• +91 97102 30097
  • reach@yogakudil.org

S. ஜெயக்குமார்

Awesome Image

வணக்கம் என் பெயர் S. ஜெயக்குமார், சைதாப்பேட்டை, சென்னை -18.

18/11/2016 அன்று ஐயாவிடம் உபதேசம் பெறும் பாக்கியம் பெற்றேன். அதற்கு முன்பு மே 2016 ல் பைக் விபத்தில் எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்கள் நடக்க முடியாத சூழ்நிலை. July 2016 ஐயா பேசிய வாசியோகம் பார்த்தேன். அடுத்தடுத்த இரண்டு வீடியோ பார்த்தவுடன் ஐயாதான் நமக்கு வழிகாட்ட வந்த குரு என்பதை புரிந்து கொண்டேன். அந்த நேரத்தில் ஐயாவை நான் நேரில் பார்க்கவும் இல்லை, போனில் பேசவுமில்லை. ஆனால் எனக்குள் ஒரு தெளிவு, புரிதல் ஏற்பட்டது.

தொடர்ந்து ஐயாவுடைய பேச்சை மட்டும் வீடியோவில் கேட்டு வந்தேன். என் மண்டைக்குள் சாதி, மதம், சடங்கு என்ற பெயரில் இருந்த ஏகப்பட்ட குப்பைகளை தூக்கி எறிந்து விட்டார். மனதில் ஒரு தெளிவும், தேவையில்லாதவைகள் என்னைவிட்டு விலகிவிட்டதுபோல் ஒரு உணர்வும் ஏற்பட்டது. ஐயாவிடம் வீடியோவிலேயே நிறைய அடிவாங்கியாயிற்று. எங்கு திரும்பினாலும் அடி, திட்டு, அவமானம் என்று புரட்டி எடுத்துவிட்டார்.

 - ஏன்டா நீ மனுஷனா? கல்லை கும்பிடுற..... எதிரில் வர்ற மனுஷன மதிக்கமாட்டன்ற..... 

- ஏன்டா 80 வயசு கிழவன் எப்படி 20 வயசு குமரனா மாறுவான்.... எப்பிட்றா சாத்தியம்? யோசிக்கவே மாட்டீங்களா?

- ஜோதியாயாயிட்டாரு, பாதியாயிட்டாருன்ற... அதையும் நம்புற கொஞ்சம் கூட சொரணையே இல்லையா! இவ்ளோ கேடு கெட்டுப் போயிருக்குற... இப்படி வாங்கிய உதையின் விளைவாக ஏற்பட்டதுதான் அந்தத் தெளிவு. 

ஐயா சாந்தமாக பவ்யமாக பேசியிருந்தால் தொடர்ந்து பார்த்திருக்க மாட்டேன். ஒரு உண்மை குருவை அடையாளம் காண முடியாமல் போயிருக்கும். உணர்வு என்பதற்கான அர்த்தம் ஐயாவிடம் வந்தபிறகுததான் புரிந்து கொண்டேன். ஐயா `வணக்கம்` என்று சொல்லும்போது கூட அந்த வார்த்தையில் ஒரு உயர்வு இருக்கும். அதை நான் உணர்ந்திருக்கிறேன். உணர்வு பெற்ற மனிதராயிற்றே.

பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். பயிற்சியின் மூலம் தெளிவான மனநிலை, நல்ல பசி, ஆழ்ந்த உறக்கம், குழப்பமோ டென்ஷனோ இல்லாமல் இயல்பாக இருக்க முடிகிறது. ஐயாவின் மூலமாக என் பலவருட தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இறைவனுக்கு நன்றி! குருவுக்கு நன்றி!

ஐயா `புலால்` என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மற்ற குரு(ட்டு)மார்கள் எல்லாம் ஒரேமாதிரியான பொய்யைத்தான் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். 

Feb-2018ல் `ஆனந்தவாழ்வு` வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய உண்மைகளை, ரகசியங்களை புரிய வைத்தார். ஆடவும், பாடவும், தெளிவாக பேசவும் வைத்தார். ஐயாவின் தொடர்பு ஏற்பட்டதிலிருந்து எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை. டிவி, சினிமா பார்ப்பதும் வெகுவாக குறைந்துவிட்டது. ஐயாவின் வீடியோ ஒன்றே போதுமானதாக இருக்கிறது.

யோகக்குடிலுக்கு வழிகாட்டிய இறைவனுக்கு நன்றி! என்னை தெளிந்த மனிதனாக மாற்றிய சிவயோகி ஐயா அவர்களுக்கு நன்றி!

ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள்...  வாட்ஸப்பின் இந்த குரூப் பதிவை மட்டும்தான் பார்த்து வருகிறேன். பயிற்சியின் மூலம் உயரிய நிலையை அடைந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்வது, விளக்கம் அளிப்பது என்னைப் போன்றவர்களுக்கு மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இந்த குரூப்பில் நீடித்திருக்க உதவுங்கள். இப்பொழுதுதான் யோகக்குடிலில் ஐயனின் நிழலில் பாதுகாப்பாக ஒதுங்கி இருக்கிறோம். ஒதுக்கிவிடாதீர்கள். நன்றி! வணக்கம்!

என்றும் ஐயனின் ஆசியை நாடும் 

S.ஜெயக்குமார் | சென்னை - 15 | 9444189474

- S. ஜெயக்குமார்