• +91 97102 30097
  • reach@yogakudil.org

பரமாத்மா

Awesome Image

அன்பான வணக்கம்

குருவே சரணம்

 

எனது பெயர் பரமாத்மா,

குருநாதர் சிவயோகி ஐயாவிடம் உபதேசம் வாங்கிய நாள் (28.12.2015)

 

குருவின் அருளால் பக்தியுடன் தொடர்ந்து பயிற்ச்சி செய்து வருகிறேன், புறம் நோக்கியே பழக்கப்பட்ட என் பொறிபுலன்கள்  அகம் நோக்கி செல்ல துவங்கியது. 

 

பயிற்சியின் மூலம் பெற்ற அனுபவங்கள்,  மூன்றாவது கண் விழிப்பு, நாதம் கேட்பது அதாவது  சில சமயங்களில் ஓங்கார நாதத்தை உடல் முழுவதும் கடல் அலையின் அதி வேகமான ஓசையை போன்ற சத்தத்தை கேட்டுள்ளேன்,

அமிழ்தம் சுரப்பது,

உடல் லேசாக மாறி உடல் அற்ற தன்மையை உணர்வது,

தலையில் மலர் விரிந்து மலர்வது,

அரசமரத்தின் அடியில் வைத்திருக்கும் கற்சிலையில் உள்ள பாம்பு எதற்காக வைத்துள்ளனர் என்று தெரியவில்லை அதை போன்றே வலைந்து நெகிழ்ந்து  கண் பார்வையில் DNA எப்பவும் தெரிகிறது,  கண்கள் மூடிய நிலையிலும் திறந்த நிலையிலும் புள்ளி வடிவிலும், வட்ட வடிவில் மிக பெரிய வடிவிலும் தோன்றும்,

சில சமயம் மின்னல் போன்ற ஒளி வீசும்.

உடலை விட்டு வெளியே வரும் அனுபவம். 

 

2016 ஆம் ஆண்டு ஆனந்த் வாழ்வு வகுப்பில் கலந்து கொண்டேன் 

நான் யார்?

துன்பம் ஏன்?

கடவுளை புரிந்து கொள்ளவும் 

ஆனந்தமாக வாழ்வது பற்றியும் ஐய்யன் உபதேசித்தார்

பயிற்சியில் கிடைத்த அனுபவத்தை பிறரிடம் கூறினால் அவர்களும் குரு நாதரிடம் உபதேசம் பெற்று கடவுளை உணர்ந்து கொண்டாட்டமாக வாழந்து  இறுதியில் சாமாதி சாதிக்க வாய்ப்பாக அமையும் என்று எனது  அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். 

 

நன்றி ஐயா

பரமாத்மா 

மும்பை 

8652397228

- பரமாத்மா