குருவிற்க்கு அன்பு வணக்கம் S.அருணாச்சலம் காரைக்கால். 16/10/2016 அன்று சிவயோகி குருவிடம் உபதேசம் பெற்றேன், எனக்கு ஒரு 11அல்லது 12 வருடம் "முதல் கடவுளைப்பற்றி விளக்கத்திற்க்காக நிறைய பேர் குரு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களை அவர்களை சத்தித்து தீட்சை வாங்கி உள்ளேன்,அந்த பயிற்ச்சிகளை செய்வேன் எனக்கு உள்மனது பிறகு ஏற்றுக்கொள்ளாது பிறகு தேட ஆரப்பிப்பேன் இந்த தேடுதல் என்னை 11 வருடம் அழைத்து சென்றது. ஒரு சமயத்தில் பயிற்ச்சியே செய்யாமல் சும்மா இருப்பேன்,இதற்க்காக அதிக பணம் செலவழித்து உள்ளேன் சிலரின் வீட்டு வாசலில் காத்து கொண்டுயிருந்திருக்கிறேன், அவர்களுக்கு நிறைய பேருக்கு பரிபாஷை தெரியாது அதனாலே சித்தர்களின் பாடல் விளக்கம் அளிக்க முடியவில்லை ,அதனால் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. பிறகு ஒரு நாள் முடிவு செய்தேன் 50வயது ஆனதும் இமயமலை சென்று அங்கு தேடுதலை ஆரம்பபிப்போம் நினைத்து கொண்டு இருந்தேன் . அப்போதுதான் youtube ல் சிவயோகி குருவின் வாசி என்ற தலைப்பில் விளக்கத்தை கேட்டேன். அப்போது எனக்கு நிறைவு கிடைத்தது, என்னால் அந்த மகிழ்ச்சியை கூறமுடியவில்லை, தொடர்ந்து குருவின் சத்சங்க அனைத்தையும் download செய்து பார்த்துவிட்டேன் அதன்பிறகு குருவை சந்தித்து16/10/2016 உபதேசம் பெற்றேன் , அப்போது குரு மெய்பொருள்,மறைப்பொருள்,பிரணவமந்திரம் ஆகியவற்றை விளக்கினார், அதிலிருந்து"பயிற்ச்சி செய்து கொண்டுவருகிறேன் முதல் 5 நாளில் மூன்றாவது கண் விழிப்படந்தேன். என்னிடம் உள்ள குற்ற உணர்வை தூக்கி எறியவைத்தார் முதன்முதலில் என்னை(நீ) விசேஷம் என்று விளக்கியவர் என் குரு, இப்போது தெளிவாக இருக்கிறேன்,இப்பிறவியில் குருவின் அருளால் சமாதி சாதிப்பேன் திடமாக சொல்லமுடியும் ,குரு தெளிவான பரிபாஷை விளக்கம்,முறையான பயிற்ச்சி,தொடர்ந்து குருவின் கண்கானிப்பு. இதைவிட வேற என்ன வேண்டும் ஒரு சீடனுக்கு. சிவயோகி குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம் பார்த்துக்கொள்வது நமது கடமை.தேடி அலைந்தவனுக்கு தான் தெரியும் குருவின் அருமை.நன்றி
- S.அருணாச்சலம்