருமே. 
 
தேவாதி தேவன் உண்மைக் காவலன் தெரியும் பெருந்துறைக்கு நாயகன் மும்மூர்த்திகளாலும் அறியமுடியாத முதலான ஆனந்த மூர்த்தியானவன், யாராக இருந்தாலும் அன்பு இல்லாதவர்கள் அறியமுடியாத மலர் போன்ற சோதியான், தூய மாமலர் சேவடிக் கண் சென்னி மன்னி சுடர் எனப்படுமாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 10

 செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது

செறிகுழ லார்செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும்
உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன்
இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.
 
வளரும் இந்த பிறப்பு இறப்பு பற்றி நினைக்காமல் வளர்ந்த கூந்தல் உடையவர் செய்யும் செயல்களையும் மீன் போன்ற கண்களையும் கண்டு களித்து இருப்பவனை இறைவன் என் தலைவன் எல்லைகள் இல்லாதவன் இணை மலர் கழல்காட்டி அறிவு தந்து என்னை ஆண்டு அருளிய அற்புதத்தை அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 9

 பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்

புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங்
கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி அயனுமெட் டாததன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.
 
மறைந்த போகும் இந்தப்பிறவியில் இருந்து நான் புழு பிடித்த நாய்போல் ஆசை கொண்ட ஏழைகளுக்கே செய்ய இணங்கியபடி திரிபவனை இந்தருணமே அரிக்கும் அயனுக்கும் எட்டாத இணை மலர் கழல்காட்டி அப்பன் என்னையும் ஆண்டு ஆட்கொண்டு அருளிய அற்புதம் அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 8

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின

இருவினை அறுத்தென்னை

ஓசை யாலுணர் வார்க்குணர் வரியவன்

உணர்வுதந் தொளியாக்கிப்

பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்

பரம்பெருங் கருணையால்

ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய

அற்புதம் அறியேனே. 

 

அங்கும் இங்கும் அலையும் ஊசல் போல் ஆடும் உடலும் உயிரும் இரு வினைகளும் அறுபடச் செய்து என்னை ஓசையினால் உணர்பவருக்கும் உணர கடினமானவன் உணர்வை தந்து ஒளியாக்கி பாசத்தால் வந்த பற்றை அறுத்து உயர்வு செய்த பரம் பொருள் பெருங்கருணையால் ஆசை தீர்ந்தபடி இருக்கும் அடியார்கள் கூட்டத்தில் கூட்டிய அற்புதம் அறியவில்லையே.

#திருவாசகம்

 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 7

 இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்

இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான்
தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 
 
இந்த பிறப்பில் நான் இணையான மலரை பற்றி இயல்புடன் ஐந்து எழுத்தை ஓதி குற்றம் ஒன்றுத் செய்யாதபடி திருவடியில் நில்லாமல் குறிப்பிடும்படி மார்பகம் கொண்ட மங்கையில் மையிட்ட கண்களுக்கு மயங்கி இருந்தவன் என்னை மலரடி இணை காட்டி அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதத்தை அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 6

 வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது

மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான்
பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல்
கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 
 
மதிப்பிற்குரிய இந்த பிறப்பு இறப்பை நினைக்காமல் இளம்பெண்ணின் இதழ் வெள்ளத்தில் மூழ்கியபடி பைத்தியமாய் திரிந்தவனை குணமும் குறியும் இல்லாத குணக்கடல் அழகுடன் இணைந்தபடி வந்து என்னை ஆட்கொண்டு அருளிய அற்புதத்தை அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 5

 மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்

மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்
அற்புதம் அறியேனே.
 
செல்வமும் சொந்தமும் மற்றும் பல படைப்பும் இளம் பெண்கள் என்றும் கூடி அதன் பொருட்டு பெருமையுடன் உலவித் திரிபவனை சரியான இடத்தை காட்டி என் வீணான வேலைகள் விலகிட மென்மையான கழல்கள் காட்டி ஆட்டுவித்து என் அகம் புகுந்து ஆண்ட ஓர் அற்புதத்தை அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 4

 பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது

பொய்களே புகன்றுபோய்க்
கருங்கு ழல்லினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத்
திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 
 
தனக்கு பொருத்தமானதாக அமையும் இந்த பிறப்பு இறப்பை நினைக்காமல் பொய்களையே பேசி கருமை நிற கூந்தல் கொண்ட பெண்களின் கண்களுக்கே அடிமைப்பட்டு கலக்கமுடன் இருப்பவனை திருந்தும் சேவடி சிலம்பினை ஒலியச் செய்து மதிப்புடன் தன்னைவிட்டு அகலாமல் ஆண்டு அருளும் அற்புதம் அறியவில்லையே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 3

 நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து

நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே. 
 
நடித்தபடி இந்த உலகில் பொய் பல சொல்லி நான் என்றும் எனது என்றும் காயம்பட்ட இடத்திலேயே மீண்டும் முன் வினை என்ற காயம்பட புலம்பும் ஒருவனாக திரியும் என்னை பற்றி இழுத்து பெருமறையில் முன் நின்ற அரும்பொருள் அடித்து திருத்தி சரியாக மாற்றிய அற்புதத்தை பேசி முடியாதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 2

 ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர்

இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந்
தலைதடு மாறாகிப்
போந்தி யான்துயர் புகாவணம் அருள்செய்து
பொற்கழ லிணைகாட்டி
வேந்த னாய்வெளி யேஎன்முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 
 
அழகிய மாமலரை சூட்டி முட்டாத இயல்பும் வணங்காதபடியும் குளிர்ச்சியுடனும் இருக்கும் மார்புடைய நல்ல பெண்ணுடன் நிலை தடுமாறி துயரத்தில் அழுந்தாதபடி அருள் செய்து பொன் அடியைக் காட்டி அரசனாய் வெளிப்படுத்தி நின்ற ஓர் அற்புதமே உன்னை பேசி முடியாதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அற்புதப் பத்து | பாடல் எண் : 1

 மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்

ஆழியுள் அகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 
 
மயக்கத்துடன் இந்த பூ உலக வாழ்க்கை என்ற கடலில் அகப்பட்டு பெண்கள் என்ற ஆற்று ஓடையில் கலக்கப்பட்டு தலை மூழ்கி தடுமாறாமல் பொய் எல்லாம் விட்டு ஒழிய திருவருள் தந்து பொன் அடியைக்காட்டி மெய்யானவனாய் என்னை வெளிப்படுத்தி நின்ற ஓர் அற்புதமே உன்னை பேசி முடியாதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 10

 கொம்மை வரிமுலைக்

கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால்
திருப்பணிகள் செய்வேனுக்
கிம்மை தரும்பயன்
இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
மெலிந்த உடலில் வரைந்த மார்பகத்தை கொண்ட கொம்பு போன்றவனை பாகமாக கொண்டவனுக்கு செழுமையாக மனதால் திருப்பணிகள் செய்வோர்க்கு துன்பம் தரும் செயல் அழித்து ஒழிக்கும் அம்மை குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 9

 பாழ்ச்செய் விளாவிப்

பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற்
கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச்
சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
 
வீணாக்கும் ஒன்றை விரும்பி பயன் இன்றி தவிப்பவர்க்கு இதற்கு முன் செய்த தவத்தால் மறைத்த பொருள் எதிர்பட்டது போல் தாமரை இதழ் சைவன் ஆனவனுக்கு தற்பெருமை அடையும் தலையில் ஆட்சி செய்யும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 8

 இடக்குங் கருமுருட்

டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி
என்தலைமேல் நட்டமையாற்
கடக்குந் திறல்ஐவர்
கண்டகர்தம் வல்லரட்டை
அடக்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
பள்ளம் பறிக்கும் கருத்த பன்றி காட்டில் நடக்க துணையாகும் திருவடி என் தலைமேல் நட்டதினால் எதையும் கடக்க உதவும் புலால் ஐந்தின் வல்லமையான அரட்டையை அடக்கும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 7

 மதிக்குந் திறலுடைய

வல்அரக்கன் தோள்நெரிய
மிதிக்குந் திருவடி
என்தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம்
ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
பாராட்டும் திறன் பெற்ற வலிமையான அரக்கன் தோள் நொறுங்கிட மிதிக்கக் கூடிய திருவடி என் தலைமேல் வீற்றிருக்க சுவாசத்தை சீரழிக்கும் பசு பாசம் ஒன்றும் இல்லாதபடி செய்து மகிழ்ச்சியை அளிக்கும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 6

 கொம்பில் அரும்பாய்க்

குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம்
மாண்டிங்ஙன் போகாமே
நம்புமென் சிந்தை
நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
 
கொம்பில் சிறு அரும்பாய் இருந்து மலர்ந்து பூத்து காயாகி வளர்ந்து பழுத்திடும் உடலாய் இங்கு மாண்டு போகாமல், சிந்தை விரும்பி ஏற்கும் வண்ணம் நான் அணுகும் அருமையான பொன் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 5

 பேருங் குணமும்

பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத்
தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
சிறந்த குணமும் நோயாக மாறும் பிறவியையும் வினைகளால் கிடைக்கும் பரிசையும் அழித்து தொண்டர்கள் எல்லாரும் சேரும் வகையில் சிவன் கருணைத் தேன் அருந்தி தேறும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 4

 குறியும் நெறியுங்

குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிறியும் மனத்தார்
பிறிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில்
உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
இலக்கும் நேர்மையும் குணமும் இல்லாதவர்கள் கூட்டங்களாக கூடி தன்னை பிரிவினைக்கு உட்படுத்தும் மனத்துடன் இருப்பார்கள். பிறிவு என்று ஒன்று இல்லாத அடையப்பட்டவனை செழுமையான கருத்துடன் உருக்கமாய் நிலைக்கும் சிவபதத்தை அறியும் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 3

 என்புள் ளுருக்கி

இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து
துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை
முழுதழிய உள்புகுந்த
அன்பன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
எலும்பும் உருகிட இருவினையும் அழித்து துன்பம் களைந்து விருப்பமுடன் விருப்பத்தை தூய்மை செய்து பழயனவற்றை முற்றிலும் அழித்து உள்ளம் புகுந்த அன்பன் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 2

 துடியேர் இடுகிடைத்

தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள்
எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன்
எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
உடுக்கை போல் இடையும், மயக்கும் மொழியும் கொண்டு அழகிய தோள் உடையவர் மேல் உள்ள பற்றால் வளரும் தீமைகள் எத்தனை செய்தாலும் இறக்கமாட்டேன் இனி பிறக்கவும் மாட்டேன். என்னை தனக்கானவனாய் கூட்டி அடிமை எந்தன் குலத்தை ஆள்பவனை உரிமையாக கொண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குலாப் பத்து | பாடல் எண் : 1

 ஓடுங் கவந்தியுமே

உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ்
சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிருங்
குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 
 
பிச்சை ஓடும் ஒற்றை ஆடையும் உறவாகக் கொண்டு உள்ளம் கசிந்து தேடும் பொருள் சிவன் திருவடி எனத் தெளிந்து கூடி நின்ற உயிருடன் நிறைவாய் கூடி அடிமை நான் ஆடிக் களிக்கவில்லை ஆண்டவனை அறிந்து கண்டுக் கொண்டேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்புலம்பல் | பாடல் எண் : 3

 உற்றாரை யான்வேண்டேன்

ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே. 
 
உறவாக அமைந்தவர்களை நான் விரும்பி வேண்டுவதில்லை, ஊரை விரும்பி வேண்டுவது இல்லை, பெயரையும் விரும்பி வேண்டுவது இல்லை, கற்றவரையும் நான் விரும்பி வேண்டுவது இல்லை, கற்க வேண்டயதும் இனிமையானதும் சிறிய ஆற்றில் உறையும் கூத்தானே உன் குரை கழற்கே கற்று அறிந்தவர் மனம் போலக் கசிந்து உருக மட்டும் வேண்டுவேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்புலம்பல் | பாடல் எண் : 2

 சடையானே தழலாடீ

தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதி
பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ்
பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா
துறுதுணைமற் றறியேனே.
 
முடி கொண்டவனே, ஓய்வு பெற்று தயக்கத்தை கடந்து கூர்மையான படையானவனே, பரஞ்சோதி, பசுபதி பாசம் அழிக்கும் வெளிப்படையான விடையாக இருப்பவனே, விரியும் பொழில் சூழ்ந்த பெருந்துறையில் இருப்பவனே, அடிமையான என்னை உரிமையாக கொண்டவனே, உன்னை இல்லாமல் வேறு துணை மாற்றிட அறியேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 10

 நானேயோ தவஞ்செய்தேன்

சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே. 
 
நானாகவா தவம் செய்தேன், சிவாயநம எனப்பெற்றேன், தேனாக இனிமையான அமுதாக தித்திக்கும் சிவபெருமான் தானாகவே என் உள்ளம் புகுந்து அடிமை எனக்கு அருள் செய்தான், உடலில் ஊரும் உயிர் வாழ்க்கை உணர்ந்து உலக பற்றை வெறுத்திடவே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 9

 மருவினிய மலர்ப்பாதம்

மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச்
சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத்
தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே
இடங்கொண்ட அம்மானே. 
 
இனிமையாக மாறும் மலர் போன்ற பாதத்தை மனதில் வளர்த்து உருகி தெளிந்து தேறி, மிகுந்த சப்தமுடன் சிவபெருமானே என்று வாழ்த்த உன் பெரிய கருணையை பருகினேன், தடங்கள் இன்றி உன் அன்புக் கடலில் படிந்து அருளால் இணங்கிட இடம் தந்த அம்மானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 8

 மூத்தானே மூவாத

முதலானே முடிவில்லா
ஓத்தானே பொருளானே
உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப்
புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா
றன்றேஎம் பெருமானே. 
 
முழுமையானவனே, முற்றுபெறாத முதலானவனே, முடிவற்ற தனித்துவமானவனே, ஆதாரமானவனே, உள்ளதாய் மறுப்பதாய் பூத்தவனே, கெட்டு அழியும் என் உள்ளம் புகுந்து கருணையினால் பாதுகாத்தாய் ஆண்டவா அன்றே எம்பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 7

 என்பாலைப் பிறப்பறுத்திங்

கிமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந்
துறையுறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே
புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா
றன்றேஎம் பெருமானே. 
 
என் பொருட்டு எனது பிறப்பை அறுத்து கண்கள் இமைக்காதவரும் அறியமுடியா தென்னகத்தே திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே அன்பால் என் அகம் நெகிழ்திட புகுந்து அருளி ஆட்கொண்ட என்மீது பார்வை அன்றே சொலுத்தியவனே எம்பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 6

 பஞ்சாய அடிமடவார்

கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர
நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன்எம் பெருமானே
உடையானே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா
றன்றேஅம் பலத்தமுதே. 
 
மங்கையரின் கடைக்கண்ணால் பஞ்சு போல் அடிபட்டு இடர்பட்டு நஞ்சுண்ட துயர் கொண்டு நடுங்குகிறேன். உன் அருளால் பிழைத்தேன் பெருமானே, என்னை உடமையாக்கியவனே, அடிமையாகிய என்னை அஞ்சாதே என்று ஆள்பவனே அம்பலத்து அமுதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 5

 கற்றறியேன் கலைஞானம்

கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம்
வாக்கியலால் வார்கழல்வந்
துற்றிறுமாந் திருந்தேன்எம்
பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா
றன்றேநின் பொன்னருளே. 
 
கலையும் ஞானமும் கற்று அறியவில்லை, கசிந்து உருகவும் அறியவில்லை என்றாலும் மாறுபட்டு பிற தெய்வத்தை பேச்சிக்கு கூட ஏற்றதில்லை என பெருமையோடு இருந்தேன் பெருமானே. உன் அடிமையான எங்களுக்கு நாய்க்கு பொன்னால் ஆன ஆசனம் போன்றது நின் அருளே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 4

 பச்சைத்தால் அரவாட்டீ

படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே
அடியேனை உய்யக்கொண்
டெச்சத்தார் சிறுதெய்வம்
ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா
றன்றே உன் திறம்நினைந்தே. 
 
வளப்படவே பாம்பை வளர்த்து வணங்கமுடி கொண்டவனாய் உள்ளவனின் பாதமலரை உச்சத்தில் வைத்திருப்பவர் பெருமானே, அடிமை என்னை தன்வசம் செய்து அச்சத்தால் சிறு தெய்வத்தை போற்றதபடி காத்தவனே. உன் திறம் நினைத்தே உருகினேன்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 3

 ஆதமிலி யான்பிறப்

பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே
அழுந்துவேற் காவாஎன்
றோதமலி நஞ்சுண்ட
உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா
றன்றேஎம் பரம்பரனே. 
 
ஆதரமாக எதையும் உடையாக்கிக் கொள்ளாதவன், பிறப்பு இறப்பு என்ற தனித்துவமான நரகத்திற்குள் அமர்வது இல்லாமல், அப்படி அதில் மூழ்குபவர்களுக்கு காவலாக நின்ற விடத்தை உண்டு நிற்பவனே, அடிமை எங்களுக்கு பாதமலரை காட்டியவா என்பேன் எம் பரம்பரனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 2

 பண்ணார்ந்த மொழிமங்கை

பங்காநின் ஆளானார்க்
குண்ணார்ந்த ஆரமுதே
உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்
டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா
றன்றேஉன் கழல்கண்டே. 
 
பண்பட்ட வார்த்தை சொல்லும் பெண்ணை பாகமாக கொண்ட உனக்கு பணிந்தவருக்கு உள்ளார்ந்த ஆர அமுதே, எல்லாம் உடையவனே அடிமை என்னை புவியில் பிறக்கும் பிறப்பை அறுத்து அருள்வயாக. உன்னையே வா என கண்கள் தீர்க்கமாய் காண உயர்ந்தவர் உன் திருவடி கண்டே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருவேசறவு | பாடல் எண் : 1

 இரும்புதரு மனத்தேனை

ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக்
காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை
உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா
றன்றேஉன் பேரருளே.
 
இரும்பு போல் கடினமான மனம் உடைய என்னை உன்வசம் ஈர்த்து எலும்பும் உருகும்படி செய்து கரும்பு தரும் சுவைபோல் எனக்கு உன்னை காட்டினாய், விலகும் திரையுடன் உலவும் சடைகொண்டவனே நரிகளை நல்லகுதிரையாக மற்றியது போல் உள்ளது உன் பேரருளே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 10

 புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்

பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
பழுதடையும் புலன்கள் கொண்ட உடல் எங்கெங்கும் இன்பம் சுரக்க தங்கத்தால் செய்த கோயில்போல் புகுந்தான். எலுப்பும் உருக எளிமையாக ஆண்ட ஈசனே அழுக்கு இல்லாத மாமணியே, துன்பம், பிறப்பு ,இறப்பு, மயக்கம் என்ற அனைத்தையும் அறுத்த நல்ல சோதியே, இன்பமே உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 9

 பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்

பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
 
பாலை மறக்காமல் நினைவுடன் ஊட்டும் தாயைவிட பரிவுடன் நீ எனக்கு ஊனினை உருக்கி உள்ளே ஒளியை பெருக்கி குறையாத ஆனந்தம் என்ற தேனை பொழிந்திடும் வெளி எங்கும் நிறைந்த செல்வமே சிவபெருமானே, நான் உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 8

 அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற

ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
பெற்றவனே பெரிய அண்டத்து அண்டமாய் நின்ற முதலே, எப்படியும் முடிவை அடையாத சித்தனே, பக்தர்கள் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே, பித்தனே எல்லா உயிர்களாய் உருவாகி வாழ்ந்து முடியும் நிலையாய் நிற்கும் ஏமாற்றுக்காரனே, உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 7

 பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்

பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
பாசத்தின் வேர் அறுக்கும் பழைமையான பொருளை பற்ற இந்த அடிமைக்கு அருளி, என் பூசனை ஏற்று என் சிந்தையுள் புகுந்து, மலர் பாதம் காட்டிய பொருளே, வளமையான விளக்கே செழுமையான சுடரின் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே, ஈசனே உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 6

 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்

டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
 
கொடிய கருவியான என் மனமே கோயிலாக் கொண்டான், அளவற்ற ஆனந்தம் அருளினான், பிறவி வேர் அறுத்தான், என் முழு குடியையும் ஆண்டான். முதலும் முடிவமான என் பொருளே, திறந்த இடத்தில் கண்ட காட்சியே அடிமை என் செல்வமே சிவபெருமானே, முடிவிலே உன்னை உறுதியாய் பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 5

 ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்

உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
 
ஒப்பிட்டுப் பார்க்க நிகர் இல்லாத ஒருவனே, அடிமை என் உள்ளத்தில் ஒளிரும் ஒளியே, உண்மைப் பொருள் அறியாத நடனமாதருக்கும் விரும்பியதை அருளும் தனித்துவமான அன்பே, சொல்லமுடியாத அரிய செழுமையான சுடரே, செயல்களின் செல்வமே சிவபெருமானே, எங்கு கிடைப்பாயோ அங்கே உன்னை இருக பற்றினேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 4

 அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே

பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
அருளை உடைமையாக கொண்ட வெளிச்சமே, தனித்திறம் படைத்த கனியே, அதிகமாய் அருந்தவம் செய்யும் கூட்டத்தின் மன்னனே, பொருளை உடைமையாக கொண்ட கலையே, புகழுக்கு அப்பாற்பட்ட போகமே, யோகத்தின்  புதிய வெளிப்பாடே, தெளிந்த அடியார்களின் சிந்தையில் புகுந்த செல்வமே, சிவபொருமானே, இருள் நிறைந்த இடத்தில் இருந்தபடியே உன்னே இருக பிடித்தேன், எங்கே எழுந்து அருள்வாய் இனியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 3

 அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
 
தாயே தகப்பனே நிகர் இல்லா மணியே, அன்பில் விளைந்த ஆர அமுதே, பொய்களை வளர்த்து குப்பைகளை சுமந்து காலத்தை குறைத்துக்கொண்ட புழுவாய் நெளியும் கிழான எனக்கு செம்மையே நிறைய சிவபதம் கொடுத்த செல்வமே, சிவபெருமானே, இப்பொழுதே உம்மை சிக்கெனப் பிடித்தேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 2

 விடைவிடா துகந்த விண்ணவர் கோவே

வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
பதிலை மறுக்காமல் வாழ்வளிக்கும் விண்ணகத்து மன்னவனே. செயல்பட காரணமான மெய்பொருளே. முடக்கம் அடையாமல் அடிமையாகிய என்னை முழுமை அடையச் செய்வாய். புழு இருக்கும் இந்த உடலில் அடைந்துவிடாதபடி காத்து என்னை ஆண்ட கடவுளே கருணைக் கடலே இடைவிடாமல் உன்னை சிக்கெனப் பிடிந்தேன் எங்கே எழுந்து அருள்வாய் இனியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | பிடித்த பத்து | பாடல் எண் : 1

 உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த

யோகமே ஊற்றையேன் றனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 
 
தெய்வீகமானவர்களின் தலைவனே, நீக்கமற நிறைந்த யோகமே. அழுகும் உடல் கொண்ட எனக்கு திடமுடன் என் குடி முழுவதும் ஆண்டு வாழ்வின் உசசம் அளித்த மருந்தே. செம்பொருளான துணிவே, சீர் பொருந்திய திருவடியே, செல்வமே சிவபெருமானே என்னை வளப்படுத்திட உன்னை சிக்கெனப் பிடித்தேன். எங்கே எழுந்து அருள்வாய் இனியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 10

 கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென்

றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும்ஓர்
மீனவன்பால்
ஏற்றுவந் தாருயிர் உண்ட திறல்ஒற்றைச்
சேவகனே
தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச்
சேர்மின்களே.
 
இயமனை வென்று ஐந்து புலன்களையும் வென்று இருந்தார் திருவடி அழகால் விற்றிருந்தான். பெருந்தேவியும் தானும் ஓர் மீனவன் மேல் அன்பு கொண்டு வந்த ஆருயிரை திறத்தின் ஒன்றே என்றே சேவகனே. அடுத்தவர் அங்கிகரிக்க இயாலதவர் சேவடியை சிக்கெனச் சேர்ந்துக்கொள்ளுங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 9

 விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந்

நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக் கும்பரம்
பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட
பூங்கொடியார்
மரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாம்அறி
யார்மறந்தே.
 
படிந்த தீய செயல்கள் மேலும் பிறவிக் கடல் தள்ள அதைக் கடக்க முயலும் அன்பரை எலும்பும் உருகும் அன்பு கொண்டு வெளிப்பட்ட பாண்டியனார் மனக் குதிரையின் மேல் வர புத்தி தடுமாறிய பூங்கொடியார் மரமாக மாறி நின்றார் தம்மையும் தான் யார் என அறியாமல் மறந்தே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 8

 அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத்

திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய
வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப்
பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று
முந்துமினே.
 
அழிவற்று நிலைத்த ஆனந்த வெள்ளத்தில் திளைக்கச் செய்து, கழியாத கருணையைக் காட்டி கடினமான வினைகளை அகற்றி பழமையான அழுக்கை பற்றாதபடி அழித்து ஆண்டவன் பாண்டியன் பெரும்பதமே முழு உலகிற்கும் தருவான் கொடையை சென்று முதன்மையாக மாறுங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 7

 மாயவ னப்பரி மேல்கொண்டு மற்றவர்

கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள்
புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு
ளேஅருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி
சேர்மின்களே.
 
மாயமான காட்டுக்குதிரை மேல் வந்து மற்றவர் நம்மை கைப்படுத்தினாலும், ஒழியா இந்த பிறப்பு என்ற பகைகள் புகுந்து வந்தாலும், உடலில் அருள்பெரும் சீரான திருவடி தன் அருளை அருளும். வளர்க்கும் அளவற்ற கொடை தரும் தென்னவன் சேவடி சேர்ந்து வெற்றியடையுங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 6

 ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு

ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல
வல்லன்அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல்
விரும்புமின்தாள்
பாண்டிய னார்அருள் செய்கின்ற முத்திப்
பரிசிதுவே. 
 
உருவான மாயா என்ற இருள் கெட்டு ஒழிய எல்லா உண்மைப் பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீன் கொடி கொண்டவன் சொல்ல வல்லமைக் கொண்டவன் இல்லை. வேண்டிய பொழுதே தள்ளி வைக்காமல் விருப்பமாக வாய்த்த திருவடி பாண்டியனார் அருள் செய்கின்ற முத்திக்கு பரிசு இதுவே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 5

 காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின்

கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர்
நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன்
அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து
முந்துமினே. 
 
சாதகமான காலம் உண்டாக அறிவதற்கு அரியவனை காதல் செய்து வெற்றி பெறுங்கள். உலகை உரிமையாக்கிக் கொண்டவனுடன் நான்முகனும் வானவரும் நாடிட அரிய ஆலம் உண்டவன் எங்கள் பாண்டிப்பிரான். அவன் தன் அடியவர்களுக்கு அடிப்படையான ஆதாரப் பொருளை வழுங்குகிறான் வந்து முந்தி பெற்றுக்கொள்ளுங்கள்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 4

 செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்

தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலம்இக் காலம்எக்
காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த
மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள
இருநிலத்தே. 
 
வளரும் பிறவிக்கு நல்லவர்களே செல்லாதீர்கள். தென்னவன் நல்லா நாட்டிற்கு இறைவன் வளம் தரும் காலம் இந்தக்காலம். எக்காலத்திலும் அறிவு என்ற கதிர்ஒளி போன்ற வாளால் பிறவி தரும் மரத்தை வெட்டி வீழ்த்தலாம். விசப்படும் பிறப்பை எதிர்த்து புரட்டலாம் இருநிலத்தே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 3

 நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற

நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட
பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை
உள்ளங்கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று
பேணுமினே. 
 
நிலையற்று போகும் நீர் போன்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் உடையவர்களே. நிலையான இன்பத்தை வெள்ளமாக கொண்ட மனம் என்ற குதிரை மேல் வரும் பாண்டியனார் ஒன்றும் வெள்ளத்தின் உருவாக கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார். பேரின்ப வெள்ளத்தில் மூழ்கும் திருவடி அடைந்து வெற்றியடையுங்கள். 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 2

 சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர்

சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை
கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி
கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட
மறித்திடுமே. 
 
அளவற்றவனை அறிய அளவு செய்துகொள்பவரை சார்ந்து இருப்பவரை கவனித்து சொல்கிறேன். கதிரவனையும் மறைக்கும் சோதியில் வெளிப்படும் கைப்பிடித்து தெளிந்த எண்ணத்துடன் கூடிட நடக்கும் செயல்களை கேளுங்கள், மதுரையின் மன்னர் மறுப்பிறப்பு இல்லாதபடி மாற்றிவிடும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருப்பாண்டிப் பதிகம் | பாடல் எண் : 1

 பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்

காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற்
போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட
சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி யாதென்றன்
உள்ளமதே. 
 
பருவத்தை அடையும் மங்கையை பாகமாக கொண்டவரை, பழைமையானவர்களின் அமுதமான ஒருவரை, ஒன்றின் மீதும் பற்று இல்லாதவரை, திருவடித் தொழுது இறைஞ்சி தெளிந்து நின்று பரி மேல் ஏறும் சேவகனார் ஒருவரை அன்றி வேறு உருவத்தை என் உள்ளம் ஏற்காதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 10

 கோணிலா வாளி அஞ்சேன்

கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
தலைமை அற்ற அழிக்கும் ஒன்றுக்கும் அஞ்சமாட்டேன். அழிக்க தலைமை ஏற்ற எமனுக்கும் அஞ்சமாட்டேன். நீளும் நிலாவை அணிந்தவனை நினைத்து நெஞ்சம் உருகி வான் எல்லாம் விரிந்தவனை கண்கள் சோர வாழ்த்தி பாராட்டாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 9

கோணிலா வாளி அஞ்சேன்

கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்

நீணிலா அணியி னானை

நினைந்துநைந் துருகி நெக்கு

வாணிலாங் கண்கள் சோர

வாழ்த்திநின் றேத்த மாட்டா

ஆணலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே. 

 

தலைமை அற்ற அழிக்கும் ஒன்றுக்கும் அஞ்சமாட்டேன். அழிக்க தலைமை ஏற்ற எமனுக்கும் அஞ்சமாட்டேன். நீளும் நிலாவை அணிந்தவனை நினைத்து நெஞ்சம் உருகி வான் எல்லாம் விரிந்தவனை கண்கள் சோர வாழ்த்தி பாராட்டாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.

#திருவாசகம்

 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 8

தறிசெறி களிறும் அஞ்சேன்

தழல்விழி உழுவை அஞ்சேன்

வெறிகமழ் சடையன் அப்பன்

விண்ணவர் நண்ண மாட்டாச்

செறிதரு கழல்க ளேத்திச்

சிறந்தினி திருக்க மாட்டா

அறிவிலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே. 

 

கட்டவிழ்ந்த செழுமையான ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்பு போன்ற பார்வை கொண்ட புலிக்கும் அஞ்சமாட்டேன். அடர்ந்த மணம் வீசும் சடையன் அப்பன் வானவர்களும் அடைய இயலாத செழுமையான கழல்கள் ஏந்தி சிறப்புடன் இருக்க இயலாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.

#திருவாசகம்

 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 7

 தகைவிலாப் பழியும் அஞ்சேன்

சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
 
தவிர்க்க இயலாத பழிக்கு அஞ்சமாட்டேன். மரணம் முன் நின்றாலும் அஞ்சமாட்டேன். புகை மூட்டம் போல் முன்னம் வீசி பொலிவுடன் அம்பலத்தே ஆடும் முகத்தில் மகிழ்வும் கொன்றை மாலையும் கொண்ட முதலானவன் பாதத்தை போற்றி உள்ளம் நெகிழாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 6

 வாளுலாம் எரியும் அஞ்சேன்

வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
வீசப்படும் நெருப்புக்கு அஞ்சமாட்டேன். எல்லாவற்றையும் மாற்றிப் போட்டாலும் அஞ்சமாட்டேன். தோள்களில் நீறு பூசியவன் என்னால் சொல்லமுடியா கடந்த அப்பனை அசையும் தாமரைகள் ஏந்தி தடமான மலர் கூடி உறவாட தகுதியற்றவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 5

 பிணியெலாம் வரினும் அஞ்சேன்

பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
எல்லா வகை நோய் வந்தாலும் அஞ்சமாட்டேன், பிறப்புடன் இறப்பு வந்தாலும் அஞ்சமாட்டேன் தேய்ந்து வளரும் நிலாவை அணிகலனாக உடையவனை தொழும் தேவர்களுடன் பொருந்திடலாமல் திடமாண நிலத்தை பிளந்தும் காணாமல் சிவந்த திருவடியை பாராட்டு வெண்ணீர் அணியாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 4

 கிளியனார் கிளவி அஞ்சேன்

அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
கிளி பேச்சி பேசும் பெண்ணின் பேச்சிக்கு அஞ்சமாட்டேன். அவர்களின் வஞ்சனையான முறுவலுக்கு அஞ்சமாட்டேன். வெப்பமான வெள்ளை நீறாடும் மேனி கொண்ட வேதியல் மாற்றம் தருபவன் பாதத்தை நாடி துளிர்த்து எழும் கண் உடையவராகி தொழுது அழுது உள்ளம் நெகிழ்ந்து களிப்படையாதவரைக் கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 3

 வன்புலால் வேலும் அஞ்சேன்

வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
 
கடினமான புலன்கள் வேல் போல் பாய்ந்தாலும் அஞ்சமாட்டேன். வளையல் அணிந்த பெண்களின் கடைக்கண்ணுக்கும் அஞ்சமாட்டேன். எலும்பும் உருக நோக்கி வெளிப்பட்டு ஆடும் என் பொளிவான மணியை பாராட்டி இனிமையான அருளை பருக அறியா அன்பிலாதவரை கண்டால் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 2

 வெருவரேன் வேட்கை வந்தால்

வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
தேவர்எத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
 
தவிர்க இயலா தாகம் வந்தாலும், வினைக்கடல் வேகம் கொண்டாலும் அஞ்சமாட்டேன். இருவரால் முரண்பட முடியாத என் தலைவன் திருவுரு அன்றி மற்ற ஒரு தேவர் அல்லது எத்தகைய சிறப்பு பெற்ற தேவர் என்றாலும் அருவருப்பு அற்றவர் என்றாலும் அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அச்சப் பத்து | பாடல் எண் : 1

 புற்றில்வா ளரவும் அஞ்சேன்

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. 
 
புற்றில் இருக்கும் பாம்பிற்கும் அஞ்சமாட்டேன், பொய்யானவர்களின் மெய்மை பற்றிய கருத்துக்கும் அஞ்சமாட்டேன். வணங்கா முடி கொண்ட எம் அண்ணல் கண்ணுதல் பாதம் நாடிய பின் மற்றும் ஒரு தெய்வம் உண்டு என நினைத்து எம் பெருமானை கற்று அறியாதவரை கண்டு அம்மா நான் அஞ்சுவது எப்படி முடியும். 
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 10

 வான்பாவிய உலகத்தவர்

தவமேசெய அவமே
ஊன்பாவிய உடலைச்சுமந்
தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு
திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால்உனை
நல்காய்என லாமே. 
 
வான் போன்று விரிந்த உள்ளம் கொண்டு உலகத்தில் வாழ்பவர்கள் தவம் செய்ய, அவமாய் சதை பொருந்திய உடலை சுமந்தபடி மரமாய் ஆனேன். தேன் பாயும் மலர் கொத்து இருக்கும் திருப்பெருந்துறை உறைவாய் நானே பாவி என இருக்க உன்னை அருளாதவன் எனலாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 9

 எச்சம்அறி வேன்நான்எனக்

கிருக்கின்றதை அறியேன்
அச்சோஎங்கள் அரனேஅரு
மருந்தேஎன தமுதே
செச்சைமலர் புரைமேனியன்
திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி
யானாகி நின்றானே.
 
அடுத்தவரின் படைப்பை அறிவேன் எனக்குள் நீ படைத்ததை அறியேன். என்ன வியப்பு இது? எங்கள் பாதுகாப்பே அருமையான மருந்தே என் அமுதே செச்சை மலர் போன்ற மேனியனே. திருப்பெருந்துறை உறைபவனே. நித்தம் என் நெஞ்சில் நிலைத்தவனாகி நின்றானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 8

 கோற்றேன்எனக் கென்கோகுரை

கடல்வாய்அமு தென்கோ
ஆற்றேன்எங்கள் அரனேஅரு
மருந்தேஎன தரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு
திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின்
மலனேஉனை யானே.
 
கொம்புத்தேன் எனக்கே எனக்கு என உரைப்பேன், கடலில் கிடைத்த அமுது என்பேன், உன்னை கடக்க மாட்டேன் எங்கள் பாதுகாவலனே, அருமையான மருந்தே எங்கள் அரசே, ஈரம் நிறைந்த வயல் சூழ் திருப்பெருந்துறை உறையும் பற்று அற்றவர் திருமேனி மலம் அற்றவனே உன்னை முழுமையாக சொல்ல இயலாதவன் நானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 7

 வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்

வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
புறம்போகலொட் டேனே. 
 
தேவையில்லை புகழ், தேவையில்லை செல்வம், தேவையில்லை மண்ணும் விண்ணும், தேவையில்லை பிறப்பு இறப்பு. சிவத்தை நேசிக்காதவர்களை நெருங்கமாட்டேன். விரும்பி அடைந்தேன் திருப்பெருந்துறை இறையை போர்த்திக் கொண்டேன் இனி புறம் போகமாட்டேனே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 6

 கடலின்திரை யதுபோல்வரு

கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்
தொழியாவணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய
திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள்
பரன்தான்செய்த படிறே.
 
கடல் அலைபோல் வரும் கலக்கத்தை அழித்து என் உடலும் உயிரும் புகுந்து எதிலும் நிறைந்தபடி நிறைந்தான். ஒளி பரப்பும் பரிதியும் பட்டு ஒளிரும் நிலவும் சூடிய திருப்பெருந்துறை உறையும் விரிந்த சடை மகுடமாக அணிந்த எங்கள் பரன் அவன் செய்தபடியே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 5

 பற்றாங்கவை அற்றீர்பற்றும்

பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற்
கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே. 
 
பற்ற வேண்டியதை தவறவிட்டீர், பற்ற வேண்டியதை பற்றி நல்ல கதி அடையவேண்டும் என்றால் வெகுவிரைந்து வாரீர். வணங்கா முடி இருக்கும் திருப்பெருந்துறை இறை சீர் கற்று அவன் கழல் பேனியவர்களுடன் கூடுங்கள் கலந்தே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 4

 வினைக்கேடரும் உளரோபிறர் 

சொல்லீர்விய னுலகில் 
எனைத்தான்புகுந் தாண்டான்என 
தென்பின்புரை யுருக்கிப் 
பினைத்தான்புகுந் தெல்லேபெருந் 
துறையில் உறை பெம்மான் 
மனத்தான் கண்ணின் 
அகத்தான்மறு மாற்றத்திடையானே.  
 
செயல்படாதவர் உண்டோ, இப்படி சொல்லும் வியப்பான உலகில் என்னை எனக்குள் புகுந்து ஆண்டான். என் அன்பினால் உருக்கி பினைந்து பெருந்துறை உறையும் பெம்மான் மனதில் நிலைத்தான் கண்ணின் உள்ளே நிலைத்தான் மறுபடாத மாற்றத்தை தந்தவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 3

 எனைநானென்ப தறியேன்பகல் 

இரவாவதும் அறியேன் 
மனவாசகங் கடந்தான்எனை 
மத்தோன்மத்த னாக்கிச் 
சினமால்விடை உடையான் மன்னு  
திருப்பெருந்துறை உறையும் 
பனவன்எனைச் செய்தபடி 
றறியேன் பரஞ்சுடரே.
 
என்னை எனக்கே தெரியாது பகல் இரவு அறியாது இருந்தேன். மனதையும் வாசத்தையும் கடந்தவன் மடதனத்தையும் கருவியாக்கி அளவுகொண்டு விடை அளிப்பவன்பெருமை மிகு திருப்பெருந்துறை உறையும் பலவாக இருப்பவன் என்னை ஆட்கொண்டதை அறியேன் பரஞ்சுடரே.
#திருவாசகம்
 
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 2

 நானாரடி அணைவான்ஒரு 

நாய்க்குத் தவிசிட்டிங் 
கூனாருடல் புகுந்தான்உயிர் 
கலந்தான்உளம் பிரியான் 
தேனார்சடைமுடியான்மன்னு 
திருப்பெருந்துறை உறைவான் 
வானோர்களும் அறியாததோர் 
வளம்ஈந்தனன் எனக்கே. 
 
நான் யார் என்பவர் அடி அணைவான்ஒரு நாய்க்கு இரங்குபவன் வளையா உடலுக்குள் புகுந்தான்.உயிர் கலந்தான் உள்ளத்தை விட்டு அகலாதவன். தேன் போன்றவர்களின் வணங்கமுடியுடன் திகழும் திருப்பெருந்துறை உறைபவன்வானோர்க்களும் அறியாத ஓரு வளத்தை ஈந்தனன் எனக்கே.
#திருவாசகம்
 

திருவாசகம் | உயிருண்ணிப் பத்து | பாடல் எண் : 1

 பைந்நாப்பட அரவேரல்குல்

உமைபாகம தாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக்
கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த்
திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள்இறு
மாக்கேன்இனி யானே.
 
வளமையான நாகப்பாம்பின் படத்தை போன்ற அல்குல் கொண்ட உமையம்மையை பாகமாக உடையவனே, உயிருள்ள நாட்கள் எல்லாம் விலகாத வினைகள் ஒழிய விடையாக இருப்பவனே, செழுமையான பேச்சளார்கள் புகழ்ந்து பரவும் திருப்பெருந்துறை உள்ளவனே, எந்த நாள் நான் மகிழ்ந்து இறுமாப்பு கொள்வேன் என் இனியவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 10

 அழகே புரிந்திட் டடிநாயேன்

அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே
கோனே என்னைக் குழைத்தாயே. 
 
அழகே புரியச் செய்யும் அடியை புரிந்துக்கொண்ட நாய் போன்ற நான் அரற்றுகின்றேன், என்னை உடைமையாக உடையவனே. மறைக்காமல் நின்ற திருமேனி காட்டி என்னை பணிய செய்துக்கொண்டாய். புகழே பெரிய பெயர் எனக்கு புரணமான நீ தந்து அருளாதே. சிதையா நிலையே மறையோனே கோனே என்னை குழைத்தாயே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 9

 கண்ணார் நுதலோய் கழலிணைகள்

கண்டேன் கண்கள் களிகூர
எண்ணாதிரவும் பகலும்நா
னவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே. 
 
கண்ணுடையார் நுட்பமாய் இருப்பவனே உன் கழலிணைகள் கண்டேன் என் கண் மகிழ்ந்து இரவும் பகலும் வேறு ஒன்று எண்ணாமல் இதையே மண் மேல் உடலை விடும் வரை எண்ணி உன் கழற்கே வந்து அண்ணா என்று கடப்பேனோ உன் அடிமையாக இருப்பது மிக்க பெரியதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 8

 நாயிற் கடையாம் நாயேனை

நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரம்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 
 
நாயை விட கிழான இனம் சேர்க்காதவனை விருப்பமுடன் நீயே ஆட்கொண்டாய். மர்மமான இந்தப் பிறவி உன்வசமே வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஆராய நானே முற்பட அதிகாரம் எனக்குரியது இல்லை. மீண்டும் உடலில் வைப்பதும் அல்லது திருவடியில் வைப்பதும் கண்ணுதலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 7

 அன்றே என்றன் ஆவியும்

உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
 
என்னை ஆட்கொண்ட அன்றே எது ஆவி உடல் உடைமை எல்லாவற்றையும் குன்றை ஒத்தவனே ஆட்கொள்ளவில்லையோ, இன்று ஒரு இடையூறு எனக்கு உண்டோ, எட்டு சாண் உடலில் முக்கண் என இருக்கும் எம்மானே. நீ நன்றே செய்வாய் பிழை செய்வாய் என்றாலும் இதற்கு நானா நாயகமே?
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 6

 வேண்டத் தக்க தறிவோய்நீ

வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே. 
 
தேவையை தகுந்தபடி அறிவாய் நீ, தேவைகள் முழுவதும் தருவாய் நீ, வேண்டிய அயனுக்கும் மாலுக்கும் அரிதானவன் நீ, தேவையால் என்னை செயல்படச் செய்தாய், தேவையால் நீயே அருள் செய்தாய் நானும் அதையே வேண்டினேன் மாறாக வேண்டும் பரிசு வேறு உண்டு என்றால் அதுவும் உன்தன் விருப்பமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 5

 கூறும் நாவே முதலாகக்

கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்பும்நீ
தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
 
பேசும் நாக்கை முதலாக கொண்டு பேசப்படும் புலால் எல்லாம் நீ, தேர்ச்சி பெற உதவும் வாய்ப்பும் தீ, திகைக்கச் செய்வதும் நீ, கெட்டதும் நல்லதும் ஆன முழுமையும் நீ, உன்னிலும் வேறு ஒரு பரிசு இங்கு இல்லை. உண்மை உன்னை உணர விரித்துரைத்தால் தேறும் வகை அறியலாம் என் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 4

 மானேர் நோக்கி மணவாளா

மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன் றனைநூக்கி
உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை
அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளும்நாள்
என்றென் றுன்னைக் கூறுவதே. 
 
மான் போன்ற பார்வை கொண்டவளின் மணவாளா உன் சீர் நினையாமல் மறுத்து உடல் புகுந்து என்னை விலக்கி உலகில் உலவச் செய்தாய். ஆயினும் அடிமையாகிய என் அறியாமை அறிந்து நீயே அருள் செய்து அரசனே என அழைத்து மகிழ்வேன் அந்நாள் என்று என கூறுவதே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 3

 ஒன்றும் போதா நாயேனை

உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
ஏழை பங்கா எம்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
குணமாம் என்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய்
எண்தோள் முக்கண் எம்மானே. 
 
ஒன்றுக்கும் உதவாத நாய் போன்ற என்னை ஏற்றுக் கொண்ட உன் கருணை இன்று மட்டும் இல்லாமல் போய்யாக போனதோ, ஏழைகளின் உறவே என் அரசே மலை போல் பிழைகள் செய்தாலும் நின் குணத்தால் கெடுதல் இன்றி இருக்க இரக்கம் காட்டு எட்டு அடுக்கு உடலில் முக்கண்ணாய் இருப்பவனே எம்மானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | குழைத்த பத்து | பாடல் எண் : 1

 குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்

காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோஎன்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மா னேஉன் னடியேற்கே.
 
குழப்பம் அடைந்தார் முன்னம் செய்த கொடுமையான செயல்களால் வந்த நோயால். என்னை காக்காமல் உடைமையாக்கிக் கொண்டவனே கொடுமையான செயல் செய்த நான் உறுதியுடன் உழைத்தால் நல்முடிவு உண்டு. உமையாள் கணவா என்னை ஆள்பவனே பிழைகளை பொறுக்க வேண்டாமோ. பிறையை அணிந்த சடை உடையவனே முறையா என்று அழைத்தால் அருளாமல் ஒழிவாயோ அம்மானே உன் அடியாற்கே.
#திருவாசகம்

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 11

 கூடிக் கூடி உன்னடியார்

குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன்
வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு
கலந்துள் ளுருகிப் பெருகிநெக்
காடி ஆடி ஆனந்தம்
அதுவே யாக அருள்கலந்தே. 
 
ஒன்றாக கூடி உன் அடியார்கள் குதித்து ஆடுவார், சிரிப்பார், களிப்பார். நானோ வாடி வாடி வழி இல்லாமல் வற்றல் மரமாய் நிற்பேனோ. சிறு பிணக்கம் செய்து ஊடி ஊடி என்னுள் உடையவனே உன்ளுள் கலந்து உருகிப் பெருகி நிறைந்து ஆடி ஆடி ஆனந்தம் அதுவே என அருள் கலந்தேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 10

 மானோர் பங்கா வந்திப்பார்

மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால்
நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்தே
உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான்
கொடியேற் கென்றோ கூடுவதே.
 
ஓர விழிப்பார்வை கொண்ட பெண்மையை பாகமாக கொண்டவனே. வணங்குபவர்களின் மதுரக் களியே. மனம் நெகழாத நான் துளையற்ற சுரைக்காயாய் இருந்தும் எனக்குள் இத்தனை நாளாக வாழ்ந்தாயே. உடலில் புகுந்தே உன்னை உணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தை அரசனே அருளுடன் கலந்தான். கொடுமைகளை கொன்றே கூடுவதே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 9

 தாரா அருளொன் றின்றியே

தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும்
அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத்
திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை
வைக்க வேண்டும் பெருமானே.
 
கொடுக்கப்படாத அருள் ஒன்றும் இல்லை என தந்தாய் என்று உறவுடையவர் எல்லாம் மனம் நிறைந்து நின்றார்கள். அடியேனும் அண்ணியப்பட்டவனாய் சோர்வு கொள்வேனோ. சீரானவர்களுக்கு அருளுடன் சிந்தையை திருத்தி ஆண்ட சிவலோக பேரானந்தம் நீங்காமல் நிலைக்க வைக்க வேண்டும் பெருமானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 8

 துணியா உருகா அருள்பெருகத்

தோன்றுந் தொண்ட ரிடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன்
சிவனே நின்று தேய்கின்றேன்
அணியா ரடியார் உனக்குள்ள
அன்புந் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித்
தளிர்பொற் பாதந் தாராயே. 
 
துணியாமல் உருகிட அருளது பெருகிட தோன்றும் தொண்டர் கூட்டத்தில் கூடி முடிவற்று வேகமாய் வளரும் மூங்கில் போல் சிந்தனை வளர்க்கும் நான் சிவனே என்று மெலிகின்றேன். அடியார்கள் உனக்குள் அணியாக இருப்பதைப் போல் நானும் இருக்க அன்பு தாராய். அருள் அளித்து தணியாத எல்லை கொண்டு வந்து அருளி தளிர்ந்த பொற்பாதத்தை தாராயே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 7

 கடலே அனைய ஆனந்தம்

கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங்
கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளுதியென்
றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச்
சோதீ இனித்தான் துணியாயே. 
 
கடலுக்கு நிகரான ஆனந்தம் கண்டவர்கள் எல்லாம் உன்னை கவர்ந்தார்கள். இடர் வளர்ந்து கேட்பார் அற்று இருப்பது அழகோ, அடிமையாகிய நாய் போன்ற நான் உன் அடிமை அல்லவோ நீயே அருளவேண்டும் என்பதை உணராமல் காலம் கழித்தபடி இருந்தேன். சுடர் கொண்டு அருளால் இருள் நீங்கச் சோதீயாய் இனித்தான் என்று துணிந்துநில்.   
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 6

 அறவே பெற்றார் நின்னன்பர்

அந்த மின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன்
புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு
பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே.
 
முழுமையை பெற்றுக் கொண்டார்கள் நின் அன்பர்கள். முடிவு இல்லாமல் உள்ளம் நோகவே வெளியே கிடந்து நாய் போன்ற நான் புலம்புகிறேன். எல்லாம் உடையவனே பேரன்பை பெற வேண்டும் என்றும் ஒழியாத பிரிவற்ற மறக்கவியலாத அளவிட்டு மாளா இன்பப் பெருங்கடலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 5

 மேவும் உன்றன் அடியாருள்

விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானெனதென்
றியாது மின்றி அறுதலே.
 
நின்னை போற்றி பரவும் அடியார்களுடன் நானும் விருப்பமுடன் இருக்கிறேன் மெய்மையே. காவி சேரும் மீன் விழியாளை பாகமாக கொண்டவனே உன் கருணையினால் பாவியாக எனக்கும் உண்டோ பரமானந்த பழைமைக் கடல் சேர்ந்து ஆவி ஆக்கை எனது என்று இல்லாமல் அறுத்தலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 4

 வேண்டும் வேண்டு மெய்யடியா

ருள்ளே விரும்பி எனைஅருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த
அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய்
தொண்ட னேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே.
 
நீயே வேண்டும் என விரும்பி வேண்டும் அடியார்களின் என்னையும் உன் அருளால் ஆண்டாய். இடர்களை களைந்தாய். அமுதே அருமையான மாமணி முத்தே தூண்டா விளக்கின் சுடரை அணைக்க ஏதுவானவனே. தொண்டன் எனக்கு உண்டாக வேண்டியதை வேண்டாமல் இருந்தும் தந்து மிகுந்த அன்பு பொழிபவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 3

 அருளா ரமுதப் பெருங்கடல்வாய்

அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
உடையாய் பெறநான் வேண்டுமே. 
 
அருளுடைய ஆர அமுதப் பெருங்கடலில் அடியவர்கள் மூழ்கி மகிழ இருட்டு மனம் படைத்த உடலால் ஏமாற்றப்பட்டேன் என அறிந்தாய் எம்மானே. நேர்மையற்ற மனம் படைத்தவன் வருகிறான் என்று உன் மைத்தனாகிய என்னை கண்கிறார்கள். இப்படி வேறுபடாதபடி உன் மெய்யன்பை உரிமை பெற வேண்டுமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 2

 அடியார் சிலர்உன் அருள்பெற்றார்

ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவா துருக அருளாயே. 
 
உன் அடியவர்கள் சிலர் நின் அருள் பெற்றார் என ஆர்வமுடன் கூறுவேன். தவத்தின் எதிரான அவத்தை உடையவர் பிணத்தின் முடிவே அடைவார். அப்படி இல்லாமல் முடிக்கவே முயல்கின்றேன். கடின மனம் கொண்ட என் தீவினையை களைத்து உன் கருணை கடல் பொங்கச் செய்பவனே அடியேன் உள்ளத்தை ஓயாமல் உருக அருள் செய்வயாக.
திருவாசகம்
 

திருவாசகம் | பிரார்த்தனைப் பத்து | பாடல் எண் : 1

 கலந்து நின்னடியா ரோடன்று

வாளா களித்தி ருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்து நின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. 
 
நின் அடியார்களுடன் அன்று கலந்திருந்தும் வாழாமல் வீணாக களித்திருந்தேன். மலரந்து கழிந்த காலங்கள் துன்பங்கள் உள்ளே வர உலர்ந்து போனேன். என்னை தனக்கானாவனாக உரிமை கொண்டவனே இன்பச் சுடர் காட்டுபவனே சோர்ந்து போனேன் அருள் செய் ஆர்வம் வளர அடியவற்கே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 10

 பூதங்கள் ஐந்தாகிப்

புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
விளங்குதில்லை கண்டேனே. 
 
மூலப் பொருளாகும் பூதங்கள் ஐந்தாகி நமக்கு புலன்களாக ஆகி பேதங்கள் அனைத்துமாய் ஆனலும் பேதம் இல்லாத பெருமைக்கு உரியவனே. வேதனைகளே கெடுத்து ஆண்ட படரும் ஒளியை மரகதத்தை வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கும் தில்லை கண்டனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 9

 பாங்கினொடு பரிசொன்றும்

அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர
உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து
வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை
அம்பலத்தே கண்டேனே.
 
தோழியுடனும் நல்ல பரிசுப் பொருள்களுடனும் வாழ அறியாத நாய் போன்றவனை உள்ளத்தே நல்ல ஒளி ஓங்கி வளர அளவற்ற அன்பு அருளி சேர்த்த வினைகளின் அழுக்கை அறுத்து வான் அளவு கருணை தந்தவனை நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 8

 அளவிலாப் பாவகத்தால்

அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே
வெறுவியனாய்க் கிடப்பேனுக்
களவிலா ஆனந்தம்
அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந்
தொழுந்தில்லை கண்டேனே. 
 
எண்ணிக்கையற்ற பாவனையால் சிக்கி அறிவற்று செயல்பட முடியாமல் இருந்த எனக்கு திருட்டுத்தனம் இல்லாத ஆனந்தம் அளித்து ஆண்டவனை திருட்டுத்தனம் இல்லாத வனவர்கள் தொழுத் தில்லை கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 7

 பத்திமையும் பரிசுமிலாப்

பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
விளங்குதில்லை கண்டேனே. 
 
பக்தியையும் பரிசு பெற முடியாத பசுபாசம் அறுப்பதையும் அருளி பித்தனாகிய என்னை ஒதுக்கிவிட்டு போகாமல் சித்தம் என்ற திடமான கயிற்றால் திருப்பதத்தில் கட்டிவித்த வித்தகனார் வினை ஆடல் விளங்கும் தில்லை கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 6

 பிறவிதனை அறமாற்றிப்

பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென்
றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த்
திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும்
வணங்கிடநான் கண்டேனே.
 
பிறப்புதனை அறமுள்ளதாக மாற்றி பிணி முதுமை என்பதுடன் உறவுகளையும் ஒழியச் செய்து செல்லும் உலகை அடைய ஒரே முதல்வனை செறிவுடன் பெற்ற பொழில் சூழ்ந்த தில்லை நகர் திருச்சிற்றம்பலம் அடைந்து மறை உணர்ந்தவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 5

 சாதிகுலம் பிறப்பென்னுஞ்

சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை
அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம்
யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக்
குலாவுதில்லை கண்டேனே.
 
சாதி குலம் பிறப்பு என்ற அர்தமற்ற ஆபத்தான சுழியில் அகப்பட்டு தடுமாறும் ஆதாரம் அறியாத நாய் போன்றவனை துன்பத்தை அறுத்து ஆட்கொண்டு பேதை குணமும் பிறர் போல் நான் என வடிவம் தங்க அதை அழித்த குற்றமற்ற அமுதானாவனைக் வெளிப்பட்டு உலவும் தில்லையில் கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 4

 கல்லாத புல்லறிவிற்

கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து
வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோருங் காணஎன்றன்
பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை
அம்பலத்தே கண்டேனே.
 
கற்று அறியாத மூடமான அறிவுடன் கடைசியான நாய் போன்றவனை வல்லவனாய் வந்து வசியமுடன் இருக்கும் படி பலரும் காண என்தன் பசு பாசம் அறுத்தவனை எல்லாரும் இறைஞ்சும் தில்லை அம்பலத்தில் கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 3

 உருத்தெரியாக் காலத்தே

உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக்
கருணையினால் ஆண்டு கொண்ட
திருத்துருத்தி மேயானைத்
தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன்
அணிகொள்தில்லை கண்டேனே.
 
வடிவம் பெறாத நேரத்திலேயே உள்ளே புகுந்து என் உள்ளம் நிறைந்து கருவை திருத்தி உடலை வளர்த்து கருணையினால் ஆண்டுக் கொண்ட திருத்தியும் உருத்தியும் செய்யும் இனிப்பான சிவபதத்தை விருப்பத்தினால் நாயினும் கிழான நான் அணியும் தில்லை கண்டனே.
திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 2

 வினைப்பிறவி என்கின்ற

வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே
தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென்
பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை
அம்பலத்தே கண்டேனே. 
 
செயல்களால் ஏற்படும் பிறப்பு என்ற வேதனையில் அகப்பட்டு தன்னை சிறிதும் எண்ணாமல் தளர்ந்து இருப்பவனை மிகைப்படுத்தி ஆட்கொண்ட என் பிறப்பை அறுத்த ஈடற்றவனே அனைத்து உவகமும் தொழும் தில்லை வெளிப்படையாய் கண்டேனே
#திருவாசகம்
 

திருவாசகம் | கண்ட பத்து | பாடல் எண் : 1

 இந்திரிய வயமயங்கி

இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய்
அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச்
சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம்
அணிகொள்தில்லை கண்டேனே.
 
இயங்கும் பொறிகளுக்கே மயங்கி இறப்பதற்கு காரணமாய் வெளியே திரிந்து போய் அர்தமற்ற நரகத்தில் விழ்பவர்களுக்கு சிந்தையை தெளிவித்து சிவமாக்கி என்னை ஆண்ட முடிவில்லா ஆனந்தம் அணிய கொடுக்கப்பட்ட தில்லை கண்டேனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 6

 பேதம் இல்லதொர் கற்ப ளித்த

பெருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
 
குழப்பம் ஒன்றும் இல்லாத ஓர் நெறியை அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே. குற்றம் பற்றி பல பேச நீ என்னை ஏன் அறிவற்றவர் முன் நிற்கச் செய்தாய். சாதல் சாதல் என்ற பொல்லாமை இல்லாத தனித்தபடி சரண் சரணம் எனக் காதலால் உன்னை ஓத நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 5

 கோல மேனிவ ராக மேகுண

மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
நச்சி நச்சிட வந்திடுங்
கால மேஉனை ஓதநீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 
 
அழகிய வளைவுள்ள கோல மேனியன் எதையும் கிளரி தேவையை தீர்த்துக்கொள்ளும் பன்றி குணம் கொண்ட மதிப்புடைய பெருந்துறை வள்ளல் இவன் சிறப்புகளை அறியாத என் சிந்தையில் வைத்த சிகாமணி உலகத்தை சாட்சியாக வைத்து நான் உன்னை நாடி நாடி வந்திட காலத்தை ஓத நீ வந்து காட்டினாய்க் கழுக் குன்றிலே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 4

 பூணொ ணாததொ ரன்பு பூண்டு

பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
நடுக்கட லுள் அழுந்தி நான்
பேணொ ணாதபெ ருந்துறைப்பெருந்
தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே. 
 
பூவும் வலிக்கதபடி இருப்பவர் மேல் அன்பு கொண்டு அவர்களுடன் பொருந்தி நாளும் போற்றவும் வெட்கப்பட வேண்டிய நான் வெட்கம் இல்லாமல் நடுக்கடலில் அழுந்தினேன். அனுபவித்து உணர முடியா பெருந்துறை பெருந்தோணி பற்றி உகைத்திட காணா ஒண்ணாத திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 3

 மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி

மலங்கெ டுத்த பெருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
 
துன்பப்பட்டேன் துன்பத்தின் கண்ணீரை மாற்றி அழுக்கை அழித்த பெருந்துறை விட்டு விலகினேன் எனவே வினை கேடவில்லை அதன் விளைவையும் அறிந்திலேன். இலக்கை உணர்த்தும் உன் சேவடிகள் இரண்டும் வைக்கும் இடம் இன்றியே கலங்கினேன் கலங்காமல் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 2

 பிட்டு நேர்பட மண்சு மந்த

பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே. 
 
பிட்டுக்கு ஏற்ப மண் சுமந்த பெருமானே பெரும் துறைப் பெரும் பித்தனே. உன் சட்டத்திற்கு நேர்படாத சரக்கி விழும் நான் உன்னை போற்றவில்லை. சிறுமையானவனே சிவலோகத்தவனே சிறு நாயிற்கும் கடையான என்னையும் ஆட்கொள்ள வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
#திருவாசகம்

திருவாசகம் | திருக்கழுக்குன்றப் பதிகம் | பாடல் எண் : 1

 பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு

மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 
 
முரண்பாடு இல்லாமல் பொருந்தும் துறைக்கு நாயகமான பெருமான் உன் பெயரை சொல்வார்க்கு மயக்கமற்ற இன்பமே வரும். துன்பத்தை துடைத்த எம்பிரான் முடிவற்று வளரும் வித்து மேலும் வினை இல்லாமல் என் வினை ஒத்து இருந்த பின்பு கணக்கில்லாத திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக் குன்றிலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 10

 திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்

செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றரு ளாயே. 
 
தன்னை தானே திருத்தும் எழிலானவர்கள் நிறைந்த திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்தி இருந்தவனே என எண்ணி எப்பொழுதும் நினைத்து என் பிரானே என்று இருந்தவனே என நினைத்தே ஆதரித்து அழைத்தால் அலைகடல் அதன் உள்ளேயே அடங்கி பொருந்தும் கயிலை புகு நெறி இதுதான் என காணச்செய்து போய் வா என அருள்வாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 9

 மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி

மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 
 
மாறுபட்டே செயல்படும் மனதின் மயக்கத்தை தீர்த்துவிட நோக்கி மறுமையையும் நிகழ்வதையும் கெடுத்த பொருளானவனே புனிதானே பொங்கும் வாள் அரவமாகிய கங்கை நீர் தங்கும் செழுமையான சடையோனே என்னை தெளிவு படுத்தி மறை சேர்க்க திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனே அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 7

 மெய்யனே விகிர்தா மேருவே வில்லா

மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
 
உண்மையே உள்ளதாக விரிந்தவனே மேருவை வில்லாக கொண்டு எதிர்ப்பவர் அந்தபுரங்களை எரித்த கையனே. சுவாச கதியால் இயமனை விலக்கிய நல் வெப்ப பிழம்பு போன்ற மேனியாக செய்பவனே. செல்வத் திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனே அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 6

 துப்பனே தூயாய் தூயவெண் ணீறு

துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 
 
வெறுத்து ஒதுக்கி துப்ப முடியாதபடி இருப்பவனே தூய்மையானவா, தூய வெண்ணீறில் வெளிப்படும் ஒளி வளர்ந்து இருப்பவனே. உன்னை உள்ளத்தே நினைப்பவர் மனதின் உறுசுவை அளிக்கும் ஆரா அமுதே. சொல்லில் அடங்க மறைகளில் விளங்கும் திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனே அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 4

 கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்

    கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
    வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே  
 
தாமரையில் உள்ள நான்கு முகம் கொண்டவனும் மழைமேக முகில் வண்ணத்து கண்ணனும் நாடுவதற்கு அரிய விமலனே எனக்கு வெளிப்படாவிட்டால் என்ன இருந்தும் எனக்கு வெளிப்பட்ட என் தாயே தீது இல்லாமல் மறை சேர்க்கும் திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனேமுடிவற்றவனே அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | அருட்பத்து | பாடல் எண் : 3

 எங்கணா யகனே என்னுயிர்த் தலைவா

ஏலவார் குழலிமார் இருவர்
தங்கணா யகனே தக்கநற் காமன்
தனதுடல் தழலெழ விழித்த
செங்கணா யகனே திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே
 
எங்கும் நிறைந்த ஏகனே என் உயிர்த்தலைவா ஏவல் செய்ய குழலிமார் இருவர் இடத்தில் தங்கும் நாயகனே தகுந்த காமன் செழுமை தீ மூட்டிய ஒருவனே திருப்பெருந்துறையில் செழுமையான மலரை மலர செய்பவனே வியப்புக்கு உரிய சீர் பொருந்திய அருமையானவனே அகத்தில் அறியா அடிமையாகிய நான் ஆதரித்து அழைத்தால் அதனால் என்ன என்று அருள வேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | வாழாப்பத்து | பாடல் எண் : 7

 பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்

பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர் கோலச் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 
 
சூரியன் போல் ஒளி தரும் பாதத்தை இல்லாமல் வேறு ஒரு பற்று இல்லாதவன் என கண்டாய். திரு வளர்ந்த சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறையும் சிவனே கருணையோடு நோக்கி கசிந்து உள்ளம் உருகி கலந்து வாழ அறியாமல் மயங்கினேன் இநுத உலகில் வாழ இயலவில்லை என கண்டாய் வருக என்று அருள் புரியவேண்டும்.
#திருவாசகம்
 

திருவாசகம் | வாழாப்பத்து | பாடல் எண் : 4

வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே

மற்றுநான் பற்றிலேன் கண்டாய்

தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே

திருப்பெருந் துறையுறை சிவனே

எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர்

காணும்நாள் ஆதியீ றின்மை

வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்

வருகஎன் றருள்புரி யாயே. 

 

வல்லவன் வாள் கொண்ட அரக்கர்களை வெளியே தள்ளியவன் இல்லாமல் வேறு ஒரு பற்று இல்லாதவன் என கண்டாய். தில்லை வழும் கூத்தனே சிவபுரத்து அரசே திருப்பெருந்நுறை உறையும் சிவனே எல்லை மூவுலகிற்கு உண்டு என்ற இருவர் காணும்படி ஆதி முடிவற்ற வல்லைமையானது என வளர்ந்தாய். நானோ வாழவில்லை என கண்டாய் வருக என்று அருள் புரியவேண்டும்.

#திருவாசகம்

 

திருவாசகம் | வாழாப்பத்து | பாடல் எண் : 1

 பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே

பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.
 
பார்க்கும் இடத்துடன் பரந்த விண்ணுக்கும் தலைவனான என்பரனே. பற்று வேறு எங்கும் வைக்கவில்லை என அறிந்தாய், சீரொடு பொலிவாய் உள்ள சிவ புரத்து அரசே, திருப்பெருந்துறை உறையும் சிவனே, யாரை நான் நொந்துக்கொள்வேன், யாரிடம் எடுத்துச் சொல்வேன், ஆண்ட உன் அருள் இல்லை என்றால் கடல் சூழ்ந்த உலகில் வாழ மாட்டேன். வந்து எனக்கு அருள் புரியவே.   
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 10

 காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்

கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமாஎன்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தணைவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
காத்திடுவாய், படைத்திடுவாய், துடைத்திடுவாய் என முழுமையும் செய்பவனே, கண் இமைக்கா வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் முடிவாய், முடிவற்ற முதலாய் நின்ற முதல்வனே, முன்னமே என்னை ஆண்ட பார்ப்பானே, என் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூவை அணைவது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 9

 தாதாய் மூவே ழுலகுக்குந் 

தாயே நாயேன் தனையாண்ட 
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே 
பெருந்தேன் பில்க எப்போது 
மேதா மணியே என்றென் றேத்தி 
இரவும் பகலும் எழிலார் பாதப் 
போதாய்ந் தணைவ தென்றுகொல் லோஎன் 
பொல்லா மணியைப் புணர்ந்தே.  
 
மாறுபட்டு வளர்ந்த முன் எழுந்த உலகின் தாயே, இனம் சேர்க்கா என்னை ஆண்ட பித்தனே, பிறவி என்ற பிணிக்கு மருந்தே, எப்பொழுது பெருந்தேன் சிந்தாமல் ஞான மணியே என்று வாழ்த்தி இரவும் பகலும் எழிலான பாதம் போதாது என ஆய்ந்து இணைவது, இது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து. 
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 8

 நெக்கு நெக்குள் உருகி உருகி 

நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் 
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி 
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் 
செக்கர் போலுந் திருமேனி 
திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் 
புக்கு நிற்ப தென்றுகொல் லோஎன் 
பொல்லா மணியைப் புணர்ந்தே.  
 
நெகிழ்ந்து நெகிழ்ச்சியால் உருகி, உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நகைத்தபடி அழுதும் தொழுதும் வாழ்த்தியபடி பலவகை கூத்தும் பாடியும் சொக்கவைக்கும் திருமேனி திகழ்வதைப் பார்த்து மயிர் சிலிர்ப்ப கூடி நிற்பது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 7

 நினையப் பிறருக் கரிய நெருப்பை 

நீரைக் காலை நிலனை விசும்பைத் 
தனையொப் பாரை யில்லாத் தனியை 
நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டங் 
கனையக் கண்ணீர் அருவி பாயக் 
கையுங் கூப்பிக் கடிமலராற் 
புனையப் பெறுவ தென்றுகொல் லோஎன் 
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
பிறருக்கு நினைக்க அரியாத நெருப்பை, நீரை, காற்றை, நிலத்தை, விரிந்த வெளியை, தனக்கு ஒப்புமை இல்லாத தனித்ததை நோக்கி தழைத்து தழைத்த கண்டம் கனைய கண்ணீர் அருவி பாயக் கரம் கூப்பி சிறந்த மலர்களால் பூட்டி இணைவது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து. 
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 6

 பரிந்து வந்து பரமானந்தம் 

பண்டே அடியேற் கருள்செய்யப் 
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் 
அருமா லுற்றேன் என்றென்று 
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் 
உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப் 
புரிந்து நிற்ப தென்றுகொல் லோஎன் 
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
பரிவுடன் வந்து பரமானந்தம் முன்னமே அடியற்களுக்கு அருள் செய்தாலும் பிரிந்து போய் பெரிய மாநிலத்தில் அளவு வைத்தபடி தேடி அல்லல் அடைந்தேன் என்றபடி வழியும் கண்ணீர் வழிந்தபடி உள்ளே அன்பே சுரந்து மையிர் சிலிர்ப்ப படைத்தவனை புரிந்தபடி நிற்பது என்று நடக்குமோ என் பொல்லா மணியை புணர்ந்து. 
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 5

 திகழத் திகழும் அடியும் முடியுங்

காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்
டாவா என்ற நீர்மை யெல்லாம்
புகழப் பெறுவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
அளவிட அளவற்று வளரும் அடியும் முடியும் கீழ் மேல் என காண முற்பட்ட அயனும் மாலும் அகழ்ந்தும் பறந்தும் காண முடியாத அம்மான் இந்த அளவற்ற நிலம் முழுவதும் செயல்களை செய்ய தூண்டி என்னை ஆட்கொண்டவா என்று நீர் பெருக புகழப் பெறுவது என்று இயலுமோ என் பொல்லா மணியை புணர்ந்து. 
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 4

 அல்லிக் கமலத் தயனும் மாலும்

அல்லா தவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறைஇன் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
 
அல்லி இதழில் உள்ள அயனும் மாலும் அப்படி இல்லாத மற்றவர்களும் தேவர்கள் தலைவனும் பேசி வாழ்த்தும் பெயர் கொண்டவனை வார்த்தையும் பொருளும் கடந்த சுடரை நெல்லிக் கனியை தேனைப் பாலை நிறைந்த இனிமையான அமுதின் சுவையை வளர்ந்து கூடுவது என்று இயலுமோ என் பொல்லாத மணியைப் புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 3

 நீண்ட மாலும் அயனும் வெருவ

நீண்ட நெருப்பை விருப்பி லேனை
ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை
அள்ளூ றுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 
 
அளவில் வளர்ந்த மாலும் அயனும் போற்றிட அளவில் வளர்ந்த நெருப்பை விரும்பாதவனை என்னை ஆண்டுக் கொண்ட ஆரா அமுதை எப்பொழுதும் உள்ளத்தே வைத்த அடியார்கள் முன் வேண்டிய அனைத்தையும் வாய்விட்டு அலறி விரும்பிய மலர்கள் தூவி மகிழ்ந்திருப்பது என்று இயலுமோ என் பொல்லாத மணியை புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 2

 ஆற்ற கில்லேன் அடியேன் அரசே

அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து
சிவனெம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக்
குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
 
அரசே அடிமை என்னால் வழி அறிய முடியவில்லை கொடுக்கப்பட்ட புலன்கள் ஐந்தும் சகதியில் அழுந்தாதபடி என் சிந்தை சிறக்கச் செய்து சிவனே என் தலைவன் என்று பாராட்டி மணலில் எற்படும் ஊற்று போல் நெஞ்சம் உருகி ஓலமிட்டு போற்றி நிற்பது என்று இயலுமோ என் பொல்லாத மணியைப் புணர்ந்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | புணர்ச்சிப் பத்து | பாடல் எண் : 1

 சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை

வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டு கொண்ட
கருணா லயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
பொழிப்புரை :
 
ஒளிரும் தங்க குன்றை சிதைக்காத முத்தை பிரிக்க முடியாமல் வணங்கும் ஒன்றை அடைவதில் இறுதியான என்னை ஆண்டுகொண்ட கருணையானவனை கரிய மாலும் பிரமனும் எதிர்பட்டும் சார இடந்தாராது எனக்கு தன்னை தந்த என் ஆர அமுதை கூடி இணைந்திருப்பது என்று இயலுமோ என் பொல்லாத மணியை புணர்ந்தே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 10

 இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச்

சிறுகுடி லிதுஇத்தைப்
பொருளெ னக்களித் தருநர கத்திடை
விழப்புகு கின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே.
 
அடர்ந்த இருளால் எழுந்ததோர் வன்செயல்களால் ஆன இந்த சின்னகுடிலை பொருளாக எனக்கு அளித்து நரகத்திற்கு புக விரும்பும் என்னை தெளிவு பெற முன்று மலத்தையும் நொடிவரை தடுத்து காத்து சின்ன வார்த்தையால் சிறிய நெருப்பால் வளரும் தீ போல் மெய் நெறி அருளி பொய் நெறி நீக்கிய அதிசயம் கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 9

 உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்

எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
பெற்ற உடலில் நன்மை அருளும் பொருளான நறுமலர் எழுப்பும் வாசனையாக பற்ற வேண்டியதை பற்றாமல் நிலையற்ற பரம்பொருள் அதை பாராதே. பெற்றவன் பெற்ற பயனாக நுகர்ந்திடும் பித்தர் சொல்லை தெளிவாக உணராமல் அத்தன் ஆண்டு அடியார் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 8

 நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை

குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்
தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
முதலாகி இருந்ததை பிரித்து தேய்ந்து வளரும் பண்பில் வரும் குடத்தில் புகச்செய்து என்னை நோக்கி நுட்பமான சொல் உணர்த்தி பழுது இல்லாதபடி மேலே தூக்கி பொய் இல்லாதபடி அறுத்து தெழுவதற்கு தகுந்த சுடர்சோதி ஆக்கி ஆண்டு தனது அடியார்களின் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 7

 பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்

பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற்
சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதியங் கண்டாமே. 
 
ஓட்டை உள்ள சுவர் கொண்ட ஊன் உடல் புழுக்கள் உருவாகும் பொய்யான கூரை இதை மெய் என்று கருதி நின்று இடர்களுடன் காலம் கழிப்பவனை முத்து மாமணி மாணிக்க வைரத்தை ஒத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டு அடியார்களின் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 6

 எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என்

ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற்
கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
எண்ணியதே இல்லை எழுத்து ஐந்தை என் ஏழ்மையாலே. நாடியதே இல்லை கலை ஞானிகளுடன் எனக்கு நல்ல செயல்கள் இல்லாமையால். மண்ணிலே பிறந்து மண்ணிலே இறக்க ஏதுவான என்னை அண்ணல் ஆண்டு அடியார்களில் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 5

 பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன்

பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேநின்று
குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 
 
வாழ்த்து பாடுபவருடன் கூடி சென்று பாடவில்லை பலவித மலர் பறிந்து ஏத்தவில்லை, கூத்தலை அழகு செய்த பெண்களின் திறத்தால் குடி கெடுகின்ற என்னை இரவு ஒழிக்க வெளிச்சமான எம்மிறை வெளிச்சமான பாம்பை தலையில் அணிந்தவன் ஆண்டு தன் அடியார் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 4

 பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர்

காரணம் இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருள் கூடிடும்
உபாயம தறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற்
கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 
 
பித்தன் என்று என்னை உலகத்தார் அழைக்கும் காரணம் இதுதான். ஒத்திசைந்து சென்று திருவருள் கூடிடும் உபாயத்தை அறியாமல் செத்து போய் கொடிய நரகத்தில் விழ முற்படுகின்றவனை அத்தன் ஆண்டு தன் அடியார் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 3

 முன்னை என்னுடைய வல்வினை போயிட

முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதி யதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
முன்பு என் கொடிய செயல்களை ஒழித்திட முக்கண் உடைய என் தந்தை, தன்னை யாவரும் அறிவதற் அரிதானவன், அடியவர்களுக்கு எளிமையானவன், பொன்னை அடைந்ததைப் போல் வளர்ந்த கூந்தலில் இளமையான நிலாவை வைத்து அன்னையை ஆண்டு தன்னை அடியார்களின் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டோமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அதிசயப் பத்து | பாடல் எண் : 1

 வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று

மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன உவமனி லிறந்தன
ஒண்மலர்த் திருப்பாதத்
தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
 
சேமித்த செல்வமாய் மாணிக்க ஒளி ஒன்றை நினைத்து உருகாமல், செய்யப்பட்ட செப்பு போன்ற மார்பழகு உள்ளவர்களிடம் திறத்தை காட்டி நெந்து போகும் என்னை, ஈடற்ற உவமை காட்டமுடியா இணை மலர் திருபாதத்தை கொண்ட அப்பன் அடியர் கூட்டத்தில் கூட்டிய அதிசயத்தை கண்டாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 10

 வெஞ்சே லனைய கண்ணார்தம்

வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே
நானோர் துணைகாணேன்
பஞ்சே ரடியாள் பாகத் தொருவா
பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 
 
வஞ்சகம் மிகுந்த கண் உடையவர்களின் கோபத்திற்கு ஆட்பட்டு துன்பம் அடைந்தேன். ஞானச்சுடரே இனம் வெறுக்கும் நான் ஒரு துணையும் அறியவில்லை மென்மையான பெண்மையை பாகமாக கொண்டவனே உன் பவளத் திருவாயால் அஞ்சதே என சொல்வாய் என்று ஆசைப்பட்டேன் அறிந்துக்கொள் அம்மானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 9

 செடியா ராக்கைத் திறமற வீசிச் 

சிவபுர நகர்புக்குக் 
கடியார் சோதி கண்டு கொண்டென் 
கண்ணிணை களிகூரப் 
படிதா னில்லாப் பரம்பர னேஉன் 
பழஅடி யார்கூட்டம் 
அடியேன் காண ஆசைப் பட்டேன் 
கண்டாய் அம்மானே. 
 
தொடர்ந்து வளரும் சொடி போன்ற உடலை திறத்துடன் மறந்து வீசி சிவபுர நகர் அடைந்து உன் அடியாரால் சோதி கண்டுக்கொண்டேன் கண்களால் மகிந்தேன் மேல் கிழ் என்ற படி இல்லாம பரத்தை ஆள்பவனே உன் பழய அடியார் கூட்டத்தை அடியேன் காண ஆசைப்பட்டேன் அறிந்துக்கொள் அம்மானே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 7

 பாரோர் விண்ணோர் பரவி யேத்தும்

பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா உலகந் தந்து
வந்தாட் கொள்வானே
பேரா யிரமும் பரவித் திரிந்தெம்
பெருமான் எனஏத்த
ஆரா அமுதே ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
 
உலகத்தார்களும் விண்ணவர்களும் பரந்தபடி மதித்து ஒழுகும் பரனே பரஞ்சோதீ வந்து அருள். தொடர்ந்து வராத நிலைத்த உலகில் ஆட்கொண்டவனே ஆயிரம் பெயர் கொண்டு பரவி திரியும் என் பெருமான் என உயர்வு செய்ய ஆர அமுதே ஆசைப்பட்டேன் அறிந்துக்கொள் அத்தனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 5

 அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி

அடியே னுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்
விடையாய் பொடியாடீ
எளிவந் தென்னை ஆண்டு கொண்ட
என்னா ரமுதேயோ
அளியன் என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 
 
புண் உள்ள உடலை புறம்பாக தோல் கொண்டு மூடி செய்யப்பட்ட உடலை அடியனுக்கு அளித்தாலும் அதில் புளியம் பழம் போல் மனம் என்றும் உடல் என்றும் தனித்திருந்தேன் இருந்தும் எனக்கு விடையாக சிறுமையுடன் எளிமையாக வந்து என்னை ஆண்டு கொண்ட என் ஆர அமுதே என்னை அளிக்கவே ஆசைப் பட்டேன் அறிந்துக்கொள் அம்மானே.
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 3

 சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ்

சிறுகுடி லிதுசிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட்
கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
 
சீழ் ஒழுகி ஈ மொய்த்து அழுக்கோடு திரியும் சிறுகுடில் இந்த உடம்பு சிதையும் எனஙே கூவி அழைத்துக்கொள் என் மன்னனே கூத்தனே காத்துக் கொள்ளும் குருமணியே தேவா தேவர்களுக்கும் அரிதான சிவனே சற்றே என் முகத்தை பார்த்து வா என ஆசைப்பட்டேன் அறிந்து கொள்
#திருவாசகம்
 

திருவாசகம் | ஆசைப்பத்து | பாடல் எண் : 2

 மொய்ப்பால் நரம்பு கயிறாக

மூளை என்பு தோல்போர்த்த
குப்பா யம்புக் கிருக்ககில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்
என்னா ரமுதேயோ
அப்பா காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
 
அங்கு இங்கு என மொய்க்கும்படியாக நரம்பு என்ற கயிறால் பின்னி முளை எலும்பு மேல் தோல் போர்த்திய உடலில் இருக்க விருப்பம் இல்லை எனவே கூவி அழைத்துக்கொள் என் மன்னனே எந்த பால் சேர்ந்தவருக்கும் அப்பால் பட்டவனே என் ஆரமுதே அப்பா உனை காண ஆசைப்பட்டேன் அறிந்து கொள் அம்மானே
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 10

 வழங்குகின் றாய்க்குன் அருளா ரமுதத்தை

வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கி னேன்வினை யேன்என்
விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந்
துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.
 
அருள் அமுதத்தை ஙாரி வழங்குகின்றாய் அநை விழுங்குகின்றேன் இருப்பினும் விக்குகின்றேன் என் வல்வினையால் இது என் விதி இன்மையே எனவே தண்ணிர் பருகக் கொடுத்து உய்வடைச் செய் என வருத்துகிறேன் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 9

 பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல்

தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை
வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை
யேஅறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 
 
பிரிவைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இருக்கும் அன்பர்கள் அருள் மழை பெய்யும் திருவடியின் கிழ் மாற்றம் அற்ற செல்வத்தை அடைந்தார்கள். உன்னை வாழ்த்தும் நெறி அறியாத என்னை உடைமையாக உடையவனே அடியேன் உன் அடைக்கலமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 8

 மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின்

மலரடிக்கே
கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின்
குறிப்பறியேன்
பாவிடை யாடுகுழல் போற் கரந்து
பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.
 
மாவடுவில் இருக்கும் வடு போன்ற கண் இருப்பவளை பாகமாக கொண்டவன் மலரடிக்கே அழைத்திட வேண்டும் கும்பிட கோயில் அமைக்க வேண்டும் என்ற குறிப்பை அறியேன் பாவற்கு ஆடும் குழல் போல் அசைந்துக் கொடுத்து பரந்து உள்ளம் ஆட்டத்தை நிறுத்தும் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 6

 மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்

திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்
தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன்
வல்வினையேன்
ஆழியப் பாஉடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.
 
மென்மையான பார்க்கும் கண்ணை உடையவர்கள் வன்மத்தினால் திடமான தயிர் கட்டிகள் உடைந்து பானையின் ஒட்டுவது போல் தளர்ந்து போனேன். வாழ்த்தி எப்பொழுது வணங்குவேன் கடினமான வினைகள் செய்தவானான நான். தொடர் ஈரம் உடைய கடலை உடையவனே என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 5

 சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் 

திறம்மறந்திங் 
கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன் 
மைத்தடங்கண் 
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண் 
ணோர்பெருமான் 
அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன் 
அடைக்கலமே.  
 
சிக்கவைக்கும் இதழ் கொண்டவர் கூட்டத்தால் நின் திறத்தை மறந்து இருள் தரும் உடலில் இருந்து தவிக்கின்றேன் மை இட்ட மருட்சி உடைய மான் போல் பார்வை கொண்டவளை பாகமாக கொண்ட பெருமான் அருள் செய்யவேண்டும் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 4

 பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின்

கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான்
இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்
சுறவெறிய
அழிகின் றனன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 
 
அளவற்று பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில் நின் திருவடியில் புணர்ந்து அதை அழிக்கின்ற அன்பர்கள் ஏறி மேன்மை அடைந்தார்கள். யானோ கடலில் இடர்பட்ட சுழியில் சென்றது போல் மாதர் மேல் முடிவற்ற காமத்துடன் அழிகின்றேன் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 3

 பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத் 

துப்பெரும்பிச்சுத் 
தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என் 
மனத்தினுள்ளே 
வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி 
யாமல்நின்ற 
அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன் 
அடைக்கலமே.  
 
பெருமைக்கு உரிய பெரிய அளவுடையவன் பிறவியை வேர் அறுக்கும் பெரிய பிச்சை தரும் பெரிய அளவுடையவன் சகலத்தையும் அடக்கிய பெரிய அளவுடையவன் என் மனதில் வரும் பெரிய அளவுடையவன் மலரோன் நெடுமால் அறியாத நின்ற அருமையான பெரிய அளவுடையவன் என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலமே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 2

 வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின்

பெருமையினாற்
பொறுப்பவ னேஅராப் பூண்பவ னேபொங்கு
கங்கைசடைச்
செறுப்பவ னேநின் திருவரு ளால்என்
பிறவியைவேர்
அறுப்பவ னேஉடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.
 
வெறுப்பதையே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால் பொறுப்பவனே விடம் கொண்ட பாம்பையும் அணிபவனே பொங்கும் கங்கை உடையவனே நின் திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே என்னை உடைமையாக்கிக் கொண்டவனே அடியேன் உன் அடைக்கலாமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | அடைக்கலப்பத்து | பாடல் எண் : 1

 செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்

தமைந்த
பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான்
பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி
ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன்
அடைக்கலமே.
 
செழுமையான கமல மலர் திரளான நின் சேவடி சேர்ந்து பழுத்து முழுமை பெற்ற அடியார் கடந்து போயினர். யானோ பாவியானேன் புழுக்கள் உடைய இழிவான உடலுடன் அர்த்தமற்ற கல்வியால் ஞானமில்லா அழுக்கு மனதை உடைய என்னை உடைமையாக கொண்டவனே நான் உன் அடைக்கலமே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 10

 அளித்து வந்தெனக் காவஎன் றருளி 

அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில் 
திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன் 
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 
வளைக்கை யானொடு மலரவன் அறியா 
வான வாமலை மாதொரு பாகா 
களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன் 
கயிலை மாமலை மேவிய கடலே.  
 
தேவைகள் எதுவோ அதை அளித்தும் அச்சமற்றவனாக்கிய அருட்கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகாமல் இருந்தேன் திருப்பெருந்துறை மேவிய சிவேனே வலம்புரி சங்குடன் இருப்பவனுடன் மலரவன் அறியாத வானவர்களின் மாமலையே பெண் ஒரு பாகம் கொண்டவனே களிப்பு மிகுந்து கலக்கிடுகின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே.  
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 9

 ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் 

நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் 
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய் 
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய் 
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே 
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய் 
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் 
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.  
 
உயர்ந்தோர் நிறைந்த ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் உன்னை பணிந்து நிற்க மாறுபட்ட என்னை நயமுடன் இனிமையாக ஆண்டாய் காலனது உயிர் தன்வசம் செய்த பூ போன்ற கழல் உடையவனே கண்களின் கைகளாய் நீரையும் அங்கியை கைகளிலும் மாலும் சப்தமாய் அமரும் அந்த மலர்க்கே அரக்கனையும் வந்திட பணித்தாய் மீனும் நீல மலரும் நிலவிய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை மேவிய சிவளே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 8

 போது சேரயன் பொருகடற் கிடந்தோன்

புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் [கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ
சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
விரிந்த மலரில் சேர்ந்த அயன், கடலில் கிடந்தவன், வெளிப்பட்ட தேவர்கள் என எல்லாரும் நிற்க, என்னை குறிப்பிட்டு சீராட்டி நின் குரைகழல் காட்டி குறிப்பாக கொள் என்று உணர்த்த நின் தொண்டர் கூட்டத்தில் யாது செய்வது என்பதை அறியாது இருந்தேன். மருந்தே உன் அடிமை இடர்படுவது இனிமையானதா? ஈரம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 7

 மாய னேமறி கடல்விடம் உண்ட

வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
மாயம் செய்பவனே திரையாக நின்று மறிக்கும் கடல் விடத்தை உண்ட மறைமணியே கண்டத்தில் எழும் அமுதே இனம் சேர்க்காத நான் உன்னை நினைக்கவும் அறியவில்லை நமசிவய என்று உன் அடியை பணியவுமில்லை பேய் போன்றவனாகினும் பெருநெறி காட்டவேண்டும் பிறையை சடையில் பெருத்திய பிஞ்ஞகனே குழைந்தையாக நின்ற அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 6

 அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்

கார்கி லேன்திரு வருள்வகை யறியேன்
பொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க
என்செய் கேன்இது செய்கஎன் றருளாய்
சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
உடலை துண்டாக்கிக் கொள்ளமாட்டேன் துணிந்து தீயில் கருகவிடமாட்டேன் திருவே இறுதியை அடையும் வகையும் அறியேன் அமைதி காக்கவும் அறியேன் உடல் விட்டு போகும் இடமும் அறியேன் வாழ்த்துகிறேன் எனக்கு விடை தரும் பங்காளனே உன்னை பிரிந்து இருக்க இறக்கவும் இல்லை என்ன செய்வேன் எது செய்யவேண்டும் என்பதை அருள்செய் வரையறுக்கப்பட்ட நீர் நிறைந்த வயல்கள் சூழும் திருப்பெருந்துறை மேவிய சிவனே. 
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 5

 ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்

ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
நாத னேஉனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 
 
மனிதர்களை ஆட்டிப் படைக்கும் தலைவர்களின் விதிகளை ஒழித்து தன் விருப்பத்தில் என் ஐயனே என்றும் உன் அருள் வழியில் இருப்பேன். நாட்டின் தலைவர்களும் நாட்டில் உள்ளவர்களும் நாடும் பொருளே நாதனே உன்னை பிரியா அருளைக் காட்டி தேவ உன் கழலிணைக் காட்டி உடல் என்ற நிலையற்றதை கழிக்கும் அருள் செய்வாய். மாயம் செய்பவர்களின் தலைவனின் தலைவனே திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 4

 அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்

அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
அன்பானவர்களும் மற்றும் அருந்தவம் செய்து முயல்பவர்களும் அயனும் மாலும் மற்றும் மெழுகாய் உருகி நினைப்பவர்களும் என பலர் உன்னை நோக்கி நிற்க, என்னிடத்தில் என்ன கண்டாய், வன்புடன் மூர்க்கமான என் சிந்தை, மரக்கண் என்றபடி இருக்கும் செய்யப்பட்டது போன்ற கண், காதுகள் இரும்பை போல் கடினமாகவும் இருக்கிறது காண ஆராய இருக்கும் துறையாய் உள்ள சிவலோக, திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 3

 புலைய னேனையும் பொருளென நினைந்துன்

அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையி னால்நடந் தேன்விடைப் பாகா
சங்க ராஎண்ணில் வானவர்க் கெல்லாம்
நிலைய னேஅலை நீர்விட முண்ட
நித்த னேஅடை யார்புர மெரித்த
சிலைய னேஎனைச் செத்திடப் பணியாய்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 
 
தகுதியற்ற என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து அருள் புரிந்தாய், அனைத்தும் புரிந்துக் கொண்டே மகிழ்ந்து முதன்மையாக நடந்தேன், விடை உரைக்காமல் உணர்த்துபவனே, சங்கரா எண்ணில் சிறந்த வானவர்களுக்கு எல்லாம் நிலையானவனே, அலை நீரில் இருந்து விடத்தை உண்டவனே, நித்தம் இருப்பவனே உன்னை அடையாதவர்களை அகற்றிடும் சிலையனவனே, என்னை செத்திடப் பணிக்காதவனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 2

 புற்று மாய்மர மாய்ப்புனல் காலே

உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
 
புற்றாக மாறும் அளவிற்கு முயல்பவரும் மரமாய் மாறும் அளவிற்கு முயல்பவரும் நீரும் காற்றை மட்டுமே உணவாக கொண்டு முயல்பவரும் எல்லா உலகத்தவரும் மற்றவரும் வாடி நின் மலர் அடியை காணாமல் இருக்க என்னை ஒர் வார்த்தையால் கவரப்பட்டு ஆட்கொண்டாய் பதைக்கவோ மனம் மிக உருகவோ அறிந்தவன் நான் இல்லை பரியான உடல் விட்டு இன்னும் செத்திடவில்லை திரிந்து அலைகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
‪#‎திருவாசகம்
 

திருவாசகம் | செத்திலாப்பத்து | பாடல் எண் : 1

 பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்

புதும லர்க்கழ லிணையடி பிரிந்துங்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 
 
பொய்யான என் அகத்தின் உள்ளே நெகழ்ச்சியால் புகுந்து அமுது ஊறும் புதிய மலர் இணை அடிகளால் பிரித்து உன் வசமானேன் இன்னும் செத்திடவில்லை அய்யோ விழித்திருந்து உள்ளம் கருத்துடன் செயல்படுவதை இழந்தேன் ஐயனே அரசே அருள் தரும் பெருங்கடலே அத்தனே அயன் மால் அறிய முடியா விளக்க முடியா மேனியனே செயல்படும் விதத்தை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 9

 சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்

ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. 
 
வெளிச்சம் போல் வியபித்த உருவமே உருவம் அற்ற ஒருவனே விளக்கமாக சொல்ல முடியாத ஆதியே நடுவானதே முடிவே பந்தம் அறுக்கும் ஆனந்த பெருங்கடலே தீது இல்லாத நன்மையான திரு அருள் தரும் குன்றே திருப்பெருந்துறை உறையும் சிவனே எவ்வகையில் என்னை விட்டு போகமுடியும் என்பதை அருள் செய் எனக்காக இணையடி தந்தவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 8

 பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்

பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதீ.
 
பார்த்து அறியும் அண்டம் அனைத்துமாய் விரிந்து பரந்த படரும் ஒளிப்பரப்பே நீரில் நிறைந்த தீயே நினைப்பதற்கு அரிதான அழுக்கற்றவனே நின் அருள் வெள்ளத்தின் சிறப்பு பொருந்தியபடி எழுந்த ஓர் தேனே திருப்பெருந்துறை உறையும் சிவனே யார் யார் எனக்கு இங்கு அயலாக இருக்கு முடியும் ஆனந்தமாக ஆக்கும் என் சோதியே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 7

 இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்

தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. 
 
இன்றே எனக்கு அருளி இருளை அகற்றி அகத்துள் எழும்பும் ஞாயிறாய் நின்று உனது தன்மையை நினைப்பு போதும் என்ற அளவிற்கு நினைத்தேன் நீ அன்றி வேறு ஒன்று இல்லை கடந்து கடந்து அணுவாய் தேய்ந்து ஒன்றும் திருப்பெருந்துறை உறையும் சிவனே எந்த ஒன்றும் நீயால்லாமல் இல்லை இருந்தும் யார் உன்னை அறிவாரோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 6

 இரந்திரந் துருக என்மனத் துள்ளே

எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே. 
 
என் மனதுள்ளே யாசித்து யாசித்து உருக எழுக்இன்ற சோதியே இமைக்காதவர்களின் சிரத்தில் பொலிவுடன் விளங்கும் கமல வடிவானவனே திருப்பெருந்துறை உறையும் சிவனே எங்கும் இருக்கும் ஆகாயம் நீர் நிலம் தீ காற்று என்றும் அவை கடந்தும் இல்லை என்ற தன்மையுடன் காக்கும் உருவே மகிந்தேன் உன்னைக் கண்ணுறக் கண்டு கொண்டு இன்றே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 5

 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே

ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே.
 
சிறிதும் குறை இல்லாத முழுமையான நிறைவே குறையற்ற அமுதே இறுதியாகாத கொழுந்து விட்டு ஒளிரும் சுடர்க் குன்றே மறையாய் மறையின் பொருளாய் வந்து என் மனதில் பொருந்திய மன்னே தடைப்பட்டு சிறைப்படாத நீர் போல் என் சிந்தையில் பாயும் திருப்பெருந்துறை உறையும் சிவனே இறைவனே நீ என் உடலில் இடத்தை உரிமையாகக் கொண்டாய் இனி உன்னை எப்படி இரக்கம் காட்டச் செய்வேன்.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 4

 உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்

உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே
குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்
குறிகினேற் கினியென்ன குறையே.
 
உணர்ந்த மாமுனிவர்கள் தேவர்கள் மற்றும் ஏனையோர் உணர்வுக்கு தெரிய வரும் பொருளே ஒப்பிலாததே எல்லா உயிர்களுக்கும் உயிரே என் பிறப்பை அறுக்கும் எனக்கான மருந்தே உருவாகும் இருட்டிலும் தெளிந்த தூய வெளியே திருப்பெருந்துறை உறையும் சிவனே குணங்கள் அற்ற இன்பமே உன்னை குறியாகக் கொண்டேன் இனி எனக்கு என்ன குறையே.
‪#‎திருவாசகம்‬
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 3

 அரைசனே அன்பர்க் கடியனே னுடைய

அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 
 
மன்னவனே அன்பானவர்களின் துணையானவனே அடிமை என் தந்தையே மேலும் மேலும் கனியும்படி எனக்குள் புகுந்து நின்று உருக்கி பொய்யாகும் இருளை அழிந்த மெய்சுடரே அலை போதாதபடி இருக்கும் அமுதக் கடலே திருப்பெருந் துறை உடைய சிவனே உரை கேட்ட தருணமே விறைந்து உணரும் ஓர் உணர்வே நான் உன்னை உரைப்பது எப்படி என நீயே உணர்த்து.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 2

 அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை

ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யான்இதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே.
 
அன்பில் மிகுதியால் மனமும் உடலும் மகிழ்ச்சியாய் கசிந்து உருக எல்லை அற்றவன் இனிமையான அருள் தந்தான் நானோ இதற்கு கைமாறு செய்ய இயலாதவன் முதலாகவும் அடுத்ததாகவும் முழுவதாகவும் பரந்த முடிவானவனே முடிவற்ற முதலே தென்பெருந்துறை உடையவனே சிவபெருமானே சிறப்பு பொருந்திய சிவபுரத்து அரசே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் திருப்பதிகம் | பாடல் எண் : 1

 மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்

புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடைய அன்பே. 
 
முரண்பட்டு மாறி நின்ற என்னை மயக்கிடும் வஞ்சனையான புலன்களின் வழியை அடைத்தே அமுது எனக்குள் ஊறி வளரும் பரஞ்சோதியாக உள்ளதை உள்ளபடி காண வந்தருள்வாய் தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந் துறையில் உறையும் சிவனே ஈடு இணை இல்லாத பதங்கள் யாவற்றையும் கடந்த இன்பமே என்னுடைய அன்பே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 10

 நல்கா தொழியான் நமக்கென்றுன்

நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
யருளாய் என்னை உடையானே. 
 
நமக்கு அருள்புரியாமல் ஒழியமாட்டான் அவனது நாமத்தை பிதற்றி கண்களில் நீர் வடிய வாழ்த்தாத வாய் வணங்காத மனம் என்று இருந்து இப்பொழுதே நினைந்து உருகி பலகாலம் உன்னை பாவித்து புகழ் பரப்பி பொன் அம்பலம் என்றே விலகாது நிற்கும் உயிருக்கு இரங்கி அருள்வாய் என்னை உடைமயாக்கி மகிழ்பவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 9

 சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்

திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமந்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.
 
சிரிப்புடன் இருப்பார்கள் மகிழ்வோடு இருப்பார்கள் தேன் போல் இனிமையாக இருப்பார்கள் கூடிக் கூடி உன்னைப் பற்றிய உயர்வான சொல்களை விளக்கமாய் உரைப்பார்கள் அதை உருக்கமாய் கேட்பார்கள் மதிப்பார்கள் வேறுவேறாய் உன் திருநாமத்தை தங்களுக்கு சூட்டி மகிழ்வார்கள் பொன்னம்பலத்தே ஆடும் தலைவா என்பார்கள் அவர்கள் முன்னே தந்திரம் மிகுந்த இனத்தை மதிக்காத நாய் போல் இருப்பேனோ என்னை நம்பி இனிமையை அருள்வாயாக.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 8

 அருளா தொழிந்தால் அடியேனை

அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ.
 
இறை அருள் இல்லாமல் ஒழிந்தால் அஞ்சாதே என்று இந்த அடிமையை ஆறுதல் சொல்லி தேற்றுபவர் யார் உயர் பொருளாய் என்னை புகுந்து ஆட்கொண்ட பொன்னே பொன் அம்பலத்து கூத்தனே மாறுபட்ட அறிவு கொண்ட மனம் உள்ளவர்களுடன் உன்னை பிரிந்து வருந்தும் என்னை தெளிவு பெற்றவர் கூட்டத்தில் சேர்க்காமல் செத்தே போனேன் என்றால் நகைக்க மாட்டார்களோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 7

 இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்

என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள்
வாழ்வே வாவென் றருளாயே.
 
இரக்கம் உள்ள நமக்கு அம்பலத்தே ஆடும் கூத்தன் எனது நான் என்று இருமாந்து இருக்கும் அருமையற்ற அற்பனை கற்பித்து ஆண்டாய். ஆள்பவர் இல்லாமல் வீணாகும் பொருளாய் போவேனோ நெருக்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் கூட்டத்தில் வந்து சேர எங்கள் வாழ்வே என்னை வா என்று அழைத்து அருள் செய்யாயே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 6

 ஏசா நிற்பர் என்னைஉனக்

கடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும்
பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந்
திருவோ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும்
எந்தாய் இனித்தான் இரங்காயே. 
 
என்னை பிறர் ஏசாமல் நிறுத்துவார்கள் உனக்கு அடிமை என்பதால் பேசாமல் நிறுத்துவார்கள் அதே சமயத்தில் நானும் உன் அருளை அனுபவிக்காமல் நிற்பேன் தேகத்தை ஆள்பவனே நேசிப்பவர் சூழ்ந்து இருக்கும் திரு வோலக்கம் என்ற புண்ணிய இடத்தை சேவிக்க ஈசனே பொன் அம்பலத்து ஆடும் என் தந்தையே இனியும் இரக்கம் காட்டமாட்டாயோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 5

 அரைசே பொன்னம் பலத்தாடும்

அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் னடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ.
 
அரசனே பொன் அம்பலத்தில் ஆடும் அமுதே என்றும் உனது அருள் நோக்கி இரைக்காக கொக்கு இரவு பகல் காத்திருப்பது போல் ஏக்கமுடன் இருந்தேன் கரை அடைந்த உன் அடியார் மகிழ்ச்சி அடைய காட்சி கொடுத்து உன் அடிமை என் பொருட்டு பிரைமோர் கலந்த பால் திரிந்து நெய் வெளிப்படும் அது பாலில் மறைந்தது போல் மௌனமானால் என்னை பிறர் ஏசாமாட்டார்களோ.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 4

 முழுமுத லேஐம் புலனுக்கும்

மூவர்க்கும் என் றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள்
வான்குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோஎன்
றழுமது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 
 
முழுமைக்கும் முதலானதே ஐந்து புலன்களுக்கும் மூவருக்கும் எனக்கும் வழியாக அமையும் முதலே உனது பழைய அடியார்கள் திரன்ட கூட்டத்தில் முதலாக எழுந்தருளும் உன்னை எனக்கு இரங்கு என வேண்டி அழுது நிற்காமல் மற்றபடி என்ன செய்வேன் பொன்னம்பலத்து அரசே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 3

 உகந்தா னேஅன் புடைஅடிமைக்

குருகா உள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால்
தக்க வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன்
பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 
 
விருப்பமானவனே அன்புடன் செயல்படும் அடிமைக்கு உள்ளத்தே உணர்வோடு அணுக கடினமான நான் உன்னை அறிய முறையிட்டால் தகுந்தபடி அவனே மகத்துமாய் வழி வகுத்தான் உன் அடியார்களுக்குள் வாழ வருபவனே உன் திருமுகத்தை எனக்கு காட்ட மறுத்தால் விடியல் அற்று என்னை முடித்துக்கொள்வேன் பொன் அம்பலமே என் முழு முதலே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 2

 முன்னின் றாண்டாய் எனைமுன்னம்

யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
பொன்னம் பலக்கூத் துகந்தானே.
 
முன்னே நின்று என்னை ஆள்கின்றாய் என்றாலும் நான் என்னை என்னால் ஆகிறது என்று முயன்று பின் இருந்து ஏவல் செய்கிறேன் அதன் பிறகே அனுபவம் பட்டு ஒழிந்தேன் என் பெருமானே எனக்குள் நின்று அருளி என்னை வரவழைத்து பாதுகாக்க இல்லை என்றால் உன் அடியார்கள் என்னை யார் என்று வினவ மாட்டார்களோ பொன் அம்பலக் கூத்தை விரும்பி ஆடுபவனே.
#திருவாசகம்
 

திருவாசகம் | கோயில் மூத்த திருப்பதிகம் | பாடல் எண் : 1

 உடையாள் உன்றன் நடுவிருக்கும்

உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
ளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
 
உன்னை உடைமையாக கொண்டவள் நடுவில் இருக்கும் உடைமையானவளை நடுவில் நீ இருத்திக்கொண்டு அடியேனை நடுவாக வைத்து இருவரும் இருப்பதால் அடையேன் உன் அடியார்களின் மத்தியில் இருக்கும் அருளை புரிந்திடு பொன்னம்பலத்தே முடியாத முதலே என் கருத்தாக இருப்பதுவே முடியும் படி செய்திடு முன்னின்றே.
‪#‎திருவாசகம்‬