• +91 97102 30097
  • reach@yogakudil.org

உப்பிலியப்பன்

Awesome Image

கொண்டாட்டம் என்  இருப்பின் உச்சம்!.. நன்றியுணர்வே என் வாழ்வின் தத்துவம்!..

~சிவயோகி பாத கமலமலர் சரணங்களே~

 

வாழ்தல் மட்டுமே இறைமையை அனுபவிக்கும் பாக்கியமாகும்!.. யோக சாதனை ஒன்றே தன்னையறிய உதவும் ஒரே வழியாகும்!.. சாதி, மதம், மொழி, இனத்தை தாண்டி சிந்திப்பவர்க்கே பரிபூரணம் நிச்சியமாகும்!.. கடவுள் கோயிலில் ஆராதிக்கும் கருங்கல்சிலை அல்ல!.. அது தேக கடத்துள் லயித்து ஆனந்திக்க வேண்டிய அற்புதம்!.. ஆண் பெண் அந்தரங்கம் எந்தளவு ரகசியமோ... அதைப்போலவே கடவுளுக்கும் சாதகனுக்கும் உள்ள உறவு!.. துணையோடு புணர்தல் காமம்!.. தன்னில் தான் மலர்தல் யோகம்!.. 

குருவின் தகுதி பார்க்கவோ... குருவின் சித்தி சோதிக்கவோ... கற்றதை கற்பிக்க நினைப்பதோ... வைரக்கல்லை உப்பாய் விற்ற கதையே!.. குரு ஒவ்வொருவர்க்கும் தேவை!.. குருவாக முயற்சிப்பது புரியாத வேலை!.. வாழ்ந்து முடித்தவனின் வார்த்தை அனுபவம் தன்னில் மலர்ந்தவனின் யோக அனுபவம் எல்லாவற்றையும் உள்வாங்கி வெளிப்படுத்தும் ஆனந்த பரிபூரண நித்திய நாதத்தில் லயித்து உபதேசம் தந்த என் குருவை கொண்டாடுவது என் கடமை!.. என் ஜால வார்த்தையில் என் குரு மயங்கிடுவார் என எதிர்பார்க்கும் மூடன் அல்ல!.. அவரின் யோக அனுபவம் ஒன்றே என் பயணத்தின் நிறைவாகும்!.. 

வாழும் பொழுதே யோகத்தில் திளைக்கவே ஆசை!.. வாழாவெட்டியாய் வாழ்ந்து மடிந்து போக விடமாட்டேன் என் பிறப்பை!..  சிவயோகி என் குரு!.. எங்களுக்குள் உபதேசமே உறவு!.. இதற்கு மேல் சொல்லிக்கொண்டே போவது தவறு!..

துறவு கொள்ள நினைத்தேன்...  வாழ்க்கையின் இயல்பு வாழவே வழிகாட்டியது!.. தனிமை கேட்டேன் காலம் எனை அதில்  தள்ளியது!.. இப்பொழுதுதான் தெரிகிறது துறவு எதுவென்று!.. உண்மையில் வெட்கப்படுகிறேன்!.. வாழ்வை உதறிவிட்டு வாழாவெட்டியாய்  திரிந்திருக்கிறேன் என்பதற்காய்!.. 

நான் ஏன் கடவுளைத்தேட வேண்டும் என்ற கேள்வியை என்னிடமிருந்து புடுங்கி எறிந்து நீ ஏண்டா நாயே, கடவுள தேடாம இருப்ப? மனுசனாடா நீ?  பொண்டாட்டிக்கும் ஆன்மீகத்துக்கும் என்னடா சம்பந்தம்?.. திருவாசகம் படிக்கிறதற்காடா கல்யாணம் பண்ணிகிட்டு வந்த?.. 

இப்படி ஒரு பயலும் சொல்லி என்னை திருத்த வில்லை. சிவயோகியின் செருப்படி கடல் கடந்தும் வலித்ததால் அவமானம் அடைந்தேன்!.. உதவாக்கரையான என்னை உருப்படியாக்கிய சிவயோகியை... இங்கிருந்தே வணங்குகிறேன். இவர் மனிதர்!.. 

உண்மை இவ்வளவே!.. குழம்பாதே என்று மனதை திசை திருப்பினேன்!.. வாழ்வு நதி கண்முன்னே ஓடிக்கொண்டிருக்க... ஆனந்தமாய் குளிக்காமல் பரதேசியாய் திரிந்திட நினைத்தேனே!.. வாழாவெட்டியாக வாழ்வதற்காகவா வந்தேன்!.. மானங்கெட்டத்தனமாய் மண்ணில் விழுந்திருந்தேனே!..  

அப்பனே...  ஆண்டவனே... அருள் கொடை ஆனந்தமே... ஆரவார திருக்கூத்தை... ஆடிநீயும் வந்திடவே... கண் போதாமல் பார்க்கிறேன்!..  

கூத்தனே... என்னுள்ளே இருப்பவனே... சுயமே பெருகும் சுகமே... தேடி நானும் திரிந்தழைந்தேன்... சிவயோகியால் சுயம்பாய்... என்னுள் உன்னை  கண்டு கொண்டேனே!.. 

பசித்திரு... விழித்திரு... தனித்திரு... என்ற உண்மையின் அர்த்தம் புரியாமல்... கனவில் வாழ்ந்தேனே!.. மரணமில்லா பெருவாழ்வை வேண்டி... காரணமில்லா ஒருவாழ்வை தீண்டினேனே!.. 

மஹாசிவராத்திரி என்று பட்டினி கிடந்து... தனிமையிலே உள்ளூர் ஆலயத்திலே... நான் மட்டும் உறங்காமல் இரவெல்லாம்... லிங்கக்கல்லிற்கு  தீபதூப ஆராதனையிட்டு.. விடிய விடிய விடைபுரியா கேனையனாய்... தூக்கம் விட்டு கடவுளைத் தேடினேனே!.. 

கடவுள் நேரில் வந்து பேசிடுவாரென... பைத்தியப் பேச்சில் தினம் மயங்கியே... இருமாந்து விரதமிருந்தேன்!.. கடவுளை நினைத்து பட்டினி கிடந்தால் அவனருள் எளிதாய் கிட்டும்!..  

மனமுருகி மந்திரம் சொன்னால்தான்... கடவுள் அருள் பெற முடியும்!.. கறி, மீன் தின்னும் நாயே... உனக்கெப்படி அருள் சுரக்கும்!.. கடவுள் அருளை பெற துறவு ஒன்றே வழி!.. அதுசரி ஐயா காம எண்ணம் வருதே?.. எல்லா பெண்ணையும் தாயாய் நினை!.. உங்க பொண்டாட்டி உங்களுக்கு தாயா?.. நாயே எழுந்திருச்சி வெளியே போடா!.. 

அவமானம்... வேதனை... ஏக்கம்... தொலைக்காட்சியின் திரைக்காட்சியில்... உள்ளம் உருக்கும் காட்சியை பார்த்தால்... வெடித்து அழுவேன்!.. 

அப்பா... அப்பா... உன்னை தேடுறேன்டா... எனக்கு வழிகாட்டென துடித்தேன்!.. எங்கேனும் போய் எதையாவது செய்வேன்!.. அக்னிகோத்திரம் செய்!.. யோகாசனம் செய்!.. உடம்பிற்கு தினம் இனிமா கொடு!.. அதைச்செய்... இதைச்செய்... சித்தர்கள்தான் உதவி செய்வார்கள்!.. சித்தரின் அருள் அப்பிடியே வந்து அதிர்வு பண்ணும்!.. எனக்குத்தான் ஒரு புண்ணாக்கும் வரலை!.. ஒருபயலும் உதவவில்லை!.. கோயிலுக்கு போனாலே...  காசு... தட்சணை... கோவிலுக்கு நிதி... போங்கடா எழவெடுத்தவனுவோளா!..  நீங்க திங்க நான் உழைச்சி வந்து நொட்டனுமா!.. போங்கடா மயிருங்களா!..

மனம் இதற்கிடையில் மற்றவர்க்கெல்லாம்... கற்றுக்கொண்டதை போதிக்க ஆரம்பித்தது!.. உனக்கு அது தெரியுமா?.. எனக்கு இது தெரியும்!.. 

நாயே உனக்கு கடவுள் தெரியுமா?..   à®•à¯‡à®Ÿà¯à®Ÿà¯ கர்ஜித்த சிங்கமே... சிவயோகி தங்கமே!..  

காமனை எரித்தால் ஆனந்த போதை உண்டாகும் அதில் சும்மா இருக்கும் சுகம் உனக்குக் கிடைக்கும்!.. காமம்தான் பெரிய சோதனை அதை தாண்டினால் கடவுள் அருள் வந்து பாயும்!.. பரியங்க யோகம் போய் பரதேசியாய் யோகியின் போகமென குழம்பி நின்று... கையடித்து கிழ்ஊற்றி... அப்போதும் விடுவதில்லை. கடவுளே என்றுதான் அழுவேன்!.. 

அப்புறம் காமத்திலிருந்து கடவுளுக்கு... இந்தபக்கம் ஒரு பாதை!.. மகராசன் புத்தகத்தோடு பக்குவமாய் ஒதுங்கிய புண்ணியவான்!..

நான் கடவுள் படம் பார்த்து அகோரியாய் வாழ்ந்தால்தான்... பரமனின் அருள் வரும். அதையும் செய்தேன். இரவில் சுடுகாட்டிற்கு போய் உட்கார்ந்திருந்து ஒரு ஞானமும் வரல. 

ஆனால் நான் கடவுள் என்ற வார்த்தை புரிந்தது.ஏதோ இருக்கு என்ற உந்துததல் மட்டும் தீரவில்லை!.. கடவுள் தேடும் பைத்தியமாய் திரிந்தழைந்தேன்!.. 

ஆன்மீகச் சாலையில் விபத்து ஏற்பட்டு... சம்போ என்று அழுதபடி... மெய்ஞானமதை... விஞ்ஞான யோகக்கலாச்சாரமென்று... பேசிய தாடியிடம் அடகுவைத்து...  என்னை மீட்டெடுக்க முடியாமல்... சன்னியாசம் வாங்கித் தருவதாய்... சகவாழாவெட்டி மதிகுழப்ப... புராணம் படித்து கதை வளர்த்து வெறிபிடிக்க... கற்பனை காவியம் படித்து மனதில் வக்கிர எண்ணம் தலைதூக்கிட... கடவுள் காமமென தேடியலைந்தேன்!.. 

யந்திரம் மந்திரம் என்று உடம்பின் ரகசியம் புரியாமல்...  ஆத்மானுபவம் உணராமல்... சதா பேசும் மனதோடு தலைகால் புரியாமல்... பேச்சாளனுக்குள் ஒழிந்த கள்வனாய்... யோகி போல் பேசி... அலைபாயுதே கண்ணாவென... இரவும் பகலும் பெண்மை புகழ்ந்து... இழவும் கருமாதியுமாய்... பிறப்பின் வாசல்தனை தினம் தேடி... பதினாறும் குற்றவுணர்வாய் மாறிப் பழிக்க... எனக்கு நானே தர்ப்பணம் செய்து கொண்டேன்!.. 

 

தகராறு செய்து... ஆச்சாரம் கூசாமல் விபச்சாரம் செய்யும்... ஓரினச்சேர்க்கைத் தனமாய்... என் கேடுகெட்ட மனதில் யோகியின் சாயம் பூசி... சுயஇன்பத்தில் எனை மறந்து... திருக்காப்பிட்ட தெருக்கூத்தென... காம உணர்ச்சியின் எல்லையில்... பட்டினி உபவாச அல்சர் வந்து...  சிலைக்கழுவி சில்லரைப்பார்த்து... மாமிகளாய் நோட்டமிட்டு... நாற்பது வயதாகியும் திருமணம் செய்யாமல்... வாழாவெட்டியான குருக்கள்...  பலர்முன்னிலையில் அபிஷ்டு என திட்ட... 

இறைவா உன் அருளுக்காய்... பொருள்இழந்து... மரியாதை போய்... மானங்கெட்டு வாழ்கிறேனே... என்று வேதனைப்பபட்டேன்!.. 

எல்லாவற்றையும் அறுத்தெறிந்தால்... பன்னிரண்டு ஆண்டில் உனக்கு... எல்லா சித்தியும் கிடைக்கும்... அதற்குப்பின் உன்விருப்பம் போல்... எல்லோரையும் ஆட்டலாம்!..  ஒருநாய் குழைத்தபடியே ஓடிவந்து மேல்விழ.. மூடிக்கிட்டு போடான்னு... வசைபாடி விரட்டி விட்டேன்!... 

ஆயிரம் புரியாத குழப்பம்!.. யோகம்... ஞானம்... கர்மா... விதி... அடக்கடவுளே உன்னை அடைய... எல்லாம் தலையெழுத்தாயென்று... நினைத்தழுதபடியே... என் விடுதலையின் விடைதேடி... ஆன்மதாகம் வளர... ஆன்மீக இருள்பள்ளத்தில்... கால்தவறி விழுந்தேனென்று... நொந்த மனதிற்குள்... தினம் அரட்டை அடித்த அரங்கத்தை... நொறுக்கி யெறிந்து வந்ததொரு சிங்கம்!.. 

எனக்கு பிடித்த காமத்தையே தந்திரமென்று பேசி வந்த தலைவனே!..  நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா... நின்னை சரணடைந்தேன்!.. உண்மையின் எளிமையில் பயணிக்க வந்துவிட்டேன்!.. மனதிற்குள் திட்டியவைதான் இங்கு வார்த்தைகளால் கொட்டியிருக்கிறேன்...இதில் எவர் மனதையும்காயப்படுத்த விரும்பவில்லை...  அதற்காக நன்றி சொல்லும் விதத்தைதான் அப்படியே கிறுக்கியுள்ளேன்!... 

என் அனுபவம் இது!.. எனக்கு அயோக்கியனாய் இருந்தவன் உங்களுக்கு யோக்கியனாய் தெரிந்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!... உங்களுக்கு  இறைத்தாகமெடுத்தால்... இறைவன் படைத்திருக்கும் தண்ணீரைக் குடித்தால்தான் உண்மை புரியும்!.. அதுவரை நான் உங்களையே பார்த்துக்கொண்டிருக்க முடியாது!...  என் வாழ்க்கை... என் பயணம்!... 

எவரையும் விமர்சிக்காமல் இருக்க வேண்டுமென்றால் நான் எவரிடமும் போகாமல் இருந்திருக்க வேண்டும்!.. இல்லையெனில் அந்த அனுபவம் காட்டித்தந்திருக்க வேண்டும்!... அதைவிட்டு பயிற்சி பண்ணு பயிற்சி பண்ணு.போங்கடா லூசுங்களா!..  

அதுக்கு வேற ஆளப்பாரு!.. உண்மையை சொல்லு!.. இல்லாட்டி தள்ளி நில்லு!.. குண்டலினியாம் குண்டலினி போடா போ!..  அங்கே போய் அஜினோமோட்டோவா தின்னு!.. எனக்கு தேடலும் இருந்தது!.. புத்தியும் இருந்தது!.. தப்போ சரியோ உன் வேலையை நீ பாரு. நான் வந்த வேலையை முடிச்சிட்டு... இருக்குறவரைக்கும் நல்லா தின்னுபுட்டு... ரெண்டு மூனு குட்டிய பெத்துபுட்டு.. அதுங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்திட்டு... சந்தோஷமா... ஆனந்தமா... இன்பமா... காதலா... மகிழ்ச்சியா... மரத்தில் பழுத்த கனியாய் விழுகிறேன்!.. இந்த அடிச்சி பறிச்சி பழுக்கவைக்கிற வேலை இங்க வேணாம்!.. ஆமாம் பார்த்துக்க!.. 

திரு ஞான தேசிகமே... உம்மால் இன்று தெளிந்த பாதையில்... ஆனந்த போதையில்... சிவபோக உபதேச பழம் தின்றபடி... பழமையின் கதைபேசி திரும்பிப்பார்க்கிறேன்!.. 

எல்லாவற்றிற்கும் விடை தெரிந்தேன்!.. என்னுள்ளே ஆனந்த ஊற்றை நான் கண்டேன்!.. 

தக்கன் வேள்வியே... என் ஞானக்குளியலே!..  மந்திர முயற்சியே... என் தமிழ் உயிரெழுத்தே!.. போதுமென்று  தூங்கவைத்து... யோக நித்திரையிலே... அனுபவங்களை... எளிமையாய்... அனுபவமாக்கி விட்டுக்கொண்டிருப்பவரே!.. மதம் கடந்த மனிதனாய் வழிபாடு செய்கின்றேன்!.. அவனருளால் அவன்தாள் வணங்கியே... என் குருவான ஞானதேசிங்கமே... உம் மெய்திருவடி பணிந்து நிற்கின்றேன்!..  

என் கூடவே வழித்துணையாய் இருந்து... என் கரம்பிடித்து... பிறவிப்பெருங்கடல் கடக்க வைப்பீராக!.. 

 

என்னை அறிந்து கொள்ள துடிக்கும் நான் - தன்னையறிந்து என்னை உணர்த்தும் குரு - அவரின் கருணையான உபதேசம் - யோக அனுபவம் - இறைமையில் கலத்தல் இதுதான் என் இலக்கு. என்னிடம் யோக்கியத்தனம் பார்த்தால் விலகு விலகு. 

சிங்கம் ஒன்று புறப்பட்டேன். சிம்மாசனத்தில் அமர்ந்தவளை சுமந்து கொண்டு!.  

சிவயோகி!.. 

தன்னை தன்னில் உணர்ந்த மனிதர்!.. இறைமை புரிந்த எதார்த்தமானவர்!.. கடவுள் தேடும் எண்ணம் கொண்டவரா நீங்கள்!..  ஒருமுறை சிவயோகியை கலந்து பேசுங்கள்!.. இவரை மறுதலிக்க உங்களால் முடிந்தால்...  நீங்கள் கடவுள் தேடுபவர் அல்ல!..  இவரின் அசிங்கமான வார்த்தைகளில் நீங்கள் காயப்படலாம்!.. நம்மைப் பிடித்திருக்கும் சமூக சாயங்களை கழுவிவிடவே அவர் முனைகிறார்!.. 

கடவுள் வெளியே தேடும் விசயம் அல்ல!.. வெளியே காண்பதெல்லாம் நம்மை நம்மை நோக்கி திசைத் திருப்ப ஏற்படுத்தப் பட்ட ஏற்பாடுகள்!..  சாதி,மதம் தெளிந்த மனிதர்!.. பழக எளிமையானவர்!..

உங்களுக்கு வாய்ப்பிருந்தால் ஒரு முறை யோககுடில் வாருங்கள்!.. இவரின் உபதேசம் கேட்டால் வியந்து போகாமல் இருக்க முடியாது!..  ஆனந்த வாழ்வும், துன்பம் உனக்கில்லை என்பதும் இறைமையில் திளைக்கவும், வழிகாட்டவும் சிறந்த மனிதர். இருக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளவும்!.. 

 à®¤à®¿à®°à¯à®žà®¾à®© தேசிக சிவயோகியை நீங்களும் சந்தியுங்கள்!.. உன்னத வாழ்க்கை வாழ நினையுங்கள்!.. 

இயற்கைக்கு திரும்புவோம்!.. இயல்பில் மலர்வோம்!.. 

மாறிவிட்டது பயணம்!.. ஓடிவிட்டது எல்லாம்!.. கொண்டாட்டம் என்  இருப்பின் உச்சம்!.. நன்றியுணர்வே என் வாழ்வின் தத்துவம்!..

நன்றியின் நெகிழ்வில்...  

சிவயோகியின் சிங்கக்குட்டி

ம. பி. உப்பிலியப்பன்

Kingdom of Soudi Arabia

- உப்பிலியப்பன்