• +91 97102 30097
  • reach@yogakudil.org

விஜயலதா

Awesome Image

 à®Žà®©à®¤à¯ பெயர் விஜயலதா.

 

இடம் ஸ்ரீலங்கா. ஐயாவிடம் உபதேசம் பெற்ற தினம் 04/05/2017.

 

பல வருடங்களாக இறை தேடலில் இருந்த எனக்கு யூடியூப் வாயிலாக இறைவனே சிவயோகி ஐயா வடிவில் குருவாக கிடைத்ததற்கு நான் ஆனந்தம் அடைகிறேன். உபதேசம் வாங்கிய நாள் முதல் என் வாழ்க்கை ஆனந்தமாகவும் வெற்றியாகவும் மாறியது. இதற்கு எனது குருவிற்கு மனமார்ந்த நன்றி. 

 

கடவுளை உணரும் பயிற்சி செய்ய தொடங்கிய குறுகிய காலத்திலேயே மூன்றாவது கண் விழிப்படைந்தது. மெய்ப்பொருள், மறைபொருள், பிரணவ மந்திரம், உபதேச பயிற்சிகள் பெற்று தொடர்ந்து பயிற்சிகள் செய்து உடல்நிலை ஆரோக்கியமாக மாறியது. உடலிலும், மனதிலும் மகிழ்ச்சியும், உற்சாகமும் குடி கொண்டது, இறைநாதமும் கேட்கத் தொடங்கியது. 

 

இதுவரை காலமும் குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்தோமோ என்ற ஐயத்தை உபதேசம் வாயிலாக தெளிவு படுத்தி எந்த குற்ற உணர்வுமின்றி அச்சமின்றி வாழ வழி தந்த ஐயனின் பொற்பாதங்களை கண்ணீரால் அபிஷேகம் செய்கின்றேன். 

 

தீட்டு தீட்டு என்று சமூக சாயம் போர்த்தி வாழ்ந்த எனக்கு சாதி, மத பேதங்களில் இருந்து விடுவித்து, சதா சர்வகாலமும் இறைவனை நினைக்கின்ற ஞானத்தை ஊட்டி என்னுள்ளேதான் இறைவன் குடிகொண்டிருக்கிறான், நீயேதான் கடவுள் என்பதை அனுபவத்தால் உணர செய்த ஐயன் என் குருவிற்கு ஆனந்தமெனும் மலர்களால் பூஜிக்கிறேன். 

 

என்போல் உலக மக்கள் யாவரும் ஐயாவிடம் உபதேசம் பெற்று குற்ற உணர்வற்ற, சாதி, மத பேதங்களை நீக்கி கடவுளை அனுபவத்தால் உணர்ந்து முக்தியெனும் வீடுபேறும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழும் வழிமுறைகளை போதிக்கின்ற என் குரு சிவயோகி ஐயா மட்டும் போதுமானவர். 

 

கடவுளை தேடும், கடவுளை அனுபவத்தால் உணர விரும்பும் அன்பு உள்ளங்கள் அனைவரும் என் குரு சிவயோகி ஐயாவிடம் உபதேசம் பெற்றால் பாக்கியவான்களே. நான் யாரென்று தெரியாமல் நடுக்கடலில் தவித்த என்னை எனக்கு அறிமுகம் செய்து கரை சேர்த்த குருவிற்கு என் சந்ததியே அடிபணியும். 

 

குருவே சரணம்

குருவே துணை

குருவிற்கு கோடானகோடி நன்றிகள்

- விஜயலதா