திருக்குறள் யோக விளக்கவுரை
குருநாதர் - சிவயோகி
மு.ஆ.சிவக்குமார்
வணக்கம் அன்புள்ளங்களே...
உலகப் பொதுமறை திருக்குறளுக்கு விளக்கம் தந்தவர்கள் அனேகம் பேர் உண்டு. தமிழ் கூறும் நல்லுலகில் இந்த எளியோனும் எனக்குப் புரிந்ததை என்னால் உணரப்பட்டதை எனக்கு புரிந்த படியே நான் எழுதுகிறேன். இது உங்களுக்கு பொருத்தமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. எனக்கு அது அவசியமும் இல்லை.
ஆனால் மூலத்தை எந்த விதத்திலும் சிதைத்து விடாமல் பொருளை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். என்னதான் இருந்தாலும் வள்ளுவரைப் போல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் வள்ளுவத்தை முழுவதுமாக நான் புரிந்து கொண்டதாக நினைக்கிறேன். வாருங்கள் என் உரை உங்களுக்கு அப்படி உதவியாக இருக்கலாம்.
முதலில் அதன் நோக்கம் அறம், பொருள், இன்பமென்று மூன்றாக பிரித்திருக்கிறார். அறத்துடன் பொருளைச் சேர்த்து இன்பமாக இருப்பவன் வீடுபேறு அடைகிறான் என்ற விதத்திலேதான் அது எழுதப்பட்டிருக்கிறது. வீடுபேறு என்பது வெளியே எங்கேயோ இருப்பது அல்ல. அது இங்கேயே இப்பொழுதே இந்த கணமே ஏற்படுவது.
இக்கணத்தில் வாழும் ஒரு மனிதன் எப்போதுமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பான். அவன் அறமுள்ளவனாக இருப்பான். பொருள் நிறைந்தவனாக இருப்பான். அறம் இல்லையென்றால் அவனுக்கு பொருள் இருக்காது. பொருளில்லையென்றால் அவனுக்கு இன்பமும் இருக்காது.
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் தமிழ்ச் சான்றோனாகிய வள்ளுவனின் வாக்கு. வள்ளுவனை பின்தொடர்தல் அல்லது வள்ளுவனை புரிந்து கொள்ளுதல் அல்லது வள்ளுவனை வழிமுறையாகவோ வழிகாட்டியாகவோ ஏற்றுக்கொள்வது என்பது ஒரு தனி மனிதனுக்குச் சிறப்பானது. காரணம் அவன் மதம் கடந்த சிந்தனையாளன், மனிதநேயம் மிக்கவன்.
இங்கிருந்து எங்கோவொரு காலத்தில் மனித சமூகம் எப்படியோ இருந்த ஒரு இருட்டான காலத்தில் ஒரு வெளிச்சமாக இருந்திருக்கிறான். அவன் வெளிச்சம் இன்றுவரை பரவிக் கொண்டிருக்கிறது. திருக்குறளை படிப்பதனால் அகஇருட்டு அழிந்து வெளிச்சம் ஏற்பட்டு புறஇருட்டை நீங்களாகவே அழிக்குமளவிற்கு உங்கள் சுயவெளிச்சம் மேலோங்கி விடுகிறது.
திருக்குறளை படிக்கும் பொழுது எனக்குள் எண்ணிலா ஆனந்தம் பொங்கி வழிவதை நான் கண்டிருக்கிறேன். எனக்குள் இருந்த என் குழப்பமெல்லாம் தீர்ந்து போயின. நானொரு தெளிந்த மனிதனாக மாறுவதற்கு திருக்குறள் ஒரு மூலக்காரணமாக இருந்தது. எனவேதான் இதை எழுதினேன்.
மற்றவர்களும் இப்படி தெளிந்துவிட வேண்டும் ஆனந்தமடைந்துவிட வேண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் உயர்ந்த நோக்கம்.
அருள் கூர்ந்து தமிழ் நெஞ்சங்களே அல்லது தமிழ் தெரிந்து கொண்ட நெஞ்சங்களே இந்த நூலை படிக்கும் பொழுது கொஞ்சம் உணர்வோடு படியுங்கள். ஏதோ எழுத்துக்களும் வார்த்தைகளும் மட்டுமல்ல அவைகள். அதைத்தாண்டிய உணர்வுகள் அதனுள்ளே இருக்கின்றன. நீங்கள் படித்து இன்புறுங்கள்.
இந்த வையகம் உய்யவும் மனித வளம் மேலும் ஓங்கவும் எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருக்கவும் திருக்குறள் ஓர் உன்னத நூல்.
அதன் தன்மை அதன் அறிவு அதனுடைய வெளிச்சம் அதனுடைய முழுமை அதனுடைய ஆழம் இவையெல்லாமே மனித நாகரிகத்தின் உச்சமாகவே இருக்கிறது.
காலம் பழையதாக இருப்பதினால் அது அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளோடு பின்னப்பட்டு இருந்தாலும் சமகாலத்திற்கும் பொருந்தும் விதத்தில் அதில் அநேக கருத்துக்கள் இருக்கின்றன. வருங்காலத்திற்கும் பொருந்தும் விதமாகவும் அது எழுதப்பட்டிருக்கிறது.
மனிதன் முழுமையடைவதற்கு ஒரு முழுமையான நூல் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.
தமிழில் எனை பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதத்தில் இந்த நூலை எழுதி மகிழ்கிறேன்.
வாழ்க தமிழ்!.. வாழ்க வள்ளுவம்!.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)
௧, அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல ஆதியில் பகுக்க முடியாத வானம் (பகவான்) முதலாக கொண்டது இந்த உலகம்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)
௨, பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)
௩, மலராகிய உபதேசத்தை அடைந்தவரை அடைந்தவர், நிலத்தில் நீண்ட காலம் வாழ்வார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)
௪, தேவை தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்கு துன்பம் என்றும் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)
௫, இருளாகும் இருவினைகளை சாராது இறைவனை புரிந்து கொண்டவர் புகழப்படுவது உறுதி.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)
௬, உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உண்மையாக
இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (7)
௭, நிகரற்றவனின் நிழல் அடைந்தால் இன்றி மனக்கவலைகள் மாறுவது இயலாது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8)
௮, முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)
௯, கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை, என் குணம் கொண்டவனை வணங்குவதே தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)
௧௦, இறைவன் அடி சார்ந்தால் பிறவி கடலை நீந்தலாம். இல்லையேல் நீந்த முடியது.
அதிகார விளக்கம்!
கடவுள் உண்டு அது இந்த உலகத்திற்கு துவக்கமாக உள்ளது. அதை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்து கொள்ளாமல் படிப்பதால் எந்த பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளைக் கடந்த அவரே குரு. அறியாமை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையை புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன் சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல் மனக்கவலை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால் பிறவி துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணங்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலை கடக்க இறைவனின் துணை அவசியம்.
காணொளி:-
http://youtu.be/JUyYeLfr798?list=PLXzX9wD_JRiF_ecim4GEfX_ofAFyPsuG5
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (11)
௧, வெட்டவெலிளிருந்து பூமி தோன்றியதால் அதுவும் அழிவில்லாதது என்று உணரப்படும்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (12)
௨, துப்பாதவருக்கு துப்பும் பொருளையும் உருவாக்கி துப்போவது போல் துவுவதே மழை.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. (13)
௩, நீரால் நிறைந்த இந்த உலகத்தில் விண்ணிலிருந்து வரும் நீர் பொய்த்தால் உள்ளிருந்து வாட்டும் பசி.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)
௪, புயல் என்று அழிக்கும் வெள்ளபெருக்கு தனது தன்மையை இழந்தால் உழவர்கள் உழுவதை நிறுத்துவார்கள்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)
௫, அழிப்பதுவும் அழிந்தவர்களை வளம் செய்வதுவும் என எல்லாம் செய்வதே மழை.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. (16)
௬, சிறு துளியாக மழை இல்லாமல் போனால் புல்லும் முளைக்காமல் போகும்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். (17)
௭, பெரிய கடலும் தனது நீர்மையை இழக்கும் மேகமாக தனது நீரை
தரவில்லை என்றால்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)
௮, சிறப்பான பூசனைகள் செல்லாது வரியார்க்கும் வானோர்க்கும் வானம் வழங்கவில்லை என்றால்.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். (19)
௯, அற்புத உலகத்தில் தானம் தவம் இரண்டும் இருக்காது வானம் வழங்கவில்லை எனில்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. (20)
௧௦, நீர் இல்லை என்றால் உலகம் இல்லை யாருக்கும் வான் இல்லையேல் ஒழுக்கம் இல்லை.
அதிகார விளக்கம்!
வெட்டவெளியில் இருந்தே உலகம் தோன்றியது, அங்கிருந்தே மழை வருவதால் அதை அமிழ்தம் என்கிறோம். அது பூமியை மதித்து துப்பாதவர்களுக்கு துப்புகிறது. உள்ளிருக்கும் பசிக்கு உணவாகவும், உழவர்களுக்கு உற்ற துணையாகவும் சமயத்தில் புயலாகவும் இருக்கிறது. மழைத்துளி இல்லை என்றால் புல்லும் முளைக்காது. தானம், தவம், பக்தியால் செய்யும் பூசை அனைத்திற்கும் ஆதாரம் மழை. நீர் இல்லை என்றால் உயிர்களால் ஆன பூமி (உலகம்) இல்லை, வெட்டவெளி இல்லை என்றால் உயிர்களுக்கு ஒழுக்கம் இல்லை.
காணொளி:-
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. (21)
௧, ஒழுக்கத்தால் (இயல்பாக) நீர்த்து போனவர்களின் பெருமையை பகிர்ந்து கொள்ள துணிவு வேண்டும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)
௨, துறந்தாரின் பெருமையை துணையாக கூறினால் உலகமோ
இறந்தவர்களை எண்ணிக்கொண்டது.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. (23)
௩, இரண்டின் வகை அறிந்து இங்கே இயல்பனார் பெருமையை பேசுவதே உலகம்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. (24)
௪, உயிர் என்ற தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வாழ்வென்ற ஆதாரத்திற்கு விதை.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (25)
௫, ஐந்தாக பிரிபவனின் ஆற்றலை அகல் விளக்கின் தீபம் போல் காக்கும் தலைவன் யானை அடக்கிய இந்திரன்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
௬, அரிய செயல்களை செய்பவர் பெரியவர்கள், சிறியவர்கள்
அரிய செயல்களை செய்ய முடியாதவர்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (27)
௭, சுவை, பார்வை, தொடுதல், கேட்டல், முகர்தல் என ஐந்தின் வகையாக அறிவதே உலகம்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28)
௮, நிறைவான மொழி மனிதர்களின் பெருமையை, மண்ணில்
மறைவான மொழி காட்டிவிடும்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. (29)
௯, குணம் என்ற குன்றின் மேல் நிற்பவர்கள் கோபத்துடன் கண நேரம்கூட இருப்பது கடினம்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)
௧௦, அந்தணர் (அந்தம் அறிந்ததால் அதாவது முடிவு அறிந்ததால்) என்பவர்கள் அறமுடையவர் மற்ற எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால்.
அதிகார விளக்கம்!
போதும் என்ற நிறைவை தரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து நிறைவடைந்தவர்களை விரும்பி அறிய துணிவு அவசியம். இறந்தவர்கள் எல்லாம் நிறைவானவர்கள் என்று எண்ணக்கூடாது. இரண்டால் ஆன உலகை புரிந்து கொள்ளவேண்டும். புலன்களை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதே சிறந்தது. அப்பொழுது, மனித ஆற்றல் முற்றிலும் உணரப்பட்டு இந்திரனைப்போல் வாழலாம். இத்தகைய பண்புள்ளவர்களே அரிய செயல்களை செய்வார்கள். புலன்கள் புலப்படுத்தும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தால் இந்த உலகை அறிகிறோம். நிறைவானவர்கள் பெருமையை போற்றுவதே மறைநூல்கள். நற்குணம் அடைந்தவர் கோபத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்வது இல்லை. அந்தணர் என்பவர் யாவரும் எல்லா உயிரும் இன்புற்று மகிழவே எண்ணுவார்.
காணொளி:-
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31)
௧, சிறப்பு வரும் செல்வமும் வரும் அறமுடன் ஆர்வமாய் செயல்படுபவன் உயிர்க்கு.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)
௨, அறமுடன் உயர்வு போல் செயல் இல்லை, இதனை மறுத்தால் உயர்வு இல்லை கேடுதான்.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். (33)
௩, ஏற்கும் வகையில் இருப்பதே அறச் செயல், ஏற்க முடியாதது எப்படியாவது எல்லாவற்றையும் செய்வது.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)
௪, மனதளவிலேயே மாசு இல்லாமல் இருத்தலே அனைத்திற்கும் அறம்
மற்றவை நீர்த்துவிடும்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (35)
௫, அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடுங் கோபம், வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)
௬, பிறகு பார்ப்போம் என்று இல்லாமல் அறம் செய்யவேண்டும், இல்லையேல் வாழ்த்தும் பொழுது வாழ்த்தாத துணைபோல் ஆகிவிடும்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37)
௭, அறம் இதுவென எண்ணாதே பல்லக்கில் அமர்ந்தவனுடன் சுமப்பவனை சேர்த்து.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். (38)
௮, வாய்த்த நாள் வீணாகாமல் நல்லது செய்தால் அது ஒருவருக்கு வாழ்நாள் வழியை மூடும் கல்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)
௯, அறச் செயல்களால் வருவதுவே இன்பம் மற்றவை வெளியே கூட மதிக்கப்படுவது இல்லை.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. (40)
௧௦, பலசெயல்களை அறத்துடன் செய்யும் ஒருவருக்கு பழியும் பல உயர்வை தரும்.
அதிகார விளக்கம்!
மனதால் நேர்மையுடன் இருப்பதே அறம், அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும், மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி. அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடுங் கோபம், வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல் தனக்காக செய்யவேண்டும். அடிமையாக இருப்பது அறமாகாது. அறமே இன்பத்தை தரும்.
காணொளி:-
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)
௧, குடும்பம் நடத்தும் ஒருவன் இயல்பாக மாறிய மூவருக்கும்
நல்லது செய்யும் துணை.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. (42)
௨, போதும் என்று நிறைவை அடைந்தவருக்கும், நிறைவு அடையாதவருக்கும், இறந்தவருக்கும், குடும்பத்தானே துணையாவான்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (43)
௩, தெரியும் புலன் அறிந்தவர் சிறந்த மனிதர்களை உபசரிப்பது, ஐந்து புலன்கள் தலையில் ஒத்திசைவு கொள்வது போல் இருக்கும்.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)
௪, பழித்துவிடாதவாறு பக்குவமாக உண்ணுவது புரிந்து விட்டால்
வாழ்க்கையின் பாதையில் இடையுறு இல்லை.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (45)
௫, அடுத்தவர்களும் வாழவேண்டும் என்ற மனமும், தனக்குத் தானே உண்மையாக இருக்கும் குணமும், உண்டாக குடும்ப வாழ்க்கையே பண்போடு பயன் தருவதாக இருக்கிறது .
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன். (46)
௬, அறத்துடன் இருக்க குடும்பத்தானாக இருக்க வேண்டும்
புறத்தே சென்று பேறு அடைந்தவன் யார்?
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. (47)
௭, இயல்பாக குடும்ப வாழ்க்கை வாழ்பவனே உண்மையறிய முயலும் அனைவரிலும் தலையானவன்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)
௮, வாழ்வின் முறை அறிந்து வாழ்ந்து அறத்திற்கு கேடு செய்யாத
குடும்ப வாழ்க்கை, உண்மையறிய முறை செய்வதைவிட முறையானது.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)
௯, அறம் எனப்படுவதே குடும்ப வாழ்க்கை அதுவும் பிறர் பழிக்கும்படி இல்லாமல் இருப்பது நன்று.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)
௧௦, உலகத்தில் வாழும் முறையுடன் வாழ்பவன் வான்போன்ற
தெய்வமாக மதிக்கப்படுவான்.
அதிகார விளக்கம்!
உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு மேற்கொண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்வின் சிறப்பு கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். குடுப்பத்திலிருந்து கற்க முடியாதவர் துறப்பதால் எதையும் கற்க முடியாது. இல்வாழ்வு போன்ற சிறந்த நோன்பு இல்லை. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.
காணொளி:-
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)
௧, வீட்டிற்கு தேவையானதை சிறப்புற செய்பவளை தனதாக கொண்டவன் வளம் பல காணும் வாழ்க்கைத் துணை அடைந்தவன்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (52)
௨, வீட்டை சிறப்பாக ஆளும் தகுதி இல்லாதவள் இல்லத்தரசியானால் (மனைவி) வாழ்வில் எவ்வளவு சிறப்புகள் இருந்தும் பயன் இல்லை.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)
௩, இல்லை என்பதே இல்லத்தாளின் குணமாக இருந்தால், உள்ளது எது
இல்லத்தாளை விட துன்பம் தரும் ஒன்று.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். (54)
௪, பெண்ணை விட பெறவேண்டிய ஒன்று எதுவும் இல்லை, கற்பென்னும்
திடத்தன்மை உண்டாக்க பெற்றால்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (55)
௫, சிறப்பு பெற்றவர்களை தொழ மறுத்து தனது கணவனை மட்டுமே தொழுபவள் எதிர்பார்க்கும் பொழுது பெய்யும் மழை போன்றவள்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)
௬, தன்னை காத்து, தான் கொண்டவர்களை பாதுகாத்து, தகுதிக்கு உதாரணமாய் வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. (57)
௭, காவலில் வைத்து காப்பது என்ன செய்யும், பெண்களின் தன்னை தான் காக்கும் தன்மையே முதன்மையானது.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58)
௮, அடைந்தவர் அடைந்தது அடையவேண்டிய பெண்ணை
அறிய சிறப்பும் புதிய ஒளியும் இருக்கும் உலகில்.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. (59)
௯, புகழ் அடைந்த குடும்ப வாழ்க்கை வாழாதவருக்கு இல்லை இகழ்ந்து பேசுவார் முன் காளை போன்ற கம்பீர நடை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60)
௧௦, முழுமை என்பது குடும்ப வாழ்க்கை அதன் சிறப்பே நல்ல குழந்தைகளை பெறுவது.
அதிகார விளக்கம்!
வாழ்தல் என்பது உள்ளது சிறத்தல் ஆகும். அதற்கு துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம்பல கிடைத்துவிடும். ஆனால் நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டிய பொழுது வரும் மழைப் போன்றவள் மனைவி மேலும், தன்னைக் காத்து தன்னை சார்ந்தவரையும் காப்பவள் எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்கலம்.
காணொளி:-
https://youtu.be/qkq8GOEAiAo
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
https://youtu.be/L4e_MJlFFkc
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. (361)
௧, ஆசைப்படுதல் என்பது எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் தவறாமல் பிறப்பைத் தரும் வித்து.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (362)
௨, தேவையான பொழுது தேவை எண்ணமற்ற நிலை மற்றபடி தேவையற்றதும் தேவை என்றால் வரும்.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல். (363)
௩, தேவையற்ற நிலைக்கு ஒப்ப சிறந்த செல்வம் இங்கு இல்லை, வேறு எங்கும் அதற்கு ஒப்பானது இல்லை.
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். (364)
௪, தூய்மை என்பது ஆசை இல்லாது இருத்தல், மற்றவை வாய்மையை விரும்புவதால் வரும்.
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். (365)
௫, பயம் இல்லாதவர் என்பவர் ஆசை இல்லாதவர், மற்றவர்கள் இல்லாமையை இல்லாது செய்யாதவர்கள்.
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. (366)
௬, இறையச்சம் கொள்வதே அறம் ஒருவரை ஏமாற்ற நினைப்பதே ஆசை.
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். (367)
௭, ஆசையின் செயல்களை ஆழமாக தொலைத்தால், தர்மத்திற்கு மாறாத செயல்கள் தன் தேவைக்கு ஏற்ப வரும்.
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். (368)
௮, ஆசை இல்லாதவருக்கு இல்லை என்றாகிவிடும் துன்பம் ஆசை இருப்பின் தவறாது மேன்மேலும் வரும்.
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். (369)
௯, இன்பம் தடைப் படாது நீளும், ஆசை என்ற துன்பத்திற்கு துன்பம் கொடுத்தால்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (370)
௧௦, ஆராய முடியாத இயற்கை ஆசையை அகற்றினால் அதுபோன்றே நிலைத்த தன்மையை இயற்கை தரும்.
அதிகார விளக்கம்!
பிறப்பை தருவது ஆசை. தேவை என்று வேண்டுதல் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பிறவாத நிலை மட்டுமே மற்றவை தானாகவே வரும். ஆசை அற்ற நிலையே தூய்மையானது. இதுவே இன்பத்தின் பிறப்பிடம்.
காணொளி:-
https://youtu.be/HTFkD1zx5Eo
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. (371)
௧, கைப்பொருள் ஆகவேண்டும் என்றால் அசைவற்ற ஆர்வம் தோன்றும் அழிவதென்றால் சோர்வு தோன்றும்.
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. (372)
௨, முட்டாளாக மாற்றும் இழிவான ஊழ்வினை அறிவை அகற்றிவிடும், ஆக்கம் தரும் ஊழ்வினையோ அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். (373)
௩, நுட்பம் நிறைந்த நூல்கள் பல படித்தாலும் மாறாக பிறவியால் பெற்ற உண்மையான அறிவே மிகும்.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. (374)
௪, இரண்டு வேறுபாடுகள் உலகத்தில் இயற்கையாக அமைந்துள்ளது, மதிக்கப்படுபவராக இருத்தல் வேறு தெளிந்த ஞானம் உள்ளவராக இருத்தலும் வேறு.
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. (375)
௫, நல்லது எல்லாம் தீமையாகவும் மாறும் தீமையும் நல்லதாகிவிடும் செல்வம் அடைய ஊழ் இருந்தால்.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. (376)
௬, பாதுகாப்பினும் முடியாது தம்பால் உரிமையற்றது, முயன்று விளக்கினும் விலகாது தமக்குரியது.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377)
௭, வரையறுத்துக் கொடுத்தவன் தந்த வாய்ப்பு அல்லாமல் கோடி தொகுத்தாலும் அனுபவித்தல் அரிது.
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். (378)
௮, துறந்தவர் போன்றே அறிவில்லாதார் உடன்படுவார் ஊழ் உடன்படுத்தும் எனின்.
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். (379)
௯, நாற்று நடும் பொழுது நல்லது என்று அறிந்தவர் அறுவடைக்கு துன்பம் அடைந்தது யார்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (380)
௧௦, விதியை விட (ஊழ்) வலிமையானது வேறொன்று நம்மை ஆட்படித்தினும் விதியே முந்தி இருக்கும்.
அதிகார விளக்கம்!
பிறவிப் பயன் பொருத்தே ஆர்வமும் சோர்வும் தோன்றுகிறது. அறிவு சார்ந்த நூல்கள் கற்றாலும் தன் பிறவி அறிவே மேலோங்கி இருக்கிறது. தவறு சரியாகவும் சரி தவறாகவும் பிறவிப்பயனால் மாறுகிறது. இரு வேறு உலகம் இருக்கிறது திருவுடையவன் தெளிந்தவன் என உயர்வை தருகிறது. விதி என்ற பிறவிப் பயன் மட்டுமே மாற்றவே முடியாத நிலையில் இருக்கும்.
காணொளி:-
https://youtu.be/OVtUOYGr7rE
அறத்துப்பால் அதிகார விளக்கம்
அறத்துப்பால் பொதுவாக பால் என்றால் பற்றியிருப்பது என்று அர்த்தம். அறத்தை பற்றியிருப்பதால் அறத்துப்பால். அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என வள்ளுவப் பெருந்தகையே அறத்திற்கு புதிய இலக்கணம் வகுக்கிறார்.
இல்வாழ்க்கையே அதாவது வாழ்க்கையை வாழ்பவனுக்கு தேவையான பொருளை அடைவதற்கு முன்பு வாழ்க்கை என்பது என்னவென்றும் எது சரி எது தவறு என்றும் வாழ்க்கை என்பது எப்படியிருக்கிறது என்று வரையறுத்தும் பேசுகையில் வள்ளுவனார் மீண்டும் முதல் அதிகாரத்தையே சுட்டிக்காட்டுகிறார்.
எது நமக்கு ஆரம்பமோ அல்லது துவக்கமோ அந்த கடவுளையே முன்மொழிந்து மேலும் கடவுளுக்கு அடுத்தபடியாக உள்ள சிறப்பு மிகுந்த வான்மழையை சொல்லி அப்படியே நீர்த்தவர்கள் அதாவது நம்மிலிருந்து பிரிந்தவர்களின் பெருமையையும் சொல்லி அறத்தை வலியுறுத்துகிறார்.
அறத்தின் பயனான இல்வாழ்க்கையின் உண்மையுரைத்து அதில் வாழ்க்கைத்துணையின் பங்களிப்பான நலமுள்ள புதல்வர்களைப் பெறுதலின் மேன்மை சொல்லியும் அன்பை உடைமையாக கொண்ட விருந்தோம்பல் மூலம் தமிழினத்தின் பண்பாட்டை வழிமொழிந்து விருந்தோம்பல் வேள்விக்கு நிகரானது என்று பெருமை பேசுகிறார்.
மேலும் இனியவை கூறும் தன்மையின் பண்பை வெளிப்படுத்தி செயந்நன்றி அறிதலின் முக்கியத்துவம் சொல்லி நடுவு நிலைமையோடு அடக்கத்தை உடமையாக கொண்டும் ஒழுக்கத்தை வாழ்வின் உடமையாக போற்றியும் அந்த ஒழுக்கத்தின் மேன்மை பிறனில் விழையாமை என்று பயன் சொல்லியும் வாழ்வின் எத்தருணத்திலும் பொறையுடைமையோடு நடந்து அழுக்காறாமை வழி நின்றே வெஃகாமை நிலையறிவித்து புறம் பேசாமையை வழியுறுத்தி பயனில சொல்லாதே என்று பேச்சிற்கே புதிய அறம் வகுக்கிறார்.
பயனற்ற பேச்சால் தீவினையின் அச்சம் ஏற்படும் என்று எச்சரித்தும் ஒப்புரவு அறிந்து ஈகை செய்து எல்லோர்க்கும் உதவியாய் இருந்து புகழ் பெற வேண்டுமாய் வள்ளுவர் அறத்தை வழியுறுத்துகிறார்.
மேலும் புகழடைந்த மனிதன் புனிதத்தன்மை அடைய அருளை உடைமையாக கொண்டு முன்னேறிடவும் புலன்களின் இச்சையை அதாவது புலால் மறுத்து தவம் செய்திட கூடா ஒழுக்கம் நீங்கி கள்ளாமையென்ற நிலை மாறி வாய்மை வசப்பட்டு வெகுளாமை குணத்தால் இன்னாமை செய்யாதும் கொல்லாமையை வழியுறுத்தி உலகில் உள்ள எதுவும் நிலையாமையை காட்டுவதை சீர்தூக்கிக் காட்டி இயல்பாய் ஒவ்வொன்றிலும் வாழ்ந்து நிறைவையடைந்தால் துறவு தானாகவே ஏற்பட்டு மெய்யுணர்தலின் பக்கம் வரவும் மேலும் கவனம் வைத்து அவா அறுத்து அதாவது பிறவியை அறுப்பதற்கு துணைக்கூறி இவற்றையெல்லாம் ஊழ் தன்மையை உணர்ந்தால் அடையலாம் என்று போற்றிப் பாடுகிறார்.
அறத்தைப்பற்றி இப்படி பல காரணங்களை அல்லது வாழ்வியல் முறைகளையும் வாழ்வின் எதார்த்தங்களையும் அறத்தோடு அடைவது எப்படி என்பதையும் மேலும் அறத்தை முதலாவதாக கொள்பவனே பொருள் நிறைந்த வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்கிறான் என்று வள்ளுவர் வாயிலாக அறிகிறோம்...
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. (381)
௧, போர்ப்படை, குடிமக்கள், உணவு, ஆலோசனை தரும் அமைச்சர்கள், நட்பு, அரண்மனை ஆகிய ஆறும் பெற்றவரே அரசருள் சிறந்தவர்.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. (382)
௨, அச்சம் கொள்ளாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், ஆர்வமுடன் செயல்படுதல் ஆகிய நான்கும் குறைவின்றி இருப்பதே அரசருக்கு இயல்பு.
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு. (383)
௩, சோர்வு இல்லாது இருத்தல், கல்வி, துணிவுடன் செயல்படுதல் ஆகிய மூன்றும் நீங்காமல் இருக்க வேண்டும் நிலத்தை ஆள்பவருக்கு.
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. (384)
௪, அறத்திற்கு இழக்கு இல்லாமல் அல்லாதவற்றை விளக்கி, வீரத்திற்கு இழக்கு இல்லாமல் மானத்தோடு இருப்பதே அரசு.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)
௫, எது எப்படி அமையவேண்டும் என்று இயற்றுவதும் அதற்கான பொருளை ஈட்டுவதும் அதை காப்பதும் மேலும் அதன் செயல்களை ஒழுங்குபட வகுப்பதும் சிறப்பாக செய்வது அரசு.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். (386)
௬, பார்க்க எளிமையாய் எரிச்சல் ஊட்டும் வார்த்தைகள் தவிர்த்தவராய் இருக்கும் மன்னனின் ஆட்சி எல்லை விரிவடையும்.
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. (387)
௭, இனிமையான வார்த்தைகளுடன் உதவ வல்லமை படைத்தவருக்கு தனது வார்த்தைகள் படியே அமையும் உலகு.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். (388)
௮, இது இப்படி இருக்க வேண்டும் என்று முறை செய்து அதை காப்பாற்றும் மன்னவன் மனிதர்களுக்கு இறையாக வைக்கப்படும்.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (389)
௯, காதுகளும் கூசும் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளும் பண்புடைய மன்னனின் ஆளுமையின் கீழ் தங்கும் உலகு.
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. (390)
௧௦, தானம் செய்தல், (இலவசமாக கொடுத்தல் - விலை இல்லாத பொருள்கள் கொடுத்தல்) அடுத்தவர் கருத்துக்கு வாய்ப்பு அளித்தல், சிறந்த அரசாட்சி, மக்களை காத்தல் இந்த நான்கும் உடையவரே ஆட்சியாளர்களில் வெளிச்சமானவர்கள்.
அதிகார விளக்கம்!
ஆட்சி என்பது ஆற்றல் பொருந்தி இருக்க ஆறு அங்கங்கள் உடையதாக இருக்க வேண்டும். நன்கு திட்டம் செய்து யாவரும் நன்மை அடைய வழி அமைக்க செய்வதை இங்கே தெளிவு செய்கிறார் வள்ளுவர்.
காணொளி:-
https://youtu.be/X036sn6-af4
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391)
௧, படிக்க வேண்டும் பழுது இல்லாமல் படித்த பின் படித்ததற்கு ஏற்றபடி நடக்க வேண்டும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)
௨, எண் எனப்படுவதும் மற்றும் எழுத்து எனப்படுவதுமாகிய இந்த இரண்டும் கண்களைப் போன்றது அறிவுடன் வாழும் உயிர்களுக்கு.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (393)
௩, கண் உள்ளவர்கள் என்றால் கற்றவர்கள், முகத்தில் புண் உள்ளவர்கள் கல்லாதவர்கள்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (394)
௪, விருப்பமுடன் ஒன்றாக கூடி உள்ளத்தால் பிரிந்து இருத்தல் எல்லாம் புலவர்கள் தொழில்.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)
௫, உள்ளவர் முன் இல்லாதவர் நிலைப் போலவே எவ்வளவு கற்றிருந்தாலும் மேலும் கற்றுக்கொள்பவரே கற்றவர் அவ்வாறு செய்யாதவரே கல்லாதவர்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (396)
௬, தோண்டும் அளவிற்கு நீர் பெருகும் மணல் பாங்கான கிணற்றில் அதுபோலவே மனிதர்களுக்கு கற்கின்ற அளவிற்கு பெருகும் அறிவு.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (397)
௭, எந்த ஒன்றையும் நாடி அணுகாமல் உணராமல் எவன் ஒருவன் சிறிதளவும் கற்காமல் இருப்பது.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398)
௮, தனிமையிலும் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு உயர்ச்சியிலும் சிறந்ததாக மாறும்.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)
௯, தான் இன்பம் அடைந்தது போலவே உலகில் கண்டு மேலும் கற்க ஆசைக் கொள்வார் கற்று அறிந்தவர்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. (400)
௧௦, கேட்டை விளைவிக்காத விரும்பும் செல்வம் கல்வி அது ஒருவருக்கு பணத்தைப் போன்றது அல்லாமல் வேறொன்று இல்லை.
அதிகார விளக்கம்!
கல்வி கசடு என்ற கருத்து பேதத்தை உருவாக்கும் என்பதால் கசடற கற்பது அவசியம். எண்ணும் எழுத்துமான கல்வியே உலகை உணர்த்தும் கண்கள். கற்காமல் யாரும் இருக்க முடியாது கல்வியின் பொருட்டு இன்பம் அடைந்தவர் அடுத்தவரும் இதை அடைய ஆசைப்படுவார். கேடு விளைவிக்காத கல்வியே சிறந்த செல்வமாகும்.
காணொளி:-
https://youtu.be/DFQLkpExCYM
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (401)
௧, அரங்கம் இல்லாமல் வட்டாட்டம் ஆடுவதைப் போன்றதே நிறைந்த நூல்கள் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டுவது.
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. (402)
௨, கல்வி அறிவு இல்லாதவர் கருத்து சொல்ல ஆசைப்படுவது, மார்பழகு இல்லாதவள் பெண்மைக்கான ஆசைக்கொள்வதைப் போன்றது.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். (403)
௩, கல்வி அறிவு இல்லாதவர்களும் மிகவும் சிறந்தவர்கள், கல்வி அறிவு பெற்றவர் முன் பேசாது இருந்துவிட்டால்.
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். (404)
௪, கல்வி அறிவு இல்லாதவர்களின் வரையறை கழிக்க முடியாத நல்லதாக இருப்பினும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அறிவுடையவர்கள்.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். (405)
௫, கல்லாத ஒருவர் ஆர்வப்பட்டு முன்னின்று பேசினால் கேட்பவர்களுக்கு சோர்வு ஏற்படும்.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். (406)
௬, இருக்கிறார் என்ற அளவுடையார் அன்றி பயன்படாத களர் நிலத்தை போன்றவரே கல்லாதவர்.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. (407)
௭, நுட்பமுடன் ஆராயும் ஆற்றல் இல்லாதவர்களின் அழகு மண்ணால் செய்யப்படும் பொம்மை போன்றது.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. (408)
௮, நல்லவருக்கு ஏற்பட்ட வறுமையை விட கொடியது கல்லாதவருக்கு ஏற்பட்ட உயர்வு.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. (409)
௯, சமூக அமைப்பில் மேல் பிறந்த கல்லாதவர் கீழ் பிறந்த கற்றார் முன் ஏதும் அற்றவரே.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். (410)
௧௦, விலங்குகளுடன் மக்கள் இருப்பதைப் போன்றது, இலக்கை விளக்கும் நூல்களை கற்றவருடன் மற்றவர்கள்.
அதிகார விளக்கம்!
பல நூல்களை படிக்காமல் அரங்கம் ஏறுவது கட்டம் இல்லாமல் பகடை ஆடுவது போன்றது. படிக்காதவன் பேச முனைவது முலையில்லா பெண் காமுறுவதைப் போன்றது. எனவே கல்லாதவரின் சொல்லை கேட்க வேண்டாம் அது சோர்வை தரும், வறுமை தரும் துன்பத்தை விட அதிக துன்பம் தரும். சமூக ஏற்றத்தாழ்வு ஒழிக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு. கல்லாதவர் உயர்குலப் பிறப்பு என்றாலும் அவர் தாழ்ந்தவரே. கல்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பானவர்களே.
காணொளி:-
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)
௧, செல்வங்களில் சிறந்த செல்வம் செவிச் செல்வம் (நாதமான இறையை உணர்வதால்) அச் செல்வம் செல்வங்களில் முதன்மையானது.
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
௨, கேட்பது குறையும் பொழுது வயிற்றுக்கு உணவு சிறிதாவது கொடுக்கப்பட வேண்டும்.
(பசி எடுப்பதால் காதடைக்கும்)
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)
௩, கேட்கப்பட வேண்டியதை கேட்டு அறிந்தவர்கள், உலகில் சிறந்ததை சுவைப்பதில் மேலானவர்களுக்கு ஈடானவர்கள்.
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (414)
௪, கற்க இயலாவிட்டாலும் கேட்டு அறியவேண்டும் அது ஒருவருக்கு வறுமைக்கு உதவும் உற்ற துணைப் போன்றது.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். (415)
௫, வழுக்கும் இடத்திற்கு உதவும் ஊன்றுக்கோல் போலவே ஒழுக்கமானவர்களின் வார்த்தைகள் உதவும்.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)
௬, எவ்வகையிலும் நல்லவற்றை கேட்டு அறிதல் வேண்டும் அது எல்லா வகையிலும் சிறந்த உயர்வை தரும்.
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். (417)
௭, தவறாக உணர்ந்திருந்தாலும் அறியாமையை சொல்லமாட்டார்கள் கேள்வி அறிவால் உணர்ந்தவர்கள்.
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. (418)
௮, கேட்கும் ஆற்றல் பெற்றிருப்பினும் கேளாத தன்மையுடையதே, கேட்க வேண்டியதை கேட்காத செவி.
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. (419)
௯, நுட்பமானதை கேட்டு அறியாதவர் பணிவானவராக இருத்தல் அரிது.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். (420)
௧௦, செவியில் சுவையை அறியாது வாய் உணர்வு விரும்பும் மானிட பதர்கள் அழிந்தால் என்ன? அல்லது வாழ்ந்தால் என்ன?
அதிகார விளக்கம்!
உயர் ஞானம் எனப்படும் நாத அனுபவத்தை செவி தருவதால் அச் செல்வம் செல்வத்திற்கெல்லாம் முதன்மையானது. நாத ஒலி குறைந்தால் வயிற்றுக்கு உணவு தர வேண்டும். செவியின் சுவை உணர்ந்தவரே ஆன்றோர். அவர்கள் பிழைப்புக்காக முட்டாள்தனமான செயல்கள் செய்வதில்லை. நாத அனுபவம் அற்றவர் பணிவாக நடப்பதில்லை. செவியின் சுவையை உணராமல் வாய்ச் சுவைக்கே முன்னுரிமைத் தரும் மானிடப் பதர்கள் வாழ்வதும் சாவதும் ஒன்றே.
காணொளி:-
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். (421)
௧, அறிவு அழிவிலிருந்து காக்கும் கருவி, பகை கொண்டவருக்கு உள்ளே வந்து அழிக்கமுடியாத அரண்.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (422)
௨, சென்ற இடத்திற்கு ஏற்ப மாறாமல் தீமைகளைக் களைந்து நன்மைகளை ஏற்பது அறிவு.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423)
௩, எதைப்பற்றியும் யார் யார் என்ன சொல்ல கேட்பினும், அதைப்பற்றிய உண்மையான பொருளை காண்பதே அறிவு.
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. (424)
௪, எண்ணும் பொருளை உணர்தும்படிச் சொல்வதும், அடுத்தவர் வார்த்தையில் நுண்பொருள் காண்பதும் அறிவு.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. (425)
௫, உலகத்தை ஒட்டிய நட்பு பாராட்டினாலும் மலர்வதும் சுருங்குவதும் இல்லாததே அறிவு.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு. (426)
௬, உலக இயக்கம் எப்படி என்று அறிந்து அதற்கு ஏற்றார்ப் போல் உலகத்துடன் இணக்குவது அறிவு.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். (427)
௭, அறிவு உள்ளவர்கள் அடுத்து நடப்பதை அறிவார்கள், அறிவு இல்லாதவர்கள் அதை அறிய கல்லாதவர்கள்.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (428)
௮, பயப்பட வேண்டியதற்கு பயம் இல்லாது இருப்பது அறியாமை, பயப்பட வேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகளின் தொழில்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். (429)
௯, எதிர்ப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அறிவுடையவருக்கு இல்லை நடுங்கச் செய்யும் நோய்.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். (430)
௧௦, அறிவு உள்ளவர்கள் எல்லாம் உள்ளவர்கள், அறிவு இல்லாதவர்கள் என்ன பெற்றிருந்தாலும் இல்லாதவர்களே.
அதிகார விளக்கம்!
பகைவரால் கொள்ளை கொள்ள முடியாத அழிவையும் காக்கும் கருவியான அறிவு நன்றியுணர்வைத் தரும். யார் எதைப் பேச கேட்பினும் உண்மைப் பொருளை உணர்வதே அறிவு. உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு. நடுக்கமோ, பயமோ, அஞ்சுவதோ இல்லாமல் தேவையான எல்லாம் உடையவரே அறிவுடையவர்.
காணொளி:-
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (441)
௧, அறம் எனப்படும் வாழும் முறை அறிந்து, முன் அனுபவம் பெற்ற சிறந்த அறிவுடையாரின் உறவை அவரின் திறன் அறிந்து விரும்பி ஏற்க வேண்டும்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். (442)
௨, வந்த துன்பம் விலக்கி, அழிவை வருமுன் காக்கும் பெருமைப் பெற்றவரை விரும்பி ஏற்க வேண்டும்.
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (443)
௩, அரிதானவைகளில் அரிதானது பெரியவர்களை மதித்துக் காத்து உறவு கொண்டாடுவது.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)
௪, தன்னை விட பெரியவர்களின் உறவுப் பாராட்டி வாழ்வது வலிமையானவைகளில் எல்லாம் முதன்மையானது.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (445)
௫, விரும்பத்தக்கவரின் கண்ணாக வாழ விரும்பும் மன்னவன் விரும்பத்தக்கவரை அருகில் வைத்துகொள்ள வேண்டும்.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். (446)
௬, தகுதியுள்ளவர் கூட்டத்தோடு இணைந்து ஒழுக வல்லவர் இடத்தில், பகைவர் செயல் செயல்படுவது இல்லை.
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். (447)
௭, அறியாமையை அழுத்தமாய் அழிப்பவரை துணையாக கொண்டவரை யாரும் கெடுக்கும் நோக்கில் அணுக முடியாது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (448)
௮, அறியாமையை அழிப்பவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் ஆட்சி, அழிப்பார் இன்றியும் அழியும்.
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. (449)
௯, முதலாகும் உழைப்பு இல்லாதவர்க்கு இல்லை ஊதியமாகும் கூலி. மதில் போல் காக்கும் சான்றோர் இல்லாதவர்க்கு இல்லை சிறந்த நிலை.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். (450)
௧௦, பல நபர்கள் பகை கொள்ள பற்று கொள்வதை விட தீமையானது நல்லவர்கள் தொடர்பை விடுவது.
அதிகார விளக்கம்!
அறம் அறிந்த அநுபவம் பெற்ற அறிவாளியை, தன் நோய் போக்கி அடுத்தவர் நோய் போக்க வல்லவரை நட்பு பாராட்டும் திறன் அறிந்து நட்பாக்கிக் கொள்ளவேண்டும். அவர்களை தவறை தண்டிக்கும் இடிப்பாரையாகவும், தகுந்தபடி பாதுகாக்கும் மதிலாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பகை வளர்க்கும் பலர் உறவை நாடுவதைவிட நல்லார் தொடர்பை கைவிடாமல் இருப்பதே நல்லது.
காணொளி:-
https://youtu.be/wArNFOXQsmQ
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். (451)
௧, அற்பர்களுக்கு அஞ்சுவதே பெருமை சிறுமைதான் உறவுகளால் வளர்ந்து விடும்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. (452)
௨, நிலத்தின் இயல்பால் நீரானது தனது தன்மையில் இருந்து திரிந்துவிடும், அதுபோல் மனிதர்களுக்கும் தனது இனத்தின் இயல்பே அறிவு என்று அமைகிறது.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல். (453)
௩, மனதின் தன்மைக்கு ஏற்ப மனித உணர்ச்சி அமையும், கூடும் கூட்டம் பொறுத்தே அடையாளச் சொல் அமையும்.
(எனவே சேரும் சபை அறிந்து சேர்த்தல் நலம்)
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. (454)
௪, மனதின் இயல்பு போல் காட்டினாலும் ஒருவர் சார்ந்த இனத்தின் வெளிப்பாடாக இருப்பதே அறிவு.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். (455)
௫, நல்ல எண்ணங்கள் கொண்ட மனத்தூய்மையும், சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும் தான்இருக்கும் இனத்தின் தூய்மையால் சிந்தாமல் வரும்.
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. (456)
௬, மனதின் தூய்மையால் முடிவுகள் நன்றாக அமையும், இனத்தின் தூய்மையை காப்பவருக்கு இல்லை நன்மைகள் விளையும் வினை.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். (457)
௭, மனதின் சிறப்புத்தன்மை வாழும் உயிர்களுக்கும் நன்மை பயக்கும் இனத்தின் சிறப்புத்தன்மை எல்லா புகழையும் தரும்.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. (458)
௮, மனதின் சிறப்பு நன்றாக இருப்பவராயினும் உதாரணமாய் இருப்பவருக்கு இனத்தின் சிறப்பே உயர்த்திக் காட்டியது.
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. (459)
௯, மனநலத்தால் மறுமையும் சிறப்பாகும் மேலும் இனத்தின் நலமும் சிறந்து விளங்கும்.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். (460)
௧௦, நல்ல இனத்தை விட துணையாவது வேறு இல்லை, தீய இனத்தை விட துன்பம் தருவதும் இல்லை.
அதிகார விளக்கம்!
மானிட பதர்களான சிறிய இனத்துடன் அதே இனம் மட்டுமே உறவு பாராட்டும். இருப்பிடத்தின் குணங்கள் நம்மை பற்றிவிடும் என்பதால் அறிவற்றதை அறிவாக காட்டும் என்பதை உணர்ந்து மனதை தூய்மை செய்ய வேண்டும். மனத்தூய்மை உள்ள சான்றோர் இனப்பற்றுக் கொள்வதில்லை. மனத்தூய்மை உண்டானால் மறு பிறப்பும் நன்றாக அமையும் தீமையும் அண்டாது.
காணொளி:-
https://youtu.be/RXB4rfmv00M
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். (461)
௧, எந்தமாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதனால் கிடைக்கும் ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (462)
௨, பழக்கமான கூட்டத்தில் தேவையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஆலோசித்து கூட்டாக செயல்படுபவருக்கு அடையமுடியாத பொருள் என்று எதுவும் இல்லை.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். (463)
௩, வரவை எண்ணி மூலப் பொருளை இழக்கும் செயலை செய்யத்தூண்ட மாட்டார் அறிவுடையவர்.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். (464)
௪, தீர்க்கமாக அறியமுடியா ஒன்றை செய்ய முற்படமாட்டார்கள் இகழ்ச்சி என்ற குற்றத்திற்கு அஞ்சுபவர்கள்.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு. (465)
௫, இன்னது இப்படி இருக்கவேண்டும் என்று வகைப்படுத்தாமல் செயல்படுதல் எதிரிகள் நிரந்தரமாய் இருக்க வழி செய்துவிடும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். (466)
௬, செய்யத்தகாதவற்றை செய்வதால் கெடுதல் உண்டாகும், செய்யவேண்டியதைச் செய்யாது இருப்பினும் கெடுதல் உண்டாகும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)
௭, என்னென்ன நேரிடும் என்பதை எண்ணி ஒரு செயலை துவங்க வேண்டும், துவங்கிய பின்பு எண்ணலாம் என்பது இழக்கு.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். (468)
௮, நடைமுறைக்கு ஒத்துவராது என்று அறிந்தும் துவங்கினால் பலரால் பாராட்டப் பட்டாலும் தடைப் பட்டுவிடும்.
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. (469)
௯, நன்மை செய்தாலும் தவறு நடப்பதுண்டு ஒவ்வொரு தனிமனித பண்பை அறியாமல் செய்யப்படுவதால்.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. (470)
௧௦, பிறரால் இகழாதபடி சிந்தித்து செயல்பட வேண்டும் காரணம் தனக்கு பொருத்தமற்றதை ஏற்காது உலகு.
அதிகார விளக்கம்!
வரவும் செலவும் வரும் ஆதாயமும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் பழகியவர்கள் இடத்திலேயே தேவையானவர்களை தேர்ந்தெடுத்து செயல்பட்டால் தோல்வி வராது. செயல்படும் முன் சிந்திக்க வேண்டும் செயல்பட துவங்கிய பின் சிந்திப்பது தவறு. நன்மையிலும் தீமை உண்டாகும் காரணம் அதை பெறுபவர் பண்பைப் பொருத்ததே. பிறர் இகழாதபடி நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.
காணொளி:-
https://youtu.be/EMPiPEjpWNM
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (471)
௧, செயல்பட தேவைப்படும் ஆற்றல், தனக்கு இருக்கும் ஆற்றல், அடுத்தவரின் ஆற்றல், துணையாக அமையும் ஆற்றல் இவைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். (472)
௨, செய்ய முடிந்ததை அறிந்து அதன்படி செயல்படுபவருக்கு சாதிக்க முடியாதது இல்லை.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். (473)
௩, உடைமையாக கொண்ட வலிமையை சரியாக அறியாமல் ஆர்வமுடன் ஆரம்பித்து இடையிலேயே முடித்துக் கொண்டவர்கள் பலர்.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். (474)
௪, வாய்த்த சூழலை அறிந்து நடக்காமல் தனது வலிமையின் அளவை அறியாமல் ஆர்வப்பட்டவர்கள் விரைவில் அழிவார்கள்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். (475)
௫, மயில் இறகை போன்றதாலும் அச்சு முறியும், அதுவே அளவில் மிகுந்தால்.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். (476)
௬, நுனி மரத்திற்கு ஏறியவர் போல் தனது திறனை உயர்ந்ததாக மதிப்பிட்டவர் கிளை முறிந்து உயிர் முடிவை காண்பது போலவே முடிந்து விடுவார்.
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. (477)
௭, வழிபடுத்தும் அளவை அறிந்து கொடுக்க வேண்டும் அதுவே பொருளைப் போற்றி வழங்கும் நெறி.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (478)
௮, ஆக்கம் தரும் வரவு அளவில் குறைந்தாலும் கேடு ஏற்படாது, செலவு பெரியதாக இல்லாது இருந்தால்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)
௯, எது எப்படி என்ற அளவறிந்து எல்லைகள் கொண்டு வாழாதவர் வாழ்க்கை, எல்லாம் இருப்பதுபோல் தோன்றி ஏதும் அற்றதாய் கெடும்.
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். (480)
௧௦, தன்னிடம் உள்ளதை ஆய்ந்து அறியாது முறைவைத்து கொடுப்பது வளத்தை வலமாக கெடுக்கும்.
அதிகார விளக்கம்!
செயலின் வலிமை சுயம் மற்றும் துணையானவர்களின் வலிமை எதிரியின் வலிமை அறிந்து எது வேண்டாதது அதை விலக்கி செயல்பட சாதிக்க முடியாதது இல்லை. இளகுவானதாக இருப்பினும் அளவில் அதிகமானால் பாரம் கூடும். எனவே அளவறிந்து வாழ வேண்டும். வரவு குறைந்ததாக இருப்பினும் செலவு மிகாமல் இருக்க வேண்டும். தன்னிடம் உள்ளதை அறிந்து வாழ வேண்டும்.
காணொளி:-
https://youtu.be/3M3-xDiWqts
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)
௧, பகலில் வெற்றி பெரும் கூகையைக் காகம், இரவில் வெற்றி பெரும் காகத்தை கூகை, ஆகையால், வெற்றி வேண்டுவோர் காலத்தை கருத்தில் கொள்ளவேண்டும்.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. (482)
௨, பருவ காலத்தை அறிந்து ஏற்றபடி வாழ்தலே உயர்ந்த செயல்களைத் தடையற்று நடத்தும் கயிறைப் போன்றது.
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483)
௩, அரிய செயல் என்று எதுவும் இல்லை தேவையான கருவியும் காலமும் அறிந்து செயல்பட்டால்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். (484)
௪, உலகமே தனக்குரியதாக நினைப்பினும் கைக்கூடும், காலத்தையும் இடத்தையும் கவனித்துச் செயல்பட்டால்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். (485)
௫, கலக்கம் இல்லாமல் தகுந்த காலத்தை எதிர்ப்பாத்துக் காத்திருப்பார் உலகத்தின் உயர்வை வேண்டுபவர்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. (486)
௬, ஊக்கம் உள்ளவர்களின் அமைதி, பொருத்தமான தாக்கத்திற்கு பின்வாங்குதல் போன்றது.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (487)
௭, பொங்கி எழுந்தாலும் வெளியே காட்டாது இருப்பார்கள் காலம் கருதி கட்டுப் படுத்தும் அறிவுடையவர்கள்.
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. (488)
௮, பகைவரைப் பார்க்க நேரிடும் பாரத்தை சுமக்கவேண்டும் அவர்களின் அழிவால் கிழக்கின் தன்மைப் போல் துன்ப இருள் அகலும்.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். (489)
௯, அடைய முடியாத ஒன்றை அடைவதற்கு ஏற்ற சூழல் அமைந்தால், அதுவே நம்மால் செய்ய முடியாததை செயல்படுத்தும் காலம்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. (490)
௧௦, கொக்கைப் போலவே உரிய பருவத்திற்கு காத்திருந்து மேலும் அது குத்தி எடுப்பதைப் போலவே சரியாக இடத்தை பயன்படுத்த வேண்டும்.
அதிகார விளக்கம்!
காலம் அறிய மற்ற உயிர்களின் நடத்தையை ஆய்ந்து அதைப்போல் நாமும் காலத்தை தக்கபடி பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். பகல் சாதகமான சூழலை ஆந்தைக்கு தருவதில்லை என்பதால் இரவில் வேட்டையாடும். காலம் கருதி காத்திருப்பதே அனைத்திற்கும் ஆதாரம். தகுந்த காலத்தில் சரியாக செயல்கள் முடித்துக் கொள்ளவதே வெற்றிக்கு அடிப்படை.
காணொளி:-
https://youtu.be/9zBNCh4X4Bs
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. (491)
௧, முழுமையாக இடத்தை அறிந்து கொள்ளாமல் துவங்கக் கூடாது, எந்தச் செயலையும் இகழவும் கூடாது.
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். (492)
௨, முரண்பாடு உடைய கூட்டத்தை அடைந்தவருக்கும் நல்ல இடம் அமைந்தால் நன்மைகள் பல கிடைக்கும்.
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். (493)
௩, வழியற்றவரும் வழி கிடைத்து நல்ல இடம் அமர்ந்தால், வாழ்த்தாதவரும் வாழ்த்தும் வாய்ப்பை பெறுவார்.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். (494)
௪, எண்ணிய எண்ணத்தையே மாற்றிக் கொள்வார்கள் சேரும் இடம் அறிந்து சேர்ந்துக் கொண்டால்.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. (495)
௫, நிறைந்த நீரில் வெற்றிப் பெரும் முதலையை நீர் அற்ற இடத்தில் பிறவகைகளில் வெல்லப்படும். (இடம் பொறுத்தே நம் பலம் தீர்மானிக்கப் படுகிறது)
கடல்ஓடா கால்வால் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து. (496)
௬, நிலத்தில் ஓடும் தேர் கடலிலும், கடலில் ஓடும் நாவாய் நிலத்திலும் ஓடாது. இடம் பொறுத்தே செயல்பாடுகள் இருக்கும்.
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். (497)
௭, அஞ்சாமைத் தவிர வேறு துணை வேண்டாம், அளவுக்கு அதிகமாய் எண்ணம் இல்லாமல் சரியான இடத்தை அறிந்துச் செயல்பட்டால்.
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். (498)
௮, சிறிய படை என்றாலும் தனக்கு உரிய இடத்தில் இருந்து செயல்பட, வலிமையான படையும் தனது ஆர்வத்தை இழக்கும்.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. (499)
௯, சீரும் சிறந்த பாதுகாப்பும் இல்லையென்றாலும், மனிதனைத் தான் வாழும் இடத்திற்குச் சென்று தாக்குவதுக் கடினம்.
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. (500)
௧௦, கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டால் நரியும் வீழ்த்திவிடும், வேல்கண்டும் அஞ்சாதுப் போரிட்ட யானையை.
அதிகார விளக்கம்!
தடைகளை ஆய்ந்து அறிந்தபின் தகுந்த இடம் கண்டு எதையும் துவங்கலாம். தேர்ந்தெடுத்து செயல்பட்டால் தோல்வி வராது. செயல்படும் முன் சிந்திக்க வேண்டும் செயல்பட துவங்கிய பின் சிந்திப்பது தவறு. நன்மையிலும் தீமை உண்டாகும் காரணம் அதை பெறுபவர் பண்பைப் பொருத்ததே. பிறர் இகழாதபடி நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். சேற்றில் மாட்டிக் கொண்ட யானையை சிறு நரியும் சாய்க்கும் எனவே இடம் அறிந்து செயல்பட வேண்டும்.
காணொளி:-
https://youtu.be/lBWyJnCEhqY
௫௧, தெரிந்து தெளிதல் (51)
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். (501)
௧, அறம் என்ற அகவாழ்வு, பொருள் என்ற புறவாழ்வு, இந்த இரண்டிலும் இன்பம் காணுதல், இவற்றின் ஆதாரமாகிய உயிரின் தன்மை ஆகிய நான்கினைத் திறம்படத் தெரிந்து கொண்டால் தேர்ச்சிப் பெறலாம்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு. (502)
௨, தான் பிறந்த குடியின் குற்றத்தை நீக்கி அவமானத் தழும்புக்கு அஞ்சுபவரே தெளிவுக்கு அடையாளமானவர்.
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. (503)
௩, சிறப்பானவற்றைக் கற்றுக் குற்றங்கள் இல்லாதவர் இடத்திலும் தேடினால் குறை வெளிப்படாமல் இருப்பது கடினம்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (504)
௪, ஒருவரின் குணத்தை அறிந்துக் குற்றமும் அறிந்து அவைகளில் அதிகமானதை அறிந்து அதுவே அவரது பண்பாய்க் கொள்ளவேண்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (505)
௫, மதிக்கப்படுவதற்கும் மற்றபடி சிறுமைப் படுவதற்கும் அவரவர் செயல்களே அவரவர்களை வழி நடத்தும் கட்டளைக் கல்.
(கட்டளைக் கல் என்பது மன்னர்கள் மக்களுக்கு வழங்கும் கட்டளைகள் பொறிக்கப்பட்டு இருப்பது)
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. (506)
௬, இல்லாதவரை வளர்க்க விரும்பவேண்டும் மற்றவர்கள் பற்று இல்லாமல் பழிக்கு அஞ்சாதவர்கள்.
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். (507)
௭, ஆசையால் உந்தப்பட்டு அறிவற்றவரை முன்னேற்ற நினைப்பது எல்லா சிறுமைத் தனத்தையும் தரும்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். (508)
௮, தன்னளவில் தேர்ச்சிப் பெறாமல் அடுத்தவர் தேர்ச்சிப் பெற வழிகள் செய்தால் மாறாத துன்பம் ஏற்படும்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். (509)
௯, ஆராயாமல் யாரையும் தேர்ச்சிப் பெற்றவராக ஏற்கக் கூடாது. தேர்ந்தெடுத்தப் பின்பு தேர்ச்சிப் பெரும் பொருள்களைக் கேட்டு தெளிய வேண்டும்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். (510)
௧௦, தேர்ச்சிப் பெறாதவரின் விளக்கமும் தெளிந்தவரின் ஐயமும் மாறாத துன்பம் தரும்.
அதிகார விளக்கம்!
அகம் சார்ந்த அறமும், புறம் சார்ந்த பொருளும், நிலையான இன்பமும். உயரின் தன்மையும் அச்சமும் என நான்கையும் தெரிந்து தேறுவதையே தெளிவு எனலாம். நல்ல சூழலில் பிறந்தாலும் குற்றம் அற்றவனாக வாழ்வதே தெளிவு. அரியன கற்பதைக் காட்டிலும் தன் குற்றத்தை நீக்குவதே தெளிவு. குணம் குற்றம் சீர்தூக்கிப் பார்த்து மிகையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். தேராதவரின் பின் சென்றால் தீராத துன்பம் விளையும். தேறியவரின் ஐயமும் தேராதவரின் தெளிவும் தீராத துன்பம் தரும்.
காணொளி:-
https://youtu.be/KRVJwC4c8V4
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (511)
௧, நல்லதும் கேட்டதும் தேடி விரும்பிச் செய்யும் தன்மையால் நம்மை ஆளும்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. (512)
௨, வழி அறிந்து பலவாக பெருக்கி வளப்படுத்த உகந்தவற்றை ஆராய்ந்து அறிந்தவனே வினை செய்ய வேண்டும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. (513)
௩, எல்லாம் சிறக்க நினைக்கும் அன்பு, வாழ்தலின் எல்லைகளை புரிந்துக் கொள்ளும் அறிவு, எதை எப்படி செய்யவேண்டும் என்ற தேற்றம், நான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற அவாவின்மை இவை நான்கையும் நன்றாக அடைந்தவரே தெளிவுக்கு அடையாளம்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். (514)
௪, எத்தனை வகையில் தேர்ச்சிப் பெற்றவராக இருப்பினும், செயல்படும் வகையில் மாறுபடுகிறார்கள் மனிதர்கள் பலர்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. (515)
௫, எப்படி என்பதை அறிந்து ஆற்றலுடன் செயல்படுபவருக்கு அல்லாமல் செயல்படுவதில் மட்டுமே சிறந்தவனை தூண்டக்கூடாது.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். (516)
௬, செய்யத் தகுந்தவரை அணுகி, செய்ய வேண்டியதை அறிந்து, தகுந்த நேரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (517)
௭, இந்தச் செயலை இதன்பொருட்டு இவரால் செய்யமுடியுமா என்று ஆய்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க வேண்டும்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். (518)
௮, செய்யத் தகுந்ததா என்று அறிந்த பின்பே அதற்கு உரியவரை செய்யத் தூண்ட வேண்டும்.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. (519)
௯, செயல்படும் பொழுது செயல்படுவதை சரியாக செய்பவர் உறவை தவறாக நினைப்பவர் தனது மதிப்பை இழப்பார்.
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. (520)
௧௦, செயல்படுபவர் வருத்தம் அடையாதபடி இருக்க, எப்பொழுதும் விரும்ப வேண்டும் ஆட்சியாளர்கள், அதனால் உலகமே வளமாய் மாறும்.
அதிகார விளக்கம்!
நாடும் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை உண்டாகும். சேர்த்து வாரி அதிகரிக்க தெரிந்தவர் செய்வதே செயல். அன்பு, அறிவு, புரிதல், அவாயின்மை என நான்கும் உள்ளவரே தெளிவானவர். செயல்பட வாய்ப்பு இருந்தும் செயல்பட முடியாதவர்கள் பலர். செயல்பட தகுதியானவரை நாடி தகுந்த காலத்தில் செய்வதே சரி. தகுதியற்றவரை தேர்ந்தெடுப்பதால் மரியாதை குறையும். தகுதியானவரை மதிப்புடன் நடத்துவதே ஆட்சியாளர்களின் கடமை.
காணொளி:-
https://youtu.be/IxWchoY4QQk
௫௩, சுற்றந்தழால் (53)
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. (521)
௧, உரிமைக் கொண்டாட ஒன்றும் இல்லாத பொழுதும் உறவுப் பாராட்டுவது சுற்றத்தாரிடத்தில் உண்டு.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். (522)
௨, விருப்பம் நீங்க சுற்றம் அமைந்தால் அழிவற்ற ஆக்கம் பல உண்டாகும்.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. (523)
௩, உறவாடி மகிழாதவன் வாழ்க்கை கரையற்ற குளத்தில் நீர் நிறையாதுப் போன்று கெடும்.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். (524)
௪, அக்கம் பக்கம் உள்ள உறவுகளுடன் இணைந்து வாழ்வது செல்வத்தால் வரும் பயன்.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். (525)
௫, கொடுப்பதும், இனிமையாய் பேசுவதும் நடைமுறைப் படுத்தினால் இருக்கும் உறவுகளுடன் மேலும் உறவுகள் வளரும்.
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். (526)
௬, நிறைய கொடுப்பதும் சினத்தை சேர்க்காமலும் இருப்பவர் பக்கம் இருக்கும் சுற்றம் போல் மாநிலத்தில் மற்றவருக்கு இல்லை.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. (527)
௭, காகம் மறைக்காமல் அழைத்து உண்ணும் செயல்போல சுற்றம் பாராட்டுபவரின் செயலும் உள்ளது.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (528)
௮, பொது நோக்கு அற்று அரசு பாகுபடுத்திப் பார்த்தால் மக்களில் பலர் பாகுபாடுக் கொண்டே வாழ்வார்கள்.
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். (529)
௯, உறவினராய் இருந்து பிரிந்தவர் காரணம் பொருந்தாமல் மீண்டும் உறவு வரும்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். (530)
௧௦, தன்னிடம் இருந்து பிரிந்து மீண்டும் ஒரு காரணத்திற்காக வந்தவரை ஆட்சியாளர்கள் ஆராய்ந்து ஏற்கவேண்டும்.
அதிகார விளக்கம்!
இல்லாமையிலும் உறவு பாராட்டுவது உற்றார்களின் பண்பு. விருப்பம் குறையாத உறவு ஒரு சிறப்பானது. உறவு இல்லாத வாழ்வு கரையற்ற குளம் போன்றது. காகம் போல் கூடி உண்ணுதல் உறவுக்கு பெருமை. உறவு பிரிந்தாலும் மீண்டும் கூடும் வாய்ப்பு வரும். பிரிந்த உறவை இணையும் தருணத்தில் அவசியம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
காணொளி:-
https://youtu.be/DKgnHOLAcAQ
௫௪, பொச்சாவாமை (54)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (531)
௧, அழிந்துவிடும் வெகுளியைவிடத் தீமையானது, சிறந்த உவகையால் கிடைக்கும் மகிழ்ச்சியின் பொருட்டு சோர்ந்து செயல்கள் சரிவர செய்யாதது.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு. (532)
௨, மறதி புகழை அழிக்கும், அறிவு சார்ந்த செயலை தொடரும் துன்பம் அழிப்பதைப் போன்று.
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. (533)
௩, மறதி உள்ளவருக்கு புகழ் இல்லை, அது உலகத்தின் அனைத்து துறை எழுத்தாளர்களின் முடிவு.
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. (534)
௪, அச்சம் உள்ளவருக்கு பாதுகாப்பு அரண் இல்லை அதுபோலவே இல்லை மறதி உள்ளவருக்கு நன்மை.
(உலகமே பாதுக்காப்பு அரணாக நினைப்பவர் அச்சம் தவிர்க்கிறார், நினைவாற்றால் உள்ளவர் நன்மை அடைகிறார்)
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். (535)
௫, முன்னமே ஆய்ந்து காக்க வேண்டியதைக் காக்காமல் செயல்பட்டவருக்கு தனது பிழையால் எதிர்க்காலம் ஏற்றம் அற்றதாய் அமையும்.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல். (536)
௬, நினைவை இழக்காமை யார் இடத்தில் என்றும் வழுக்காமல் இருக்கிறதோ அதற்கு ஒப்பானது இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். (537)
௭, முடியாத செயல் என்று எதுவும் இல்லை மறதியற்ற நிலை என்ற கருவியை போற்றி செயல்பட்டால்.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். (538)
௮, சிறப்பானவற்றை விரும்பிச் செய்திட வேண்டும், மறுத்து ஏளனம் செய்தவருக்கு அடுத்தது உயர்வு இல்லை.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (539)
௯, அவமதித்து அழிந்தவரை எண்ணிக்கொள்ள வேண்டும், நாம் நமது மகிழ்வால் மறதி அடையும் பொழுது.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். (540)
௧௦, எண்ணியதை அடைவது எளிது அதற்கு நாம் எண்ணியதை எண்ணியபடியே இருக்கச் செய்யவேண்டும்.
அதிகார விளக்கம்!
வெற்றியின் பெருமிதம் தரும் மறதி கோபத்தின் விளைவைவிட மோசமானதாக இருக்கும். மறதியற்ற தன்மையே அரண் போல் நம்மை காக்கும். இகழ்ந்து பேசி கெட்டவர்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நினைத்தபடி அடைவது எளிது நினைத்தபடியே நினைவு கூறும் ஆற்றல் இருந்தால்.
காணொளி:-
https://youtu.be/0tdZbTSlQhU
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (541)
௧, உடன்படுகிறதா என்று பார்க்காமல் அருளுடன் அணுகி யாவருக்கும் தேவையானது செய்வதே முறை.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி. (542)
௨, வானத்தை எதிர்பார்த்தே உலகம் வாழும் அதுபோலவே ஆட்சியாளரின் ஆணையை எதிர்பார்த்தே குடிமக்கள் வாழ்வும் இருக்கும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543)
௩, முடிவை அறிந்தவர் நூல்களுக்கும் இல்வாழ்விற்கும் மூலமாய் நிற்பது ஆட்சியாளரின் சட்டமே.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (544)
௪, குடிமக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாய் ஆணைகள் பிறப்பிக்கும் ஆட்சியாளரையே பின்பற்றிச் செயல்படும் உலகம்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. (545)
௫, இயல்புகளை அறிந்து ஆணை பிறப்பிக்கும் ஆட்சியாளர் காலத்தில் மழையும் நல்ல செயல்களும் கூடி வரும்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின். (546)
௬, ராணுவ பலம் வெற்றியைத் தராது, ஆட்சியாளரின் ஆணைகள் கேடு இல்லாமல் இருப்பதே வெற்றி.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். (547)
௭, அருளுடன் காக்கப்படும் நாடுகளின் ஆட்சியாளர்களை ஆட்சி முறையே காக்கும் தவறுகள் செய்தாலும்.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். (548)
௮, மக்களின் எண்ண ஓட்டத்தை அறியாமலும், தேவையானவற்றை செய்யாமலும் இருக்கும் ஆட்சியாளர்கள் தனக்கு தானே கேடு செய்துகொள்வார்கள்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். (549)
௯, குடிமக்களையும், ஆட்சி எல்லைகளை கடந்தும் பாதுகாப்பு அளித்து குற்றங்களை கலைப்பது ஆட்சியாளர்களின் அடையாளம் அல்ல, அவசியம் செய்யவேண்டிய தொழில்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (550)
௧௦, கொலை செய்வதில் கொடுமையானவரை வேண்டாம் என அழித்தல், பசுமையான பயன்பாட்டு நிலத்தில் தேவையற்றதை பிடுங்கி கட்டியதற்கு சமம்.
அதிகார விளக்கம்!
உடன்படுகிறதா என்று பாராமல் இயற்கையை புரிந்துக் கொண்டு யாவரும் சிறக்க வழிமுறை செய்வதே நல்லாட்சிமுறை, இப்படி செய்பவர் வான்நோக்கிய வளத்தை தன் குடிமக்களுக்கு வழுங்குவார். ஆட்சியாளர்களின் சட்டமே இறுதியாக இருப்பதால் ராணுவ பலத்தை விட நற்குணமே பலமாக அமையும். கொடியவர்களை அழித்தல் களை எடுப்பதைப் போன்றது.
காணொளி:-
https://youtu.be/ZFWqNnX4EPU
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (551)
௧, கொலை செய்வதையே தொழிலாக கொண்டவரை விட கொடுமையானது, அலை போல் தொடர்ந்து அர்த்தமற்ற செயல்களைச் செய்யும் ஆட்சியாளர்களின் ஆட்சி.
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (552)
௨, கொலைக் கருவியைக் காட்டி கொடு என்பதைப் போன்றது ஆணைகள் கொண்டு மிரட்டும் ஆட்சியாளர்களின் கண்முடித்தனம்.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். (553)
௩, நாள்தோறும் ஆராய்ந்து செயலாற்றாத ஆட்சியாளர்களின் நாடு நாள்தோறும் கெடும்.
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. (554)
௪, பொருளையும், குடிமக்களையும் சேர்ந்து இழக்கும் ஆணைகளை சிறப்புறச் செய்யாத அரசு.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. (555)
௫, துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி. (556)
௬, ஆட்சியாளருக்கு அவசியம் சிறந்த ஆணைகள், அப்படி இல்லையென்றால் ஆட்சியாளருக்கு நற்புகழ் வாய்க்காது.
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. (557)
௭, மழைத்துளி இல்லாது போனால் இவ்வுலகிற்கு ஏற்றது இல்லை. அதைப் போலவே ஆட்சியர் கொடுக்கும் தன்மையற்று இருப்பது, வாழும் உயிர்க்கு ஏற்றது இல்லை.
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். (558)
௮, துன்பத்திலும் துன்பமானது நல் ஆணைகள் கொண்டு ஆளாத ஆட்சியாரின் கீழ் உடைமைக் (குடியுரிமை)கொண்டு இருப்பது.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (559)
௯, ஆணைகள் கோடி ஆட்சியாளர் செய்வது, வானம் பெய்தும் கோடி நீர்தங்கும் இடத்தில் நீர் தங்காமல் போவதைப் போன்றதே.
(நீர் நிலைகள் மழையை தக்கவைத்துக் கொள்ளாததைப் போலவே ஆணைகள் அதிகம் செய்யும் அரசால் நன்மைகள் இருக்காது)
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (600)
௧௦, ஆக்கப் பணிகள் குறையும், தொழில் நுட்ப நூல்கள் பெருகாது, ஆட்சியாளர் அரசை கவனிக்காமல் இருந்தால்.
அதிகார விளக்கம்!
கொலை பாதகரை விட கொடுமையானவர் கொடிய ஆட்சியர். துன்பத்தை விட துன்பமும் அவரே தருவார். அர்த்தமற்ற ஆணைகள் குடி மக்களை இழுக்கச் செய்யும். ஆக்கப் பூர்வமான செயல்கள் குறையும்படி செய்பவர்கள் நல்லாட்சி தருபவர்கள் இல்லை.
காணொளி:-
https://youtu.be/cmGhzfK-qys
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. (561)
௧, தகுந்த ஆதாரத்தை ஆராய்ந்து மீண்டும் அந்தச் செயலில் (குற்ற) தலைப்படாது இருக்க ஏற்றபடி தண்டிப்பது அரசின் செயல்.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். (562)
௨, ஆக்கபூர்வமான செயல்கள் தொடர வேண்டுபவர் கடுமையாய் விமர்சித்து மென்மையாய் தண்டிக்க வேண்டும்.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். (563)
௩, வெறுப்பு வந்து செயல்படும் கொடிய ஆட்சியாளன் இருந்தால் ஒற்றுமை பகைமையாய் மாறி உள்ளதும் கெடும்.
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். (564)
௪, இறை விரும்பாதவன் என்று சொல்லப்படும் கடுஞ் சொல்லுக்கு உட்பட்ட ஆட்சியாளர் எல்லை சுருங்கி சீக்கிரத்தில் அழிவார்.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. (565)
௫, அரிதாக கேட்டு இனிமை அற்று பார்ப்பவன் அடைந்த அதிகபட்ச செல்வம் ஏதும் செய்யமுடியாத பேய் கண்ட காட்சி போன்றது.
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். (566)
௬, கடுமையான வார்த்தையும், கருணையற்ற பார்வையும் உடையவனின் அதிகபட்ச செல்வம் நீண்ட நாள் நிலைக்காமல் அழியும்.
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். (567)
௭, வன்மையான வார்த்தையும் தாங்கமுடியா தண்டணையும் ஆட்சியாளரின் எதிரியற்ற தன்மையை அறுக்கும் அரம் போன்றது.
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு. (568)
௮, மனிதாபிமானத்துடன் செயலாற்ற எண்ணாத ஆட்சியாளர் சினத்துடன் செயல்பட்டால் மங்கும் புகழ்.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். (569)
௯, போர் மூண்ட காலத்தில் அடக்கி ஆள ஆடசியாளர் வெருப்படைந்து சீர் கெடுவர்.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. (570)
௧௦, கற்று அறியாதவர்களை இணைக்கும் கடுமையான ஆட்சி. அதைவிட வலிமையானது இல்லை நிலத்திற்குச் சுமை.
அதிகார விளக்கம்!
வெறுப்புடன் நோக்காமல் தகுந்த ஆதாரத்தை அறிந்து தீர்ப்பு கூறுவது ஆட்சியர் கடமை. மேலும் வெறுப்புடன் தீய சொற்களை பயன்படுத்துவதும் மனிதாபிமானமற்ற செயல் செய்வதும் தீரா துன்பத்தையும் நிலத்திற்கு ஆறாத பழியும் உண்டாக்கும்.
காணொளி:-
https://youtu.be/C7vJ65XvIoM
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. (571)
௧, பார்த்தறிதல் (பக்குவமடைதல்) என்னும் தனிச் சிறந்த அழகு அறிந்த உண்மையானவர்களால் உலகம் இருக்கிறது.
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. (572)
௨, பார்த்தறிதல் (பக்குவமடைதல்) உள்ளதால் உலகம் இருக்கிறது. அப்படி இல்லாதவர்கள் உண்மை நிலைக்கு பாரமானவர்கள்.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். (573)
௩, பண் (ராகம்) எதற்கு பாட்டிற்கு இசையவில்லை என்றால், கண் எதற்கு பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லாத கண் என்றால்.
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். (574)
௪, இருப்பதைப் போல் முகத்தில் இருந்து என்ன செய்யும் அதன் தன்மையால் பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லாத கண்.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். (575)
௫, கண்ணிற்கு அணியும் சாதனம் பார்த்தறிதல் (பக்குவமடைதல்). அது இல்லை என்றால் புண் என்றே உணரப்படும்.
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். (576)
௬, மண்ணே மரத்தை வளர்க்கவும் அழிக்கவும் செய்கிறது, மரத்தின் தன்மைக்கு ஏற்ப மண் செயல்படுவதைப் போன்றே கண்ணும் கண்ணோடு
பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லாதவர்.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (577)
௭, பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லாதவர் கண் இல்லாதவர். கண் இருந்தும் பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லை என்றால் கண் இல்லாதவரே.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. (578)
௮, காரியங்களை சிதைக்காமல் பார்த்தறிய (பக்குவமடைய) வல்லமை உள்ளவர்களுக்கு உரிமையானது இந்த உலகம்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (579)
௯, எதிர்த்து செயல்படும் பண்புள்ளவர்களின் கண்களும் பார்த்தறிந்து (பக்குவமடைந்து) பொறுத்து செயல்படும், இப்பண்பே தலை சிறந்தது.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். (580)
௧௦, நன்கு அறிந்தும் நஞ்சு உண்ண முற்படுவர் விரும்பத்தக்க மாற்றத்தை வேண்டுபவர்.
அதிகார விளக்கம்!
பார்த்து அறியும் திறத்தால் உண்மை நிலைக்கிறது. அவர்களால் உலகம் வளம் அடைகிறது. அத்திறன் இல்லாதவர்கள் உலகின் பாரமானவர்கள், பாடலுக்கு இசை போன்றது கண்ணுக்கு பார்த்தறிதல், காரியங்கள் சிதையாமல் உள்ளபடி பாரப்பவர் வல்லமையானவர்கள் அவர்கள் நஞ்சையும் நன்மை பொருட்டு அருந்த தயங்கமாட்டர்கள்.
காணொளி:-
https://youtu.be/lCPNOWcgGE0
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். (581)
௧, நடப்புகளை அறிவதும், விளக்கம் தரும் நூல்களும் என இரண்டும் சிறந்த ஆட்சியாளருக்கு கண் போன்றது.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். (582)
௨, எல்லா தரப்பு மக்களுக்கும் எப்படியெல்லாம் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை எல்லா வகையிலும் சரியாக அறித்திருப்பது ஆட்சியாளர்களின் தொழில்.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல். (583)
௩, ஆய்ந்து அறிபவரை அறிந்து நடப்புகளை தெரிந்துக் கொள்ளா ஆட்சியாளரின் வெற்றி நிலைத்த வெற்றியாய் இருக்காது.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. (584)
௪, செயல்படுபவர், தனக்கு உறவு முறைக் கொண்டவர், வேண்டத்தகாதவர் என்று பாகுபாடு அற்று அனைவரையும் ஆராய்வதே ஒற்று.
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. (585)
௫, கண்டுக்கொள்ள முடியாத உருவமுடன், எதைக்கண்டும் அஞ்சாமல், எந்நிலையிலும் உள்ளதை சொல்லாமல், வல்லமையுடன் செயல்படுவதே ஒற்று.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. (586)
௬, எதன்மீதும் பற்று இல்லாத துறந்தவர்கள் போல் மாறி தன்னலம் மறந்து ஆராய்ந்து எத்துன்பம் செய்தாலும் சோர்வு இல்லாமல் செயல்படுவதே ஒற்று.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. (587)
௭, அறியமுடியாமல் மறைந்தவற்றை கேட்டு அறிந்து, அப்படி அறிந்ததில் ஐயப்பாடு இல்லாமல் செயல்படுவதே ஒற்று.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். (588)
௮, கண்காணித்து தந்த தகவல்களை மேலும் ஒரு கண்காணிப்பினால் கண்காணித்து அறிந்துக் கொள்ளவேண்டும்.
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும். (589)
௯, கண்காணித்து தந்த தகவல்களை சரியாக உணரவேண்டும் என்றால் மேலும் மூன்று நபர்களின் தகவலுடன் ஒப்பிட்டு அறிந்துக் கொள்ளவேண்டும்.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. (590)
௧௦, சிறப்பானது என்று கண்காணித்தலை பாராட்டுவது செய்யக்கூடாது. செய்தால் மறைப்பொருளை வெளிப்படுத்தியது போல் ஆகும்.
அதிகார விளக்கம்!
நடப்புகளை அறிந்து நூல்களில் தெளிவு பெற்று இருப்பதற்கே கண் உள்ளது. கண்காணிப்பதற்கும் இதுவே அவசியம். செயல்களில் மாற்றம் இல்லாதபடியும், அதே சமயத்தில் செயல்கள் தந்த மாற்றத்தை காண்காணிப்பதும் ஆட்சியாளர்களின் பணி. காண்காணிப்பை பலர் மூலம் உறுதி செய்வது நல்லது.
காணொளி:-
https://youtu.be/8Yvy8GfVmPk
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. (591)
௧, உலக நன்மைகளை பெற்றவர் எனப்படுவது உற்சாகமுடன் ஆர்வமாய் செயல்படுவது, அப்படி இல்லை என்றால் உள்ளதும் உள்ளபடி இல்லாமல் மாறும்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். (592)
௨, உள்ளத்தில் உரிமையாக அடைந்ததே உரிமையானது. பொருளை அடைந்தது நிலை இல்லாமல் விலகிவிடும்.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். (593)
௩, பயன் அற்றுப் போனதே என்று தன்நிலை இழக்க மாட்டார், ஊக்கத்தை ஒருவர் தனது கைத்துணையாய் வைத்துக்கொண்டால்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. (594)
௪, பயனுள்ள செயல்கள் வீணாகாமல் நடக்கும், தளராத ஊக்கத்தை உரிமையாக அடைந்த ஒருவர் இடத்தில்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. (595)
௫, நீரின் அளவு தண்டு நீண்டு, மலரை வெளிக்காட்டும் அதுபோலவே உள்ளத்தின் அளவிற்கு ஏற்ப மனிதர்களின் உயர்வும் இருக்கும்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (596)
௬, உள்ளத்தின் எண்ணங்கள் அனைத்தும் உயர்வானதாகவே இருக்கவேண்டும். உயர்வற்றவை, விலக்கினாலும் விலகாவிட்டாலும் வீரியம் அற்றுப்போகும்.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. (597)
௭, அழியும் தருணத்திலும் தளரமாட்டார்கள் உள்ளத்தில் வலிமை உடையவர்கள், அம்புகளால் மறைத்தாலும் அடங்காது செயல்படும் ஆண்யானை போன்று.
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. (598)
௮, ஊக்கம் கொண்ட உள்ளம் இல்லாதவர் உலகத்தை வென்றோம் என்ற பெருமை அடையமுடியாது.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (599)
௯, கூரிய தந்தம் இல்லை என்றாலும் யானையை மடக்கும் ஆர்வம் கொண்ட புலியே ஊக்கத்திற்கு அடையாளம்.
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. (600)
௧௦, ஒருவருக்கு உரமாக இருப்பது உள்ளம் எண்ணமற்று வெறுமை அடையும் செல்வம். அப்படி அடையாதவர்கள் செய்யப்பட்ட மனிதர்களே அன்றி வேறு இல்லை.
அதிகார விளக்கம்!
உரிமையாக அடையவேண்டிய உடைமைப் பொருள் ஊக்கம், அது இல்லை என்றால் அடைந்த எல்லாம் மாறும். ஊக்கம் உள்ளவர்கள் தோல்வி கடந்து வெற்றி அடைவார். ஊக்கமே வாழ்வின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும். தந்தம் உள்ள யானையை எதிர்க்கும் புலி ஊக்கத்திற்கு நல்ல உவமை. ஊக்கம் இல்லாதவர் இயந்திர மனிதனே.
காணொளி:-
https://youtu.be/kASgF5a1Cks
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். (601)
௧, உள்ளது சிறத்தல் என்ற வாழ்வுக்கான குறைவற்ற விளக்கம், சோர்வு என்ற அதிபயங்கரத்தால் அழிந்துவிடும்.
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். (602)
௨, ஊக்கமின்மையை ஊக்கப்படுத்தாமல் கடைபிடிக்க வேண்டும் சிறந்த வாழ்வை சிறப்பான வாழ்வாக வாழ வேண்டுபவர்.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. (603)
௩, சோம்பிச் சோம்பலை உரிமையாகக் கொண்ட அறிவற்றவர் தான் பிறந்த குடும்பம் தனக்கு முன்னமே அழிவதைக் காண்பார்.
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. (604)
௪, உள்ளது சிறத்தல் என்ற வாழ்வு அழிந்து குற்றங்கள் பெருகும், சோம்பலால் கவரப்பட்டு உலகில் இருப்பவர்களுக்கு.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)
௫, நீண்ட அழுகை, மறந்துவிடுவது, சோம்பல், அதிகபட்ச உறக்கம் இவை நான்கும் அழிவை விரும்புபவர்களின் ஆயதங்கள்.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. (606)
௬, ஆற்றலுடையவர் உறவு இருந்தாலும், சோம்பலுடையவர் நற்பயன் அடைவது கடினம்.
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். (607)
௭, சறுக்கி விழுந்து ஏளனச் சொல் கேட்பார் சோம்பலாய் இருந்து மாண்டவர் போல் உலகில் இருப்பவர்.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். (608)
௮, சோம்பல் உள்ளது சிறக்கும் வாழ்வில் தங்கி தனது பகைவருக்கு அடிமையாக மாற்றிவிடும்.
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். (609)
௯, உள்ளது சிறக்கும் வாழ்வில் ஏற்பட்ட தவறுகள் ஒருவர் தனது சோம்பலை மாற்றுவதால் தீர்க்கப் படும்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)
௧௦, சோம்பல் அற்ற மன்னவன் அடையும் நற்பயன்கள் போலவே ஒப்ப முயற்சியுடைவருக்கும் கிடைக்கும்.
அதிகார விளக்கம்!
வளர்ச்சிக்கான வாழ்தல் சோர்வால் தடைபடும். சோர்வை சோர்வின்றி நீக்க வேண்டும் அப்படி செய்யாதவர் அறிவற்றவரே. அழுகை, மறதி, சோம்பல், தூக்கம் இதை விரும்புபவர் வளர்ச்சியை காண முடியாது. சோம்பல் அற்றவர் வாழ்வு மன்னன் வாழ்வு போல் இருக்கும்.
காணொளி:-
https://youtu.be/j3XpSKxQE2I
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (611)
௧, அரியது என்று செயல்பட அச்சம் அடைவது கூடாது. முயற்சி செய்வதே பெருமையானது.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (612)
௨, செயல்படும் நேரம் செயல் சிதைய செய்வதும் முழுமை பெறாமல் விட்டுவிடுவதுமாய் இருப்பவரை உலகம் ஏற்பது இல்லை.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. (613)
௩, ஊக்கம் என்ற உயர்பண்பின் வெளிப்பாடே அடுத்தவருக்கு உதவிடும் மகிழ்வை தருகிறது.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். (614)
௪, ஊக்கம் இல்லாதவர் உதவுதல், வீரம் இல்லாதவர் கையில் இருக்கும் கத்தி போல் பயனற்றுப் போகும்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். (615)
௫, இன்பத்தை இலக்காக எண்ணாமல் செயலைச் செய்ய முற்படுபவர், தனது உறவுகளுக்கு துன்பம் துடைத்துக் காக்கும் தூண் போன்றவர்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)
௬, முயற்சி (ஆர்வமுடன் செயல்பட துணிவது) நற்செயல்களை உருவாக்கும். முயற்சி அற்று இருப்பது வறுமையை ஏற்றுக்கொள்ளும்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். (617)
௭, முயற்சி அற்றவர் இடத்தில் மூதேவி இருக்கிறாள். முயற்சி உள்ளவரிடம் கலைமகள் தங்குகிறாள்.
(ஆர்வமற்றவருக்கு மூளை செல்கள் பலமற்று திறமைகள் குறைகிறது. ஆகவே அதை மூதேவி (முடக்கப்பட்ட மூளை) என்றும், ஆர்வமுடன் செயல்பட மூளை செல்கள் மேலும் விரிகிறது, எனவே ஆயிரம் தாமரை மலரில் ஆற்றல் வளர்கிறது)
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (618)
௮, புலன் இல்லாமல் இருப்பது எந்த மனிதருக்கும் பழிக்கும் ஒன்றாக இருக்காது. செய்யவேண்டியதை செய்யாமல் இருந்தால் பழிக்கப்படும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
௯, வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வீக நிலை அடைந்தவரால் முடியாத செயல்களையும் தனது உடல் வருத்தி செய்யும் முயற்சியால் சாதிக்க முடியும்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (620)
௧௦, தலைவிதியையும் தனக்கு சாதகமாக பார்ப்பார் சோர்வின்றி தளராது பெருமுயற்சி செய்பவர்.
அதிகார விளக்கம்!
செயல்பட ஆர்வமாக இருப்பதே எல்லா வெற்றிக்கும் ஆதாரம். எனவே முழுமை அடையும் வரை செயல்பட துணிய வேண்டும். ஐம்பொறியில் சில இல்லாது போனாலும் பழியாகாது ஆள்வினை இல்லாது இருப்பதே பழி. வாழ்வாங்கு வாழ்பவரை கடந்து வாழ உடல் வருத்த உழைத்தால் முடியும். தலைவிதியையும் மாற்றும் வல்லமை உழைப்பிற்கு உண்டு.
காணொளி:-
https://youtu.be/qFfzVeynp5I
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். (621)
௧, இக்கட்டான நேரங்களை மகிழ்வுடன் எதிர்கொள். அதற்கு அடுத்து வருவது அதைப்போல் இருக்காது.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)
௨, வெள்ளத்தில் முழ்கும் அளவு வரும் தொல்லைகள், அறிவு உடையவர்களின் மனதின் எண்ணத்தினாலேயே அழிந்துவிடும்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (623)
௩, துன்பத்திற்கு துன்பம் தருவர் துன்பத்திற்கு துன்பப்படாதவர்.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (624)
௪, கரடுமுரடான பாதையை கடக்கும் களிறு போல், தனக்கு வந்த துன்பத்தினால் இடர்படாமல் கடக்க வேண்டும்.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். (625)
௫, அடுத்தடுத்து தொடர்ந்து வந்தாலும் அழிவற்றவர் பெற்ற துன்பம் துன்பப்பட்டு போகும்.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். (626)
௬, விலகிவிட்டது என்று வேதனைபடலாமா? பெற்றதைக் கொண்டு சரியாக வாழாதவர்.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (627)
௭, இயல்பு, உடல் துன்பமடைதல் என்பதால் கலக்கமடைவதை கைகொள்ளாது மேன்மையான அறிவு.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். (628)
௮, இன்ப நாட்டம் இல்லாமல் இடர்பாடுகள் இயல்பு என்று உணர்ந்தவர் துன்பப்படுவது இல்லை.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629)
௯, இன்பமான சுழலில் இன்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர் துன்பமான சுழலில் துன்பம் அடைவது இல்லை.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. (630)
௧௦, இடர்பாடுகள் இன்பமானது என்று செயல்படுபவர் எதிரிகளும் பாராட்டும் சிறப்பை பெறுவார்.
அதிகார விளக்கம்!
இடர் கண்டு அழியாமல் இருக்க நகைப்புடன் அதைப்பார்த்து உள்ளத்தின் திறத்தை வளர்த்து இடர்பாட்டிற்கே இடர்பாடு தரவேண்டும். இடர்பாடுகள் நம்மை வளர்க்கும் அற்புத சுழல் என உணர்ந்தவர் இன்பத்தில் நிலைக்கிறார். இன்பம் கருதி செயல்படாமல் இடர்பாடுகளும் இன்பத்திற்கே என்பதே சிறப்பு.
காணொளி:-
https://youtu.be/MkkCtAX-rCs
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. (631)
௧, தகுந்த கருவியும், உகந்த நேரமும், செய்ய வேண்டிய செயலும், செயல்பட வேண்டிய முறையும் ஆள்வதே நிர்வாகம் என்ற அமைச்சு.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. (632)
௨, அச்சமற்ற பார்வை, யாரும் சிறப்பாக இருக்க நினைத்து குடிகளை (குடும்ப நலம்) காத்தல், புதிய நிகழ்வுகளை கற்று அறிதல், நிர்வாகத்திறன், செயல்படுதல் என ஐந்துடன் ஆள்வதே நிர்வாகம் என்ற அமைச்சு.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு. (633)
௩, தேவையற்றதை விலக்குவதும், தேவையானதை ஏற்பதும், பிரிந்துப் போனவர்களை பொருத்தலும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. (634)
௪, அறிந்துக் கொள்வதில் அக்கரையும், தேவையானதை தேர்ந்து செயல்படுத்துவதும், தீர்க்கமாக ஒன்றை சொல்லுவதும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. (635)
௫, நீதி மாறாது வாழும் நிலை அறிந்து, மேன்மையானவற்றை எடுத்துரைப்பவர் எப்பொழுதும், திறமைகளை அறிந்தவருக்கு மேலும் தேர்ச்சிப் பெற துணையாவார்.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்நிற் பவை. (636)
௬, நுட்பமான அறிவுடன், நூலின் அறிவும் உள்ளவருக்கு மேலான அறிவு என்று எதுவும் முன் நிற்க முடியாது.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். (637)
௭, செயல்படும் தன்மையை முழுமையாக வரைமுறை செய்து அறிந்திருந்தாலும் இயற்கையை அறிந்து செயல்பட வேண்டும்.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். (638)
௮, அறிய வேண்டியதை அறிய முடியாதவனுக்கும் உறுதியுடன் எடுத்துரைப்பது உடன் இருப்பவரின் கடமை.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். (639)
௯, மடத்தனமான ஆலோசகர் அருகில் இருப்பது எதிரிகள் எழுபது கோடி இருப்பதுபோல் ஆகிவிடும்.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். (640)
௧௦, முறையான சுழ்நிலை அமைந்தாலும் சரியான முடிவுகளை எடுக்கமாட்டார் திறமை இல்லாதவர்.
அதிகார விளக்கம்!
கருவி காலம் செய்யவேண்டியது செய்யவேண்டிய விதம் என தீர்மானிப்பதே அமைச்சு என்ற நிர்வாகம். நற்பண்புகளுடன் தேவையை அறிந்து அதை ஊக்குவித்து தீமை அழித்து யாவரையும் காக்கும்படி இருக்க வேண்டும். முட்டாள்களின் ஆலோசனை அழிவைத்தரும் என உணர்ந்து முறையான முடிவை எடுக்கவேண்டும்.
காணொளி:-
https://youtu.be/_g4m19zrB58
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. (641)
௧, நன்மை பயக்கும் வார்த்தையே நாநலம் என்ற நலனுடைமை (ஆரோக்கியம்) அத்தகைய நலம் போல் அடைந்த நலத்தில் சிறந்தது இல்லை.
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. (642)
௨, வளர்ச்சியும் அழிவும் வார்த்தையால் வருவதால் நிதானித்தும் சோர்வு ஏற்படாமலும் பேச வேண்டும்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (643)
௩, கேட்பவரின் மனநோய் தீர்க்க உகந்ததாகவும், கேட்காதவர் கேட்க விரும்பும் வகையிலும், வார்த்தைகள் அமைத்துப் பேசவேண்டும்.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (644)
௪, கேட்பவரின் திறனை அறிந்து வார்த்தையை பயன்படுத்த வேண்டும். அத்தகைய சொற்களைப் போல் அறமும் பொருளும் வேறு இல்லை.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (645)
௫, சொல்லப்படும் சொல்லுக்கு மேலான சொல் இல்லாதபடியும், வெல்ல முடியாதபடியும் ஆராய்ந்து சொல்லவேண்டும்.
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். (646)
௬, வேண்டியதை சொல்வதும், அடுத்தவர் சொல்லின் பயனை கேட்டு அறிவதும், உன்னதத்தின் குறையற்றவர்களின் குறிக்கோள்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (647)
௭, சொல்வதில் வல்லவனை, சோர்வில்லாதவனை, எதற்கும் அஞ்சாதவனை, இழிவு செய்து வெல்வது எந்த ஒருவருக்கும் அரிதானதே.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648)
௮, கேட்டவுடன் விரைந்து செயல்படும்படி தூண்டும் விநோதம் வரிசைப்பட இனிமையாக சொல்ல வல்லவரிடத்தில் இருந்து சொல்களைப் பெற்றால்.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். (649)
௯, அளவிற்கு அதிகமான பல சொற்களை சொல்ல ஆசைப்படுவார்கள் இடத்திற்கு தேவையான குறைவற்ற சில சொற்களில் தேர்ச்சி பெறாதவர்கள்.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். (650)
௧௦, நற்கொடியில் மலர்ந்தும் வாசம் வீசாத மலருக்கு ஒப்பானவர், தான் கற்றதை அடுத்தவர் உணரும்படி விளக்கிச் சொல்ல முடியாதவர்.
அதிகார விளக்கம்!
நலம் அடைந்தவர் என்றால் சொல் வளம் பெற்றவர். சொல் வெல்லவும் வீழ்த்தவும் செய்யும் என்பதால் திறனறிந்து சொல்ல வேண்டும். பல சொல்ல விரும்பாமல் மறுக்க முடியாதபடி சொல்லை சொல்ல வேண்டும். நல்வாசம் வீசும் செடியில் பூத்தும் வாசம் தராத மலர் போன்றவர் தான் அறிந்ததை அடுத்தவர் உணரச் செய்யாதவர்.
காணொளி:-
https://youtu.be/5eetE-YTRDc
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும். (651)
௧, நல்ல துணை சிறந்த வெற்றியை தரும், நல்ல செயல் தேவையான அனைத்தும் தரும்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (652)
௨, எப்போதும் வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும் பெருமையும், அடுத்தவருக்கு உதவி செய்து நன்றி பெரும் தன்மையும், இல்லாத செயல்களை.
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். (653)
௩, ஒழிக்க வேண்டும் உண்மை ஒளி மறைக்கும் செயல்களை மேன்மையை வேண்டுபவர்.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)
௪, இக்கட்டான சுழல் ஏற்பட்டாலும் பழிக்கப்படும் செயலை செய்யமாட்டார் தெளிவான ஒன்றை பார்த்தவர்.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (655)
௫, ஏற்க முடியாததையும், இழிவானதையும் செய்யக்கூடாது. தவறி செய்தாலும் மீண்டும் அதை செய்யாது தவிர்த்துவிடுவது நன்று.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656)
௬, பெற்றதாயின் பசியை தணிப்பது என்றாலும், உதாரணமாக வாழ்பவர்கள் பழிக்கும் செயலை செய்யக்கூடாது.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (657)
௭, அதிகபட்ச பழியுடன் அடையும் உயர்வைவிட, முன்மாதிரியாய் இருந்து, கழிந்துவிடும் வறுமையை அடைவது முதன்மையானது.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். (658)
௮, வெறுக்கப்பட்டதை வெறுக்காமல் ஏற்று செய்தவருக்கு, அச்செயல் முடிவு பெற்றாலும் பெருந்துன்பமே விளையும்.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (659)
௯, பிறர் வறுந்தப் பெற்றதெல்லாம் தான் வறுந்தப் போகும், நல்வழியில் பெற்றதோ இழப்பினும் பிறகு நன்மை தரும்.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. (660)
௧௦, சூழ்ச்சியால் பொருள் ஈட்டி வைத்தால், சுடாத மண்பாத்திரத்தில் நீர் நிரப்ப கரைவது போல் உரிய பலன் அற்றுப்போகும்.
அதிகார விளக்கம்!
துணையால் வரும் நன்மை ஆக்கம் தரும் என்றால் செயல்படுவதால் தேவையான எல்லாம் தரும். எனவே செயல்படுதல் பெருமைக்காக இல்லாமல், இழிவானதாகவும் இல்லாமல் திடமாக இருக்க வேண்டும். சூழ்ச்சியால் சேர்க்கும் பொருள் சுடாத மண்பாத்திரத்தில் வைத்தது போல் கரையும்.
காணொளி:-
https://youtu.be/E7QM8GZq5Xw
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (661)
௧, செயலில் உறுதி என்பது ஒருவரது மனதின் உறுதியே, மற்றவை எல்லாம் அதற்கு அடுத்ததே.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (662)
௨, கூட்டத்தில் இருந்து தனித்து சிந்தித்தல், தேர்தெடுத்த செயலை விலகாது செய்தல், இவ்விரண்டையும் ஒழுக்கமாக கடைபிடிப்பது ஆராய்ந்து புரிந்துக்கொண்டவர்களின் பண்பு.
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். (663)
௩, கடைசிவரை தளராது செயல்படுவதே ஆண்மை. இடையில் தளர்ந்தால் ஏற்கமுடியா துன்பம் தரும்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664)
௪, செயல்விளக்கம் பேசுதல் எல்லாருக்கும் எளிமையானது. அரியது விளக்கியபடி செயல்படுதல்.
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். (665)
௫,வீரமுடன் போராடி இறந்தவரின் செயல்திறன் ஆட்சியாளரிடத்தில் ஊரார் சொல்லி சிறப்பாக எண்ணப்படும்.
(குறிப்பு - செயலை திறமையுடன் செய்பவர் புகழ் இறந்தப்பின்னும் போற்றப்படும்)
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (666)
௬, மனதில் எண்ணங்களால் எப்படி எண்ணமிடுகிறாரோ அப்படியே அதை அடைவார். எண்ணியவர் மனதிடம் உள்ளவராக இருந்தால்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (667)
௭, உருவம் பார்த்து ஏளனமாக எண்ணக்கூடாது. உருளும் பெரிய தேருக்கு அச்சாணி போல் அவர்கள் இருக்கக் கூடும்.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். (668)
௮, குழப்பம் இல்லாமல் எடுத்த செயல்களை துவண்டுவிடாமல் தூக்கத்தையும் வெறுத்து செய்து முடிக்கவேண்டும்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (669)
௯, துன்பம் நெருக்கமாக இருந்தாலும் துணிவுடன் செய்யவேண்டும் இன்பம் தரும் செயல் என்றால்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. (670)
௧௦, எவ்வளவு உறுதியை அடைந்திருந்தாலும் செயல் துணிவு இல்லாதவரை உலகம் ஏற்காது.
அதிகார விளக்கம்!
செயல்பட உறுதியாக இருக்க மனம் உறுதியாக இருக்க வேண்டும். சொன்னபடி செய்யவும், எண்ணியதை அடையவும் மன உறுதியே முதன்மையானது. உருவம் ஒரு பொருட்டல்ல அச்சாணியைப் போல் அவர்கள் இருக்கக்கூடும். செயல் துன்பம் தந்தாலும் பலன் இன்பம் என்றால் செயல்பட தயங்காது இருப்பவரையே உலகம் போற்றும்.
காணொளி:-
https://youtu.be/CLeHt7wu91A
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (671)
௧, சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவுகளை முன் நிறுத்தி செயல்பட துணியவேண்டும். அப்படி துணிந்தப்பின் செயல்படாமல் இருப்பது தீங்காகும்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (672)
௨, இயல்பாய் விடு இயல்பாகவே பல செயல்கள் நடக்கும். இயல்பாக விடாதே துணையாக இருக்கவேண்டிய செயல்களை.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். (673)
௩, செய்யமுடிந்ததை எல்லாம் நன்மைக்காக செய்யுங்கள். முடியாததை முடிப்பதற்கான வழி அறிந்து செய்யுங்கள்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். (674)
௪, செயல், எதிர்ப்பு என்ற இரண்டின் முடிவற்றதன்மையை ஆராய்ந்தால் தீயின் முடிவு போல் தொடரும். (எனவே முழுமையாக முடிக்க வேண்டும்)
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)
௫, எதை, எத்தகைய கருவியுடன், எப்பொழுது, எவ்விடத்தில், செய்யவேண்டும் என்ற ஐந்தையும் ஐயமற சிந்தித்து செயல்பட வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (676)
௬, செயல் முடிவும், இடையில் உண்டாகும் தடைகளும், செயல் முடிவில் உண்டாகும் பயனையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். (677)
௭, செய்யவேண்டிய செயல்களை செய்பவரின் செயல்பாடுகள் முறையாக இருப்பின், அச்செயல்களை உணர்பவரின் உள்ளம் கவரப்படும்.
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. (678)
௮, செயல்படுபவர் செயல்படுவதிலிருந்து பிற செயல்களையும் செய்துகொள்வதை எண்ணிப் பார்க்கையில் யானையை பயன்படுத்தி யானையைப் பிடிப்பது தோன்றுகிறது.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். (679)
௯, நாடியவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். அதைவிட விரைந்து இணக்கமற்றவரை இணங்கச் செய்ய வேண்டும்.
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. (680)
௧௦, உடன் இருப்போர் அஞ்சி நடுங்கும் குறையை அறிந்து, பெரியார் என்றும் பணிந்துக் கொள்வர்.
அதிகார விளக்கம்!
சூழ்நிலை அறிந்து துணிந்தால் தீமைகளை தடுக்கலாம். இயல்பாக சில செயல் நடக்கும் எனவே இயல்பாகவும் இருக்கவேண்டும், தேவை என்றால் தகந்த கருவியுடன் செயல்பட வேண்டும். உடன் வருபவர் அஞ்சினால் அச்சத்தை போக்குவது பெரியவர்களின் பண்பு.
காணொளி:-
https://youtu.be/RVl3ePS7Pio
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (681)
௧, அன்பை உடமையாகவும், சிறந்த குடும்பத்தை சேர்ந்தவராகவும், ஆட்சியாளரை மதிக்கும் பண்புள்ளவராகவும் இருப்பது தூது உரைப்பவர்களின் பண்பு.
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. (682)
௨, அன்பு, அறிவு, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உரைக்கும் திறன், இவைகள் தூது உரைப்பார்க்கு முக்கியமான மூன்று.
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. (683)
௩, நூல் படைப்பவர்களில் வல்லமையான நூல் படைக்க அவைகளை கற்று அறிய வேண்டும். அதுபோலவே, வேல் பாய்ச்சுபவர்களை கடந்து வெற்றிக்கான செயல்களை உரைப்பது பண்பு.
அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. (684)
௪, அறிவு, உருவம், தேர்ந்த கல்வி, இம் மூன்றையும் செழுமையான அடைந்தவர் செல்லலாம் செயல்முடிக்க.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது. (685)
௫, தொகுத்துச் சொல்லித் தேவையற்றதை நீக்கி இன்புறும்படி எடுத்துரைத்து நன்றி பாரட்டும்படி நன்மை தரவல்லதாக அமைவதே தூது.
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. (686)
௬, கற்று அறிந்து காண்பதற்கு அஞ்சாமல் சொல்லவேண்டியதை சொல்லி தகுந்த நேரத்தில் சரியானதை அறிவதே தூது.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (687)
௭, ஆற்றவேண்டிய கடமை அறிந்து, தகுந்த காலத்தை கருத்தில் கொண்டு, இடத்தை அறிந்து, சிந்தித்து எடுத்துரைப்பதே தூதின் தலைமையானது.
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. (688)
௮, தேவையற்றதை நாடாத தூய்மை, நன்மைக்கு துணையாதல், அச்சமற்ற துணிவு இம்மூன்றின் உண்மைத் தன்மையுடன் இருப்பதே தூதுரைப்பவர் பண்பு.
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன். (689)
௯, தவிர்க்க வேண்டியதை அரசுக்கு எடுத்துரைப்பான் வலிக்காமல் சோர்வற்ற வார்த்தை பயன்படுத்தும் திடமானவன்.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. (690)
௧௦, இயற்கையின் இறுதிப் பயன் உடனே கிடைப்பினும் எந்தக்குறையும் இல்லாமல் தன் மன்னனின் நிலையை உறுதிப்பட உரைப்பதே தூது.
அதிகார விளக்கம்!
அன்பு நற்குடி மன்னரை மதித்தல் என உள்ளவரே தூதிற்கு சரியானவர். தொகுத்து தேவையானதை மட்டும் தெளிவாக நூல் எழுத வல்லவர் போலும் சிறந்த வேல் வீச்சு போலும் தூது இருக்க வேண்டும். மரணம் வரும் என்றாலும் அஞ்சாமல் மன்னவனுக்கு உண்மை உரைக்கவேண்டும்.
காணொளி:-
https://youtu.be/bCQAAozyGxs
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691)
௧, தீ மூட்டி குளிர்காயும் பொழுது எப்படி விலகாமல் சேராமல் பக்குவமாய் இருப்பார்களோ அப்படி மன்னனிடம் பழக வேண்டும்.
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். (692)
௨, ஆட்சியாளர் அடைய விரும்புவதை குறுக்கிட்டு அடையாமல் விலகினால் ஆட்சியாளரால் நிலைத்த உயர்வு கிடைக்கும்.
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. (693)
௩, பாராட்டப் படுவதென்றால் அரிதானதை பாராட்ட வேண்டும். தவறிவிட்டால் அத்தகைய சூழல் கிடைப்பது யாருக்கும் அரிது.
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. (694)
௪, சத்தமாக பேசுவதையும், சரிசமமாக சிரிப்பதையும் சிறந்த பெரியவர்களிடம் தவிர்க்க வேண்டும்.
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. (695)
௫, உயர்ந்தோர் எதைச் சொன்னாலும் தவிர்காமல், அதை தொடரச் சொல்லாமல், மற்ற ஒன்றை சொன்னாலும் விலகாமல் மறை போல் கேட்க வேண்டும்.
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். (696)
௬, ஆட்சியாளரின் அகச்சூழலை குறிப்பறிந்து, தகுந்த நேரம் அறிந்து, வெறுக்காதபடி வேண்டியதை விரும்பும்படி சொல்லவேண்டும்.
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். (697)
௭, வேண்டியதை சொல்லி, செயல்பட தேவையற்றதை எதன்பொருட்டு கேட்டாலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். (698)
௮, ஆட்சியாளரை என்னைவிட இளையவர் என்றோ, உறவுக்காரர் என்றோ இகழ்வாக பார்க்காமல் அவர் இருப்பின் நிலைக்கு எற்ப மதிக்கப்படும்.
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். (699)
௯, ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டர் என்பதற்காக ஏற்க முடியாததை செய்யமட்டார் தெளிந்த பார்வை உள்ளவர்.
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். (700)
௧௦, நெடுங்கால நெருக்கம் என்று பண்பற்றதை செய்யும் உரிமை கொண்டாடுவது கேடு உண்டாக்கும்.
அதிகார விளக்கம்!
நெருப்பிடம் உள்ள நெருக்கமே ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் விரும்புவதை நமக்கு உரிமையாக்க வேண்டாம். அவரின் உறவை எண்ணி நெருக்கம் காட்ட வேண்டாம், இளையவர் என்று சொந்தம் பாராட்ட வேண்டாம்.
காணொளி:-
https://youtu.be/pKNeBVZ4Fh0
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. (701)
௧, பேசாது பொழுதும் பார்த்தே குறிப்பறிந்துக் கொள்பவர் எந்நிலையிலும் மாறாது நீரால் நிறைந்த உலகிற்கு அணியாவார்.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். (702)
௨, ஐயம் இல்லாமல் அடுத்தவர் மனதை உணர்பவரை தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். (703)
௩, குறிப்புகளை கேட்டு அதன் உள்நோக்கத்தையும் உணர்பவரை, குழுவுக்குள் எப்பதவியாவது கொடுத்து உறுப்பினராக ஏற்க வேண்டும்.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. (704)
௪, ஒன்றை குறித்து கூறாமலேயே புரிந்துக் கொள்பவரை ஏனைய உறுப்பினர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். (705)
௫, குறிப்புகளை கேட்டும் அதன் உள்நோக்கத்தை உணரவில்லை என்றால் கண்கள் இருந்தும் பயன் இல்லை.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். (706)
௬, அருகில் உள்ளதை பளிங்கு எப்படி காட்டுமோ அப்படி நெஞ்சத்தில் உள்ளதை முகம் காட்டும்.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். (707)
௭, மகிழ்வையும், துன்பத்தையும் முகம் போல் எளிதில் வெளிப்படுத்துவது வேறோன்று இல்லை.
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். (708)
௮, அகம் அறிந்து ஆற்ற வல்லவரை துணையாக பெற்றால் அவர் முகம் பார்க்க நிற்பதே போதுமானது.
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். (709)
௯, பகையையும் நட்பையும் கண்கள் வெளிப்படுத்தும், கண்களின் தன்மையை உணரும் ஆற்றல் பெற்றால்.
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. (710)
௧௦, நுட்பமானதை உணர்பவர்கள் அளக்கும் கருவி எது என பார்த்தால் கண்ணே அன்றி வேறு இல்லை.
அதிகார விளக்கம்!
பேசாத ஒருவரின் மன ஓட்டத்தை உணர்பவர் உலகின் அணியாவர், அவரை தெய்வமாக ஏற்க வேண்டும், அவரை நம் கூட்டத்தில் இணைக்க வேண்டும், அவருக்கு தனி இடம் தரவேண்டும், உள்ளத்தை முகம் பிரதிபளிக்கிறது. அது கண்களில் தெளிவாக அறியமுடிகிறது எனவே நுட்பமாக அளக்கும் அளவு கோலாக கண்கள் இருக்கிறது.
காணொளி:-
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். (711)
௧, தேவை மற்றும் இடம் அறிந்து ஆராய்ந்து சொல்லவேண்டும், சொல்லின் ஒட்டுமொத்த பயனை அறிந்த தூய்மையானவராக இருப்பவர்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். (712)
௨, குறுக்கிடும் இடத்தை தேர்வுச் செய்து நன்றாக உணர்ந்து சொல்லவேண்டும், சொல்லின் ஓட்டத்தை அறிந்து நன்மை அடைபவர்.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். (713)
௩, கூடி இருப்பவர்கள் நோக்கம் அறியமுடியாதவர் சொல்ல முற்படுவர் என்றால் அந்த சொல்லில் வகையும், வல்லமையும் இருக்காது.
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். (714)
௪, அறிவுடையார் முன்பு அறிவுடையாராக இருப்பதற்குக் காரணம், அறிவற்றோர் சுட்டசுண்ணாம்பைப் போல் மாசற்றுப் போவதே.
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. (715)
௫, நல்லது என்பனவற்றுள் நல்லது, மூத்த அறிஞர் முன் அவசரப்பட்டு பேசாது அடங்கி இருப்பது.
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. (716)
௬, ஆற்றின் நிலையை மாற்றும் விரிந்த பூமி, என்பதை ஏற்று உணர்ந்து அறிவுடையோர் முன்னர் ஏற்படும் இழக்கை புரிந்துக் கொள்ளவேண்டும்.
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. (717)
௭, கற்று அறிந்தவர் இடத்தில் கல்வி வெளிப்படுவதைப் போலவே, அழுக்கற்ற வார்த்தைகள் அறிந்தால் பேசும் வல்லமை உள்ளே தோன்றும்.
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (718)
௮, உணரும் ஆற்றல் உள்ளவர் முன் பேசுதல், வளரும் தன்மையுள்ள பயிருக்கு நீர் பாய்ச்சுவது போல் நற்பயன் கிடைக்கும்.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். (719)
௯, புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது, நல்லார் கூட்டத்தில் நன்மைபட பேசுபவர்.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். (720)
௧௦, சாக்கடையில் உற்றிய அமிழ்து போன்றது, தகுதியற்றவர் முன் பேசுவது.
அதிகார விளக்கம்!
அளவை அறிந்து பேச வேண்டும், ஆர்வம் குறையாமல் அறிபவர் தரம் புரிந்து பேச, ஒத்த உணர்வு பெற்று பயிர் வளர்க்க உதவும் நீராய் மாறும். ஆனால், தகுதியற்றவர் முன் பேசினால் சாக்கடையில் கொட்டிய அமிழ்தாகும்.
காணொளி:-
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். (721)
௧, பேச்சின் வகைகளை அறிந்த வல்லவர், பேச தயங்கமாட்டார். கூட்டத்தின் தேவை தெளிவாய் தெரிவதால்,
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். (722)
௨, கற்றவர்களில் கற்றவர் என்பவர் கற்று அறிந்தவர்களின் முன் மேலும் கற்று அறியும்படியாக பேசுவார்.
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். (723)
௩, பகைக்கொண்டு சாகத் துணிபவர்கள் ஏராளம். அரிய சிலரே அவையில் பேச அஞ்சாதவர்கள்.
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். (724)
௪, கற்றவர்கள் முன்பு தான் கற்றதை எடுத்துச் சொல்லி தன்னைவிட அதிகம் கற்றவரிடத்தில் மேலும் கற்க வேண்டும்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. (725)
௫, எடுத்துக் கொண்ட பொருளின் அளவை அறிந்து கற்க வேண்டும். அதன்பொருட்டே அவைக்கு அஞ்சாமலும், மாற்றுக் கருத்துக்கு ஈடுகொடுத்தும் பேச முடியும்.
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. (726)
௬, வாள் இருந்து என்ன பயன் வன்மையான குணம் இல்லாதவர்க்கு, நூல்களால் என்ன பயன் நுட்பமானவர்களின் கூட்டத்திற்கு அஞ்சுபவர்க்கு.
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். (727)
௭, போர்களத்தில் கோழையின் கூர்மையான வாள் எப்படி பயனற்றதோ, அப்படியே அவைக்கு அஞ்சுபவர் கற்ற நூல் பயனற்றுப் போகும்.
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். (728)
௮, பல துறை நூல்களை கற்றும் பயன் இல்லாதவர் நல்லனவற்றை நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லாதவர்.
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். (729)
௯, கல்லாதவர்களைக் காட்டிலும் கடைசியாக எண்ணவேண்டியவர்கள், கற்று அறிந்தும் நல்லவர்கள் கூடியுள்ள அவையில் பேச அஞ்சுபவர்கள்.
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். (730)
௧௦, அறிவு இருந்தாலும் இல்லாதவர்களுக்கு சமமாகவே கருதப்படுவார்கள், அவைக்கு பயந்து கற்றதை தெளிவாய் எடுத்துச் சொல்லாதவர்கள்.
அதிகார விளக்கம்!
கூட்டத்தின் தேவை அறிந்து கற்றவர் முன்னும் அஞ்சாமல் பேச வேண்டும். போருக்கு போகும் துணிவை விட அவையில் பேசுவது கடினம். அறிவு பெற்றும் தக்க இடத்தில் பேசதாவர் அறிவற்றவரே.
காணொளி:-
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. (731)
௧, வெறுக்க முடியாதன விளைவதும், தகுதியான மக்களும், குறையாத செல்வம் பெற்றவரும் கூடி இருப்பது நாடு.
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. (732)
௨, நிறைந்த பொருள்களை பெற வாய்பளித்து, அருமையான உழைப்பால் தேவைகளை பூர்த்தி செய்வது நாடு.
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. (733)
௩, சுமை பெருகி அதிகரிக்கும் தருணம் உதவி செய்வதால் ஆட்சியாளர்களுக்கு ஏற்றம் ஏற்படுவதே நாடு.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. (734)
௪, தீர்க்க முடியா பசியும், அழிக்க முடியா நோயும், தணிக்க முடியா பகையும் சேர்த்துக் கொள்ளாது இருப்பது நாடு.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. (735)
௫, பலதரப்பட்ட கூட்டங்களாகவும், வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் உட்பகையும், அரசுக்கு எதிரான கொலைக்கு அஞ்சாத தீவிரவாதிகளும் இல்லாமல் இருப்பது நாடு.
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. (736)
௬, கெடுதலே அறியாமல் மீறி கேடு வரும் நேரத்தில் தனது வளத்தை இழக்காமல் இருக்கும் நாடே நாடுகளுக்கெல்லாம் தலைசிறந்தது.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. (737)
௭, ஆற்று நீரும், ஊற்று நீரும். அதை வாய்க்க செய்யும் மலையும், பருவத்தே வரும் மழை நீரும், வல்லமையான அரணும் நாட்டின் அவசியமான உறுப்புகள்.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. (738)
௮, நோய் இல்லாது இருத்தல், நிறைந்த செல்வம், நல்விளைச்சலுடன் வளரும் இன்பம், பாதுகாப்புத் தன்மை இவை ஐந்தும் நாட்டின் அணிகலன்கள்.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. (739)
௯, நாடு என்பது முயற்சி இல்லாமலேயே வளம்பல பெற்றிருக்க வேண்டும். முயற்சியால் வளம் தருவது நாடாகாது.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. (740)