• +91 97102 30097
  • reach@yogakudil.org


குடும்ப கலை

 

குடும்பம் என்பது மனித இனத்தின் மகத்தான வாழ்வியல் முறை. மனிதன் நாகரிகமானவன் என்பதற்கும், கலாச்சாரப் பண்புகளின் வளர்ச்சி படைத்தவன் என்பதற்கும், அறிவு பெற்ற சிறந்த உயிர் என்பதற்கும் ஆதாரமாக இருப்பதுதான் குடும்பம்.


குடும்பம் என்பது விலங்கு பண்பிலிருந்து மனிதனாக மாறுவதற்கு உற்ற துணையாக இருந்திருக்கிறது. குடும்ப அமைப்பே மனிதன் வளர்வதற்கு ஏதுவான சூழ்நிலையை தருகிறது. குடும்ப அமைப்பே நாளைய மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றது.


குடும்பம் என்றாலே கூட்டாக செயல்படுவது அதாவது ஆண், பெண் உறவினை கொண்டு தாய், தந்தை, மகன், மகள், தாத்தா, பாட்டி, மாமன், அத்தை, சித்தப்பா, சித்தி, அண்ணன், தங்கை, மைத்துனர், மச்சினி என்ற பலபல உறவு முறைகளை உள்ளடக்கி அது செயல்படுகிறது.


குடும்பம் என்பது இன்று கூட்டுக்குடும்பம் சிறு குடும்பம் என்று இரண்டு விதமாக இருக்கிறது. இருப்பினும் குடும்பம் என்பது இரண்டு அன்பு உள்ளங்கள் ஆண், பெண் இணைந்து குழந்தைகள் பெற்று இணக்கமுடன் இருப்பது ஒரு குடும்பம். இப்படி பல குடும்பங்கள் ஏற்பட அவைகள் தனிக் குடும்பங்களாக வடிவெடுக்கின்றது.


தன் தந்தையின் அனைத்துக் குழந்தைகளின் குடும்பமும் இணைந்து இருந்தால் அதனை கூட்டு குடும்பம் என்றும் தங்களின் குழந்தைகள் தனித்தனியாக குடும்பமாக அமைந்தால் சிறு குடும்பம் என்றும் அழைக்கலாம்.


எப்படியாயினும் குடும்பம் என்பது தாய், தந்தை, குழந்தைகள் உள்ளடக்கியது. ஆண், பெண் இணைந்திருந்தால் ஒரு குடும்பம் என்கிறோம்.


ஆண், பெண் இணைந்து வாழ்வதே குடும்பம் நடத்துவது என்று பொருள்படுகிறது.


முன்னோர்கள் மொழிந்த குடும்ப அமைப்பினை சிறப்புற செயல்முறையில் நடைமுறைபபபடுத்தவும், குடும்பத்தின் உறவுகள் மேம்படவும் இப்பதிவில் தகவல்கள் பரிமாறப்பட்டு குடும்பத்தின் அமைப்பினை வளமையுற செய்வோம்.


குடும்ப உறவுகளின் குறை நிறைகளை ஆராய்ந்து அவற்றினை மேம்படுத்தும் விதத்தில் இப்பகுதி இடம்பெறும் என்று உங்களின் ஆதரவுடன் உறுதியளிக்கிறோம்.


ஒவ்வொரு தனி மனிதரும் குடும்பத்தின் வெளிப்பாடு அல்லது இப்படியும் அதை சொல்லலாம் ஒவ்வொரு குடும்பமும் அநேக விதமான மனிதர்களை உருவாக்குகிறது.


குடும்பம் நல்லதொரு சூழலுடன் இருந்தால் அதன் உறுப்பினர்கள் மனநலம், உடல்நலம் சிறப்பாக இருக்கும்.


மாறி வரும் உலக சூழல் காரணமாக குடும்ப உறவுகள் சீர்குலைந்து குடும்ப அமைதி அழிகின்றது.


குடும்ப உறவின் முதன்மை நிலை கணவன், மனைவி, தலைவன், தலைவி, ஆண்சாதி, பெண்சாதி என இரண்டு பால் சார்ந்த இனத்தின் உறவால் ஏற்படுகிறது.


தாய், தந்தை, குழந்தைகள், மகன், மகள், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி என பலவிதமான உறவு முறைகள் குடும்பத்தின் அங்கங்களாக இருக்கின்றன.


தனிமனிதன் தன்னிறைவு அடைவதற்கு ஏதுவான சூழல் மனைவி மக்கள் வாழும் மனையில் இருக்கிறது.


துறவி என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு நபரும் குடும்பத்தின் வெளிப்பாடு என்பதை மறுக்க முடியாது.


துறவி என்பவன் வாழ பயந்தோ அல்லது வாழ்வின் மீது நாட்டம் இன்றியோ, தன்னளவில் சரியான நலம் இன்றியும் குடும்ப கலையை மறக்கலாம், மறுக்கலாம்.


ஆனால் குடும்பம் மனிதனின் அறிவிற்கு சரியான சூழலை ஏற்படுத்துகிறது. ஒரு தரமான மனிதன் உருவாக குடும்பம் உறுதுணையாக இருக்கிறது.


மனிதன் முன்னேற்றப் பாதைக்கு உதவிய குடும்பக் கலையின் ஆபத்தை புரிந்து கொள்வோம். அடுத்த பதிவில் சந்திப்போம்.


நல்ல மனிதர்களின் கூட்டுறவால் நல்ல குடும்பம் உருவாகின்றது. நல்ல குடும்பம் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றது.


குடும்ப உறவுகள் சீராக இல்லை என்றால் மனிதனின் மனம் அமைதியாக இருக்க முடியாது. மனிதன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக ஏற்படுத்தியதே குடும்பம்.

மனித புரிதல் மாறுபாடுகளுடன் இருப்பதால் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதை புரிந்து கொண்டால் எல்லாரும் மதிக்கத் தகுந்தவர்கள் என்பதும் என்றாவது ஒருநாள் எல்லாருக்கும் உண்மை புரியும் என்றும் உணரலாம்.


நீயா?  நானா? என்ற போட்டி மனப்பான்மை வளர்ந்து குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுகின்றது.


நாம் எதிர்பார்க்கும் விதத்தில் பிறர் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அப்படியே பிறரும் நம்மை எதிர்பார்க்கின்றனர். பிறரின் எதிர்பார்ப்பிற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாமும் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி மாறமமுடியாமல் பிறகும் தவிக்கிறோம்.


நாம் நம்மை புரிந்து கொள்ளாமலேயே பிறரை எதிர்பார்ப்பதால் வன்முறையான செயல்கள் அரங்கேறுகின்றது.


அறிவு வளர்ச்சி அடைந்த இந்த கால கட்டத்தில் வாழ்க்கையின் சாரத்தினை உணர்ந்து குடும்பபத்தின் அத்தியாவசத்தை புரிந்து கொண்டு இன்பமாக வாழலாம்.


முதலில் குடும்பம் அவசியம் என்று புரிந்து விட்டால் அதை கட்டிக் காக்கின்ற பண்பு தானாக வளரும்.


குடும்பம் என்பதே நல்ல குழந்தைகளை உருவாக்கவும், வளமான உணர்வு சூழல்களை உருவாக்கி மகிழ்ச்சியாக பொழுதுகளை கழிக்கவும் உண்டாக்கப் பட்டது.


குழந்தை, வாலிபன், முதியோர் என்ற நிலை அடையும் மனிதன் தனது எல்லா காலகட்டத்தினையும் இதமாக கழிக்க குடும்பம் இதமானதாக இருக்கிறது.


குடும்பம் அற்ற மனிதன் சமூக கூட்டத்தை உருவாக்கிக் கொள்வது தனக்கான அவசியத்தையும், தேவைகளையும் பிறரின் துணையுடன் நிறைவேற்றுவதற்காகவே.


குடும்ப உறவுகளை துறந்தவனாக ஒருவன் இருந்தால் அவனை நாம் துறக்க வேண்டும். ஆனால் குடும்ப உறவு இல்லாத மனிதனே நமக்கு போதிப்பதை கடமையாகக் கொண்டு வாழும் மனிதர்களை முட்டாளாக மமமாற்றுவது எந்த விதத்திலும் சரியான. து இல்லை.


குடும்பம் அவசியம் என்பதற்காகவே தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி, மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்றெல்லாம் குடும்பத்தின் பொறுப்புகளை வள்ளுவர் எடுத்து உரைக்கின்றார் என்றால் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.


*அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்*

*போஓய் பெறுவது எவன் - 46*


இல்வாழ்க்கை மூலம் உண்மை அறிய முடியாத எந்த மூடனும் புறத்தாற்றாளும் துறவு வாழ்க்கையில் உண்மையை அடைய முடியாது.


அன்பு நெஞ்சமே! குடும்பம் உனக்கு உன்னை இப்பொழுது இருக்கும் நிலையை தந்தது. இது உனக்கு சரியானதாகவோ, தவறானதாகவோ இருக்கலாம். சரியாது என்றால் இன்பம், தவறானதாக இருந்தால் அதை மாற்றுவதற்கே உனது பிறவி என்பதை உணர்ந்து கொள்.


தொடர்ந்து வரும் பதிவில் தொடர்வோம். பிறவிப் பெருங்கடல் கடக்க குடும்பம் துணை எப்படி? என்பதை அறிவோம்.


கூட்டுறவு முறையின் அடிவேர் குடும்ப அமைப்பு. கூட்டமாக வாழ்வதாலேயே மனிதன் பலம் பொருந்தியவனாய் இருக்கிறான்.


கூட்டமாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை தருவது குடும்பம்  என்றால் பொய்யன்று. குடும்பத்தின் மூலமே மனித இனம் நாகரீக உச்சத்தை அடைந்தது.


குழந்தை பருவத்தில் தாயின் பாதுகாப்பில் இருக்கிறோம். சிறுவயதில் தந்தையீன் அரவணைப்பில் வளர்கிறோம். தாத்தா, பாட்டி, மாமா, மாமி என உறவுகளின் பாசத்தால் அன்பு, கருணை, இரக்கம், விட்டுக் கொடுத்தல் போன்ற உயர்ந்த பண்புகளை கற்றுக் கொள்கிறோம்.


வாலிபத்தின் பொருட்டு நாமும் ஒரு குடும்பத்தினை உருவாக்கி குடும்பம் என்பது சங்கிலித் தொடராக வளர்வதற்கு ஆதாரமாக அமைகிறோம்.


குடும்பத்தின் ஆணிவேர் தாய் தந்தை உறவின் பொருட்டு நிலைக்கின்றது. தாய் தந்தை உறவில் விரிசல் ஏற்படுமாயின் குடும்ப அமைப்பு சிதைந்து பிள்ளைகள் திக்கு தெரியாமல் திண்டாடப்படுகின்றார்கள்.


குடும்பத்தின் செழிப்பு நிலையைக் கொண்டே அந்த நாட்டின் வளம் மதிக்கப்படுகிறது. தனி மனிதன் எவ்வளவு தூரம் உயர்ந்தவனாக இருக்கின்றானோ அவ்வளவு தூரம் அவனை உயர்த்துவது அவனது குடும்பத்தின் அமைப்பு முறையே ஆகும்.


இயல்பானவனாய் இல்வாழ்க்கை வாழ்பவன் எவனோ அவன் தன்னை அறியும் முயற்சியில் ஈடுபடுவோர்களிலும் சிறந்தவன் என்பதை விளக்கவே.

இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லா தலை - 47.


என்று திருவள்ளுவப் பெருந்தகை நமக்கு குறள் வழியே போதித்திருக்கிறார்.


குடும்பம் சிறப்புற இருக்க வேண்டும். குடும்ப அமைப்பு நன்றாக அமைய வேண்டும் என்ற எண்ணம் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்க வேண்டும்.


குடும்பத்தின் பங்குதாரர்களுக்கு பதவியும், பொறுப்பும் வகைப்படுத்தப்பட்டு செயல் வடிவம் பெற்று இருக்கிறது.


எனவே ஒவ்வொரு உறுப்பினரும் தனது கடமையை உணர்ந்து செய்ல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யார்?  யாருக்கு என்னவிதமான பொறுப்பு, அதை பேணிக் காப்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடைகளை அடுத்த பதிவில் காண்போம்.


தொடரும்.....